‘டெக்கான் கிரானிக்கில்’ ஆங் கில நாளேட்டில் வெளிவந்த இடஒதுக்கீட்டை முடித்திடவோ, மாற்றிடவோ இதுதான் நேரம் (Time to replace or end reservation) எனும் கட்டுரைக்கு திரா விடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அரசியல மைப்புச் சட்ட விதிகளை மேற் கோள் காட்டி, விரிவாக மறுப்பு தெரிவித்திருந்தார். தமிழர் தலைவர் தெரிவித்த மறுப்புச் செய்தியின் சுருக்கம் நேற்று (13.10.2017) ‘டெக்கான் கிரானிக்கில்’ (சென்னை பதிப்பு) ஏட்டில் வெளி வந்துள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு கால வரையறை கிடை யாது என மறுப்புத் தெரிவித்து வெளிவந்த ஆங்கில நாளேட்டுச் செய்தியின் தமிழாக்கம்:
இடஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் -
திராவிடர் கழக தலைவர்
‘அரசியல் இடஒதுக்கீடு’ எனச் சொல் லப்படும், நாடாளுமன்ற, மாநில சட்ட மன்றங்களில் தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பி னருக்கான இடஒதுக் கீட்டிற்கு மட்டும்தான் அரசியலமைப்புச் சட்ட விதிகள் காலவரையறையினை நிர்ணயித்துள்ளன. சமூக, கல்வி அடிப் படையில் பிற் படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த விதி பொருந்தாது.
கல்வியிலும் வேலை
வாய்ப்புக்குமான இடஒதுக்கீட்டு முறையில் அரசியலமைப்புச் சட்டம் எந்தவித கால வரையறையினையும் குறிப்பிடவில்லை. அரசியல் இடஒதுக்கீட்டிற்கும் கல்வி - வேலை வாய்ப்பில் உள்ள இடஒதுக்கீட்டு முறைகளுக்கும் இடையிலான வேறுபாடு ‘டெக் கான் கிரானிக்கல்’ ஏட்டில் வெளி வந்த கட்டுரையில் விளக்கப்பட வில்லை. கட்டுரையினை படிக் கும் சராசரி வாசிப்பாளர் களை அந்தக் கட்டுரை உறுதியாக குழப்பி விடும்.
செப்டம்பர் 29இல் வெளி வந்த ‘டெக்கான் கிரானிக்கில்’ ஏட்டில் திரு.மோகன் குருசாமி எழுதிய கட்டுரையில் இட ஒதுக் கீடு பற்றிய வெறுப்பு வெளிப்பட் டுள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதி களும் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது என திரா விடர் கழகத்தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எடுத்துக் காட் டாக விதி 16 (4) என குறிப்பிட்டு விட்டு முதல் 1951ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசிய லமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் இடம் பெற்ற விதி 15 (4) வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள் ளது. இப்படி மாற்றிக் குறிப் பிட்டுவிட்டு, ‘வாக்கு வங்கியை பெற இடஒதுக்கீட்டை நீட்டியும், விரிவாக்கியும் அரசு செய்து வருகிறது’ எனக் கூறியுள்ளது அர்த்தமற்றதாகும்.
மற்ற எந்த காரணங்களுக்கும் மேலாக இடஒதுக்கீட்டின் மூலம் ஜனநாயக ஆட்சியில், அரசு அதிகாரத்தில் மக்கள் பிரதி
நிதித்துவம் பிரதிபலிக்கப்படுகிறது.
இடஒதுக்கீடு நடைமுறையில் தமிழ் நாடு முன்னோடி மாநில மாக திகழ்ந்து வருகிறது. பிரிட் டிஷ் ஆட்சிக் காலத்திலேயே இடஒதுக்கீட்டை கொண்டு வந்த சாதனை தமிழ் நாட்டிற்கு உண்டு. ஆண்டாண்டு காலமாக பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி இதிகாச புராணங்கள் கூறி வரும் வரலாற்று பாகுபாட்டை சரி செய் திடவே இடஒதுக்கீடு நடை முறைக்கு வந்தது.
இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவரவோ, அதற்கு மாற்று வழிமுறையினைக் கொண்டுவர நினைப்பதற்குக் கூட இது நேரம் அல்ல. பின் பேசுவதும், எழுது வதும எப்படி நியாயமாகும்?
இடஒதுக்கீடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பின் ஓர் அங்கம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும்.
-விடுதலை நாளேடு, 14.10.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக