பக்கங்கள்

திங்கள், 30 நவம்பர், 2015

ஏற்றத்தாழ்வுகள் நீங்கினால் தான் புதிய சமுதாயம் படைக்க முடியும்


பெங்களூரு, நவ.18 ஏற்றத்தாழ்வுகள் நீங்கி னால் தான் புதிய சமு தாயத்தை படைக்க முடியும் என்று கர்நாடக மேல்-சபையில் சித்தராமையா கூறினார்.
கர்நாடக மேல்-சபை அரங்கத்திற்குள் அம்பேத்கர் மற்றும் பசவண்ணர் ஆகியோரின் உருவப்படங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு, அவர்களின் உருவப்படங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணர், ஜாதி முறைக்கு எதிராக போரா டினார். 20-ம் நூற்றாண் டில் அம்பேத்கர் சமத்துவ சமுதாயத்தை படைப் பதற்காக போராடினார். இந்த 2 தலைவர்களும் ஜாதி முறைக்கு எதிர்ப்பு, சமத்துவம், சமூகநீதிக்காக போராடிய மகான்கள் ஆவார்கள். ஜாதியற்ற நிலையை உருவாக்க நாம் எவ்வளவு முயற்சி செய் தாலும், இந்த சமுதாயத்தில் ஜாதி என்கிற வேர் ஆழ மாக வேரூன்றி உள்ளது.
ஜாதிகளை அவ்வளவு எளிதாக ஒழிக்க முடியாது. சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஏற்றத் தாழ்வுகளை நீக்க நாம் இணைந்து பாடுபட வேண்டும். இந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கினால் தான் புதிய சமுதாயம் படைக்க முடியும். 12-ஆம் நூற்றாண்டில் அனுபவ மண்டபத்தை தொடங்கி ஜனநாயகத்திற்கான விதையை விதைத்தவர் பசவண்ணர். ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பசவண்ணர் தான் தொடங்கிய அமைப் புக்கு ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த அல்லம் பிரபுவை தலைவராக நியமனம் செய்தார். ஏழை-பணக்காரர், ஜாதி பாகு பாடு இல்லாமல் அனை வருக்கும் சமஉரிமை கிடைக்க வேண்டும் என்று அம்பேத்கரும், பசவண்ணரும் போராடி னார்கள். அவர்களின் கொள்கைகள் மற்றவர் களுக்கு வழிகாட்டி ஆகும்.
இவ்வாறு சித்த ராமையா பேசினார்.
-விடுதலை,18.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக