(நேற்றைய தொடர்ச்சி...)
இதற்கு நான்கு கூறுகள் துணை புரிந்தன என்றால் அது மிகையாகாது.
முதலாவதாக ஆங்கிலேய அரசு பார்ப்பனிய மேலாதிக்கத்தைத் தடை செய்ய முயன்றது. நெல்லூரில் இருந்த வருவாய்த் துறையில் ஏறக்குறைய 50 பார்ப்பனர்களின் கட்டுப்பாடு இருக்கிறது என உறுதி செய்த பின்னர், அவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் என்று உறுதி செய்து கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியாளர் அவர்களில் இரண்டே பேரை மட்டும் இடமாற்றம் செய்தார்.
எனவே ஆளுநர், அய்ரோப்பிய அதி காரி ஏறக்குறைய இந்தக் குடும்பத்தவர் தவறுகளை, குற்றங்களைக் கண்டறிந்து தண்டிக்க அதிகாரமற்றவராகவே இருக் கிறார் என்று கண்டறிந்து வருவாய்த் துறை நடைமுறைக் குறிப்பில் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து வருவாய் வாரியத்தின் நிலைபெற்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியாளர்கள் கீழ்நிலைப் பணிகளில் சில செல்வாக்குள்ள குடும்பங் கள் ஆதிக்கம் செலுத்தாதவாறு மிகவும் கவனத்துடன் கவனிக்க வேண்டும். பல்வேறு சாதியினரிடையே முதன்மை நியமனங்கள் பங்கிடப்பட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். தாசில்தார் பதவிகளில் ஒரு பங்கு பார்ப்பனர் அல்லாத சாதியினருக்கு உரியவையாதல் வேண்டும். இரண்டு முதன்மை வருவாய்ப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மாறுபட்ட வகுப்பினராக இருத்தல்வேண்டும்.
1871 இல் இந்த எச்சரிக்கைக்குப் பின்னரும் மக்கள் தொகைக் கணக் கெடுப்பு மேலாளர் டபிள்யூ. ஆர். கார் னிஷ், ஒவ்வொரு சிக்கலையும் பார்ப் பனியக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதற்கு எதிர்ப்பு இருப்பதைக் கண்டார். எனினும் இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பனர் களைக் கட்டுப்பாட்டில் வைப்பதில் அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. இதன் வாயிலாகப் பார்ப்பனர் அல்லா தாரைப் பார்ப்பனருக்கு எதிராக நிறுத்தியது.
இரண்டாவதாகக் கல்வி விரிவாக்கம் 1890-களில் ஏற்பட்டது. சென்னை மாகாணத்தில் 1858 முதல் 1917 வரை 60 ஆண்டுகளில் மொத்தப் பார்ப்பனர்களின் விழுக்காடு 57 முதல் 67 வரை இருந்தது. அறுபது ஆண்டுகளில் பி.ஏ.தேறிய பார்ப்பனர்களின் வீதம் அதிகமாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்களின் வீதம் குறைவாகவும் இருந்தது. மூன்றே விழுக்காடு இருந்த பார்ப் பனர்களில் கல்வித் தேர்ச்சி வீதம் 1858 இல் 54 முதல் 62 வரையும் 1901-1917 இல் 63 முதல் 66 விழுக்காடாகவும் இருந்தது. பார்ப்பனரல்லாத இந்துக்கள் 86 விழுக் காடாக இருந்தவர்கள் அதே கால கட் டத்தில் பட்டம் பெற்றவர்கள் 2.4 முதல் 16 விழுக்காடு எனவும் 25 முதல் 28 விழுக் காடு வரையும் இருந்தனர்.
மூன்றாவதாக நடுத்தரப் பிரிவினர் இடப் பெயர்வு சென்னைக்கு ஏற்பட்டது. பலர் ஆங்கிலேயரிடத்துப் பணி புரிந்தனர். அவ்வாறு பணி புரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி வாய்ப்பை எதிர் நோக்கினர்.
நான்காவதாக இரட்டை ஆட்சி அமைப்பில் மேற்கொண்ட பணியைக் குறிப்பிடவே பார்ப்பனரல்லாத இளைஞர் களுக்கு இது தேவைப்படும் வாய்ப்பினை அளித்தது. பார்ப்பனர்களின் வலிமைக்கு எதிரான முயற்சி இது. இவ்வாறான எதிர்ப்பு தென் இந்திய நல உரிமைச் சங்கமாக முகிழ்த்தது மட்டுமல்லாது 1917 இல் பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளி யானது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றில் பார்ப்பனரின் மேலாதிக்கத்திற்கு எதிரானதாய் அமைந்தது.
பார்ப்பனரல்லாதாரில் 1885 இல் தாழ்த்தப்பட்டோரைத் தனியாகக் காணும் முயற்சி நடைபெற்றது. மறைதிரு ஜான் ரத்தினம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு, திராவிடப் பாண்டியன் என்னும் இதழை அயோத்திதாசப் பண்டிதர் நடத்திவந்தார்.
1891 இல் அயோத்திதாசர் திராவிட சபை எனும் அமைப்பை நிறுவி, 1909 முதல் அதை திராவிட சபையாக மாற்றினார். அயோத்திதாசர் திராவிடமென்பதே தமிழென்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன் வடநாட்டோரும் சிங்கள தேசத்தோரும் தமிழை, திராவிட பாஷை யென்றும், தமிழ் பாஷைக்குரியோரைத் திராவிடர்களென்றும் வழங்கி வருவதை நாளது வரையில் காணலாம் எனக் கூறினார். இதனை அயோத்திதாசர் சிந்தனைகளில் காணலாம். அயோத்தி தாசர், பார்ப்பனரல்லாதாரின் திராவிடக் கருத்தியலின் முன்னோடியென்று கூறலாமேயன்றி, அதை இயக்கமாக அவர் மாற்றவில்லை.
19.11.1908 இல் விருதை சிவஞான யோகி என்பவர், விருதுநகரில் திராவிடர் கழகம் எனும் அமைப்பைத் தொடங்கி, திராவிட மொழி பேசுவோரைத் திருவிடர் என்றே குறித்தார். இந்தத் திருவிடர் கழகம் பதவி, அலுவலர்கள் ஆகியவை களையெல்லாம் அரசிடம் விண்ணப் பித்துக் கேட்கவில்லை. இதன் கொள்கை திருவிடரின் பழைய வரலாறுகளையும், திருவிட மொழியின் உண்மை வரலாறு களையும் ஆராய்ச்சி செய்தல் மட்டுமே எனினும் பிற்படுத்தப்பட்டோர் விழிப் புணர்ச்சிக்கு உதவிய பங்காற்றியது. திருவிடர் கருத்தியல் உருவானதேயன்றி அது ஓர் இயக்கமாகக் உருக் கொள்ள வில்லை.
1909-ஆம் ஆண்டு சென்னை பார்ப்பனர் அல்லாதார் சங்கம் எனும் ஓர் அமைப்பினை வழக்கறிஞர் பி.சுப்பிர மணியம், வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் ஆகியோர் உருவாக்கிய செய்தி ஆங்கில ஏடு தி மெட்ராஸ் மெயிலில் 1.5.1909 இல் வெளியாகியுள்ளது.
பார்ப்பனர் அல்லாதார் சங்கத்திற்கு சென்னை திராவிடர் சங்கம் எனப் பெயரிடலாம் எனும் கருத்தை வி. வண்ண முத்து என்பவர் வெளியிட்ட செய்தி 6.5.1909 அதே சென்னை மெயில் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.
பதவிகள், வேலைவாய்ப்புகளில் புறக் கணிக்கப்பட்டதை ஒதுக்கப்பட்டதைப் பார்ப்பனரல்லாதார் உணர்ந்து, அமைப்பு அடிப்படையில் அரசுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க முன்வந்த அமைப்புகளில் மெட்ராஸ் யுனைட்டட் லீக் (ஆயனசயள ருவைநன டுநயபரந) என்பதைத்தான் கூறவேண்டும்.
சென்னை மாநகரில் பணியாற்றிய அரசு ஊழியர்களில் சிலர் தாங்கள் பார்ப்பனரல்லாதாராக இருந்த ஒரே காரணத்தாலேயே பதவி பெறுவதில் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப் பட்டதையும் வேலை உயர்வு முதலிய நியாயமான வாய்ப்புகள் மறுக்கப் பட்டதையும் உணர்ந்து, மனம் வருந்தி, மனம் புழுங்கிக் கலந்துரையாடவும், இணைத்து செயல்படவும் ஒன்று பட்டுத் தங்கள் குறைகளை, நியாயங்களை எடுத்துரைக்க இந்த அமைப்பை உருவாக் கியவர்கள் அரசியல்வாதிகளோ, அர சியல் இயக்கத்தவர்களோ அல்லர் என்பதைக் குறிப்பிட வேண்டும்.
(3.5.2012 அன்றைய தொடர்ச்சி...)
அவர்கள் இரண்டு பேர் ஆவர். துணை மாவட்ட ஆட்சியராக இருந்த சரவணன், பொறியியல் துறையில் பணியாற்றிய வி.வீராசாமி என்போர்தான் அவர்கள்.
பார்ப்பனரல்லாத அரசு ஊழியர்களை ஒன்று திரட்டி இந்த அமைப்பைத் தோற்று வித்தனர். இந்த அமைப்பின் நிறுவனர் கள் அரசு ஊழியர்கள்தாம். ஆனால் இந்த அரசுப் பணியாளர்களின் விருப்பத் திற்கு இணங்க இந்த அமைப்பில் செயலாளராக விளங்கியவர் திராவிட இயக்கத்தின் முப்பெரும் தூண்களில் ஒருவரான சி.நடேச முதலியார் என அறியப் பெற்ற நடேசனாரே.
1913 ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனை டெட் லீக் கின் முதலாவது ஆண்டு நிறைவு விழாக் கூட்டம் டாக்டர் நடேச னாரின் தோட்டத்தில் நடைபெற்றபோது அக் கூட்டத்தில் மெட்ராஸ் யுனைடெட் லீக் எனும் பெயரைத் திராவிடர் சங்கம் என மாற்றுவதென்று தீர்மானம் நிறைவேற்றினர்.

அந்த ஆண்டு முதல் திராவிடர் சங்கம் ஊட்டிய உணர்வுகள், திராவிட இயக்கம் என்று பெயர் பெறலாயிற்று என்பதை எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் கூறுகிறார்.
எனவே 2012 ஆம் ஆண்டு திராவிட இயக்க நூறாவது ஆண்டு என்று தொடங்கிக் கொண்டாடக் கலைஞர் அவர்கள் கூறியது அவருடைய அரசியல் வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச் செய்ய அல்ல; உண்மை வரலாற்றை மீட்டெடுக்கத்தான்.
எனவே திராவிட இயக்க நிறுவனர் டாக்டர் சி.நடேசனார்தாம் என்பதை திராவிடர் இயக்கப் பொன்விழாவில் தமிழவேள் பி.டி.இராசன் வலியுறுத்திக் கூறுகிறார்.
எனவே திராவிட இயக்க நிறுவனர் டாக்டர் சி.நடேசனார்தாம் என்பதை திராவிடர் இயக்கப் பொன்விழாவில் தமிழவேள் பி.டி.இராசன் வலியுறுத்திக் கூறுகிறார்.
ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆமைகள் போல் அடங்கிக் கிடந்த சமுதாயம் முதன் முறையாக உரிமைக் குரல் கொடுத்தது என்று முரசொலி மாறன் குறிப்பிடும் ஆண்டில் 1916 இல் நவம்பர் 20 ஆம் நாள் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் அமைப்பு தோன்றியது பிற்படுத்தப்பட் டோர் வரலாற்றின் மைல் கல்லாக, எல்லைக் கல்லாக விளங்குகிறது.
1917 முதலாகவே நீதிக் கட்சி எனும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கியது முதலே பார்ப்பனர் அல்லாதாரின் மிகவும் தீவிரமான குரல் உச்ச ஸ்தாயியில் கிளம்பி எதிரொலிக்கத் தலைப்பட்டது. கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல்வாழ்க்கையில் தங்களுக்கு உரிய பங்கினைக் கேட்கக் குரல் எழுப்பினர் என்பதை விடப் போராடத் தயாராயினர் என்பதே பொருத்தமாகும்.
1928 இல் சைமன் குழுவைக் காங் கிரசு அகில இந்தியர் எவருமில்லாமை யால் புறக்கணிக்க மேற்கொண்ட முடிவு, பார்ப்பனரல்லாத இயக்கத்திற்கு நல் வாய்ப்பாக அமைந்தது. அதைக் குறித் துச் சொல்ல வேண்டுமானால் தாழ்த் தப்பட்டோர் அமைப்புத் தலைவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆதி திராவிட மகாஜனசபையினர் தாழ்த்தப்பட்டோருக்குத் தனித் தொகு திகள் கேட்டு விண்ணப்பித்தனர். இணைந்த தொகுதிகள் நியமனங்களை விட மோசம் என்று கருதினர்.
பிற்படுத்தப்பட்ட இந்துக்களின் பங்கு முதன்மையான பங்கு ஆகும். நீதிக்கட்சி சென்னை மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் பார்ப்பனரல்லா தாரின் குறைகள் வெளிவரத் தலைப் பட்டன.
பார்ப்பனரல்லாதார் நலனுக்கு என்று நீதிக் கட்சியும், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக மொத்தத்தில் செயல்பட்டு வந்த வேளையில் பிற்படுத்தப் பட்டோருக்குள் சில சாதிகள் தனிக் கோரிக்கைகளைத் தங்கள் நலனுக்கு முன் வைத்தன.
தொழில் வினைஞர் வகுப்பார் என்ற விஸ்வ பிராமணர்கள் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதவேண்டும் எனும் வேண்டுகோளை வைத்தனர்.
1932 இல் பண்டிட் கணாலா இராம மூர்த்தியும் பிற 27 சட்டமன்ற உறுப் பினர்களும் விஸ்வ பிராமணர் எனும் தங்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தனர். இதனைத் தனிப்பட்டவர்களும், பிற சங்கத் தவர்களும் கடுமையாக எதிர்த்தனர்.
1933-லும் இது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற பார்ப் பனர் அல்லாதவர் நலனுக்கும் எதி ரானவை என்று கருதியது.
இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் பட்டி யலில் சேர்க்கும் முயற்சி தோல்வியுற்றதும் மாற்று வழிகளை அவர்கள் மேற் கொண்டனர். வன்னியகுல ஷத்திரியர், செட்டி பலிஜாக்கள், சக்கிலியர், தேவாங் கர், நாடார்கள் ஆகிய பிற பிற்படுத்தப் பட்ட சமூகத்தவருக்குச் சமமாக நடத்தும் படி வேண்டுகோள் விடுத்தனர். 1935-லிருந்து 1936 வரை இது போன்ற தீர்மானங்களைக் கொண்டு வந்தனர். இவ்வாறு அவர்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, பொதுத் தேர்வு களில் வேலை பெற வயது உயர்த்துதல், கல்வி வாய்ப்புகளை வேண்டினர்.
பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்தில் வன்னிய குல ஷத்திரியர்கள் தனியான அமைப்பாகவே இயங்கி வந்தனர்.
1938 ஜூலை மாதத்தில் சென்னை வன்னிய குல சத்திரிய மகாசங்கம் வன்னி யர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரைவிட வேலைவாய்ப்பில் பின் தங்கியிருப்பதாக விண்ணப்பம் ஒன்றை முதலமைச்சருக்கு அளித்தனர். அதில் 200 வன்னிய பட்ட தாரிகள் இருந்த போதிலும் 1713 அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களில் ஆறுபேர் மட்டுமே வன்னியர்கள் என்று குறிப் பிட்டனர். வகுப்புரிமையில், வயது வரம்பு தளர்த்துவதில், வேலை வாய்ப்பும், வன்னி யர்கள் தங்களுக்குத் தனி பிரதிநிதித் துவம் வேண்டினர்.
சென்னை மாகாண பிற்படுத்தப்பட்டோர் சங்கம்
சாதீய அமைப்புகள் திராவிடர் கழகம் ஒத்த சாதிக்கு எதிரான பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கு என்றே கால மெல்லாம் உழைத்து வரும் இயக்கத்தைப் புறக்கணித்துத் தனித்தனியே முயற்சிகள் மேற்கொண்டு அம்முயற்சி வெற்றி பெறாமல் போன வரலாறு இது.
1932இல் பிற்படுத்தப்பட்ட இந்துத் தலைவர்கள் எம்.ஏ.மாணிக்கவேலு நாயக் கர், எஸ்.ஏ. நஞ்சப்பா, வி.ஜே.இராமச் சந்திர படையாட்சி எச்.ஆரி. கரவா முதலானவர்கள் சென்னை மாகாண பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சங்கம் என்பதை உருவாக்க முயன்றனர். சாதித் தலைவர்கள் என்று தங்களுக்குத் தலைமைப் பதவியைத் தேடிய வரலாறு இது என்றே நாம் குறிப்பிடலாம்.
1935-இல் இந்தச் சங்கத்தை அரசி யல் சார்பில்லாத சமூக, கல்வி, பொரு ளாதார முன்னேற்றத்திற்கான நோக் கத்தை நிறைவேற்றுவது எனவும் இதன் உறுப்பினராகச் சென்னை கல்வி விதி முறைகளில் பிற்படுத்தப்பட்டோராகக் குறிப்பிட்ட வகுப்பார் எவரும் சேரலாம் என்று விதிமுறை வகுத்துப் பதிவு செய் தனர்.
(5.5.2012 அன்றைய தொடர்ச்சி...)
ஆளுநர் செயற் குழுவின் வருவாய்த்துறை உறுப்பினரைச் சந்திக்க 1933 இல் சி.பாசுதேவ் தலைமையில் ஓர் அணி சென்று, பார்ப்பனரல்லாத இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள் சில முன்னேறிய வகுப்பினருக்குச் செல்கின்றன என்று எடுத்துரைத்து, பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்குத் தனி ஒதுக்கீடு வேண்டினர்.
இந்தத் தூதுக்குழு முயற்சிதான் சென்னை மாகாண பிற்படுத்தப்பட்டோர் வகுப்புச் சங்கத்தின் தொடக்க முயற்சி எனலாம். 1934இல் சட்மன்ற விவாதங் களில் பாசுதேவ், மாணிக்கவேலு நாயக்கர், பிற சட்டமன்ற உறுப்பினர்கள் இதே கருத்தை எடுத்துரைத்தனர்.
இவர்கள் தங்கள் பிரிவினை ஆறாவது பிரிவு என்றோ அல்லது பிற பார்ப்பன ரல்லாத இந்துக்களையும் பார்ப்பனர் களையும் பிற்படுத்தப்பட்டவர் அல்லாத பிரிவினர் எனவும், பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு சுழற்சியில் முன்னுரிமை அளிக்கும்படியும் யோசனை கூறினர்.
இந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கருத வேண்டும் என்றும் மாணிக் கவேலு நாயக்கரின் தீர்மானத்தைத் தொடர்ந்து அரசு இப்பிரச்சினையைத் தீவிரமாக ஆய்வு செய்து, வகுப்புரிமை ஆணை யாருக்குத் தேவையோ அவர் களுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று அரசு கருதியது.
ஆனால் யார் அவ்வாறு தேவையுள்ள வகுப்பினர் என்று கண்டறிவது கடினம் என்று கருதியதோடு, இந்தக் கோரிக் கையை வைத்த குழுவினர் அப்பட்டியலை அளிக்கும் வரை ஏதும் முடிவு செய்ய இயலாது என்று முடிவு செய்தது. எனவே வகுப்புரிமை ஆணையில் செய்யப்படும் எந்த மாற்றமும் புதிய குறைகளைத் தோற்றுவிப்பதுடன் புதிய கோரிக்கைகள் எழவும் வாய்ப்பு ஏற்படுத்தும் என்றும் கருதினார்கள். எனவே ஏதேனும் தீர்வு என்று மேற்கொள்ளப் போய் இருக்கிற சிக்கல் போதாது என்று புதிய சிக்கலை அதாவது தலைவலி போய் திருகுவலி ஏற்படுத்தும் என்பதால் மொத்தத்தில் அக்கோரிக்கையை எதிர்ப்பதே விவேகம் என்று அரசாங்கம் முடிவுக்கு வந்தது.
1936-க்குப் பிறகு நீதிக்கட்சி ஆட்சி மறைந்து காங்கிரசு அரசு ஏற்பட்டது.
எனினும் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்காமல் திரும்பியதால், சட்டமன்ற உறுப்பினர்கள் சோர்வடைந்து விட வில்லை. 1935இல் நிதிநிலை அறிக் கையில் அரசாணையை மாற்றி அமைக்க வேண்டுமென்று பாசுதேவ் மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு மேல் இந்த ஆணையினால் எவ்விதப் பயனும் இல்லை என்றார். மாணிக்கவேலு நாயக்கரோ வகுப்புரிமைகளை பெரும்பான்மை மக்களுக்கு நீதி வழங்காமல் அநீதியையே இழைக்கிறது என்று குரல் கொடுத்தார்.
எனவே இராஜாஜி சென்னை மாநில முதல்வராக விளங்கியவர் வகுப்புரிமை ஆணைக்கு எதிரான எதிர்ப்பை நோக்கி, தனி பிரதிநிதித்துவ வேண்டுகோளைக் கண்ணுற்று 1937இல் விவாதத்திற்குப் பதிலளிக்கையில், பொது நடவடிக்கை களைக் கருதுகையில் இந்த இடர்கள் இன்னும் அரசுப் பணியில் மிகவும் முக்கி யத்துவம் பெறுவது வருந்தத்தக்கது. ஏன் எனில் நம் நாடு எவ்வளவு ஏழ்மையாக இருக்கிறது என்பதும், இது நம் நாட்டில் தொழிற்சாலைகள் இல்லை என்று காட்டு கிறது. ஒரு நாட்டில் நாம் ஒன்றாக இல்லை என்று காட்டுவதோடு, ஒரு நாடாக விளங்காததாலே நாம் இந்த அரசு, ஸ்தல சுயாட்சி நிறுவனப் பதவிகளை மிகவும் முக்கியமாக இந்த உலகத்தில் கருதி அதனை வகுப்புரிமைச் சிக்கலாகக் கொண்டு செல்லச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் அவர் பார்ப்பனர் ஆதலால் அவர் கூறிய பதிலைப் பாருங்கள்.
இந்த வகுப்புவாதப் பேச்சை தினமும் விவாதிக்கும் பொருளாக தினசரிச் சிக்கலாக இந்த அவையில் அனுமதிப்பது பெருந்தவறு. இந்த வகுப்புப் பிரச்சினை தவிர வேறு எதுவும் இந்த மக்களால் இங்கே எழுப்பப்படவில்லை. இது நமக்கு நல்லதாக இருப்பினும் இது ஆதியான பாவம். இது பற்றிக் கொண்டுள்ள இதை விட்டு நாம் வெளியே வருவோம். இந்த பாவத்திலிருந்து வெளியேற முயல்வோம். இதை குறைவாக ஆக்க அல்லது அதிக மாக ஆக்காமல் இருக்க முயல்வோம். என்று இந்தப் பிரச்சினையை விவாதிப் பதையே ஒரு பெரிய பாவமாகக் கருதினார் ஏனென்றால் அவர் அரசியல்ஞானி அல்லவா? காலில் செருப்பு மாட்டிக் கொண்டு இருக்கிறவனுக்கு அல்லவா எந்த அளவிற்குச் செருப்புக் கடியின் அவஸ்தை என்பது. இதற்கிடையில் பிற்படுத்தப்பட்டோர் சபை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எனும் பத்திரிகையினை பிற்படுத்தப்பட்ட இந்துக் களின் சார்பாக நடத்திவந்தது. அதன் பின்னர் தொடர்ந்து ஆண்டுதோறும் மாநாடு களை நடத்தியது.
1939-இல் அதனுடைய முதல் ஆண்டு மாநாடு நடைபெற்ற போது, மாநிலம் முழு வதிலுமிருந்து ஏராளமானோர் பங்கேற் றனர். 1940-இல் விஜயநகரம் மகாராணி தலைமையில் ஊட்டியில் இரண்டாவது மாநாடு நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்தவர் பித்தாபுரம் மகா ராஜா. 2000 சார்பாளர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் நடவடிக்கைகளை அரசுக்கு அளித்தது.
1943-இல் அய்ந்தாம் மாநில மாநாடு நடந்தபோது அதற்குத் தலைமை வகித்தவர் எம். கிரியப்பா. இம்மாநாட்டில் தலைமை வகித்த கிரியப்பா காங்கிரசை யும், நீதிக்கட்சியையும் விமர்சித்ததோடு பெரியார் நீதிக்கட்சித் தேரை இழுக்கிறார் என்று குறை கூறினார். அரசியல் கட்சிகளின் ஆதரவில்லாமல் பிற்படுத்தப் பட்ட இந்துக்களைத் தனியாகச் செயல் படக் கூறினார்.
இந்த மாநாட்டில் சட்டமன்றத் தல ஆட்சி நிறுவனம் ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, வகுப்புரிமை ஆணை, மறு சீரமைப்பு ஆகியவற்றை வலியுறுத்தினார். எனவே பிற்படுத்தப்பட்டோர் சங்கம், பிற சங்கங்கள் தாழ்த்தப் பட்டோர் ஆகிய வற்றினால் 1947 நவம்பரில் இந்திய விடுதலைக்குப் பின், வகுப்புரிமை ஆணை மாற்றியமைக்கப்பட்டது. 29 விழுக்காடு அதாவது ஆறு இடங்களை முன்னேறிய பார்ப்பனர் அல்லாதவருக்கும் இரண்டு இடங்களை அதாவது 14.3 விழுக் காட்டினை பிற்படுத்தப்பட்ட இந்துக்களும் பார்ப்பனர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினருக்கு ஒவ்வொன்றுக்கும் ஓர் இடங்களும் அதாவது7.1 விழுக்காடு இடங்களை ஒதுக்கின.
முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சென்னை மாநில பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் கூட்டணியினர் 25 விழுக்காடு பிற்படுத் தப்பட்டோருக்குக் கல்வி ஒதுக்கீடு மிகவும் குறைவு என்றனர். அரசு முன்னேறிய வகுப்பினர் நலனுக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இழப்பு அடையும்படி செய்வதுடன், பிற்படுத்தப் பட்டோர் நலனுக்குப் பாடுபடுவதாக நடிக்கவும் செய்கிறது.
(நேற்றைய தொடர்ச்சி...)
முதலமைச்சர் பிற்படுத்தப்பட்டோ ருக்கு 50 விழுக்காடு உயர்த்தும்படி வேண்டினர் தாழ்த்தப்பட்டோர், மலை வாழ்மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகி யோருக்கு 65 விழுக்காடு மொத்த ஒதுக்கீடாக அமைத்திடுமாறும், பட்டப் படிப்பிற்கு இன்டர்மீடியத் தேர்வில் தேர்ச்சி மட்டுமே அடிப்படையில் போது மானதாகக் கருதும்படி கேட்டனர்.
மற்றொரு கடிதத்தில்ஏ.சுப்பிரமணியம் எனும் காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர், பிற்படுத்தப் பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் 60 விழுக்காடு இட ஒதுக்கீடும், வேலை வாய்ப்புகளில் 75 விழுக்காடும அளிக்கும்படியும் கேட்ட தோடு, இதற்கு உடன்படவில்லை யெனில் பிற பிற்படுத்தப்பட்ட சட்ட மன்ற உறுப் பினர்களுடன் காங்கிரசிலிருந்து வெளி யேறி விடுவதாக மிரட்டவும் செய்த போதும், அரசு இந்த இரு கோரிக்கை களும் இயலக் கூடியவை அல்ல என்றது.
எனவே 1949இல் வன்னியர் ஊராட்சி மன்றத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு 52 இடங்களில் 22 இடங் களை வட ஆர்க்காடு மாவட்டத்தில் பெற்றதுடன் காங்கிரசு வேட்பாளர்களைத் தோல்வியுறச் செய்தனர்.
எனவே 1951 ஆம் ஆண்டுத் தேர்தலில் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எம்.ஏ.மாணிக்கவேலு நாயக்கர் தலைமை யிலான காமன்வீல் கட்சியையும், எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி தலைமையில் உழைப்பாளர் கட்சியையும் உருவாக்கினர். காமன்வீல் கட்சி 19 இடங்களையும், உழைப்பாளர் கட்சி 6 இடங்களையும் வடஆர்க்காடு, செங்கல்பட்டு, தென் னார்க்காடு மாவட்டங்களில் பெற்றன.
அடுத்த கட்டமாக பிற்படுத்தப் பட்டோர் வாழ்வில் சோதனை ஏற்பட்டது 1979 ஆம் ஆண்டில் எனலாம்.
1979இல் எம்.ஜி.இராமச்சந்திரன் அதிமுக அரசு பிற்படுத்தப்பட்டோர் வருமான வரம்பை 9000 ரூபாய் என்று நிர்ணயித்து அரசாணை பிறப்பித்தபோது இதற்கு எதிரான எதிர்ப்பு அனல் பரவி யது. திராவிடர் கழகம் தந்தை பெரியார் மறைந்த பின் இந்த அரசாணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனைத் திரும்பப் பெறவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றது. எம்.ஜி.ஆர். அரசு இந்த அரசாணையைத் திரும்பப் பெற்றதுடன் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வீதத்தை 31 விழுக்காட்டி லிருந்து 50 விழுக்காடாக உயர்த்தவும் செய்து நல்லபெயர் எடுத்துக் கொண்டது.
முதலில்மேற்கொள்ளவிருந்த பாதிப்பிற்கு இது பரிகாரமாக அமைந்தது என்றே கூறவேண்டும். ஆதிக்க சக்திகள், ஆரியக் கொடுக்குகள் சும்மா இருக்குமா? இந்த அரசாணை அரசமைப்புச் சட்டத் திற்கு முரண் என்று உச்சநீதிமன்றப் படிக்கட்டுகளில் தவம் கிடந்தன.
எனவே 1982 இல் உச்சநீதிமன்றம் இரண்டு மாதத்திற்குள் அப்போது இருந்த பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை ஆய்வு செய்து அறிவியல் அடிப்படையில் அமைத் திட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவை நியமிக்க ஆணையிட்டதன் பேரில் 1982ஆம் ஆண்டு டிசம்பரில் எம்.ஜி.இராமச்சந்திரன் அரசு நியமித்தது.
1985 இல் இக்குழுவில் 21 உறுப் பினர்கள் 14 பேர் மாறுபட்ட கருத்தினைத் தெரிவித்தனர். அதில் அதன் தலைவர் 17 முன்னேறிய வகுப்பினரை பிற்படுத்தப் பட்ட வகுப்பினராகவும், 34 வகுப்பினரை பட்டியிலில்இருந்து நீக்கும்படியும் அளித்த பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர் பிற உறுப்பினர்கள்.
எனவே இருக்கும் பட்டியலை அப்படியே வைத்துக் கொள் வது என்பதும், மிகவும் குறைவான 32 விழுக்காட்டுக்குப் பதிலாக 67 விழுக் காடு ஒதுக்கீடு அளிப்பது என்பதும் குழுத் தலைவரின் பரிந்துரையாயிற்று.
இந்தச் சூடு பரவியபோதும் எம்.ஜி.ஆர். அரசுக்கு இக்குழுவின் அறிக்கையை வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்தது. பலத்த கோரிக்கையின் பின்னும் சட்டப் பேரவையில் முன் வைக்கவும் முன் வரவில்லை.
எனினும் 1985 இல் இந்த அறிக்கை யின் சில பகுதிகளை மட்டும் பயன் படுத்தி, வரிசையாகச் சில அரசாணை களை 1985 ஜூலையில் எம்.ஜி.ஆர். அரசு வெளியிட்டது.
தாழ்த்தப்பட்டவர் மலைவாழ் மக்களுக்கு உரிய 18 விழுக்காடு தவிர்த்து நடப்பில் இருந்த பிற்படுத்தப் பட்டோருக் கான 50 விழுக்காடு ஒதுக்கீடு கல்வி யிலும், வேலை வாய்ப்பிலும் எனவும், எந்த வகுப்பையும் பட்டியலில் இருந்து நீக்குவ தில்லை எனவும், பிற்படுத்தப் பட்டோரில் அடங்கியுள்ள மிகவும் பிற்படுத்தப்பட் டோரின் நடப்பில் உள்ள பட்டியலை ஏற்பது எனவும் அரசாணைகள் எம்.ஜி. இராமச்சந்திரன் அரசு வெளியிட்டது.
மாநில மக்கள் தொகையில் 12 விழுக்காட்டினரான வட மாவட்டங்களில் குறிப்பாகத் தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங் களில் வாழும் வன்னியர் மொத்த பிற்படுத்தப்பட்டோர்தொகையில் அய்ந் தில் ஒரு பங்கினர் ஆவர். வன்னியர் களுக்குத் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்கீட்டுப் பயன் கிட்டவில்லை என்னும் குறை இருந்து வந்தது. எனவே வேலை வாய்ப்பிலும், கல்வியிலும், மாநிலத்தில் 20 விழுக்காடும், மய்யத்தில் வேலை வாய்ப்பில் இரண்டு விழுக்காடும் கோரிப் போராடினர்.

முனைவர் பேரா ந.க. மங்களமுருகேசன்
-விடுதலை,3-8.5.12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக