பக்கங்கள்

சனி, 11 ஆகஸ்ட், 2018

எஸ்.சி., எஸ்.டி. சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்புதுடில்லி, ஆக.11 எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய் யும் வகையில் கொண்டு வரப்பட்ட சட் டத் திருத்த மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வியா ழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் இந்த மசோதா, கடந்த 6 ஆம் தேதி நிறைவேறியது. இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் அந்த மசோதா குரல் வாக்கெடுப்புமூலம் வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, மாநிலங்களவையில் மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின்மீது மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் பதிலளித்து பேசியதாவது:

இந்த மசோதாவை, எந்தவித நிர்ப்பந் தத்துக்கு கட்டுப்பட்டு மத்திய அரசு கொண்டு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு உறுதிபூண்டிருந்தார். அதன்படியே, மசோதா கொண்டு வரப்பட்டது.

இந்த அவையில் மசோதா நிறைவேறு வதன் மூலம், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக் களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைக்கும்.

உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த உத்தரவில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை மத்திய அரசால் செயல்படுத்த முடியவில்லை. இந்த கட்டுப்பாடுகளால், கிரிமினல்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், நிவாரண மும் கிடைப்பது தடுக்கப்பட்டது. இதை யடுத்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்கள் பேசியபோது, இந்த சட்டத்தின்கீழ் தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். இந்த மசோதாவில்அதற்குவழிவகைசெய்யப் பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஏற்கெனவே 14 மாநிலங்கள், 195 சிறப்பு நீதிமன்றங்களை அமைத்துள்ளன. சில மாநிலங்கள், மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களை இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக அறி வித்துள்ளன என்றார்.

மசோதாவை ஆதரித்து காங்கிரசு எம்.பி. அபிர் ரஞ்சன் விஸ்வாஸ், பிஜு ஜனதா தளம் எம்.பி. சரோஜினி ஹேம்ராம், அய்க்கிய ஜனதா தளம் எம்.பி. ராம் சந்திர பிரசாத் சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சோமபிரசாத் ஆகியோர் பேசினர். காங்கிரசு எம்.பி. குமாரி ஷெல்ஜா பேசியபோது, தலித்துகளுக்கு சாதகமாக மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவில்லை என்றார்.

பாஜக எம்.பி. கிரோடி லால் மீனா பேசுகையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியிடும்போது உச்ச நீதிமன்றம் தனது எல்லையைத் தாண்டி விட்டது. உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பை நீக்கிவிட்டு, இந்திய நீதித் துறை சேவை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என வலியுறுத்தினார். மேலும், எஸ்.சி., எஸ்.டி. சமூக மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்களையும் அவர் வெளியிட்டார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, 10 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை மீண்டும் தொடங்கியதும், மசோதாவை ஆதரித்து சமாஜவாதி எம்.பி. ராம்கோபால் யாதவ், அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த், பகுஜன் சமாஜ் எம்.பி. ராஜாராம், சிவசேனை எம்.பி. சஞ்சய் ரவுத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி. விஜய்சாய் ரெட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.ராஜா உள்ளிட்டோர் பேசினர்.

-  விடுதலை நாளேடு, 11.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக