பக்கங்கள்

புதன், 11 ஆகஸ்ட், 2021

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு

 

 தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை , ஆக, 4- மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட் டில் தமிழ் நாட்டில் 69 சத வீத இடஒதுக்கீட்டை பின் பற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல் படுத்தவில்லை என கூறி தி.மு.சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான முதன்மை அமர்வு விசாரித்து வருகிறதுஇந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜிநீதிபதி பி.டி.ஆதி கேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது ஒன்றிய அரசுத் தரப்பில் ஆஜரான கூடு தல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கர நாராயணன், 'உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் குழு நியமிக்கப் பட்டுஅதன் பரிந்துரை அடிப்படையில்மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதுஎன்றார்.

இதற்கு தி.மு.சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிவில்சன் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். 'தற்போது தமிழகத் தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறை அம லில் உள்ளதுஅந்த ஒதுக்கீட்டைத்தான் ஒன்றிய அரசும் அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதுஒன்றிய அரசின் 27 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும்தமிழ்நாடு அர சின் இட ஒதுக்கீட்டைப் புறக்கணிக்க முடியாது என்றும் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதுஅதை ஒன்றிய அரசின் குழுவும்உச்சநீதிமன்ற மும் ஏற்றுக்கொண்டுள்ளனஎனவேமாநிலத்தில் பின்பற்றப்பட்டுவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்என்று வாதிட்டார்.

இருதரப்புவாதங்களையும் கேட் டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்உச்சநீதிமன்றமும்இந்த உயர்நீதிமன்ற மும்தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைத்தான் அமல் படுத்த வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளனஎனவேமருத்து வப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு அமல்படுத்த வேண்டும்ஆனால்இந்த உயர்நீதிமன்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாமல் ஒன்றிய அரசு இழுத்தடிப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டுகிறார்மேலும் 50 சதவீத ஒதுக்கீட்டுக்குள்தான் பொருளாதாரத் தில் பின் தங்கியவருக்கான 10 சதவீதம் வருகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.

தற்போது இந்த விவகாரத்தில்ஒன் றிய அரசு நிலையை கேட்டு தெரிவிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கால அவகாசம் கேட்கிறார்இதை ஏற்றுக் கொண்டு விசாரணையை வருகிற 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்என்று கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக