பக்கங்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கடைக்கோடி மக்களின் கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் ஒழிப்போம்! அனைத்து உரிமைகளையும் மீட்போம்!!!

குடந்தை மாநாட்டில்


 திராவிட மாணவர்கள் சூளுரை!


மஞ்சை வசந்தன்




காவிகள் பறித்த கல்வி உரிமைகள்!

கல்வியென்பது மக்களின் உயிர்மூச்சான உரிமை! உயர்வு தாழ்வு, எழுச்சி, மீட்சி, விழிப்பு, விவேகம், பதவி, பணிகள், சமூகத்தில் தனக்கான இடம், தலைமுறையின் எதிர்காலம், அறிவு, ஆற்றல், திறன், நுட்பம், ஆய்வு, படைப்பாற்றல் என்று பலவும் கல்வி சார்ந்தே வருகின்றன; பெறப்படுகின்றன.

ஆரிய பார்ப்பனர்கள் இதை நன்கு அறிந்தே கல்வியைத் தனக்கு மட்டுமே உரியதாக்கிக்-கொண்டு, மற்றவர்களுக்கு பல நூற்றாண்டு-களாக ஆட்சியாளர்களின் துணையுடன் மறுத்து வந்தனர். படிக்க ஒரு ஜாதி, பாடுபட ஒரு ஜாதி, உயர்வு ஒரு ஜாதிக்கு, இழப்பு பல ஜாதிக்கு என்ற அதர்ம சட்டங்களே மனுநீதி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டன.

பெரியாரின் பெருங்கோபமும், போராட்டமுமே அந்தச் சதியை வீழ்த்தி எளிய மக்களும் படித்து முன்னேற வாய்ப்பளித்தது. இதன்படி ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் கல்வியிலும், பதவியிலும் ஆரிய பார்ப்பனர்-களை ஓரந்தள்ளி உயரங்களை எட்டினர்.

கல்வியிலும், உயர்பதவியிலும் எளிய மக்கள் சாதனை படைத்தனர். இதைக் கண்டு பொறாத ஆரிய பார்ப்பனர்கள், தங்களுக்குள்ள வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி, வருமான வரம்பு, நுழைவுத்தேர்வு, இடஒதுக்கீட்டிற்கு உச்சவரம்பு என்று பல தடைகளை இடையிடையே ஏற்படுத்தினர்.

இந்தியாவிற்கே வழிகாட்டி, உணர்வூட்டும் திராவிடர் கழகம், பல்வேறு போராட்டங்களை, பிரச்சாரங்களைச் செய்து, அத்திட்டங்களை யெல்லாம் முறியடித்து, கல்வியும், வேலை-வாய்ப்பும், இடஒதுக்கீடும் பறிபோகாமல் பாதுகாத்து வருகிறது. என்றாலும், ஆரிய பார்ப்பன ஆதிக்கக் கூட்டம் மத்தியில் தங்களின் ஆதரவு மதவாத பா.ஜ.க. ஆட்சி வந்தது முதல், மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களை ஓரங்கட்டி தங்கள் மனுதர்ம ஆட்சியை நிறுவத் துடிக்கின்றனர்.அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து செய்கின்ற அவர்கள், எதிர்ப்பு வலுக்கும்போது, பதுங்குவதும், சந்தர்ப்பம் வாய்க்கும்போது தலைகாட்டுவதுமாக செயல்பட்டு வருகின்றனர்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்-கரும் இந்தியாவெங்கணும் ஊட்டிச் சென்றுள்ள உணர்வுகள் உயிர்த் துடிப்புடன் இருப்பதால், அவர்களின் சூழ்ச்சி அவ்வப்போது முறியடிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிடாது அவ்வப்போது புதுப்புது வடிவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பெரும்பான்மை-யினரான ஒடுக்கப்பட்ட மக்களை ஓரம் தள்ளி, அடிமைகளாக்கவும் முயலுகின்றனர்.

குருகுலக் கல்வித் திட்டம்

குருகுலக் கல்வி எனும் பெயரால் ராஜாஜியின் பழைய குலக்கல்வித் திட்டத்தை விட மோசமான கல்வியைத் திணிக்க மத்திய பார்ப்பனீய பாசிச பி.ஜே.பி. அரசு திட்டமிட்டுள்ளது.

நமது ‘இளந்தளிர்களின்’ கல்விக்கண் முழுமையாக குத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் எல்லோருமே பார்ப்பனீய  சமஸ்கிருத - வேதக் கல்வியைத்தான் சிறுவயதிலிருந்து - குருகுல முறையில் படித்தாகவேண்டும்.

இதற்கென  (சமஸ்கிருத - வேதப் படிப்புக்காக) தனி பரிசு போல, இதை சில ஆண்டுகளில் முடித்த சிறுவர்கள் - தாங்களே தனக்குத்தானே சான்றிதழ் வழங்கி, எடுத்த எடுப்பிலேயே 10 ஆம் வகுப்பில் நேரிடையாகச் சேர்ந்துவிடலாமாம்!

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் விபரீதத்தைப் பாரீர்!

ஆர்.எஸ்.எஸ். உருவாக்கும் இத்திட்டம் பற்றிய வேதனை தரும் விபரீதத் தகவல்கள் இதோ:

பழைய குருகுலக் கல்வியை மீண்டும் புதுப்பித்து கல்வியை மாற்றி அமைக்கும் திட்டம்பற்றி, இந்து, சமஸ்கிருத பாடசாலை - மடாதிபதிகள் ஆகியவர்களை அழைத்து உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டின் முக்கிய வழிகாட்டியவர் ஆர்.எஸ்.எஸ்.

தலைவரான மோகன் பகவத் என்ற பார்ப்பனர் ஆவார்! மாநாடு முடிந்தவுடன் - இதன் (திஷீறீறீஷீஷ் uஜீ) செயலாக்க ஏற்பாடுகள் - தாமதமின்றி உடனடியாகத் தொடருவதோடு, பெற்றோர்களின் மனநிலை இதற்கு எதிர்ப்பாக இருப்பதை மாற்றிட அனைவரும் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றார் அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்.

முதல் நடவடிக்கையாக, குருகுலம் என்ற பெயரில் வீட்டிலோ, வேறு தனி இடத்திலோ சிறுவயதிலேயே,

1.                     வேத அத்யாயனம் (வேதம் கற்றல்)

2.                     பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை)

3.                     சமஸ்கிருத வியாகரணம் (சமஸ்கிருத இலக்கணம்)

4.                     சமஸ்கிருத சாகித்திய (சமஸ்கிருத பாடப் புலமை)

5.                     சமஸ்கிருத மொழி (புலமை) கற்றல்

                        தனக்குத்தானே சான்றொப்பம்

இந்த 5 பாடங்களில் கற்று தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்று அந்த மாணவரே தானே சான்றிதழ் எழுத்துமூலம் கொடுப்பதை வாங்கி வைத்துக்கொண்டு, உடனடியாக நேரே 10 ஆம் வகுப்பு (ஙீ ஷிtணீஸீபீணீக்ஷீபீ) வகுப்பில் சேரலாம் (பழைய கால றிக்ஷீவீஸ்ணீtமீ ஷிtuபீஹ் என்பது போன்றது) பிறகு 11, 12 வகுப்பினை முடித்துவிடலாம்.

மேலே காட்டிய 5 பாடங்களில் வெற்றி பெறுவதற்கு வெறும்  33 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றாலே போதுமானது.

அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் பாடங்களைப் படிக்கத் தேவையில்லையாம்!



10ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையாக பல வகுப்புகளில் 6, 7, 8, 9 வகுப்புகளில் - மாணவர்கள் படிக்கும் பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, புவியியல் போன்றவைகள் ஏதும் படிக்கத் தேவையில்லை. குருகுலத்தில் கணிதம் ஏதாவது சொல்லிக் கொடுப்பதோ, கற்கப்படுவதாகவோ இருப்பின், அது வேதக் கணிதமாம்! (க்ஷிமீபீவீநீ விணீtலீமீனீணீtவீநீs).

மேற்கண்ட சமஸ்கிருதக் கல்வி பயிற்சி பெற்றிட குருகுலக் கல்விக் கூடங்களில் மட்டும்தான் சாத்தியப்படும்.

ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமானது!

1952 இல் சி.ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்தபொழுது கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தைவிட இது -  மிக, மிக, மிக, மோசமான, நம்முடைய பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மீளாப் படுகுழியில் தள்ளும் திட்டமாகும்! எச்சரிக்கை! எச்சரிக்கை!

வேத புராண இதிகாசங்களைக் கற்பிக்க அய்.அய்.டி.களில் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சி!

வேதங்களிலும், பல்வேறு ஹிந்து புராண நுல்களிலும் இடம்பெற்றுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கருத்துக்களை படிக்க வசதியாக, நாடு முழுவதும், அய்.அய்.டி.,களில் சமஸ்கிருத மொழி பயிற்றுவிக்கப்பட வேண்டும். சமஸ்கிருத மொழி வாயிலாக, ஹிந்து புராண நூல்களில் உள்ள தொழில்நுட்ப, அறிவியல் விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், வேதங்கள் மற்றும் புராண நூல்களில் இடம்பெற்றுள்ள விஷயங்களை, பாடவாரியாக போதிக்க வேண்டும் என்று கோபால்சாமி குழு தெரிவித்துள்ளது-.

குறுக்கு வழியில் குலக்கல்வித் திட்டம்

14 வயதுக்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என்றும், அவர்களை எந்தவித தொழில்களிலும் ஈடுபட வைப்பது குற்றம் என்பதும் குழந்தைத் தொழிலாளர் சட்டமாகும்.

14 வயதுக்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தினால் அந்தநிறுவனத்தின் மீதும் பெற்றோர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க, தற்போதுள்ள சட்டம் வழி செய்கிறது.

ஆனால், மத்திய அமைச்சரவை விதி விலக்குகளை இதில் திணித்துள்ளது.

சமஸ்கிருதத் திணிப்பு:

காவிகளின் மத்திய ஆட்சி கல்வியில் கை வைப்பதன் முதன்மை நோக்கங்கள் இரண்டு.

1.                     ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறிப்பது.

2.                     சமஸ்கிருதத்தைத் திணிப்பது. எனவே, நம் கல்வி உரிமையை மீட்கவும், சமஸ்கிருதத் திணிப்பைத் தடுக்கவும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களின் சதித் திட்டத்தை முறியடிக்க வேண்டும். நம் கல்வி உரிமைகளை மீட்டாக வேண்டும்!

சட்டம் என்ன சொல்லுகிறது?

குடும்பப் பாரம்பரிய தொழில்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் என்பது போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்துப் பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறு எந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தங்கள் என்பதுதான் மத்திய அமைச்சரவையின் முடிவாகும்.

விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு அவர்கள் குழந்தைகள் பள்ளி நேரத்திற்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவலாம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் என்றால் - எந்த வேலையும் செய்யக் கூடாது என்பது தானே சரியானதாக இருக்க முடியும்? இதில் விதி விலக்கு என்பது எப்படி சரியாகும்?

மாணவர்களின் கல்விக் கவனத்தைச் சிதைப்பதா?

கல்விக் கூடங்களுக்கு அனுப்பப்படும் மாணவர்களின் சிந்தனைகளில் சிதைவை ஏற்படுத்தாமல் அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில்தான் இருக்க வேண்டும்; பள்ளிக்குச் சென்று வந்தவுடன் வீட்டுப் பாடங்கள் செய்வது, பாடங்களைப் படிப்பது என்ற முறை இருந்தால் மட்டுமே, அவர்கள் சரியான முறையில் கல்வி கற்று, சிறந்த வகையில் வெற்றி பெற்று வெளியேறவும் முடியும்.

அதற்கு மாறாக படிக்கும் பொழுதே குலத் தொழிலில் அவர்களை ஈடுபட வைத்தால், படிப்பில் கவனம் செலுத்துவதிலிருந்து திசை திருப்பப்பட்டு, நாலு காசுகள் கையில் புரளும் தொழிலின்மீது மோகமும், வேகமும் பீறிட்டுக் கிளம்புவது தவிர்க்கவே பட முடியாத ஒன்றாகும். இதன் காரணமாக உயர்நிலைப் பள்ளியையே தாண்டாமல் இடையில் (ஞிக்ஷீஷீஜீ ளிuts) நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதில் அய்யமில்லை.

புதிய கல்வித் திட்டம்:

மத்திய அரசின் இந்தப் புதிய கல்வித் திட்டம். தேனைத் தடவி விஷத்தை உட்செலுத்த அவர்கள் முயற்சிப்பது. இத்திட்டத்தின் மூலம் புலப்படுகிறது. ஒருசில நல்ல திட்டங்களைக் காட்டி, பல சதித் திட்டங்களை செயல்படுத்த அவர்கள் முயல்வது அப்பட்டமாகப் புரிகிறது.

மத்திய அமைச்சரவையின் முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமை-யிலான வல்லுநர் குழு தயாரித்துள்ள கல்விக்கொள்கை மத்திய அரசால் வெளியிடப்-பட்டுள்ளது.

டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவின் பரிந்துரைகள்:

1. ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு முறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பிற்கு குறைந்தபட்ச தகுதியாக பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்கள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த பொதுவான நெறிமுறைகளை மத்திய மாநில அரசுகள் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும்.

2. ஆசிரியர் தேர்வானது வெளிப்படைத் தன்மையுடனும், நடுநிலையாகவும் நடத்தப்பட வேண்டும்.

3. தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற வேண்டும்.

4. அரசாங்க பள்ளிகளிலோ, தனியார் பள்ளிகளிலோ ஆசிரியராக பணியாற்றுபவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது தகுதிச் சான்றிதழ்களை தேர்வுகள் மூலம் புதுப்பிக்க வேண்டும்.

5. ஆசிரியர் படிப்புகள் தற்போது இரண்டு ஆண்டுகளாக உள்ளதை மாற்றி வேலை வாய்ப்பு உறுதியுடன் கூடிய ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக மாற்றலாம். 

6. முன்பள்ளி கல்வி என்று சொல்லப்-படுகின்ற பால பாடமானது 4 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அடிப்படை உரிமை என்பதை அறிவித்து உடனடியாக அமுல்படுத்த வேண்டும்.

7. அய்ந்தாம் வகுப்பு வரையிலான கட்டாயத் தேர்ச்சி முறையானது தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதேபோல் நடுநிலைப்  பள்ளியில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு செல்லும் போது தேர்வில் தோல்வியடைந்தால் தகுதியினை நிரூபிக்க 2 வாய்ப்புகள் வரை வழங்கலாம்.

8. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் 2 வகையாக கலந்து கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்புகளை தொடர்ந்து படிக்கப் போகும் மாணவர்கள் முதல் தர தேர்வுகளையும், மற்றவர்கள் 2ஆம் தர தேர்வுகளையும் எழுதலாம். இது மாணவர்களின் சொந்த விருப்பத்திற்கு ஏற்றது.

9. போர்டு தேர்வுகள் பெற்றோர் மற்றும் மாணவர்களின் மன அழுத்ததை குறைக்கும் வகையில் இருக்க வேண்டும். 12 ஆம் வகுப்பை எந்த முறையிலும் கல்வி பயின்று முடித்த மாணவர்களும் கலந்து கொள்ளும் வகையிலான தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு ஒன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் நிறைய பொது தகுதித் தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை குறைக்க முடியும்.

10.அய்ந்தாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பாடம் கற்கலாம். பிரைமரி வகுப்புகளில் இரண்டாம் மொழியையும், செகண்டரி வகுப்புகளில் 3ஆம் மொழியையும் அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.

11. மத்திய உணவுத் திட்டமானது உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வகை செய்ய வேண்டும் . ஏனென்றால் இது அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நோய் ஆகியவை இளம் தலைமுறை மாணவர்களிடையே அதிக அளவில் உள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தினை விரிவுபடுத்த வேண்டும்.

12. கல்வி உதவித் தொகைகள் சரியாகப் பிரித்து வழங்குவது தொடர்பாக பல்கலைக்-கழகங்களுக்கான மானியக் குழு ஆணையம் (யூஜிசி) எளிமையான வரைமுறைகளை உருவாக்க வேண்டும்.

13.  உலகின் தலை சிறந்த 200 வெளி-நாட்டுப் பல்கலைக் கழகங்கள், நம் நாட்டில் தங்களது கிளையினை உருவாக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.

14. பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பிரச்சினை உடனைடியாக தீர்க்கப்பட வேண்டும். சம அளவிலான பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

15. கல்வி ஊக்குவிப்பு அட்டவணை இன்னும் அறிவியல் பூர்வமாக தகுதி உயர்த்தப்பட வேண்டும்.

16. கல்விக் கொள்கைகள் தொடர்பான சவால்களை எதிர் கொள்ளவும், சீர்திருத்தங்கள் கொண்டு வரவும், மத்திய அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அறிவார்ந்த உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

பலதரப்பு கருத்து அறியப்படவில்லை!

நாடு முழுவதும் கருத்துக் கேட்கப்-பட்டதாகக் கூறும் அவர்கள் அதற்கான விவரத்தை வெளியிடவில்லை. எனவே, மீண்டும் முறையாக கருத்துக் கேட்கப்பட வேண்டும். பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கருத்துக்களை முறையாகப் பெற்று, அறிக்கை தயார் செய்து, அதை மாநில அரசுகளுக்கு அனுப்பி அவற்றின் கருத்தறிந்து அதன் பின்னே முடிவெடுக்க வேண்டும்.

நீட்  தேர்வு ஒரு சதித் திட்டம்:

மருத்துவத் துறையிலும், பொறியியல் துறையிலும் பார்ப்பனரல்லாத, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பெருமளவில் தகுதி பெற்று, வேலை பெற்று உயர்ந்து வருவது கண்டு பொறாத ஆரியப் பார்ப்பன மோசடிக் கூட்டம், இவற்றை ஒரே அடியில் தகர்க்க உருவாக்கிய சதித் திட்டமே நீட் தேர்வு. இது அவர்களின் பல இலக்குகளை அடையவும், பார்ப்பனரல்லாதாரை பல வகையில் ஒழிக்கவும் உருவாக்கிய மோசடி ஆயுதமாகும்.

நீட் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்படி நடத்தப்படும் என்பதே பளிச்சென்று தெரியும் மிகப்பெரும் சதியாகும்.

5% பேர் படிக்கும் மத்திய சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தின்படி தேர்வு என்றால், 95% பேர் படிக்காத பாடத்திட்டத்தில் இத்தேர்வு நடத்தப்படுகிறது என்பது பொருள். அப்படியென்றால் 95% மாநில பாடத்திட்ட மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வால் ஏற்படும் பாதக விளைவுகள்:

இதன் விளைவாய் பெற்றோர், தங்கள் பிள்ளைகளையும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிக்க       வைக்க முற்படும்போது, மெட்ரிக் பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக மாறும்; அரசுப் பள்ளிகள் மூடப்படும். இறுதியில் எல்லாம் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற, மாநிலத்தின் கல்வி உரிமை அறவே பறிபோகும்; மத்திய அரசின் ஏகபோகத்தில் கல்வி வந்துவிடும்.

இரண்டாவதாக, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தியும், சமஸ்கிருதமும் கட்டாயமாக இருப்பதால், தமிழ் அறவே புறக்கணிக்கப்பட,  தமிழே அழியும்.

மூன்றாவதாக, நீட் தேர்வு பொறியியல் படிப்புக்கும் கொண்டுவரப்பட இருப்பதால், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் இனி, பொறியியலும் படிக்க முடியாமல் வேலை பெற முடியாமல் போகும்.

நான்காவதாக, பள்ளிப் படிப்போடு நின்றால், கூலியாட்களாகத்தான் போகவேண்டிய கட்டாயம் வந்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பழைய சூத்திர நிலைக்குத் தள்ளப்படுவர்.

ஆக, 100 ஆண்டுகளாய் முயன்று பெற்ற கல்வி, இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, தமிழ் வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு என்று எல்லாவற்றையும் தகர்த்து, அவாளுக்கு மட்டும் கல்வி, வேலை தந்து, அவாள் மொழியை வளர்க்கும் ஒரே ஆயுதம் நீட் தேர்வு ஆகும்.

எனவே, நீட் தேர்வு வெறும் மருத்துவப் படிப்பை தடை செய்வது மட்டுமல்ல; மாறாக, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட, கிராமப்புற சமுதாயத்தையே அடி ஆழத்தில் தள்ளி நசுக்கி, அவர்களை அன்றாடக் கூலிகளாய் ஆக்கும் சூழ்ச்சிப் பொறியுமாகும்.

பல பாடத்திட்டம் ஒரே தேர்வு என்பது நீதியா?

இந்தியா முழுமைக்கும் பல மாநிலங்களிலும் பல்வேறு பாடத் திட்டங்கள் உள்ள நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டும் கேள்வி கேட்டால், மற்ற பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எப்படித் தேர்வு எழுத முடியும்? இது எந்த வகையில் நீதி, நேர்மை?

மாநில உரிமை என்னாவது?

பொதுத் தகுதித் தேர்வு மூலம், கல்வி தரும் உரிமையை மத்திய அரசே எடுத்துக்கொள்வது மாநில அரசின் உரிமையை அறவே பறிக்கும் பாசிசச் செயல்பாடாகும்.

உயர்கல்விக்கு எப்படி மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது மாநில அரசுக்கே உரியது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு இது எதிரானது அல்லவா?

12 ஆண்டுகள் படித்த படிப்பிற்கு என்ன பயன்?

பன்னிரெண்டு ஆண்டுகள் படித்து கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று விருப்பப் பாடங்களை எடுத்து மருத்துவம், பொறியியலுக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்ட மாணவர்களுக்கு, அக்கல்வியை முற்றாகப் புறந்தள்ளி, ஒரு மாத பயிற்சியின் அடிப்படையில் எழுதும் தேர்வே அவனுக்கு உயர்கல்வி வாய்ப்பைத் தீர்மானிக்கும் என்பது அநியாயம் மட்டுமல்ல அயோக்கியத்தனமும் அல்லவா? லட்ச ரூபாய் செலவிட்டு பயிற்சி பெற எல்லோராலும் முடியுமா? கிராமப்புறத்தில் பயிற்சி வாய்ப்பும் கிடைக்காதே!

99% மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மறுக்கப்படலாமா? 1200க்கு 1190 மதிப்பெண் பெற்று, கட் ஆப் மதிப்பெண் 196.6 பெற்ற மாணவர்களுக்குக் கூட மருத்துவ இடம் இல்லை என்றால், இதைவிட அநியாயம், அக்கிரமம் வேறு உண்டா? அப்படியே அவர்களுக்கு இடம் ஒதுக்கினாலும் சுயநிதிக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கி அங்கு 50 லட்சம் ரூபாய் கேட்கும்போது அந்த ஏழை மாணவன் எப்படிப் பணம் தரமுடியும்?

‘நீட்’ தேர்வை நிரந்தரமாய் ஒழிப்பது தமிழக அரசின் கடமை!

எனவே, தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு வேண்டி தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி சில மாதங்கள் ஆகியும் மத்திய அரசு அதை அப்படியே கிடப்பில் போட்டு தமிழ்நாட்டை வஞ்சிக்கின்றது.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியில், மாநில அரசுக்கு எல்லா உரிமையும் உண்டு. அதை முழுமையாக மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே, தமிழகம் மிகப் பெரிய அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தந்து ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக விரட்ட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும்.

இந்திய ஆட்சிப் பணியில் அய்.இ.எஸ். என்னும் சதி!

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்று மத்திய அரசிடமே இனி கல்வி  நியமனங்கள் இருக்கும், மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்படும் வகையில் மிஸீபீவீணீஸீ ணிபீuநீணீtவீஷீஸீணீறீ ஷிமீக்ஷீஸ்வீநீமீ (மி.ணி.ஷி.) அய்.இ.எஸ். உண்டாக்கி, பிற மாநிலத்தவரையும், நம் மொழி, பண்பாடு அறியாதவர்களை, நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைக்கும் கதைபோல  செய்யத் திட்டமிட்டு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டு, ஓசை யின்றி அவற்றைச் செயல்படுத்தவும் முனைப்பாக உள்ளனர்.

முளையிலேயே கிள்ளி எறிவோம்!

இதனை அனைவரும் முளையிலேயே கிள்ளி எறிய பெருங் குரல் எழுப்பி, இம்முயற்சியை முறியடிக்க முன் வர வேண்டும்

இல்லாவிட்டால் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக, நமது உரிமைகள் _- மொழி _- பண்பாட்டு விழுமியங்கள் சமஸ்கிருத _- ஆரிய கலாச்சாரத்தால் விழுங்கப்பட்டு, ஏப்பம் விடும் நிலை ஏற்பட்டு விடும்!

நேற்று (30.5.2010) திராவிடர் கழக தலைமைச் செயற்குழு இதனை தீர்மானமாக்கி சுட்டிக் காட்டியுள்ளது!

எம்.சி.எச்., டி.எம். மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதா?

மாநிலத் தொகுப்பிலிருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு எடுத்துச் சென்று மாநிலங்களின் தலையில் கை வைத்து வந்ததையே கடுமையாக எதிர்த்து வருகிறோம். அதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறோம்.

உயர்கல்வி மாணவர்களின் உயிர்பலிகள்!

அய்தராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆராய்ச் மாணவர் ரோகித் வேமூலா (வயது 23) என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு (17.1.2016) இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுதியது.

ஏ.பி.வி.பி. என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவுக்குச் சாதகமான முறையில், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிகிறது. பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரின் நடவடிக்கையும் மாணவர் தற்கொலைக்கு உந்துதலாக இருந்திருக்கிறது.

திருப்பூரைச் சேர்ந்த சரவணன் டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி பெற்று அங்குப் போய் சேர்ந்த சில நாள்களில், அவர் தங்கியிருந்த அறையில் உயிரிழந்து கிடந்தார் என்ற செய்தி இந்தியாவையே ஒரு கலக்குக் கலக்கி விட்டது.

சரவணனின் உடலை உடற்கூறு செய்த மருத்துவக் குழு இது தற்கொலையல்ல; வலதுகை பழக்கம் உள்ள ஒருவர் தனது வலது கையிலேயே நரம்பு மூலம் ஊசி மருந்தை செலுத்தி இருக்க முடியாது என்று தெரிவித்து விட்டது.

ராமேசுவரத்தை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற மாணவர், தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்து, சண்டிகரில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேல்படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 26-ந் தேதி மர்மமான முறையில் இறந்து விட்டார்.

இந்தப் பின்னணியில், கிருஷ்ண பிரசாத் மரணமும், இயற்கையாக நடைபெறவில்லை; அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெளிவாகிறது. டெல்லியில் மருத்துவ உயர்கல்வி கற்கின்ற தமிழ்நாட்டு மாணவர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து, தமிழக மக்களிடம் அச்சமும், கவலையும் ஏற்பட்டு இருக்கின்றது.

டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் சென்னை உள்ளிட்ட ஐஐடி கல்வி  நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் திடீர் திடீரென தற்கோலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா தேவக் , டெல்லி ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் பிஎச்.டி. இறுதியாண்டு படித்து வந்தார். ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று இரவு திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

அவரது அறைக்கு மற்றொரு மாணவி சென்றபோது, விடுதி அறையில் உள்ள மின்விசியில் மஞ்சுளா பிணமாக தொங்கியது தெரியவந்துள்து.

தற்கொலைகள் அல்ல; படுகொலைகள்!

மருத்துவராகும் கனவு பலிக்கவில்லையே என்ற அதிர்ச்சியால் சென்ற ஆண்டு அனிதா தற்கொலை செய்து கொண்டார் என்றால், இவ்வாண்டு செஞ்சியையடுத்த குக்கிராமமான பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா ‘நீட்’ தேர்வின் முடிவால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 495 மதிப் பெண்களையும், பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண்களையும் முதல் தலைமுறையாகப் பள்ளிக்குச் செல்லும் குக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணான ஒரு கூலித் தொழிலாளியின் மகள் பெற்றுள்ளார் என்பது ஓர் இமாலய சாதனையல்லவா!

பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபாவால் ‘நீட்’ தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள்தான் பெற முடிகிறது என்றால், இதற்குக் காரணம் பிரதீபாவா? ஒடுக்கப்பட்ட மக்களைக் குறி வைத்துக் கழுத்தறுத்துக் குதறும் ‘நீட்’ தேர்வா?

மற்ற மாநிலங்களுக்கு தேர்வு மய்யங்களை மாற்றியும், குறிப்பாக 2000 கி.மீ தூரத்திலுள்ள ராஜஸ்தானுக்கு தேர்வு மய்யங்களை மாற்றி இரண்டு நாள் ரயில் பயணத்தால் உடல், உள உளச்சல், செலவுகளால் ஏழை மாணவர்களுக்கு அதிக நிதிச் சுமை, மாணவர்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியும் மன உளச்சலுக்கு ஆளாக்கினர். பெற்றோர் மனவேதனையில் தேர்வின்போது மரணமடைந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் கண்ணன்  மகள் சுபஸ்ரீ (17), 12ஆம் வகுப்பில் 907 மதிப்பெண் பெற்றவர், ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்த வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டெல்லியைச் சேர்ந்த பிரணவ் மெகந்திரதா என்ற மாணவர் கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதியும் வெற்றிபெற முடியாத விரக்தியில் 8ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

அய்தராபாத் மாணவி ஜஸ்லீன் கவுர்(18), ‘நீட்’ தேர்வில் எதிரிபார்த்த மதிப்பெண் பெற முடியாததால் ஒரு வணிக வளாகத்தின் 10ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகிலுள்ள பயலூர் பகுதி விவசாயி நாராயணன் மகள் சவுமியா ‘நீட்’ தேர்வு தோல்வியால் வேதனையுற்று தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பதி கொர்லகுண்டாவைச் சேர்ந்த பாலாஜி (20), ‘மருத்துவர் ஆகவேண்டும்’ என்ற ஆர்வத்தில் கடுமையாகப் போராடி கடந்த இரண்டு முறை ‘நீட்’ தேர்வு எழுதியும் தோல்வி அடைந்ததால் மனவேதனையில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். பாலாஜியின் தாயார் வனஜாகுமாரி ஏற்கெனவே கணவரை இழந்திருந்த நிலையில் இரு மகன்களில் இளைய மகனையும் இழந்தார்.

கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், சண்டூர் அருகே தோனிமலே கிராமத்தில் கனிம சுரங்க நிறுவனத்தில் வேலைபார்க்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட திருமலை_நாகமணி தம்பதியரின் மகள் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்தவர், மருத்துவராக ஆசைப்பட்டு ‘நீட்’ தேர்வெழுதி குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்த வேதனையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இவையெல்லாம் தற்கொலைகளா? இல்லை! இல்லை! தாங்கொணா மன அழுத்தம் தந்து செய்த படுகொலைகள்!

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சமூகநீதி என்பதற்கு என்னதான் பொருள்? அனிதாக்களும், பிரதீபாக்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருளா?

இப்படிப்பட்ட படுகொலைகள், கொடுமைகள், ஆதிக்கங்கள், உரிமை பறிப்பு ஆகியவற்றிற்கு தீர்வு காணும் மாநாடாக குடந்தையில் நடைபெற்ற, திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு அமைந்தது.

திராவிட மாணவர் கழகத்தின் பவள விழா இரு மாத காலத்திற்கும்மேல் அதற்கான திட்டங்கள் வடிவமைக் கப்பட்டு, ஒழுங்குபடுத்தியதன் வெற்றி அறுவடையைக் குடந்தையில் காண முடிந்தது கடந்த ஞாயிறன்று (8.7.2018)!

 

திராவிடர் மாணவர் கழக பவள விழா மாநாடு ஒரு திருப்பு முனை!









காலை முதலே பேருந்துகளிலும், வேன்களிலும் கருஞ்சட்டைக் குடும்பங்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. ஊரெங்கும் கழகக் கொடிகள் - வாருங்கள் பெரியார்த் தொண்டர்களே, பகுத்தறிவுச் சீலர்களே!’ என்று அசைந்தாடி வரவேற்றன.

எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் கண்சிமிட்டின. விளம்பரங்கள் பறையடித்தன. சுற்றுவட்டாரக் கிராமங் களில் எல்லாம்தெருமுனைப் பிரச்சாரங்கள் மாநாட்டுக்குக் கட்டியம் கூறின.

காஞ்சி சங்கரா திருமண மண்டபத்தில் முற்பகல் நிகழ்ச்சிகள் எல்லாம் குறித்த நேரத்தில், நடந்தது தனிச்சிறப்பு.

அரியலூர் அனிதா நினைவரங்கத்தில், பெருவளூர் பிரதீபா, திருச்சி சுபசிறீ நினைவு மேடையில் விழா தொடங்கியது.

திராவிடர் கலைச்சுடர் டாக்டர் திருத்தணி பன்னீர் செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை சரியாக காலை 9 மணிக்கெல்லாம் களை கட்டிய  இசை முழக்கம். தொடக்கவுரையை திராவிட மாணவர் கழகத்தின் துணைச் செயலாளர் த.யாழ்திலீபன் ஆற்றினார். திராவிட மாணவர் கழகத்தை நோக்கி மாணவர்களே வாருங்கள்! வாருங்கள்! இது ஒன்றுதான் இன உணர்வுப் பாசறை - பகுத்தறிவு முகாம் - சமூகநீதியின் தாய்வீடு என்று தன் தொடக்க உரையில் மிகச் சரியாக - செறிவாகக் குறிப்பிட்டார்.

கருத்தரங்கம்

கழகத்தின் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலை மையில் கருத்தரங்கம் தொடங்கப்பட்டது.

மத்திய பி.ஜே.பி. ஆட்சியானது கல்வி உரிமைகள் அனைத்தையும் தலைகீழாகப் புரட்டி விட்டது.

நீதிக்கட்சிக் காலத்தில் தான் நமக்குக் கல்வி கிடைத்தது. ஆங்கிலேயே  ஆட்சியிலும் வகை செய்யப்பட்டது. கிறித் துவ மிஷனரிகளும் அந்தப் பணியைச் செய்தனர்’’ என்றார்.

பேராசிரியர் அதிரடி அன்பழகன்  இந்தத் தலைப்பில் கருத்துரை வழங்கினார்.

‘நீட்டும் - சட்டமன்றமும்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார் இரா.பெரியார்செல்வன்.

நீட்டும்‘ - நீதிமன்றமும்! இத்தலைப்பில் வழக்குரைஞர் பூவை புலிகேசி பேசினார்.

‘நீட்’டும் - மக்கள் மன்றமும்‘ என்ற தலைப்பில் கழக மகளிரணி மகளிர்ப் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி உரையாற்றினார்.

கருத்தரங்கின் இடை இடையே கழகச் சொற்பொழி வாளர் இராம. அன்பழகன் கழக எழுச்சிப் பாடல்களைப் பாடினார். மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் அஜீதன் உணர்ச்சிப் பாடல் ஒன்றைப் பாடினார்.

தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகன் இணைப்புரை வழங்கினார்.

கருத்தரங்கம் 11.45 மணிக்கு நிறைவுற்றது.

அடுத்து, இனமான ஏடுகளின் நோக்கமும் - தாக்கமும்‘ என்ற தலைப்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் காணொலி காட்சிகள்மூலம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

விடுதலை’யின் அறிக்கைகள், தலையங்கங்கள், பெட்டிச் செய்திகள் இவற்றினால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் பட விளக்கம்மூலம் எடுத்துரைத்தார். அறிமுக உரையை ஆடிட்டர் சண்முகம் நிகழ்த்தினார்.

கவியரங்கம்

பெரியாரை சுவாசிப்போம்‘ எனும் தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் மதுரைவா.நேரு தலைமை வகித்தார். கவிஞர்கள் பா.திவ்யபாரதி, ம.அய்.சந்தீப், இர.க.தமிழருவி ஆகியோர் சிறப்பாகக் கவிதை பாடினர்.

குடந்தை மாநாட்டுப் பேரணி 8.7.2018 ஞாயிறு பிற்பகல் 4.30 மணிக்குத் தொடங்கி மாலை 6.15 மணிக்கு மாநாட்டு மேடையருகில் நிறைவுற்றது. காண்போர் கண் சிமிட்டாது காணும் அளவுக்கு அவ்வளவு நேர்த்தியான அணிவகுப்பு. திண்டுக்கல் பெருமாள் தப்பாட்டக் குழுவினரின் பறை இசை கிடுகிடுக்க வைத்தது.

டி.ஆர்.வினோத் குழுவினரின் சிலம் பாட்டம் தனிச் சிறப்பு (தமிழர்களின் இந்த வீரக்கலை நசிந்துவிட்ட நிலையில் திராவிடர் கழகம் இதற்குப் புத்துயிர் கொடுத்து வருகிறது. ஒவ்வொரு சனி ஞாயிறுகளிலும் சென்னை பெரியார் திடலில் இதற்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. சின்னஞ்சிறு இருபால் பிள்ளைகள் வெகு நேர்த் தியாக இந்தக் கலையில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்).

கடவுள் பக்தி - சக்தி என்று மக்களை ஏமாற்றும் மாயையான பூசாரிகள் அரி வாள்மீது ஏறி நிற்கும் அந்த வித்தையை கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று முழக்கமிட்டு அரிவாள் மீது ஏறி நின்று அசத்தினர் சிறுவர்களும், கழக தோழர் களும். சோம.நீலகண்டன், சே.கவுதமன், இரா.யோகராஜ் ஆகிய பட்டுக்கோட்டை மாவட்டக் கழகத் தோழர்கள் மக்கள் கூடி நின்று பேரணியைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் இதைச் செய்து காட்டினர். வேடிக்கை பார்த்த சிறுவர்களும், இளை ஞர்களும் கைதட்டி ஆரவாரித்தனர்.

சடையார்கோயில் வெ.நாராயணசாமி குழுவினரின் பெரியார் பிஞ்


சுகளின் பகுத் தறிவுப் பாடலுடன் கூடிய கோலாட்டம் தனிச்சிறப்பு!

பேரணியாய் வந்த பேரணி:

பேரணியின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சுகளும், மகளிர் அணியினரும் கழகக் கொடிகளுடன் அணிவகுத்துச் சென்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரி யாக பதாகைகளுடன் கழகத் தோழர்கள் வரிசைக்கு இருவராக தொடக்கம் முதல் இறுதிவரை கொள்கை முழக்கமிட்டுச் சென்றனர்.

வழி நெடுக ஊர் மக்கள் திராவிடர் கழகத்தின் இந்த அணிவகுப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். தொடக்கம் முதல் இறுதி வரை பொது மக்களை இரு பக்கங் களிலும் காண முடிந்தது.

பல இடங்களில் அணிவகுப்பில் சென் றவர்களுக்குக் குடிநீர் வழங்கினார்கள்.

காஞ்சி சங்கரா திருமண மண்டபம் அருகில் தொடங்கிய பேரணி ஆர்சி. தொடர்வண்டி நிலைய சாலை, காமராசர் சாலை, தலைமை அஞ்சலக சாலை, நாகேசுவரன் தெற்கு வீதி வழியாக கடலங்குடித் தெருவில் அமைந்திருந்த மாநாட்டுப் பந்தலை வந்தடைந்தது.

மலையில் புறப்பட்ட தண்ணீர், நீர் வீழ்ச்சியாக, ஆறாகப் பெருக்கெடுத்து கடலில் சென்று சங்கமம் ஆவது போல் இருந்தது கருஞ்சட்டைப் பேரணி.

கழக வரலாற்றில் நாங்கள் செல் லாத மாநாடு இல்லை, பங்கேற்காத ஊர் வலங்கள் இல்லை என்றாலும் இந்த அளவுக்கு மாணவர்களும், இளைஞர்க ளும் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்து வந்த காட்சியை இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

காவல்துறை கருத்து


காவல்துறை அதிகாரி ஒருவரிடம் பேரணி குறித்துக் கேட்டபோது அவர் மனந்திறந்து பாராட்டினார். தொடக்கத்தில் எப்படி பேரணி புறப்பட்டதோ, அதே நேர்த்தியைக் கடைசி வரை காண முடிந் தது. ஒரு சிறு அசம்பாவிதமுமின்றி மிகுந்த கட்டுப்பாட்டுடன் பேரணி சென்றது வியக்கத்தக்கது.

இடையில் மதுக்கடைகள் இருந்தால் பல கட்சி ஊர்வலங்களில் அந்த இடத்துக்கு வரும்போது ஊர்வலத்தில் ஒரு முறிவு ஏற்படும். இந்தப் பேரணியில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று மனந் திறந்து பாராட்டினார்.

இரு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் அழைத்து வரப்பட்டார். பொது மக்களும், வியாபாரிகளும் கைய சைத்தும், வணக்கம் கூறியும் மகிழ்ந்தனர். பலர் சால்வைகளை அணிவித்தனர். கருஞ்சட்டைக் கடலில் தமிழர் தலைவர் மிதந்து வந்தார்.

கலைநிகழ்ச்சி

பேரணி மாநாட்டு மேடையை அடை வதற்கு முன்னதாகவே மாலை 5 மணிக்கு முரசொலி முகிலன் குழுவினரின் ஈரோட் டுப் பூகம்பம் பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி அறிவுக்கு நல்ல விருந்தாக அமைந்தி ருந்தது. பாடல்களை பாராட்டி தோழர்கள் கலைக் குழுவினருக்கு அன்பளிப்புகளைக் குவித்தனர்.

திராவிட மாணவர் கழகப் பவளவிழா மாநாட்டின் (1943----2018) பொது மாநாடு குடந்தை, கடலங்குடி தெருவில் பிரம் மாண்டமாக அமைக்கப்பட்ட மேடையில், சமூக நீதிப் போராளி ரோகித் வெமுலா  நினைவரங்கில் தொடங்கப்பட்டது.

மாநாட்டுத்  தலைவரை காஞ்சி அ.அர்ஜூன் முன்மொழிய சென்னை எஸ்.பிரவீன்குமார் வழிமொழிந்து பேசினார்.

திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் குடந்தை அ.அஜிதன் வரவேற்புரையாற்றினார்.

கழகக் கொடி ஏற்றம்

கழகக் கொடியை கொள்கை முழக்கங்களுக்கும் வாழ்த்துக்குமிடையே திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் இலக்கியா ஏற்றினார்.

உரைக்களம்

உரைக்களத்தில் மாநில மாணவர் கழகக் கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி (சட்டக்கல்லூரி மாணவி) தொடக்கவுரையாற்றினார்.

குடியாத்தம் தே.அ.ஓவியா தமிழனே இதை கேளாய்!  எனும் தலைப்பில் வீராவேசமாகப் பேசினார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் க.இ. இளம்பரிதி கல்விக் கண்ணைப் பறிக்காதே எனும் தலைப்பில் கருத்துகளை வழங்கினார்.

இந்து என்று சொல்லாதே என்ற தலைப்பில் கோவை இரா.சி.பிரபாகரன் உரையாற்றினார்.

மதம் பிடியாதிருக்கட்டும்  எனும் தலைப்பில் சென்னை மண்டல மாணவர் கழக செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மதம் மிருகங்களுக்கும் பிடிக்கட்டும் - மனிதர்களுக்குப் பிடிக்க வேண்டாம் என்றார்.

ஜாதி இருக்கிறதென்பானும் இருக்கின்றானே எனும் தலைப்பில் மதுரை மாணவி அய்.கங்காதேவி உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழகம் பிறந்த டிசம்பர் முதல் தேதியை திராவிட மாணவர் கழக தினமாக அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவரிடம்  கோரிக்கை ஒன்றையும் வைத்தார். (கழகத் தலைவர் அனுமதியும் தந்து விட்டார்)

தமிழர் தலைவர் நிறைவுரை

திராவிட மாணவர் கழகம் தோற்று விக்கப்படுவதற்கு காரணமாக இருந்த - மறைந்த சுய மரியாதைச் சுடரொளிகள் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், பூண்டி கோபால்சாமி, (செங்குட்டுவன்), கோ.இலட்சுமணன்ஆகியோர் உருவப் படங்களை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்து உரையாற்றினார். மாநாட்டு நிறைவுரையை கழகத் தலைவர் ஆசிரியர் வழங்கினார்.

நமது திராவிட மாணவர் கழகம் தோன்றியதே போராட்டம் என்ற கருவிலிருந்து தான். - அதன் பிறப்பே போராட்டம்தான்.

பேரணி புறப்படுவதற்கு முன்னதாக கழக மாணவரணியினர் இருபாலரும் ஆயிரக்கணக்கில் அணி வகுத்து நின்றனர். அப்பொழுது அவர்கள் எடுத்துக் கொண்ட பத்து உறுதிமொழிகளும் எந்தக் கட்சியிலும் அமைப்பிலும் கேட்டிராத ஒன்றாகும். இதற்கு நிகரானது இதுதான்.

இந்த இயக்கத்தை வீழ்த்திட எந்த கொம்பனாலும் முடியாது. திராவிட இயக்கத்தை பலகீனப்படுத்தவும், கொச்சைப்படுத்தவும் சிலர் கிளம்பியுள்ளனர். அவற்றையெல்லாம் எங்கள் மாணவர்கள், இளைஞர்கள் சந்திப்பார்கள்; முறியடிப்பார்கள்.

‘‘இது பெரியார் மண் தான்; இங்கு காவி கூட்டத்துக்கு இடமில்லை’’ என்று கட்டியம் காணும் நிகழ்வாக இந்த மாநாடு பெரும் நம்பிக்கையை தமிழ்நாட்டில்

ஏற்படுத்தியுள்ளது.

 

மாநாட்டுத் தீர்மானங்கள்

1.                     மாணவர்கள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதைப் படிக்கத் தக்கதான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று மத்திய - மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.                     இளைஞர்களுக்கு ஏட்டுப் படிப்போடு விளையாட்டும் தேவை!

3.                     பாடத் திட்டங்களில் மாற்றம் தேவை!

4.                     கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருக! - ‘நீட்’ தேவையில்லை!

5.                     மாணவர்கள் தமிழர் இன மீட்சிக்கும், மேம்பாட்டிற்கும், ஆரிய ஆதிக்கத்தை அழிக்கவும், சமூகநீதி காக்கவும்,  இணையதளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

6.                     கல்வி உதவித் தொகை / ஊக்கத் தொகை காலதாமதம் கூடாது.

விஜயபாரதம் மீது நடவடிக்கை

உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸின் வார இதழான விஜயபாரதம் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் (பலத்த கரவொலி, ஆர்ப்பரிப்பு!)

7.                     நெட் தேர்வு கூடாது!

8.                     இயக்க ஏடுகள், நூல்களைப் பரப்புதல்!

9.                     பி.ஜே.பி ஆட்சியை வீழ்த்துக!

உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


- உண்மை இதழ், 16-31.7.18

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அரசு சார்பில் கருத்து



புதுடில்லி, ஆக. 17 அரசு பணி களில்எஸ்.சி., எஸ்.டி.வகுப் பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

2006 ஆ-ம் ஆண்டு வழங்கிய இந்தத் தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலே யர்) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதி பதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

2006- ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 11- ஆம் தேதி மறுத்து விட்டது.

இந்நிலையில்அந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜ ரானார். அவர், இட ஒதுக்கீட்டின் பலனைஎஸ்.சி.,எஸ்.டி.வகுப் பினரில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அந்த இனத்தினரில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்கலாமா? என்ற கேள்விக் குப் பதில் அளித்து வாதாடினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பி னரில் வசதி படைத்தவர்கள் என்பதால் இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது.

அப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுத்து, எந்தத் தீர்ப்பும் வழங் கப்பட்டது இல்லை.

அந்த வகுப்பினரில் குறிப் பிட்ட சிலர் வசதி படைத்த வர்களாக இருக்கலாம். ஆனால், ஜாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்குறிப் பிட்ட பிரிவினரை விலக்கி வைக்கலாமாஎன்றகேள்விக் கானபதிலைகுடியரசுத் தலைவரும், நாடாளுமன்றமும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதித்துறையினருக்கு வேலை இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வகுப்பினரில் நல்ல நிலையில் இருப்பவர்கள்கூட உயர் ஜாதியில் திருமணம் செய்ய முடியாது. இதில் உண்மை நிலை என்னவென்றால், ஒரு சிலர் வசதியான நிலைக்கு வந்து விட்டாலும்கூட, அவர்களது ஜாதியும், பின்தங்கிய நிலையும் அவர்களிடம் இருந்து நீங்கி விடுவது இல்லை. பாகுபாடு பார்க்கும் ஜாதி அமைப்பு நமது தேசத்தின் வாய்ப்புக்கேடானது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

- விடுதலை நாளேடு 17.8 .18

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

*ஆகஸ்டு 14 வகுப்புரிமை நாள்*

திராவிடர் இயக்கம் எங்களை படிக்க வெச்சதுனா ,அப்ப வள்ளுவரை படிக்க வெச்சது யாரு என்றும்,,,தமிழகத்தில் பெரியார் தான் படிக்க வெச்சார் என்றால்,அப்ப பஞ்சாப்ல இருக்கறவங்க எல்லாம் எப்படி படிச்சாங்க என முட்டாக் கொரங்குகள் போல கேள்வி கேட்கும் கூட்டமே !!

தமிழ்நாட்டில் அல்ல,,,இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை,வேலை வாய்ப்பை உறுதி செய்தது பெரியாரும்,திராவிடர் இயக்கமும் தான்,,,

*ஆகஸ்டு 14 வகுப்புரிமை நாள்*

இந்த நாளில், 1950-ல், தந்தை பெரியார்,  மக்களைத் திரட்டி, *”வகுப்புரிமை நாள்”* என போராட்டம் அறிவித்தார்,,,

1928 முதல் தமிழகத்தில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-ல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என அறிவிக்கப்பட்டது,,,சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக “வகுப்புவாரி உரிமை ஆணை” இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது,,,

இந்திய வரலாற்றில், தமிழகத்தில், நீதிக்கட்சி ஆட்சியில் தான், அனைத்து பிரிவு மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் சேர்த்து, நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு 1928 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது,,,

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950-ல் நடைமுறைக்கு வந்ததும், மோசடிப் பார்ப்பனர்கள், அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி, வகுப்புவாரி உரிமைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், வகுப்புவாரி உரிமை ஆணையை ரத்து செய்தது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது,,,

சுதந்திர இந்தியாவில், தமிழர்கள்  பெற்ற முதல் வெற்றி இது தான்,,,

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார் கண்டனம் செய்ததோடு நில்லாமல், மக்களைத் திரட்டினார்,, அனைத்து மக்களும், 1950-ல் ஆகஸ்டு 14-ஆம் நாளை “வகுப்புரிமை நாளாக” அறிவித்து போராட அழைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலகர்கள், என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்,,,

போராட்டத்தின் வலிமையை உணர்ந்த மத்திய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் பாபாசாகிப் அம்பேத்கரும், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், வகுப்புரிமையை நிலை நாட்டவும், அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15 (4) உருவாக்கப்பட்டது. இந்த விதியில் தான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர்க்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு மத்திய மாநில அரசுகள் இட ஒதுக்கீடு அளிக்கின்றன,,,

1950-ல் அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரிவான 16(4) மட்டும்தான் இருந்தது. கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு இல்லை,,,

*சமூகப்புரட்சியாளர் தந்தை பெரியாரின்* வகுப்புரிமைக்கான போராட்டத்தின் காரணமாகத்தான், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு சேர்த்திட வாய்ப்பு கிட்டியது,,

இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது,,

ஆகஸ்டு 14, 1950-ல் பெரியார் நடத்திய வகுப்புரிமை நாள் போராட்டத்தையும், அதன் விளைவாக, இன்றளவும், கல்வியில் இட ஒதுக்கீடு பெறும் இளைய சமுதாயம், இந்த வரலாற்றையும், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்,,

*ஒட்டுமொத்த இந்தியாவுமே பெரியாருக்கு நன்றி கூற வேண்டிய நாள்*

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கலைஞர் ஒரு சமூகநீதி சகாப்தம்!

கி.வீரமணி , தலைவர், திராவிடர் கழகம்


திராவிடர் இயக்கமான தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற அதிகாரபூர்வ பெயர் கொண்டதுதான் ஜஸ்டீஸ் கட்சி என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட நீதிக்கட்சி.

100க்கு 3 பேர்களான பார்ப்பனர்களே பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி உத்தியோகங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்து அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதையே கொள்கை- - லட்சியமாகக் கொண்டு பிறந்ததுதான் நீதிக்கட்சி.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்து 1920 முதல் 1925 வரை போராடியது இந்த வகுப்புரிமை சமூகநீதியைப் பெறுவதற்கே!

அங்கே உயர்ஜாதியினரான பார்ப்பனர் ஆதிக்கமே அதிகம் என்பதால் தொடர்ந்து பெரியார் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், கடைசியில் 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புரிமை தீர்மானம் ஏற்கப்படாமல் சூழ்ச்சி நடந்ததை எதிர்த்தே, காங்கிரசை விட்டு வெளியேறி, சமூகநீதிக்காகப் போராடிட சுயமரியாதை இயக்கம், என்ற தனி இயக்கம் கண்டு, அனைவருக்கும் அனைத்தும் என்பதே அதன் கொள்கை லட்சியம் என்று முழங்கினார்.

1928இல் அமைச்சர் முத்தையா முதலியார் முயற்சியால், நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்ததைப் பயன்படுத்தி அவ்வாணை அரசியல் சட்டத்திற்கு இது முரண் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செண்பகம் துரைராஜன், சீனுவாசன் என்ற இரண்டு உயர்ஜாதி பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றனர்; உச்சநீதிமன்றமும் இத்தீர்ப்பை மேல்முறையீட்டில் உறுதி செய்தது.



தந்தை பெரியார் துவக்கிய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டு, வகுப் புரிமை- - சமூகநீதி - கல்வியிலும் உத்தியோகத் திலும் சமூகநீதி காப்பாற்றப்பட்டது (1951).

காமராசர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு (S.C, S.T) 16 சதவிகிதம், பிற்படுத்தப் பட்டோருக்கு (B.C) 25 சதவிகிதம் என்று 41 விழுக்காடு இருந்தது. எஞ்சிய 59 விழுக்காடு திறந்தபோட்டி (OPEN COMPETITION) யாகும்.  அதில் முன்னேறிய ஜாதியினர் உட்பட அனை வரும் போட்டியிட்டு இடங்களைப் பெறலாம்.

1967இல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தந்தை பெரியாரின் அறிவுரைப்படி பல சமூக சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று பிரகடனப்படுத்தினார். முதல் அமைச்சர் அண்ணாவிடம்  இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த உடனே முயற்சி எடுக்க கேட்டுக் கொண்டார் தந்தை பெரியார். அண்ணா ஏற்று  முயன்றபோது கெட்டவாய்ப்பாக  மறைந்து விட்டார் - முப்பெரும் சாதனைகளைச் செய்துவிட்டு.

அந்தக் காலக்கட்டத்தில் பதவியேற்ற நமது கலைஞர் அவர்கள் அய்யா அறிவுரைப்படி, அண்ணா துவக்கிய பணியைத் தொடர்ந்தார்.

A.N சட்டநாதன் தலைமையில் மூவர் அடங்கிய முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷனை நியமித்தார். முதல் அமைச்சராக கலைஞர்அவர்கள் பதவியேற்ற வுடன், தனக்கென பெருமைமிக்க பாரம்பரியம் ஏதும் கிடையாது, மிகவும் பிற்படுத்தப்பட்ட எளிய குடும்பத்தி லிருந்து வந்தவன். எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், என்று தன்னடக்கத்துடன் கூறி, ஆட்சியைத் துவங்கி விரைந்து முடிவுகள் எடுப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன் பரிந்துரைகளை ஏற்று,

தமிழ்நாட்டில் காமராஜர் (காங்கிரஸ்) ஆட்சியில் தரப்பட்ட சமூகநீதி, இடஒதுக்கீட்டு விகிதாச்சாரங்கள் தந்தைபெரியார் விருப்பத்திற்கு ஏற்ப,

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (S.C, S.T) வழங்கப்பட்ட 16 சதவிகிதத்தை 18ஆக உயர்த்தியும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த 25 சதவிகிதத்தை 31ஆகவும் உயர்த்தினார். இதன்மூலம் இடஒதுக்கீடு 49 சதவிகிதத்தை எட்டியது. எம்.ஜி.ஆர் ஆட்சி(அ.தி.மு.க அரசு) இருந்தபோது (எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள்), எம்.ஜி.ஆர் அவர்கள் 1979 ஜூலையில் கொண்டுவரப்பட்ட சமூகநீதிக்கு வேட்டு வைக்கக்கூடிய, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 9000க்கு கீழே இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடஒதுக்கீடு, இன்றேல் அவர்கள் திறந்தபோட்டியில் மற்ற முன்னேறிய ஜாதியினருடன்தான் போட்டியிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற, அரசியல் சட்டவிரோத ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் - அதுவும் பெரியாருக்கு நூற்றாண்டு கொண்டாடிய நிலையில்!

திராவிடர் கழகமும், திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கட்சிகள் ரீதியாக அந்த ஆணையை எதிர்த்து 6 மாதம் தொடர்ந்து போராடி வந்தோம்!

திராவிடர் கழகம் அந்த ஆணையின் நகலை எரித்து சாம்பலை மூட்டை மூட்டையாக, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கே கோட்டைக்கே அனுப்பினோம்!

தி.க., தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தால் அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் (1980) எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சி படு தோல்வி அடைந்தது; 39 இடங்களில் கோபி, சிவகாசி ஆகிய இரண்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எம்.ஜி-ஆர். நிலை குலைந்தார். அவசர அவசரமாக அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டி (21.1.1980), நமது கருத்து விளக்கங்களைக் கேட்ட பிறகு  அவ் வாணையை ரத்து செய்தார்! 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை பிற்படுத்தப்பட்டோருக்கு புகுத்தியது ஒழிந்தவுடன், அவர் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை 50 சதவிகிதமாக உயர்த்தியதால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 68 (50+18)  சதவிகிதம் ஆனது.

மீண்டும் கலைஞர் 89 - 91இல் ஆட்சி அமைத்து முதல் அமைச்சரான, உடனேயே, மலைவாழ் - மக்களுக்கு ஒரு சதவிகிதம் (அவர்கள் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் கூட இல்லாத நிலையில்) தனியே ஒதுக்கீடு தர வேண்டுமென்ற உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்தினார்.

50 ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவில் பெரிதும் சில ஜாதிகளே வாய்ப்பை பெறுகின்றனர் என்ற கோரிக்கை, கூப்பாட்டிற்கு மதிப்பளித்து, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீட்டை (கோட்டாவை) இரண் டாக பிரித்தார்.

1. பிற்படுத்தப்பட்டோர் (B.C) 30 சதவிகிதம் 2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ( M.B.C ) (MOST BACKWARD CLASS) 20 சதவிகிதம் என்று பிரித்து அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினர் பெரிதும் பலன் பெற்று, கலைஞரைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பது மறைக்கப்பட முடியாத வரலாறு. அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல் அமைச்சரான பின், செய்த முதல் சாதனை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சகம் செய்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களுடன் கலந்து ஒரு சமூகநீதிக் கூட்டணி உருவாவதற்கு ஒத்துழைப்புத் தந்தார்!

கிரிமிலேயர் என்ற ஒரு அடிப்படையை தமிழ்நாடு ஏற்காது செய்ததும், அவரது சரித்திர சாதனையாகும்.

எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு இருந்த தடையை தி.க.வும் தி.மு.க தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்து வந்தன.

கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கிராமப்புற மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 15 சதவிகிதம் இட ஒதுக் கீட்டுக்கு வழி செய்தார்.

பிறகு அதை ஜெயலலிதா 25 ஆக உயர்த் தியதால் அது நீதிமன்றத்தில் அடிபட்டுப் போயிற்று.

நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதை கல்வி நிபுணர் குழு போட்டு - அவர்கள் பரிந்துரைப்படி அதை ஒழித்து, சட்டமன்றத்தில் சட்டமியற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, கிராமப்புற மாணவர்கள் முதல் தலை முறையினருக்கு பெருவாய்ப்பினை மருத்துவம்  - பொறியியல் படிப்புகளில் கதவைத் திறந்து விட்டார்.

இஸ்லாமியருக்கு பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவி லிருந்து 3 சதவிகிதமும், அதேபோல அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தாழ்த்தப் பட்டோர் கோட்டாவிலிருந்தும் அளித்து, அவர் களுக்கு  மறுக்கப்பட்ட சமூகநீதி கிட்டும்படி செய்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் (SEPERATE MINISTER) துறை கிடையாது, அதை உருவாக்கி என்.வி.நடராசனை அமைச்ச ராக்கினார். புதிய துறையாக அதைப் பிரித்து சமூகநீதியைப் பரவலாக்கினார்.

110 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏன் வரவில்லை என்று தந்தை பெரியார் கேட்டார். உடன் கலைஞர் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு தலைமை நீதிபதி கே.வீராசாமி அவர்களின் ஒப்புதலைப் பெற்று தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதியாக 9ஆவது வரிசையில் இருந்த ஏ. வரதராசன் அவர்களை சமூகநீதிக்கு முன்னுரிமை என்ற சரியான காரணம் காட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, சட்ட அமைச்சர் மாதவனை டில்லிக்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வரை பெற்று உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கச் செய்தார்!

இது ஒரு பெரும் சமூகப்புரட்சி அல்லவா! பிறகு இந்த அனுபவத்தால் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அவரே செல்லும் வாய்பினைப் பெற்றார். உயர்ஜாதியினர் எதிர்ப்பினை பொருட்படுத்தாது எதிர்நீச்சல் அடித்தே இதிலும் வெற்றி பெற்றார் கலைஞர்!

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப் டோருக்கு இடஒதுக்கீடே இல்லாத குறை போக்க நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்க தி.கவும், தி.மு.க வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தொடர்ந்து போராடின. சமூகநீதி காவலர் வி.பி.சிங் அரசு அதனை அமல்படுத்த கலைஞர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார். மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த 42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியது.

திருச்சியில ஒருமுறை சலவைத் தொழிலாளர்கள் கூட்டிய சமூகநீதி மாநாட்டில் தாழ்த்தப்பட்ட,  பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்வர் இடஒதுக்கீட்டின் தேவைப்பற்றி எளிமையாக விளக்கினார் முதல் அமைச்சர் கலைஞர்.

நீங்கள் அழுக்குத் துணிகளைத் தான் வெளுத்து பெட்டிபோட்டு அடுக்கி வைப்பீர்கள். சலவை செய்த துணிகளை மீண்டும் சலவை செய்வதில்லை.

அதுபோல காலகாலமாய் வாய்ப்பு மறுக்கப்பட் டோருக்குத் தானே இடஒதுக்கீடு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது நியாயம் என்றார்.

இதுபோல் பெண்களுக்கும் சொத்துரிமை, பணிகளில் இடஒதுக்கீடு, ஆசிரியைகளாக நியமனத்தில் முன்னு ரிமை போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தவர் மானமிகு கலைஞர்.

திருக்குவளையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து திக்கெட்டும் புகழ் மணக்க பெருமை பெற்ற அந்த சுயமரியாதைச் சுடரொளியின் ஒளிக்கதிர்களின் வீச்சு உலகெலாம் பரவி வருகிறது. திராவிடர் இயக்கம் பூரித்துப் பெருமை கொள்கிறது. கலைஞர் தனி மனிதரல்ல: அவர் ஒரு சமூகநீதி சகாப்தம்!

நன்றி:  'தினகரன்' 13.08.2018

குறிப்பு: 'தினகரனுக்கு' எழுதப்பட்ட முழுக் கட்டுரை இது - 'தினகரன்' சுருக்கி வெளியிட்டுள்ளது)

- விடுதலை நாளேடு, 13.8.18