பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2015

பார்ப்பனர்களையா - பார்ப்பனீயத்தையா?


கேள்வி: நீங்கள் பார்ப்பனர்களை எதிர்க்கிறீர்களா? பார்ப்பனீயத்தை எதிர்க்கின்றீர்களா?
பதில்: பார்ப்பனீயம் என்றால் என்ன என்பதற்கு டாக்டர் அம்பேத்கர் கூறியதை எடுத்துக்காட்டாகக் கூறவேண்டி இருக்கிறது.
1. பல்வேறு வகுப்பினரிடையே ஏற்றத்தாழ்வு களை நிலை நிறுத்துவது.
2. சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் முற்றிலுமாகப் புறக்கணிப்பது.
3. சூத்திரர்களுக்கும், தீண்டத்தகாதவர் களுக்கும் முற்றிலுமாகக் கல்வியை மறுப்பது.
4. சூத்திரர்களையும், தீண்டத்தகாதவர் களையும் அதிகாரங்களுக்குச் செல்லவிடாமல் தடுப்பது.
5. சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் சொத்து சேர்க்கத் தடை விதிப்பது.
6. பெண்களை முழுமையாக அடிமைப்படுத்தி ஒதுக்குவது.
இதுதான் அம்பேத்கர் எடுத்துக் காட்டிய பார்ப்பனீய குணங்கள். இவைகளை நிலைநிறுத்துவது பார்ப்பனர்கள்தான். எனவே, பார்ப்பனர்களை எதிர்க்காமல் எப்படி பார்ப்பனீயத்தை எதிர்க்க முடியும்? ஆளை விட்டு விட்டு நிழலை மட்டும் எப்படிப் பிரிக்க முடியும்?
- அலைவ் ஆங்கில இதழுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து
-விடுதலை,1.12.11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக