அகமதாபாத், ஆக. 5 -உயர்சாதி யினரில் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்காக 10% இடஒதுக்கீடு அளிக்கும் குஜராத் பாஜக அரசின் அவசரச் சட்டத்தை அம்மாநில உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்கீட்டை அனு மதிக்க முடியாது. அவ்வாறான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் உள்ள அடிப்படை உரிமைகளை மீறுவது ஆகும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பட்டிதார் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டத்தின் காரணமாக குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கடந்த மே 1-ஆம் தேதியன்று அவசரச் சட்டம் ஒன்றை பிறபித்தார்.அரசின் புதிய அவசரச் சட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருமானம் உடைய உயர்சாதியினருக்கு இடஒதுக் கீடு உண்டு எனத் தெரிவிக்கப் பட்டிருந்தது.
அதாவது, குஜராத்தில் ஏற் கெனவே இடஒதுக்கீடு பட்டிய லில் இல்லாத- அதேநேரம் ஆண்டுக்கு ரூ. 6 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள அனைவருக்கும் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங் கப்படும் என்பதுதான் இந்த அவசரச் சட்டத்தின் சாரம்.
ஆனால், இதை எதிர்த்து சமூக ஆர்வலரான ஜெயந்த் பாய் மனனி என்பவர், அகமதாபாத் உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். எவ்வித ஆய்வுகளும் மேற் கொள்ளப்படாமல், திடீரென இப்படி ஓர் அவசரச் சட்டத்தை பிறப்பித்து இருப்பது, அடிப் படை உரிமைகளுக்கு எதி ரானது என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் வியாழ னன்று தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம், குஜராத் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டம் செல்லாது என்றும், அது ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது.
குஜராத்தில் உயர்சாதியின ராக இருப்பவர்கள் இட ஒதுக்கீடு கோரி நடத்திய போராட்டம், தற்போது நாட் டில் அமலில் இருக்கும் சமூகரீதியான இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தால் தூண்டிவிடப் பட்ட ஒன்றே ஆகும்.
இப்போராட்டத்தை காரணம் காட்டி பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதன் மூலம் உயர் சாதியினரின் வாக்குகளை முழுமையாக கைப்பற்றிவிட முடியும் என கணக்கு போட் டது. ஆனால் குஜராத் உயர்நீதி மன்றம் அந்தக் கணக்கை தகர்த்துள்ளது.
-விடுதலை,5.8.16
-விடுதலை,5.8.16
குஜராத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சட்டம்
அரசியல் சட்ட விரோதம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது
2017 தேர்தலுக்கான பி.ஜே.பி.யின் ‘‘வித்தைகள்’’ வெற்றி பெறாது
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை
அரசியல் சட்ட விரோதம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது
2017 தேர்தலுக்கான பி.ஜே.பி.யின் ‘‘வித்தைகள்’’ வெற்றி பெறாது
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை
குஜராத் மாநிலத்தில் பொருளாதார அடிப்படையி லான அவசர சட்டம் செல்லாது என்ற குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. 2017 இல் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இந்த பி.ஜே.பி.யின் தந்திரம் வெற்றி பெறாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
குஜராத் அரசு (பா.ஜ.க. அரசு), அங்குள்ள பட்டிதார் என்ற பட்டேல்களின் கடும் எதிர்ப்பு - போராட்டம் காரணமாக அங்கே தொடர்ந்து நடைபெற்று தாழ்த்தப் பட்ட சமூகத்தினருக்கு ‘‘தலித்களுக்கு’’ -விரோதமான படுகொலைகளை பசுப் பாதுகாப்பு போர்வையில் நடத்தி, மிகப்பெரிய அளவில் அவர்களது வெறுப்பைச் சம்பாதித்துள்ளதாலும், ஏற்கெனவே சிறுபான்மை யினரான இஸ்லாமியர்களின் அச்சம் கலந்த குமுறல் வரும் ஆண்டு தேர்தலில் எதிர்ப்பாக வெளிவரும் என்பதாலும், ஒரு ‘‘வித்தையை’’க் கையாண்டனர்!
குஜராத் மாநில பி.ஜே.பி. அரசின்
அவசர சட்டம் செல்லாது
உயர்ஜாதியில் உள்ள வசதியற்றவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - கல்வியிலும், உத்தியோகங் களிலும் வழங்கவேண்டுமென்று ஒரு அவசரச் சட்டத்தை (Ordinance) பிறப்பித்தனர்!
குஜராத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக் கில், தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமை யிலான முதல் அமர்வு தெளிவாகத் திட்டவட்டமாக ‘‘இந்த அவசர சட்டம் செல்லாது - இது அரசியல் சட்ட விரோதம்'' என்று தீர்ப்பு கூறிவிட்டது.
1992 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் இதே தீர்ப்பு
இதேபோன்று முன்பு - 1992-க்கு முன்பு திரு.பி.வி.நரசிம்மராவ் அவர்களின் தலைமையில் நடந்த மத்திய அரசு, மண்டல் பரிந்துரை செயல்படக் கூடிய வாய்ப்பு துளிர்த்த நேரத்திலே மேல் ஜாதியி னரில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செய்ய ஓர் ஆணையைப் பிறப்பித்திருந்தது!
மண்டல் பரிந்துரைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்புக்கான 16(4) பிரிவினையொட்டி மத்திய அரசு பதவிகளில், பொதுத்துறை நிறுவனங் களில், கார்ப்பரேஷன்களில், தொழிற்சாலைகளில் 27 சதவிகித இட ஒதுக்கீடு செய்ய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது.

இந்திரா சஹானி வழக்கு என்ற அவ்வழக்கினை, ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்து, தீர்ப்பு எழுதியது.
ஜஸ்டீஸ் திரு.எஸ்.ரத்தினவேல் பாண்டியன், இந்த ஆணை செல்லும் என்று ஒரு தனித் தீர்ப்பு (Separate Judgement)
எழுதினார்.
ஒன்பது நீதிபதிகளும் வி.பி.சிங் அரசு போட்ட ஆணை செல்லும் (மண்டல் பரிந்துரையுடன்படி செய்யலாம்) என்று தீர்ப்பு தந்தனர்! (ஜஸ்டீஸ் பி.பி.ஜீவன் ரெட்டி தீர்ப்பு எழுதினார்).

அதில் விவாதிக்கப்பட்டுத் தீர்ப்புக் கூறப்பட்ட மற்றொரு முக்கிய ஆணை பற்றியது என்னவென்றால், உயர்ஜாதியினரில் வசதி குறைந்தவர்களுக்கென ஒதுக்கப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை செல்லுமா? என்ற கேள்விக்கு - பிரச்சினைக்குத் தீர்வும் கூறினர்.
செல்லாது என்று 16.11.1992 அன்று தெளிவாகக் கூறினார்கள். காரணங்கள்,
1. இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகள் பகுதியில் உள்ள 13(1), 14, 15, 15(4) ஆகிய இந்தப் பிரிவு களில், சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், ஷெட்யூல்டு ஜாதி, ஷெட்யூல்டு டிரைப் ஆகிய தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்று தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டம் கூறும்
அளவுகோல் என்ன?
‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்‘’ (Socially and Educationally) என்பதுதான் பிற்படுத்தப்பட்ட வர்களை அடையாளப்படுத்தும் அளவுகோல் என்பது அரசியல் சட்ட கர்த்தாக்கள் - டாக்டர் அம்பேத்கர் உள்பட, அவர் சட்ட அமைச்சர் ஆன நிலையில், முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி 15(4) என்ற பிரிவு புகுத்தப்பட்டபோது நடந்த விவாதத்திலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று; காரணம், ‘பொருளாதார’ அளவுகோல் (‘economically’)
என்பது, நிலையான அளவுகோல் அல்ல; ஆண்டுக்கு ஆண்டு, தகுதிக்குத் தகுதி, இடத்திற்கு இடம் மாறக்கூடியது. (எடுத்துக்காட்டாக, ஏழாவது சம்பளக் கமிஷன் பரிந்துரை அமுலானால், பழைய அளவுகோலை வைத்து அளக்க முடியாதல்லவா? அதுபோல...).
நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி தீர்ப்பு
இந்தக் கருத்து - மண்டல் வழக்கான இந்திரா - சஹானி வழக்கிலும், கே.சி.வசந்தகுமார் Vs கருநாடகா அரசு வழக்கிலும்கூட (8.5.1985) உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட ஒன்று.

வசந்தகுமார் வழக்கில் கருத்துக் கூறிய ஜஸ்டீஸ் ஓ.சின்னப்ப ரெட்டி, இட ஒதுக்கீடு என்பது உரிமையின் பாற்பட்ட ஒன்றே தவிர, அது ஒன்றும் உதவி செய்து தரும் சமூக நிவாரண நடவடிக்கை அல்ல (Reservation is not a Social Ameliorative Measures) என்று தெளிவாக கூறினார்.
அந்த அடிப்படையில்தான் குஜராத் அரசின் அவசர சட்டத்தை, அந்த உயர்நீதிமன்றம் செல்லாது என்று சட்டப்படி சரியான தீர்ப்பைக் கூறியுள்ளது!
அங்குள்ள அமைச்சர் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்வோம் என்று கூறியுள்ளார்! அங்கே போனாலும் இத்தீர்ப்பு தலைகீழாக மாற்றப்படும் என்ற நம்பிக்கை - வீண் பொய் நம்பிக்கையே!
தேர்தலுக்கான ‘‘வித்தைகள்!’’
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வரும் 2017 ஆம் ஆண்டு தேர்தல் பா.ஜ.க.வுக்கு சாதகமாக அமைய மேற்கொள்ளப்படும் இத்தகைய ‘‘வித்தை கள்’’ பயனளிக்காது. வெறும் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைப்பது கடினமே!
குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுப் பாராட்டுகிறோம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
5.8.2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக