பக்கங்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு தாக்கீது

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னை, ஜன.22- பொருளா தாரத்தில் பின்தங்கிய, முன் னேறிய வகுப்பினருக்கு  10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின்சட்டத்தை ரத்து செய்யக் கோரி தி.மு.கழகம் தொடர்ந்த வழக்கைசென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசா ரித்து, வரும் பிப்.18ஆம்தேதிக்குள் பதிலளிக்கும்படிமத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட் டது.

இதுபற்றிய விபரம் வரு மாறு: -பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்கொண்டு வந்தது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென் னை உயர்நீதிமன்றத்தில் கழக அமைப்புச் செயலாளர் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணி யம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.1.2019) காலை விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அது விவரம் வருமாறு -இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது சாதி ரீதியாகத் தான் வழங்க முடியுமே தவிர, பொரு ளாதார வசதிகளின் அடிப் படையில் வழங்க முடியாது என்று அரசியல் அமைப்புச் சட் டத்தில் தெளிவாகக் கூறியுள்ளது.

இதுமட்டுமல்ல; உச்சநீதிமன் றத்தின் பல்வேறு வழக்குகளில், பொருளாதார ரீதியான இடஒதுக் கீடு வழங்க முடியாது என்று தீர்ப்புகள் அளித்துள்ளன. இவை தெரிந்து இருந்தும், பொருளாதார ரீதியாகபின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையையே மாற்றுகிறது. அதுமட்டுமல்ல; பொருளாதாரத்தின் அடிப்படை யில் மனிதர்களைப் பிரிக்க முடியாது. இன்று ஏழையாக இருப்ப வர்கள் நாளைபணக்காரராக மாறி விடலாம். ஆனால், சமூக ரீதியாக பல நூற்றாண்டு களாக பாதிக்கப் பட்டவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதி நிதித்துவம் இல்லை என்ப தால், அப்படிப்பட்ட சாதியின ருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத் தான் இடஒதுக் கீடு வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு என்று கூறி பொதுப்பிரிவினருக்கு அதை வழங்க முடியாது. அதுவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுகின்றனர் என்று பி.வில்சன் வாதிட்டார்.

ரூ.8 லட்சத்துக்குக் குறைவான வருமானமா? நீதிபதி கேள்வி!


அப்போது நீதிபதிகள் குறுக் கிட்டு, அந்த சட்ட மசோதாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுப வர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், சட்டமசோதாவில் குறிப்பிட வில்லை. ஆனால், கடந்த 7ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு அவ்வாறுகொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது என்றார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில், பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கலாம் என்று கூறியுள்ளதே? என்று நீதிபதிகள் மற்றொரு கேள்வியை எழுப்பினர். அதற்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், பின்தங்கியவர்கள் என்று குறிப் பிடப் படுபவர்கள் ஜாதிரீதியாகப் பின்தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கி யவர்கள் கிடையாது. எனவே, இந்தசட்ட மசோதாவே அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரா னது என்பதால், இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் வாதிட்டார். அவரது வாதத்தின் போது, மனுதாரர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றும் உயர்நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று கூறியதற்கு, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், `உயர் நீதிமன்றத்தைத் தவறாக பயன் படுத்துகிறார் என்று தலைமை வழக்குரைஞர் கூறியதை ஏற்க முடியாது. அவரது இந்த வாதத்தை ஏற்க முடியாது என்றனர். பின்னர், `இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப் பினர். அதற்கு, இட ஒதுக்கீடு பெறாதவர்கள், பொருளாதாரரீதியாக பின்தங்கியிருப்பவர் களுக்கு  என்று கூடுதல் தலை மை வழக்குரைஞர் கூறினார். அவர்கள் யார்? இடஒதுக்கீடு பெறாதவர்கள் என்றால், முற் பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தானே?என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கிற்கு மாநிலஅரசுக்கும், மத்திய அரசுக் கும் விரிவான பதில் மனுவை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 22.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக