தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட் டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.
தீண்டாமை ஒழிப்பு என்னும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந் தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
சம்பந்தப்பட்ட அருந்ததியர் ஜாதி பெண்மணி அதே பள்ளியில், அதே பணி யைத் தொடரவேண்டும்.
சில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி மாவட்டம் A-மோட்டூரில் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றிய மகேசுவரி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை இட மாற்றம் செய்தபோது திராவிடர் கழகம் தலையிட்டது - விடுதலை'யில் கண்டித் தும் எழுதப்பட்ட காரணத்தால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சமீ பத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.
முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தீண்டாமையைக் கடைபிடித்தவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு, பணி மாற்றம் செய்யப்பட்ட அந்த அருந் ததியர் ஜாதிப் பெண்ணை அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
19.7.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக