பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

கோயில் கட்டிய தலித் பெண்ணுக்கு கோயிலுக்குள் நுழைய உரிமை இல்லையாம்!


அகமதாபாத், ஆக.4 காந்தியார் பிறந்த மாநிலம் குஜராத். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமும் இதுதான். தீண்டாமை கொடுமைக்கு எதிராகவும், சாதியின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியும் வாழ்நாள் முழுவதும் போராடியவர்  காந்தியார்.

ஆனால், குஜராத்தில் சாதி ரீதியான பாரபட்சம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தலித்களுக்கு சம உரிமை என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.

பெரும்பாலான கோவில்களில் தலித்துகளை உள்ளே அனுமதிப்ப தில்லை. குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள். ஆலயத்தின் கேந்திர பகுதிக்கும்
நுழைவாயிலுக்கும் இடையே அக்னி குண்டம் உள்ளது. இந்த அக்னி குண்டத்தை கடந்து செல்லும் உரிமை தலித்துகளுக்கு கிடையாது. உயர் சாதி இந்துக்கள் மட்டுமே அக்னி குண்டத்தை கடந்து செல்ல முடியும். காந்தி நகரில் உள்ள நாகாலயத்தின் பூசாரிகள் இதை நியாயப்படுத்துகிறார்கள்.

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்பதை ஏற்க முடியாது. தலித்துகளை கேந்திரப் பகுதிக்குள் அனுமதித்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கோவில் பூசாரிகள் கூறுகிறார்கள். கோதா என்ற இடத்தில் உள்ள சுவாமி நாராயண் நூதன் மந்திர் என்ற நவீன ஆலயத்திலும் கூட தலித்துகளுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை. குஜராத்தில் அகமதாபாத் அருகே யுள்ள குக்கிராமம் ரகமல்பூர் என்ப தாகும். இந்த கிராமத்தை சேர்ந்த பிந்தூபென் கிராம பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். தலித் சமூ கத்தை சேர்ந்த இவருக்கு 35 பிகா நிலம் உள்ளது. இது சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சமம். இந்த நிலத் தில் இருந்து கிடைக்கும் வரு மானத்தை சேமித்து வைத்து ரூ.10 லட்சம் திரட்டிய அவர் இதைக் கொண்டு ஒரு கோவில் கட்டினார்.

இந்த கோவிலில் நேரந் தவறாமல் வழிபாடு நடைபெற்று வருகிறது. ஆனால், கோவிலுக்குள் நுழைய பிந்தூபென்னுக்கு அனுமதி அளிக் கப்படவில்லை. ஏனெனில் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்று உயர் சாதியினர் கூறுகின்றனர். கட்டிய கோவிலுக்குள் நுழைய முடியாதது பிந்தூபென்னுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் ஊர் கட்டுப்பாட்டை மதித்து அவர் நடந்து கொள்கிறார். உள்ளே போய் சாமி கும்பிட முடியா விட்டாலும் வெளியே நின்றபடி வணங்குவதாக அவர் தெரிவித்துள் ளார்.

குஜராத்தில் தலித் சமூகத்தினர் பாரபட்சமாக நடத்தப்படுவதால் தான் அங்கு அடிக்கடி கலவரங்கள் நடக்கின்றன. அனைவரையும் உள்ள டக்கிய வளர்ச்சி என்பது ஏட்டளவில் நின்று விடாமல் உண்மையாகவே நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் கலவரங்களை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும் என்று சமூகவியல் ஆய்வாளர்கள் உறுதிபட உரைத் துள்ளனர்.
-விடுதலை,4.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக