சென்னை,ஆக.21- அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (20.8.2021) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித் தனர். மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இப்பிரச் சினையை முதன் முதல் 8.5.2020 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி மக்கள் மன்றத்திலும், அரசியல் தலை வர்கள் மத்தியிலும் எடுத்துச் சென்று, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்கு, நன்றி யினையும் மகிழ்வையும் தெரிவித்துக் கொண்டனர்.
அத்துடன், அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் மற்றும் மாநில அரசுக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஆகிய முக்கிய பிரச் சினைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வெற்றி கண்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.
ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக் கான முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்றிட ஒன்றிய அரசை வலி யுறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் நிர் வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
1. 2021இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்.
2.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரி சீலனை செய்து முற்றிலுமாக நீக்க வேண்டும்
3.அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பறிபோகும் வேலை வாய்ப்புகள்.
4. அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத் தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படாமை.
5. நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சத வீதம் தனியார் முதலீட்டில் துவக்கப்பட்டா லும், இட ஒதுக்கீடும், உள்ளூர் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
6. பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டுக் கழகம், அய்.சி.எப்., கனரகத் தொழிற்சாலை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு.
கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, பொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி.), செயலா ளர்கள்: எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), எஸ்.பிர பாகரன் (நியூ இந்தியா காப்பீடு), ஏ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), மற்றும் டி.துரைராஜ் (சென்னை பெட்ரோலி யம் கார்ப்பரேசன்), சுரேஷ் (எச்.வி.எப்., ஆவடி), ராஜ்குமார், லோகநாதன் (சென்சஸ் துறை), டி.ரவிகுமார், எஸ்.நடராசன், எஸ்.சேகரன், ஞா.மலர்க்கொடி, கே.சந்திரன், எஸ்.சத்தியமூர்த்தி, லோகேஷ் பிரபு, வேலாயுதம் (யூனியன் பாங்க் ஆப் இந்தியா), ஆகியோர் பங்கேற்றனர்.
6 அம்ச கோரிக்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரிடம் வழங்கினர்.
தமிழர் தலைவர் அவர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் விரிவாக உரையாடினார். அரசிடம் உரிய முறையில் தெரிவித்திடவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் ஆவன செய்வதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக