பக்கங்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ஜெய்சிறீராம் என்று கத்தச்சொல்லி இஸ்லாமியரை அடித்து இழுத்துச்சென்ற ஹிந்துத்துவ அமைப்பினர்


கான்பூர், ஆக. 13 இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை 'ஜெய் சிறீ ராம்' என்று கத்தச் சொல்லி ஹிந்து அமைப்பினர் அவரது 10 வயது மகளோடு சேர்த்து அடித்து இழுத்துச்சென்ற நிகழ்வு காணொலியாக வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான் பூர் நகரில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரை, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி, 'ஜெய் சிறீராம்' என கத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியது. அப்போது உடன் இருக்கும் அவரது மகள் தன் தந்தையை விட்டு விடும்படி கெஞ்சுகிறாள். ஆனால் அந்தக் கும்பல் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த 10 வயது சிறுமியையும், அவரது தந்தையையும் தாக்கிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றது.

இந்தக் கொடூர நிகழ்வு பொது மக்களுக்கு முன்பாக நீண்ட நேரம் நடந்துகொண்டு இருந்த போது கான்பூர் காவல்துறையினர் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தனர்.

கும்பலிடமிருந்து அந்த நபரை அவரது மகளோடு மீட்டு அழைத்துச்செல்லும் போது பின்னாலேயே வந்து பஜ்ரங்க தள அமைப்பைச்சேர்ந்தவன் செங் கல்லால் அந்த இஸ்லாமியரின் தலையில் தாக்கினார். அப்போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது,

காவல்நிலையம் சென்ற அவர் தன்னை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினர் மீது புகார் மனு கொடுத் தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமியர் வாழும் பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பினரின் கூட்டம் நடந்ததாகவும், அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள அனைவரையும் ஜெய் சிறீராம் என்று கத்தவற்புறுத்தினர். ஆனால் அந்த இஸ்லாமியரும், அவரது மகளும் அப்பக்கமாகச்செல்லும் போது அவர்கள் ஒன்றுமே சொல் லாமல் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரையும்  அவரது 10 வயது மகளையும் அடித்து ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.

 இதை ஹிந்து அமைப்பினர் சமூகவலைதளங்களில் ஜெய்சிறீராம் சொல்லாத அனைவருக்கும் இந்த நிலைதான் என்று தலைப்பிட்டு ஒளிபரப்பினர். இது தொடர்பாக ஹிந்து அமைப்பினர் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் மீது  பொய் புகார் கொடுத்துள்ளனர்

 அதில் இஸ்லாமியர்  தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெண் ஒருவரை மதம் மாற்ற முயர்சித்தார் என்று கூறியுள்ளனர் இது தொடர் பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 சமூகவலைதளங்களில் வந்த அந்தக் காணொலியில் அவரைத் தாக்கியவர்கள் முகம் தெளிவாக தெரிந்த போதும் காவல்துறை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக மெத்தனமாக கூறியுள்ளது. இப்படி காவல்துறையும் குற்றவாளிக்கு சாதகமாக நடந்துகொண்டிருப்பது தெரியவருகிறது என்று நிகழ்வை நேரில் கண்டவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக