பக்கங்கள்

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

ஜாதிவெறித்தண்டவம் - தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஆக்கி வீராங்கனை வீட்டில் தாக்குதல் நடத்திய உயர்ஜாதியினர்

 

அரித்வார் ஆக 7- அரித்வார் அருகே உள்ள ரோஷனாபாத் கிராமத்தில் உள்ள ஒலிம்பிக் வீராங்கனை வந் தனா கடாரியாவை தாழ்த்தப்பட் டவர் என்பதால் அவமதிப்பு செய் வது தொடர்கிறது.

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஆக்கி அணி அரையிறுதி வரை முன்னுக்கு வந்ததால் மிகவும் பாராட்டு பெற்றது.   ஆனால் அரையிறுதியில் அர்ஜெண்டினா விடம் இந்தியா தோல்வி அடைந் தது.  இதற்குக் காரணம் அணியில் அதிக அளவில் தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளதால் தான் என பல ஆதிக்க ஜாதியினர் குறை கூறி வருகின்றனர்.

இந்த அணியின் வீராங்கனை வந்தனா கடாரியா வீட்டின் முன்பு பலரும் அவரை ஜாதியின் பெய ரைச் சொல்லிக் குறை கூறி முழக்கம் இட்டுள்ளனர்.   மேலும் தாழ்த்தப் பட்டவரான வந்தனா தோல்வி அடைந்ததால் ஆதிக்க ஜாதியினர் அவரது வீட்டு முன்பு பட்டாசு வெடித்துக் கொண்டாடிய நிகழ் வும் நடந்ததால் அவரது பெற் றோர்கள் பயந்துள்ளனர்.

இது குறித்து அவரது பெற் றோர், ”ஒலிம்பிக் ஆக்கிப் போட்டி முடிந்த உடன் எங்கள் வீட்டின் வெளியே பட்டாசு சத்தம் கேட் டது.   அதனால் நாங்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தோம்.  எங்கள் கிராமத்தில் உயர்ஜாதி ஆண்கள் இருவர் ஆடைகளைக் கழற்றி விட்டு எங்கள் முன்பு நட னமாடினார்கள்.   மேலும் அனைத்து விளையாட்டிலும் உள்ள தாழ்த் தப்பட்டவர்களை விரட்ட வேண் டும் எனக் முழக்கமிட்டனர்.” எனத் தெரிவித்துள்ளனர்.

வந்தனா கட்டாரியா வீட்டு முன்பு ஆடைகளைக் கழற்றி நட னமாடிய இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மற்றொரு வரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   பாஜக ஆளும் அரித்வார் நகரில் இவ்வாறு ஜாதி வெறி தலை விரித்தாடுவதைக் கண்டு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்உத்தரப்பிரதேசம்அரியானாஉத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப் பினர்களை தரையில் அமரவைப் பதும்அமைச்சர்களை கோவிலுக் குள் உள்ளேவிடாமல் அவர்களது உயர்ஜாதிவகுப்பைச்சேர்ந்த ஓட்டுநரை கோவிலுக்குள் அனுப் புவதும்நீதிபதிகளின் வீடுகளுக்கு பொருட்கள் கொடுக்கும் போது கூட தூக்கிவீசிவிட்டுச்செல்லும் ஜாதிய கொடூரம் அதிகம் உள்ளதுஅது நாட்டிற்காக போராடும் வீரங்கனைகளைக் கூட விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக