பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

தலித் மக்கள் மீசை முறுக்கும் போராட்டம்காந்தி நகர், அக்.5 குஜராத்தில், தலித் இளைஞர்கள் மீசை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த தாக்குதலை தொடர்ந்து, மீசையை முறுக்கும் படத்தை, 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளங்களில் பரப்பும் போராட்டத்தில், தலித் இளைஞர்கள் களமிறங்கி உள்ளனர்.


குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, லம்போதரா கிராமத் தில், மீசை வைத்திருந்ததாக, சில தலித் இளைஞர்கள், சமீபத்தில் தாக்கப்பட்டனர். ராஜ்புத் இனத்தைச் சேர்ந்த வர்கள், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளது.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தலித் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள், புதிய போராட் டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 'மிஸ்டர் தலித்' என்ற பெயரில், மீசையை முறுக்கும் படங்களை, 'வாட்ஸ் அப்' மூலம் பரப்பிவருகின்றனர்.

- விடுதலை நாளேடு,5.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக