பக்கங்கள்

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

மூன்று நாள் சிறப்புத் தொடர் கூட்டம் 88 அகவையில் 78 ஆண்டுகள் பொதுத் தொண்டு -முனைவர் அதிரடி க.அன்பழகன்

 

சென்னைஆக. 2- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ‘‘88 அகவையில் 78 ஆண்டுகள் பொதுத்தொண்டு'' மூன்று நாள் சிறப்புத் தொடர் கூட்டம் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பாக மூன்றாவது நாள் நிகழ்ச்சி 15.07.2021 மாலை 6.00 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது.

15.7.2021 அன்று மாலை 6:00 மணியளவில் திராவிட மாணவர் கழகத்தால் நடத்தப்பட்ட “88 அகவையில் 78 ஆண்டு பொதுத்தொண்டு” - இந்த மூன்று நாள் தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாளில் “69 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாத்திட...” என்ற தலைப்பில் திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் அங்கம் வகித்த இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் கோபு.பழனிவேல் தொடக்கவுரையாற்றினார்.பொறியியல்கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் வி.தங்கமணி முன்னிலை வகித்தார்.திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் வரவேற்புரை மற்றும் இணைப்புரை வழங்கினார்பொறியியல்கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் அரியலூர் விஜய் நன்றியுரை வழங்கினார்.

முனைவர் அதிரடி .அன்பழகன் அவர்களது உரை

69 சதவீதத்திற்கு ஆபத்து வரக் காரணம்

சமூகநீதி வரலாறு நீதிக்கட்சியில் தொடங்கி மிகப்பெரிய அளவில் உருவாகி வந்து 1989ஆம் ஆண்டு 69 சதவீதத்தை எட்டியதுஇந்த 69 சதவீதத்திற்கு தமிழர் தலைவர் அவர்கள் ஆற்றிய பெரும்பங்கினைப் பற்றி,கடந்த தலைப்புகளில் ஏற்கெனவே நடந்த நிகழ்வுகளில் கூறப்பட்டிருக்கும்.69 சதவீதத்திற்கு பேராபத்து என்பது,மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினால் வந்தது ஆகும்இந்திய ஒன்றிய அளவிலே தாழ்த்தப்பட்டபழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் சமூகநீதியினைப் போன்று பிற்படுத்தப்பட்டோருக்கும் சமூகநீதி வழங்கப்படல் வேண்டுமென்ற நோக்கில் அமைக்கப்பட்டதே மண்டல் குழுமண்டல் அவர்களின் தலைமையிலான இக்குழு அறிக்கையின்படி ஒன்றிய அரசின் பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, 01.10.1990 அன்று தடையாணை பெற்றனர். 1992ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் இவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம்இட ஒதுக்கீடானது 50 சதவீதத்தினைத் தாண்டி இருத்தல் கூடாது என்றதுஇந்த தீர்ப்பினால் ஒன்றிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை ஒருபுறம் உறுதிசெய்யப்பட்டிருந்தாலும்கூட, 50 சதவீதத்தைத் தாண்டி இட ஒதுக்கீடானது இருத்தல் கூடாது என மறுபுறம் 69 சதவீதத்திற்கு பேராபத்து ஏற்பட்டுவிட்டது.

மறு சீராய்வு மனு

உடனடியாக தமிழர் தலைவர் அவர்கள் அன்றைய முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசாங்கத்திற்குஇத்தீர்ப்பு பேராபத்து என்றும்தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்பின் மீது மறுசீராய்வு மனு  ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யக் கோரி அறிக்கை வெளியிட்டார்இதனையொட்டி 07.01.1993 அன்று தமிழ்நாடு அரசாங்கம் இத்தீர்ப்பை (50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்பதனைஎதிர்த்து உச்சநீதிமன்றத்திலே மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்தது.07.05.1993 அன்று இந்த மனுவானது உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதுஇதன் மூலமாக 69 சதவீதத்திற்கு ஆபத்து வந்துள்ளது என்பது தெளிவாயிற்றுஇந்நேரத்திலே விஜயன் என்ற வழக்குரைஞர் வாய்ஸ்   என்ற அமைப்பின் சார்பில் ஒரு வழக்கைத் தொடுக்கிறார்பார்ப்பனரல்லாத முற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராகயிருப்பினும்பார்ப்பனர்களின் தூண்டலாலும்இன்ன பிற காரணங்களாலும் இவர் தன்னை இவ்வழக்கில் ஈடுபடுத்திக்கொள்கிறார்இட ஒதுக்கீடானது 50 சதவீதத்தினைத் தாண்டக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டும்,அதை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டும் இருக்கும் நிலையில்தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருப்பது சட்டவிரோதம்எனவே இதனை தடை செய்து 50 சதவீதம் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டுமென உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்டதே இந்த வழக்கின் சாரம்.25.08.1993 அன்று வழங்கப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பின் மூலம் 69 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு,50 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் என்ற நிலை வந்தது.

தீர்ப்பு நகலை எரிக்கும் போராட்டம்

26.08.1993 அன்று பேராபத்து வந்து கொண்டிருக்கிறதுஅமைதியாக இருக்க முடியாதுவேகமாக செயல்பட்டு ஒரு பக்கம் அரசுத்துறையிலும் மறுபக்கம் சட்டத்துறையிலும் இப்பிரச்சினைக்கானத் தீர்வு குறித்து பணிகள் முடுக்கி விடப்பட வேண்டுமென தமிழர் தலைவர் அறிக்கை வெளியிடுகிறார்உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகி ஒரே வாரத்தில் 01.09.1993 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை எரித்து,அந்த சாம்பலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டுமென்ற முடிவோடு போராட்டம் நடத்தப்பட்டதுகிட்டத்தட்ட 15,000 பேர் கலந்துகொண்ட இப்போராட்டத்தில் திட்டமிட்டபடி தீர்ப்பு நகல் எரிக்கப்பட்டுஅதன் சாம்பல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டது.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணையை எரித்து,அதனை சாம்பலாக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்பிவைத்தது இந்திய நீதித்துறை தனது வரலாற்றில் சந்திக்காத ஒன்றாகும்அத்தகைய அளவிற்கு கடுமையான போராட்டமாக அது திகழ்ந்தது.

 31சி-ன் கீழ் இட ஒதுக்கீட்டுச் சட்டம்

30.09.1993 அன்று அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமாக வேண்டுமென தமிழர் தலைவர் அறிக்கை வெளியிடுகிறார்அவ்வறிக்கையில் ஒன்றிய அரசாங்கம் உரிய சட்டத்திருத்தத்தின் மூலம் 69 சதவீதத்தினை பாதுகாத்திட வேண்டுமென தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஓர் தீர்மானம் கொண்டுவர வேண்டுமென கூறினார்.இவ்வறிக்கையினை ஏற்று 16.11.1993 அன்று சட்டமன்றத்திலே முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தீர்மானத்தினை கொண்டு வருகிறார்இந்த நடைமுறையின்படி நாடாளுமன்றத்தில் ஒரு அரசமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டுமெனில் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைஆனால் அன்றைய நிலையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லைஇது தமிழர் தலைவருக்கும் நன்கு தெரியும்இந்த தீர்மானம் 69 சதவீத பிரச்சினைக்கான தீர்வை உருவாக்காமல் இருந்தாலும்தமிழ்நாடு அரசாங்கத்தின் இப்பிரச்சினை குறித்த எதிர்ப்பாக அமையட்டும் என்று தமிழர் தலைவர் கருதினார்.

சட்ட முன்வடிவை வரைந்து

19.11.1993 அன்று தமிழர் தலைவர் அவர்கள் தமிழ்நாடு அரசாங்கத்தின் 69 சதவீத இட ஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 31சி-இன் கீழ் ஒரு மாதிரி சட்ட முன்வடிவை வரைந்துஇந்த சட்ட முன்வடிவை சட்டமாக்கி அதனை உரிய ஒப்புதலுடன் அரசமைப்பு சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்கும்பட்சத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் எனக்கூறி அனைத்துக் கட்சிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைத்தார்.இவ்வாறு தமிழ்நாடு அரசாங்கத்திற்கு தனது சட்ட யோசனையினை அறிக்கையாக அளித்தார். 26.11.1993 அன்று இந்த அறிக்கையை கொண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றைக் கூட்டினார்.பொதுவாக அம்மையார் ஜெயலலிதா அவர்களுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தின் மீது நம்பிக்கை கிடையாதுஅனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையற்றது என்று கருதிய அவர் அதனை தவிர்த்து வந்தார்.ஆனால் 69 சதவீத பிரச்சினையிலே தமிழர் தலைவர் கோரும் போதெல்லாம் அம்மையார் ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டினார்இவ்வாறு கூட்டப்பட்ட கூட்டத்தில் 31சி-இன் கீழ் ஓர் சட்டத்தை உருவாக்கிபின்னர் அதனை 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற தமிழர் தலைவரின் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதுஇதனை பாராட்டும் விதமாக 29.11.1993 அன்று தமிழர் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அறிக்கை வெளியிட்டார்.

சரத்து 31சி-ன் கீழான சட்ட முன்வடிவு

30.12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்புச் கூட்டத்தை கூட்டியது.தமிழர் தலைவரின் சரத்து 31சி-இன் கீழான சட்ட முன்வடிவை தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் சமர்ப்பித்து உறுப்பினர்களின் ஆதரவினை கோரினார்இங்கு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளதுஇந்த விவகாரம் குறித்து சரத்து 31சி-ன் கீழ் சட்டமியற்றுவது தவறென்றும்சரத்து 31பி-இன் கீழ் சட்டமியற்றுவது தான் சரியென்றும் பாலசுப்பிரமணியம்என்.வி.என்.சோமு போன்றோர் கூறி 31சி சட்டமுன்வடிவை எதிர்த்தனர்இருப்பினும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த அம்மையார் ஜெயலலிதா தமிழர் தலைவரின் யோசனையின் அடிப்படையிலான 31சி-இன் கீழ் சட்டமியற்றுவதே உரியது என முடிவுக்கு வந்தார்.பின்னர் சட்டமன்றத்தில் இச்சட்ட முன்வடிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

 காரியம் அம்மையார்,காரணம் தமிழர் தலைவர்

07.02.1994 அன்று இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டுமெனக் கோரி எல்லோரும் தந்தி அனுப்ப வேண்டுமென்றார்.14.06.1994 அன்று தமிழ்நாடு எம்பிக்கள் உடனடியாக குடியரசுத் தலைவரை சந்திக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார்.அறிக்கை வெளியான அன்றைய தினத்தின் மாலை நேரத்திலேயே தமிழ்நாடு எம்பிக்கள் குடியரசுத் தலைவரை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினர்.15.06.1994 அன்று செய்தியாளர் சந்திப்பில்அனைத்துக்கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்த வேண்டும் என்றார்இந்த அறிவுறுத்தலை ஏற்கும் விதமாகஇதற்கு அடுத்த நாளே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினார்.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

25.06.1994 அன்று அனைத்துக்கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்இவ்வாறு இது தொடர்பான பணி ஒருபுறமிருக்க,மறுபுறம் எத்தனையோ ஏளனங்கள் நம்மை நோக்கி வந்தன.அதை எல்லாம் தாங்கிக்கொண்டு எடுத்த பணிமுடிக்க கடுமையாக உழைத்தார் நம் தமிழர் தலைவர்இவ்வாறு அம்மையார் ஜெயலலிதா அவர்களது தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்முதலமைச்சர் என்ற முறையில் அம்மையார் ஜெயலலிதா தலைமை வகித்தாலும்அதற்கான அனைத்து திட்டங்களைத் தீட்டியவர் தமிழர் தலைவரேஎப்படி காரியம் காமராஜர் - காரணம் பெரியார் என்று சொன்னார்களோ அதேபோல 69 சதவீத பாதுகாப்பு நடவடிக்கையில் காரியம் அம்மையார் ஜெயலலிதாவாக இருந்தாலும்காரணம் தமிழர் தலைவரே என்பதை யாராலும் மறுக்க முடியாது. 19.07.1994 அன்று குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

சமூகநீதி காத்த வீராங்கனை

பின்னர் 27.07.1994 அன்று தமிழ்நாடு எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தினை அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணையில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தக் கோரி அறிக்கை வெளியிடுகிறார்அத்தோடு இந்த சட்டத்தினை 9ஆவது அட்டவணையில் சேர்த்தால்தான் முழு உயிரை இச்சட்டம் அடையும் என்றும் கூறினார்பிறகு அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணையில் தமிழ்நாடு 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இணைக்கப்பட்டதுதமிழ்நாட்டில் பின்பற்றி வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு நேர்ந்த பேராபத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக வேண்டி முனைப்பாக செயல்பட்ட அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை பாராட்டும் விதமாக 08.09.1994 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு ‘’சமூகநீதி காத்த வீராங்கனை’’என்ற பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது.

தமிழர் தலைவரின் தளராத உழைப்பு

பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையான  69 சதவிகித இட ஒதுக்கீடு

கிட்டத்தட்ட 1 ஆண்டு காலமாக நடந்த இந்த சட்ட உருவாக்கப் பணிகளுக்கிடையே 21 அறிக்கைகளை வெளியிட்டும்பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியும்உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கொளுத்தியும் தமிழர் தலைவர் அவர்கள் சமூகநீதிக்காக வேண்டி உழைத்தார்ஏன் இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டு வெற்றிக்கு இவ்வளவு முக்கியத்துவம் என்றால்யாரால் சமூகநீதி எதிர்க்கப்படுகிறதோ மறுக்கப்படுகிறதோ அதே பார்ப்பனர்களை கொண்டே இந்த சட்டத்தை நிறைவேற்றியதன் காரணமாகவே இந்த வெற்றி வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக திகழ்கிறதுஇந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஒருமுறை,’’பிராமணர்களின் இடங்களை வேண்டுமானால் நீங்கள் பிடுங்கிவிடலாம்ஆனால் அவர்களின் மூளையினை பிடுங்க முடியாது’’ என்றவர்அத்தகைய அளவிற்கு ஜாதிய எண்ணம் கொண்ட சங்கர் தயாள் சர்மா அவர்களையும்பிரதமர் நரசிம்மராவையும்,அம்மையார் ஜெயலலிதா அவர்களையும் கொண்டேதான் பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்டபழங்குடியினபிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையான இந்த 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் இயற்றி நிறைவேற்றப்பட்டதுமேலே கண்ட மூவருமே பார்ப்பனர்கள் என்பதை அறிவதன் மூலம் தோழர்களே,நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் தமிழர் தலைவர் அவர்களின் வியூகமும் உழைப்பும் எந்த அளவிற்கு இப்பிரச்சினைக்கான தீர்வில் இருந்ததென்று!

தமிழ்நாடு தனித்துவமானது

சமீபத்தில் ஒன்றிய தொகுப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் கூட,தமிழ்நாடு அரசாங்கம் 69 சதவீதத்திற்கு தனிச் சட்டம் கொண்டுவந்துள்ளதுஅத்தோடு அச்சட்டத்தை 9ஆவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது.எனவே அச்சட்டத்தினை புறந்தள்ள இயலாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதுஇட ஒதுக்கீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு தனித்துவமானதுஇது பெரியார் மண்.பெரியார் மண்ணின் கொடியாக சமூகநீதிக்கொடி பறந்து கொண்டிருக்கிறதுஇத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் 69 சதவீத சட்டத்தினை யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை என்று சொன்னால் அதற்கு தமிழர் தலைவரின் சட்ட அறிவே அடிப்படைக் காரணமாகும்இந்த சட்டத்தில் தமிழர் தலைவரின் பங்களிப்பினை எடுத்துரைக்கும் விதமாகஒரு கவிஞர் ‘’31சி சட்டம் என்பது வீரமணியின் சட்டம்‘’ என்று கூறினார்.

ஒருவேளை இந்த சட்டம் கொண்டு வரப்படவில்லை யென்றால் என்ன நிலை நிலவியிருக்கும்கிட்டத்தட்ட 19 சதவீத மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் எவ்வித வாய்ப்பும் முன்னேற்றமும் இன்றி வாழ்ந்து மடிந்து இருப்பர்அத்தகைய நிலை வராமல் தடுத்ததே இச்சட்டத்தின் சிறப்பாகும்எத்தனையோ மாபெரும் வழக்குரைஞர்கள் இருக்கும் இந்த நாட்டில்இப்பிரச்சினையின்போது ஒருவர் கூட தங்களது ஆலோசனைகளை வழங்கவில்லைஅந்த நிலையிலேதான் தமிழர் தலைவர் தனது சட்ட அறிவைக் கொண்டு வெறும் ஆணையாக இருந்த இந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி சாதனை படைத்துள்ளார்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

1 கருத்து:

  1. 1xbet korean
    1xbet korean, 1xbet.com, korea.bet, sportsbook, casino.bet, 메리트카지노 sportbetting.com, sportsbook, online betting.bet.ag, 1xbet korean poker, bk8 casino,

    பதிலளிநீக்கு