பக்கங்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

மறக்க முடியாத ஆகஸ்டு 7 (பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு)



பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அளித்திட 20.12.1978 அன்று ஜனதா அரசு இரண் டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை பீகார் முன்னாள் முதல்வர் பி.பி.மண்டல் தலைமையில் அமைத்தது. ஆணையம் தனது அறிக்கையை 31.12.1980 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தது. ஆனால் பிரதமர்களாக பதவி வகித்த இந்திரா காந்தியும், பின்பு ராஜீவ் காந்தியும், மண்டல் அளித்த அறிக்கையை நடைமுறைப்படுத்தவில்லை.

மண்டல் அறிக்கை குறித்த விவாதம் நாடாளு மன்றத்தில் மேற்கொள்ளப்படாத நிலையில், சமூக அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், கோரிக்கைகளையும் நடத்தின. பெரியார் இயக்க மான திராவிடர் கழகம், நாற்பத்திரெண்டு மாநாடு களையும், பதினாறு போராட்டங்களையும் நடத் தியது.

1990-ஆம் ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு வழங்கிடும் ஆணையை நாடாளு மன்றத்தில் அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது தேசிய முன்னணி அரசின் சார்பாக அறிவித்தார். இந்த ஆணை, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தனிப்பெரும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா., டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆகியோரது கனவை நனவாக்கும் செயல் என பெருமையுடன் குறிப்பிட்டார் வி.பி.சிங்.

உயர் ஜாதி ஆதிக்கம் நிறைந்த ஊடகத்துறை இன்றும், வி.பி.சிங் அவர்களை ஒரு சந்தர்ப்பவாதி, மக்களிடையே பிளவை ஏற்படுத்தியவர் என்று ஒரு வில்லனைப்போலத்தானே சித்தரிக்கிறது. அவரது மறைவைக்கூட வெளிப்படுத்தாமல் தங் களது குரூரத் தன்மையை வெளிக்காட்டியவர்கள் தானே இந்த ஊடகத் துறையாளர்கள். ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் குழு பரிந்து ரைகளை நிறைவேற்றுவோம் என்று தங்களது தேர்தல் அறிக்கையில் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அறிவித்தது. தேர்தல் அறிக்கை யில் சொன்னதைத்தான் வி.பி.சிங் நிறைவேற் றினார். அதனால் தான், வி.பி.சிங் அவர்களை, சமூக நீதியின் காவலர் என திராவிடர் கழகம் கூறியது; இன்றும் கூறி வருகிறது.

மண்டல் குழு பரிந்துரையினை நிறைவேற்றும் ஆணையை 1990-ல் வி.பி.சிங் அறிவித்த பின்னர் தான், பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களின் முகங்கள் மக்களிடையே தெரிவதற்கு ஒரு துவக்கம் ஏற்பட்டது. அதுவரை உயர் ஜாதியினர் மட்டுமே முதல்வராக முடியும் என்பதை முறிய டித்து, குறிப்பாக வட நாட்டில், முதல்வர்களாக அமர முடிந்தது.

நாட்டின் 50 விழுக்காட்டிற்குமேல் மக்கள் தொகையில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அரசியல் அமைப்புப்படியான ஒரு அறிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமர் பதவியை இழக்கும் ஓர் அவலம் ஏற்பட்டது. ஆட்சியைக் கலைத்தது பிஜேபி என்பதை சுவரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இன் றைக்கு சமூக நீதித்தலைவர்கள் என்று கூறிக் கொள்ளும் தலைவர்கள், விபிசிங் அறிவிப்பால் அறிமுகமானவர்களில் எத்தனைப் பேர் அவர் பக்கம் நின்றனர்?

விபிசிங் அவர்களை சமூக நீதிக் காவலர் என தமிழ்நாடு முழுவதும், அறிமுகப்படுத்தியவர் தமி ழர் தலைவர் ஆசிரியர். வி.பி.சிங் என்ற ஆளு மையை மக்களிடையே நல்ல வண்ணம் தமிழகத் தில் எடுத்துக் கூறியதில் திராவிடர் கழகத்திற்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும்,  அரசியல் கட்சி என்கிற முறையில் திமுகவிற்கும், தலைவர் கலைஞருக்கும் பெரும்பங்கு உண்டு.

பிள்ளைகளுக்கு வி.பி.சிங் என்று பெயர் சூட்டச் சொன்னார் திராவிடர் கழகத் தலைவர். வி.பி.சிங் படத்தை அச்சிட்டுக் கொடுத்து வீட் டுக்கு வீடு வைக்கச் சொன்னதும் திராவிடர் கழகமே.

ஆகஸ்டு 7-ஆம் தேதி ஆகிய இந்நாளில், பிற்படுத்தப்பட்டோர் உரிமைக்காக பிரதமர் பதவியைத் துறந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களை நினைவு கூருவோம். இட ஒதுக்கீட் டினை ஒழித்துக்கட்ட குழி தோண்டும் சக்திகளை தடுத்திட பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர் விழிப்புடன் இருப்போம். மண்டல் குழு பரிந்துரையினை முழு வதும் நிறைவேற்றிட ஒன்றிணைந்து போராடு வோம்.

- குடந்தை கருணா

- விடுதலை நாளேடு 7. 8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக