பக்கங்கள்

ஞாயிறு, 8 நவம்பர், 2015

ஜாதி ஒழிப்பு: சுபாஷ் சந்திரபோஸ்


ஜாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் நான் அதி தீவிரமான நம்பிக்கையுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரச்சாரமும் செய்து வருகிறேன்.
சமத்துவம், நியாயம் என்ற கொள்கை களையே அடிப்படையாக கொண்டு உண் டாக்கப்படும் புதிய சமூகமே சுதந்தர இந்தியாவுக்கு அறிகுறியாகும். சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கின்றார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். நான் அத்தகைய மனப்பான்மையை உடையவன் அல்லேன்.
நாம் எல்லோரும் ஒன்று என்பதை ஒப்புக் கொள்வோமானால் மனிதனுக்கு மனிதன் எவ்வித வேற்றுமையும் இருத்தல் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டு இந்த ஜாதி வேற்றுமை உண்டாக்கப்பட்டதோ அது சுதந்தர இந்தியாவுக்கு ஏற்றதல்ல. சண்டை செய்வதற்கு ஒரு வகுப்பார் மட்டும்தான் தகுதியும், பொறுப்பும் உள்ளவர்களென்று ஒதுக்கி வைப்பது இக்காலத்தில் ஒப்புக் கொள்ளக் கூடியதென்று,
அதுபோலவே ஒரு வகுப்பார் தான் கல்வி கற்கும் சாதனங்களுக்குத் தகுதியுடைவர்களென்று ஒதுக்கி வைப்பதும் பொருத்தமற்றதாகும். வியாபாரம் செய்ய வேறொரு ஜாதியார் மட்டுந்தான் தகுதியுடைவர்களென்று கட்டுப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளத் தகாததாகும்.
ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும், கல்வி கற்கவும், சண்டை செய்யப் பழகவும், சுதந்தரமாகச் சம்பாதிக்கவும் வேண்டிய வசதிகள் இருக்க வேண்டுமென்று நவீன இந்தியா கருதுகிறது. ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்றவை  ஜாதி வேற்றுமையை ஒழிப்பதில் மதிக்கத்தகுந்த சேவை செய்து வந்திருக்கின்றன. ஆனாலும் நாம் செய்ய வேண் டியது என்னவென்றால் இந்து சமூகத்தில் உள்ள வைதீக வகுப் பாரை இந்த நவீனக் கொள்கைக்கு மாற்ற வேண்டியதேயாகும்.
பகுத்தறிவு, 1935
-விடுதலை,10.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக