பக்கங்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

புதுவை: தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் வழிபாடு போராட்டம் வெற்றி!

புதுச்சேரி, ஆக. 5 புதுவை மண்ணாடிப்பட்டு கொம்யூன் கூனிச்சம்பட்டு கிராமத்தில் திரவு பதியம்மன் கோவில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் இக்கோவிலுக்குள் வழிபட சென்ற ராதா என்ற ஆதிதிராவிட பெண்ணை சிலர் மிரட்டி கோவி லுக்குள் இருந்து வெளியேற்றினர்.

தாழ்த்தப்பட்ட பெண்ணை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

மேலும், கோவிலுக்குள் அனைத்து ஜாதியினரும் சென்று வழிபாடு நடத்த அரசு சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி புதுச்சேரி அரசுக்கு கோரிக்கையும் வைத்தனர்.இக்கோரிக்கையின் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலை யில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி திரவுபதி அம்மன் கோவிலில் தலித் மக்களுடன் ஆலய பிர வேசம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கூனிச்சம் பட்டு டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் தீண்டாமை ஒழிப்பு மற்றும் உரிமை மீட்பு இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையே, சமூக நலத் துறை அமைச்சர் கந்த சாமியை சந்தித்தும் வழிபாடு நடத்த உதவும்படியும் கோரிக்கை வைத் தனர். இதனைத் தொடர்ந்து, அரசு உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி, முதுநிலை காவல் கண்கா ணிப்பாளர் அபூர்வ குப்தா, அறங் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக் கிழமையன்று (ஆக. 3) தலித் மக்கள் கோவிலுக்கு சென்றனர். அப்போது ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதி காரிகள் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் பட்டது.

இதைத் தொடர்நது ஊர் மக்களும், தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்கு சென்று வழிபட் டனர். அப்பகுதியில், மோதல் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த காவல் போடப்பட்டிருந்தது. இது தொடர்பாக தீண்டாமை முன்னணி புதுச்சேரி செயலாளர் ராமசாமி கூறியதாவது:

கடந்த 3 மாதத்திற்கு முன் இக்கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட பெண் ராதா வழிபட வந்தபோது, இங்கு வழிபடக் கூடாது எனக் கூறி வெளியேற்றப் பட்டார்.

இதுகுறித்து அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினோம். ஆனால், எந்த முன் னேற்றமும் இல்லை. இத னால் தாழ்த்தப்பட்ட மக்களே கோவிலுக்குள் செல்ல முடிவு எடுத்து துண்டு பிரசுரம் அடித் தனர். இதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆதரவு அளித்து பங்கேற்றது. காவல் துறை, அரசு தலையீடு காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் கோவி லுக்குள் சென்று வழிபாடு நடத் தினர். இது நீடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தீண்டாமை ஒழிப்பு முன் னணி தலைவர்கள் இராச.செய ராமன், பொருளாளர் கொளஞ்சியப்பன், தமிழ்ச்செல்வன், அன்புமணி. சரவணன், நில வழகன் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண் டனர்.

 - விடுதலை நாளேடு 5. 8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக