செவ்வாய், 31 ஜூலை, 2018

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்பட்டது


தேசிய செய்திகள்

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்பட்டது     


உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பதிவு: ஜூலை 30,  2018 17:52 PM


லக்னோ

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில்  உள்ள முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பெண் பாரதீய ஜனதா மனிஷா அனுராகி  கடந்த ஜூலை 12 ந்தேதி  ஒரு விழாவுக்கு சென்று இருந்தார்.

பெண் எம்.எல்.ஏ போய் வந்த பிரபல  ரிஷி த்ரோம் கோவிலில் பெண்கள் வழிபட தடை உள்ளது.  இது தெரியாமல் கட்சி  தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்.எல் ஏ அங்கு சென்று உள்ளார். மகாபாரத காலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதாக  நம்பப்படுகிறது. இந்த கோவிலில் பெண் பக்தர்கள் நுழைவதற்கு பல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

கோவிலுக்குள் வந்தபோது, தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மட்டுமே பிரார்த்தனை செய்தார். ஆனால் ரிஷி த்ரோம் அவரது பிரார்த்தனைகளை நடத்தியதாக நம்பப்படுகிறது ஒரு புனிதமான தளம் மீது ஏறி நின்று உள்ளார். யாரும் மேடையில் ஏறி நின்றது கிடையாது.    இது ஒரு புனிதமான இடம் மற்றும் மக்கள் மேடையில் குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

தொண்டர்களின் நிர்பந்தததால் அங்கிருந்த பூசாரி  சுவாமி தயானந்த் மகந்த் ஒன்றும் கூறவில்லை. பென் எம்.எல் ஏ வந்து சென்றதில் இருந்து சுத்தம் செய்வதற்காக அந்த கோவில் மூடப்பட்டது.  கோயிலுக்குள் நுழைந்த பெண் எம்.எல்.ஏ., குறைந்த சாதியினரே என்று பூசாரி கோபமடைந்தார். எம்.எல் ஏ வருகைக்கு பின் அவளுடைய வருகைக்கு வருத்தம்,சுவாமி தயானந்த மகந்த் , கிராம மக்களும் பஞ்சாயத்து  ஒன்றை கூட்டினர். கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் கடவுளின்  கோபத்தை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

அவரின் விஜயத்தின் பின்னர் ஒரு துளி நீர் மழை பெய்யவில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பஞ்சாயத்து தெய்வங்களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆலயத்தை சுத்தப்படுத்த கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை   கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமம் ஆகும்   பிரயாக் (அலகாபாத்) கொண்டு சென்று சுத்தபடுத்துவது  என முடிவுசெய்தனர்.

அதன் படி கங்கை நீரால் கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்களின் சிலைகள் பிரயாக்கில் சுத்தம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது .பக்தர்கள் 'தரிசனம்' செய்வதற்காக இந்த ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மனிஷா அனுராகி   கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது  என்று கூறி உள்ளார்.

-தினத்தந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக