செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு மோடி அஞ்சுவது ஏன்?


ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

புதுடில்லி,ஆக.14- மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதி வாரியாக நடத்தப்பட மாட்டாது என அண்மையில் ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. எனினும், ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்கான கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வியும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டிருக்கும் தேஜஸ்வி, “தன்னை பரோபகாரி என்றழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு அஞ்சுவது ஏன்?” என கேள்விஎழுப்பியுள்ளார்.

மேலும், ‘‘இந்த கணக்கெடுப்பை நடத்தினால் பிற்படுத்தப் பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகும். அதன் மூலம், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பது வெளியாகி விடும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்த தேஜஸ்வி, “ஒன்றிய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக