பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

நாட்டிற்கே முன்மாதிரியாகும் கேரளம் 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம்!

திருவனந்தபுரம், அக். 7 -கேரள மாநிலத்தில் 6 தலித்துகள் உட்பட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்து, திருவிதாங்கூர் தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கெனவே பார்ப் பனர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் முயற்சிகள் நடந்திருந்தாலும், தலித்துகள் 6 பேர் உட்பட பார்ப்பனரல்லாத 36 பேர் ஒரே நேரத்தில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டி ருப்பது இதுதான் முதல்முறையாகும்.

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அனைத்துச் சாதியின ரையும் அர்ச்சகர் ஆக்கும் முயற்சியில் அடுத்தடுத்த படிகளுக்கு முன்னேறி பயணித்து வந்தது. 2002-ஆம் ஆண்டு கேரளாவில் மிகப்பின் தங்கிய ஈழவர் சமூ கத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார். அதற்கு எதிராக சிலர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால், அரசியல் சட்டப்பிரிவு 17-இன் படி பிறப்பால் பாகுபாடு பார்ப்பது தீண்டாமைக் குற்றம்; அது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறிய நீதிமன்றம், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சக ராக முடியும் என்பதை ஏற்க முடியாது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணிக்கு தகுதி அடிப்படையில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் சிறிய கோவில்கள் சிலவற்றில் நியமிக்கப்பட்டனர். ஆனால், அடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த முயற்சிமுன்னெடுத்துச் செல்லப்படாத நிலையும் இருந்தது.இந்நிலையில்தான், திருவிதாங்கூர் தேவசம் போர்டுகட்டுப்பாட்டிலுள்ள 1248 கோயில்களில் அனைத்து சாதியினரையும் தகுதி மற்றும்இடஒதுக்கீடு அடிப்படையில்அர்ச்சகர்களாக நியமிக்ககேரள மாநில அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளிசுரேந்திரன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சிலமாதங்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் தேவசம் போர்டானது, தகுதியானஅனைவரிடமும் விண்ணப்பங்கள் பெற்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தியது.

அதில் வெற்றிபெற்றவர்களை வைத்து தற்போது 62 பேரை அர்ச்சகர்களாக நியமித்து தேவசம் போர்டு ஆணையாளர் ராமராஜ பிரசாத் உத்தரவு பிறப்பித் துள்ளார். அதில் தலித்துக்கள் 6 பேரும், பார்ப்பனர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்டோர் 30 பேரும் அர்ச்சகர்களாகி உள்ளனர். இவர்கள் முழு நேரமற்றும் பகுதி நேர அர்ச்சகர்களாக செயல்படுவார்கள்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்றமுழக்கம் முதன் முதலில் தமிழகத்தில்தான் எழுந்தது. இரண்டு முறை அதற்கானசட்டங்களும் கொண்டு வரப்பட்டன. ஆனால்,  அது நிறைவேறா மலேயே உள்ளது. இந்நிலையில் கேரளத்தில் அனைத் துச் சாதியினரும் அர்ச்சகராகும் கனவு நனவாகி இருப்பது, முக்கியமான சமூகநீதி நடவடிக்கையாக அமைந்துள்ளது.
- விடுதலை நாளேடு,7.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக