பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2015

கடன் களின் மீதான வட்டி வீதம் பார பட்சமான தன்மை கொண் டது


1983 ஜனவரி 25ஆம் நாள் இந்து நாளேட்டின் ‘Open Page’ என்ற பகுதியில் கிராமப்புற ஏழ்மையும் வங்கித் தொழிலும் என்ற தலைப்பில் என்.டி. தஸ்கார் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் காணப்படும் செய்தி இது. கி.மு. 700-க்கும், கி.மு. 200-க்கும் இடைப்பட்ட சுட்ரா (Shutra)காலத்தில் கடன் களின் மீதான நடைமுறை ஆண்டு வட்டி வீதம் பார பட்சமான தன்மை கொண் டது என்பதற்கான ஆதா ரங்கள் உள்ளன ஆண்டு வட்டி வீதம்,
பார்ப்பனர்களுக்கு - 24 சதவீதம்,
சத்திரியர்களுக்கு - 36 சதவீதம்,
வைசியர்களுக்கு - 48 சதவீதம்,
விவசாயிகள் உள் ளிட்ட சூத்திரர்களுக்கு 60 சதவீதம் என்ற வகையில் வேறுபட்டிருந்தது. கடன் வழங்கப்பட்ட நோக்கங் களின் தன்மைகளைக் கருத்தில் கொள்ளாது, கடன் பெற்றோரின் ஜாதியை (வருணத்தை) அடிப்படை யாகக் கொண்டே வட்டி விகிதம் மாறுபட்டிருந்தது என்று எழுதியது விடுதலை ஏடு அல்ல - இந்து ஏடு என் பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்
****
மவுரியர் காலத்தில் மாதச் சம்பளம் விவரம்: வேலைக்காரனுக்கு 60 பணம்  ஒற்றனுக்கு 200 பணம், சிற்றூர் அதிகார னுக்கு 500 பணம் தலை மைத் தச்சனுக்கு 2000 பணம். அமைச்சராகவும், புரோகிதனாகவும், படைத் தலைவனாகவும் இருந்த ஒவ்வொரு பார்ப்பானுக் கும் மாதச் சம்பளம் 48000 பணம் இத்தகவல்கள் சாணக்கியனின் பொருள் நூலில் கூறப்பட்டுள்ளன.
(ஆதாரம்: பேராசிரியர் மதிவாணன் எழுதிய சாதி களின் பொய்த் தோற்றம் எனும் நூல்
****
1610ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி ராபெர்ட் டீ நொபிலி (Robert De Nobili)
எழுதிய  கடிதம் நாயக்கர் மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது. மதுரையில் 10,000 மாண வர்க்கு மேல் இருக்கின் றனர். அவர்கள் பல வகுப் புகளைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுள்ளது. அவர்களெல்லோரும் பிராமணர்களே, ஏனென் றால் உயர்தரக் கலைகளைக் கற்க அவர்களுக்குத் தான் உரிமையுண்டு
- (ஆதாரம்; மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஒப்பியன் மொழி நூல் பக்கம் 55).
பார்ப்பனர்களுக்குத் தனித்த சலுகைகளும், வாய்ப்புகளும் ஏன்?   ஒரு கண்ணில் சுண்ணாம்பு - இன்னொரு கண்ணில் வெண்ணெய்யா? இப்படி பலதலைமுறை களாக சகல வசதிகளும், வளமைகளும் பெற்றுக் கொழுத்தவர்களோடு, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பள்ளன் என்றும் பறையன் என்றும் பொட்டுப் பூச்சிகளாக இழிவுபடுத்தப்பட்டவர்கள் கல்வியில் சம தகுதியோடு போட்டியிடச் சொல்லுவது. ஏற்கனவே இருந்து வந்த அந்தப் பார்ப்பனர் ஆதிக் கத்தை கான்கிரீட் போட் டுக் கொழுக்க வைப்பது தானே? சிந்திப்பீர்!
- மயிலாடன்
-விடுதலை,12.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக