பக்கங்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

இதுதான் ராமராஜ்யம்


உத்தரப்பிரதேசம் கன்பூர் கொத்வால் பகுதியில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த மனீஷ் மகுவா, இவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ரயில்வே தேர்வு எழுத விண்ணப்பித் திருந்தார், இந்த நிலையில் இவருக்கு ஜான்சி நகரில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் தேர்வெழுத அழைப்பு வந்தது. தேர்வு எழுதும் முதல் நாள் அவ்வூரில் உள்ள உயர்ஜாதிவகுப்பினர், தங்களது வயலில் கரும்பு வெட்ட அழைத் திருந்தனர். ஆனால் இவர் எனக்கு உடல் நிலைசரியில்லை ஆகையால் நாளை வரமுடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் மறுநாள் ரயில்வே தேர்வு எழுத சென்றவரை வேலைக்கு வராமல் பொய் சொல்லி தேர்வெழுத செல்கிறாயா என்று கூறி உயர்ஜாதியினர் ஒரு நாள் முழுவதும் கரும்புத்தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டிவைத்தனர்.

இது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற மகுவாவின் உறவினர்களிடம், கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் சிக்கிக் கொண்டார். ஆகையால் அவர்கள் பிடித்து வைத்தனர். பின்னர் விட்டு விட்டனர். சிலர் அதைப் படம்பிடித்து பரபரப்பிற்காக இதை சமூகவலை தளத்தில் பரப்பி விட்டனர், ஆகவே இனிமேல் இது குறித்து புகார் கொண்டு வரவேண்டாம், அப்படி வந்தால் உங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறி காவல்துறையினர் அவரது உறவினர்களை மிரட்டி விரட்டிவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக