பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

வங்காளத்தில் விதவை மறுமணம் - ஒரு செய்தித் தொகுப்பு


- மு.வி.சோமசுந்தரம்
குழந்தை மணம், விதவை மறுமணம் பற்றிய கருத்தைத் தாங்கி, 1937இல் வி. சாந்தாராமால் வங்காளத்தில்  வெளிவந்த திரைப்படத்தின் சுவரொட்டி
கோரிக்கை அற்று கிடக்குதண்ணே -அந்த வேரில் பழுத்த பலா
சமுதாய காயத்தில் சீழ்பிடித்த ஒரு பகுதியை வேதனையுடனும் ஏக்கத் துடனும் பாவேந்தர் பாரதிதாசன் சுட்டிக்காட்டும் வரிகள் இவை.
விதவை -வாழ்க்கை விபத்து
திருமண வாழ்க்கையில் ஏற்படும் கணவன் இழப்பு ஒரு விபத்தாக அமைந்து விடுகிறது. இளமை வயதில்  இந்த விபத்து நேரிடுவது கொடுமைச் சூழ்நிலையில் விதவை சிக்கிக் கொள் கிறாள். மத வேள்வித் தீயில் தீய்ந்து போகிறாள். சாஸ்திர சம்பிரதாய சாட்டை அடியை தாங்குகிறாள். இயற்கை அளிக்கும் இளமை உணர்வுகள் நீறு பூத்த சாம்பலாக இருக்கும்.
பெரியார் அழைத்தார்
இந்த விதவைக் கொடுமை வாழ்க்கை நிலை, ஒரு காலத்தில் பளிங்கு கல்லில் செதுக்கிய அபூர்வ மான எழுத்துக்களாக தோற்றம் அளித்தன. அந்த எழுத்துக்கள் இன்று ஒளி மங்கி வருவது கண்கூடு. இந்த மாற்றம் இந்தியாவின் பல பகுதிகளில் தட்டுத் தடுமாறி முன்னேற்றப் பாதையில் செல்வதாக இருந்தாலும், தமிழ் நாட்டில், விதவைக் கோல அவலத்தைத் தந்தை பெரியார் தன் தடி கொண்டும்  தன் மின்னல் பிரச்சாரத் தாலும் களைய முற்பட்டதன் காரண மாக, தமிழ்ச் சமுதாயத்தில் மறு மலர்ச்சி சிந்தனையும், சீர்திருத்தப் பார்வையும் வீறு நடைபோடத் தொடங்கியது. கூற வேண்டுமென்றால், பெரியார் குடும்பத்தில் அவர் செய்து காட்டிய விதவைத் திருமணத்தைக் கூறலாம். அடுத்து, 1929, பிப்ரவரி 17,18 ஆகிய தேதிகளில் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாகாண மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அழைப்பில்: தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ வேசி கள் என்றோ நினைத்துக் கொண்டி ருப்பவர்களும் அவசியம் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று பெரியார் செயல்பட்ட காலம் தொடர்ந்து, தமிழ் மண் பண்படுத் தப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவனாக இருந்த காலத் தில், சகுனத் தடை என்று சுட்டிக் காட்டப்பட்ட மொட்டை பார்பாத்தி களை இன்று பார்க்க முடிவதில்லையே - திராவிடர் கழகம் சென்னையிலும், திருச்சியிலும் வெற்றிக் கொடி நாட்டிய மன்றல் நிகழ்ச்சிகள் விதவைகள் வாழ்வுக்கு புது வாயில் அமைத்துக் கொடுக்கப்பட்டதைக் காண முடிந்தது. சிலப்பதிகாரத்தில் கூறப்படும், கணவரை இழந்தோருக்குக் காட்டுவது இல் என்ற கருத்து செல்லாக் காசாகப் போகவில்லையா?
டைம்ஸ் ஆஃப் இந்தியா
தேக்க நிலை நீங்கி முன்னேற்றப் பாதையில் செல்லும் ஒரு சமூக மாற்றத்தை மனதில் கொண்டு The Times of India ஆங்கில இதழின் 175 ஆண்டுகள் நிறைவு விழா நினைவாக, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக விதவைத் திருமணம் பெண் கல்வி பற்றி நிலவிய கருத்தைப் பற்றியும், நிகழ்வுகளைப் பற்றியும் குறிப்பாக வங்காளத்து நிகழ்வுகள் பற்றியும் 3.5.2013 இதழில் துணுக்குச் செய்திகளை வழங்கி உள்ளது. பயனுள்ள செய்திகள், அதன் தொகுப்பு கீழே தரப்படுகிறது. இதழுக்கு நன்றி.
1846ஆம் ஆண்டு: விதவை மறு மணம் பற்றிய கருத்து பரிமாற்றம் மக்களிடையே எழலாயிற்று. விதவை மறுமணத்திற்கான சட்டம் தேவை என்ற எண்ணம் எழுந்தது. சனாதன மதப் பற்றாளர்களும் சீர்திருத்தக்காரர் களும், பத்திரிகை மூலம் கருத்துகளைக் கூறி வந்தனர். முதல் முயற்சியாக, தர்மசபா என்ற அமைப்பு, விதவை மறுமணம் தேவை என்பதை வரவேற் கும் கூட்டத்தைக் கூட்டியது. இந்த சபா, சதி என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடை செய்யும் முயற்சிக்கு எதிராக செயல்பட அமைத்த மதவாத அமைப்பு தற்போது அதன் அணுகு முறையில் மாற்றம் ஏற்பட்டு, விதவை மறுமண தீர்மானம் வைக்க முன் வந்ததை பத்திரிகை பாராட்டியது. துணிச்சலையும் வரவேற்றது. படித்த தேசியவாதிகள், போலித்தனமான சடங்குகளிலிருந்து விடுபட வேண்டு மென்று எதிர்பார்த்தது. பத்திரிகை, விதவைகள் ஏற்கும் கொடுமைகளை விளக்கியது. 10 வயது விதவைகள் அனாதையாக விடப்பட்டு, விபச்சாரத் தில் தள்ளப்பட்டனர். தனவான்கள், மகாராஜாக்கள் வலையில் சிக்கி சீரழிந்தனர்.
பத்திரிகை, இன்னும் எத்தனை காலத்துக்கு லார்ட் ரிப்பன் அரசு, விதவை நிலையை ஆதரித்துக் கொண் டிருப்பது? என்ற கேள்வியை எழுப்பியது.
1856, ஜூலையில் விதவைகளுக்கு வாழ்வளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம்  அய்ரோப்பியர்களின், மனிதநேயம், நீதி உணர்வுக்கும்  மதவாதிகளின் தப்பெண்ணத்திற்கும் ஏற்பட்ட சமரச ஏற்பாடாக அமைந்தது, சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து 1856, டிசம்பரில் இரண்டு விதவை மறு மணங்கள் நடந்தன. இது தொடர்ந்தால் கணவன்மார்கள் மற்றவர்களை ஊக்குவிக்க முன் வருவார்கள்.
விதவைகளுக்காக முதல் முதல் 1896இல் பூனேவில் பள்ளி துவக்கிய தண்டு கேசவ கார்வே
1848ஆம் ஆண்டு:
1848ஆம் ஆண்டு சீக்கிய சிறுமி களுக்கு கல்விப் பயனை அளிக்கும் வகையில், ஆங்கிலேய அரசின் ஆட்சிப் பணி அதிகாரி ஜூபெத்தூன் (Jewbethune) அரசுப் பள்ளிகளின் பொறுப்பாளராக கல்கத்தா வந்தார். 1849 பெண்களுக்கான கல்வி ஏற் பாட்டைத் துவங்கினார். வங்காள மொழி அடிப்படை மொழியாகவும், ஆங்கிலம், இலக்கியம் கலந்த துணைப்பாடமாகவும் இருந்தன. பெற்றோர்கள் அனுமதி இருந்தால்தான் ஆங்கில மொழி கற்பிக்கப்படும்.
பள்ளி திறப்பு விழாவில் பெத்தூன் ஆற்றிய உரை: என் அன்பு நண்பர் களே! தந்தையார்களாகிய (தாய்மார்கள் அரங்கத்தில் இல்லை) உங்களுக்கு இன்றைய தினம் ஒரு குதூகலமான நாள்! தந்தையார் என்ற நிலையில்  இயற்கையாகவே பாசம், நேசமும் உங்களுக்கு உரியவரிடத்து முன்னேற்றத் திற்காக ஏற்படுத்தப்பட்ட இந்த கல்வி நிறுவனம், உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தாமலிருக்காது. தந்தைமார் களாகிய உங்கள் மகிழ்ச்சியை உணர்கிறேன். என் கையில் உள்ள அரசு ஆவணங்கள், இந்த நாட்டுடன் தொடர்புடையன. இதன் மூலம், வங்காளத்தின் மறுபாதி மக்களாகிய பெண்கள் கல்விக்கு விரிவாக்கப்படும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற முடிவுக்கு வந்துள்ளேன்
1848இல் துவக்கப்பட்ட பெத்தூன் பெண்கள் பள்ளி, 1879இல் விரிவடைந்து இந்தியாவின் முதல் பெண்களுக்கான கல்லூரியாக உருவெடுத்தது. பெத்தூன் பள்ளி மாணவி காதம்பனி போஸ், கல்கத்தா பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார்.
ஆங்கிலேயர் சிந்தனையாலும், கருணையாலும், வங்காளத்தில் பெண்கள் கல்விக்கான பள்ளியும் கல்லூரியும் வந்தன. வங்காளிகள் தேவையை உணர்ந்ததாகத் தெரிய வில்லை. ஆனால், தனி மனிதர் ஒருவர் சிந்தனையில் ஆரியத்தின் ஆதிக்கத்தில் நசிந்து கிடந்த திராவிட இனத்தின் பெண் கல்வித் தேவையைக் கருத்தில் கொண்டு, தன் சொத்தையும், ஊர் மக்கள் அன்பளிப்பையும் இணைத்து, அடிமட்டத்திலிருந்து மழலையர் பள்ளியிலிருந்து, பல்கலைக் கழக கல்வி வரை பெண்கள் கல்வி மேலோங்க, மேன்மை அடைய கல்வி நிறுவனங் களை வழங்க அடிகோலியவர் யார்? அவர்தான் பெரியார்.)
ஜனவரி 24, 1855 (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி).
இந்து விதவைகளின் மறுமணங் களை நடத்துவதற்கான வழிமுறை களைக் கண்டறிவதற்கும் அவற்றை விரைவில் நடைமுறைபடுத்துவதற்கும், கல்கத்தாவில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் நகரத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அரசு சமஸ்கிருதக் கல்லூரியின் முதல்வர் பண்டிட் ஈஸ்வர வித்யாசாகர், இந்து விதவைகளின் மறுமணத் தேவையை விளக்க வங்காள மொழியில் ஒரு கட்டுரை எழுதுவதில் ஈடுபட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.
செய்தித்தாளின் வல்லூறுப் பார்வை செய்தியாளர்கள் சேகரித்த சமூகச் சூழ்நிலையை விளக்கும் செய்தித் துணுக்குகள்:
செய்தியாளர்கள் சேகரித்த சமூகச் சூழ்நிலையை விளக்கும் செய்தித் துணுக்குகள்:
1) ஜூன் 27, 1855: கூலின் பார்ப்பனர் ஒருவர் தன் விதவை மகளுக்கு ஒரு மணமகனை பெற முடிந்தது. குவியலாகக் கடிதங்கள் (பத்திரிகைக்கு) எழுதுவதைவிட இந்த ஒரு செயல் விதவை மறுமணத்தை ஊக்குவிக்க உதவிடும் பழக்க வழக்கத் தமையை உடைக்க மன வலிமைப் பெற்றவர் சிலர் உள்ளனர்.
2. டிசம்பர் 8, 1855: இந்து விதவை மறுமண எதிர்ப்புக் கூட்டம் அந்த கூட்டத்திற்கு 5000-க்குக் குறையாத பார்ப்பனர்கள் கூடினர். ஒதுக்கப்பட்ட ஜாதி மக்களின் தூண்டுதலால், அந்நிய ஆட்சி அரசு இந்துமதக் கோட் டையைத் தாக்கும் நிலைக்குத் தங்கள் தலைவிதி அமைந்ததை எண்ணி அவர்கள் அனைவரும் புலம்பினர்.
3. மதிக்கத்தக்க பண்டிட் எஸ்.சி. நைரூட்டீன், விதவை ஒருவரைத் திருமணம் செய்யும் விருப்பத்தை அறிவித்தார். அவரின் சிறந்த அறிவிப்பைக் கைவிடும்படி அவரின் தாய் எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த பெண்ணை மணந்தால், தன்னை இழக்க வேண்டும் என்று தாய் மிரட்டினார். இதற்கிடையில் பண்டிட் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டார். பாதிக்கப்பட்ட அந்த விதவைப் பெண்ணுக்காக உலகின் செல்வந்தர் ஒருவர் பரிந்து பேச முன் வந்தார் தற்போது பிரச் சினை, கல்கத்தா உச்சநீதிமன்றத்தில் பண்டிட் வழக்காடும் நிலைக்கு வந்து விட்டது.
விதவைகளுக்கான தனிப் பள்ளிக்கூடம்
மகரிஷி தங்கு கேசவ் கார்வே 1858இல் பிறந்தவர். தன்னுடைய 14ஆவது வயதில் 8 வயது ராதா பாயை மணந்தார். ராதாபாய் ஒரு ஆண் குழந்தையை விட்டு விட்டு 1891-இல் இறந்துவிட்டார். கார்வே, 1893இல் 23 வயதுடைய  ஒரு விதவையை மணந்தார் இந்து விதவைகளின் வேதனை தோய்ந்த வாழ்க்கையை உணர்ந்து அவர்களின் நல் வாழ்க்கையைப் பேண வேண்டிய எண்ணத்தில் அவர்களின் மறுவாழ்வுக்குப் பாடுபட முனைந்தார். கார்வே, பூனேஃபர்கூசன் கல்லூரியில் கணித ஆசிரியர். அவர் 1896இல் விதவைகளுக்கான பள்ளியையும், பெண்கள் தங்கும் விடுதியையும் ஆரம்பித்தார். அவர் எடுத்த முயற்சி இன்று எஸ்.என்.டி.டி. எ என்ற பல்கலைக் கழகமாக உருவாக வகை செய்தது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கருத்து வழங்குதல்
விதவை மறுமணத்துக்கான சட்டம் இயற்ற வேண்டி, சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களுக்கு ஆதரவு கொடுப்பதையும், அவர்கள் சட்டம் இயற்ற முயற்சிப்பதையும் இதழ் விரும்புகிறது. முறையாக தலையிட ஒரு ராம்மோகன் ராய் இல்லையா? ஆங்கில அரசையும் நிர்வாகத்தையும் குறை கூறுவதையும், தாக்குவதையும் வங்காளிகள் குறைத்துக் கொள்வது நல்லது. மாநிலத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது நல்லது. ஆங்கிலக் கல்வியின் பயனை முதலில் அனுபவித்த வங்காளம், மற்ற மாநிலங்களைவிட பின் தங்கி இருப்பது வியப்பை அளிக்கிறது. வங்காள மக்கள், ஆண்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே பெண்கள் பிறந்தவர்கள் என்று கருதுகின்றனர்.  பெத்தியூன் பள்ளியின்  வளர்ச்சி, பெண்கள் கடை தட்டுமுட்டு  பொருள்கள் அல்ல, அவர்கள் சிந்திக்கும் திறனைப் பெற்றவர்கள் என்பதை வங்காள மக்கள் உணரச் செய்துள்ளது. (இந்த நல்ல பெரும் பணியினைத்தான், பெரியார் நூற்றாண்டு நினைவு கல்வி வளாகம், திருச்சியிலும், வல்லத்தில் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும் செய்து வருகின்றன. இதை தமிழ்நாட்டு பார்ப்பன ஊடகங்கள் கண்டு கொள்ளாது இருப்பதின் நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
-விடுதலை ஞாம.,6.7.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக