பக்கங்கள்

செவ்வாய், 10 அக்டோபர், 2017

குஜராத்திலும்  இடஒதுக்கீடு


சங்கர்சிங் வகேலா வலியுறுத்தல்தமிழகத்தைப் பின்பற்றி குஜராத்தில் படேல்கள் உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்ட சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், ஜன் விகல்ப் முன்னணியின் தலை வருமான சங்கர் சிங் வகேலா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறிய தாவது: இதுவரை இட ஒதுக்கீடு வழங்கப்படாத சமூகத்தினருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநிலங்களில் 49.5 சதவீதத் துக்கு மேல் இட ஒதுக்கீடு தரக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதன் காரணமாக, கூடுதலாக 25 சதவீதம் இடம் ஒதுக்க முடியாது என்று கருதப்படுவது தவறு. ஏற்கெ னவே, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. எனவே, தமிழகத்தைப் பின்பற்றி குஜராத் தும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின ருக்கு கூடுதலாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார் அவர்.

குஜராத் சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடை பெறவுள்ள நிலையில், இட ஒதுக்கீடு கோரி போராடி வரும் படேல் சமூகத்தினருடன் மாநில பாஜக அரசு பேச்சு வார்த்தை நடத்தி, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தினருக்காக பல்வேறு சலுகைகளை அறிவித்தது.

தேர்தலில் வெற்றி தோல்வியை முடிவு செய் யும் மாபெரும் வாக்கு வங்கியான படேல் சமூகத்தினரைக் கவரவே இந்தச் சலுகைகள் வழங்கப்படுவதாகக் கூறப் படுகிறது. எனினும், படேல்களின் முக்கியக் கோரிக்கையான இட ஒதுக்கீடு குறித்து மாநில அரசு எதையும் தெரிவிக்க வில்லை. இதையடுத்து, இட ஒதுக்கீட்டுக் கான படேல்களின் போராட்டம் தொடரும் என்று போராட்டக் குழுத் தலைவர் ஹார் திக் படேல் அறிவித்துள்ளார். இந்தச் சூழலில், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சங்கர் சிங் வகேலா வலியுறுத் தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா, கட்சியின் மேலிடத்துடன் ஏற் பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் அணிகளுக்கு மாற்றாகக் கருதப்படும் ஜன் விகல்ப் முன்னணி யில் இணைந்து, அதன் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார்.

குறிப்பு: தமிழ்நாடு அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கொடுத்த ஆலோசனையின் படி  இந்திய அரசமைப்புச் சட்டம் 76ஆவது திருத் தத்தின்படி ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
- விடுதலை நாளேடு,6.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக