பக்கங்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- ஒன்றிய அரசுக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை


புதுடில்லி,ஆக.16- மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்தப்பட மாட்டாது என ஒன்றிய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பீகாரின் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு ஜாதிவாரியாக நடத்த வேண்டும். இதன்மூலம், பிற்படுத்தப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் எண்ணிக்கை அறியப்படும். ஜாதிவாரியாக நடத்தவில்லை எனில் மக்கள் தொகை கணக்கெடுப்பை அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கும் நிலை உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை  லாலுவின் மகனும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் சந்தித்து, ஒன்றிய அரசு செய்யவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக