மு.தருமராசன்
உலக வரலாற்றில் மன்னர்களை மதவாதிகள் தங்கள் கைப்பாவைகளாக வைத்திருந்ததை வரலாற்று நிகழ்வுகள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டு கின்றன. ஆனால், மாமன்னர் அசோ கரோ தம் மரபு வழியான பவுத்த மார்க் கத்தையும் அதை உலகமெல்லாம் நிலைப்படுத்த பணி செய்ததையும் அப்பணிகளைக் கல்வெட்டில் செதுக்கி வைத்ததையும் நாம் அறிந்து ஒரு புரட்சிகர மன்னராகவே காண்கிறோம்.
அசோகர் மக்களுக்குத் தொண்டாற் றித் தொண்டாற்றிப் பரவியவர். அப்படிப் பரவியதன் அடையாளமா கவே மாமனிதர் என்னும் புகழுக்கு உரிய வரானார். கடவுள், மதம், ஜாதி என்று சமுகம் மலினப்படாமல் மானுடத்தின் சுயம் காத்தவர். இந்தச் சுயம் காத்தலை வாழ்நாள் முழுவதும் கம்பீரப்படுத்தியவர்.
பவுத்த மார்க்க கூர்மைக்கும் மனித சீர்மைக்கும் பாலம் அமைத்த அசோ கரை வரலாற்றில் மறைக்க இயலாததால் பார்ப்பனர்கள் அவரைப் பற்றி புனை கதைகள் பலவற்றை உருவாக்கினார்கள்.
அசோகர் வரலாற்றில் புரளி:
அசோகர் ஓர் ஆரியப் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிந்துசாரனுக்கும் பிறந்த மகன் எனவும் இந்த ஆரியப் பெண் பிந்துசாரனின் அரசவையில் நடமாடும் நர்த்தமுகி எனவும் இட்டுக்கட்டிக் கதைகள் புனைந்தனர். ஆனால், அசோகர் தனது கல்வெட்டில், தான் தாய்வழியினர் சாக்கிய வம்சத்தவர் எனவும் தன்னுடைய தாய் மூரா, தாய் மாமன் உறவுமுறையில் தன் தந்தை பிந்துசாரனை மணந்து கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அசோகர் தாய்வழியே ஒரு பார்ப்பன சமுகத்தினராக இருந்தால், தன் மகளையும் மகனையும் பவுத்த அறம் மலர உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்கத் துணிந்திருக்க மாட்டார்.
உழைக்காமல் உணவை யாசகமாகப் பெற்று வாழ்ந்த ஆரியப் பார்ப்பனர் களுக்கான மானியத்தை நிரந்தரமாக நிறுத்தியிருக்க மாட்டார்.. அசோகருக்கு அரிசி அளவேனும் பார்ப்பனப் பின்புலம் இருந்திருக்குமானால், தன்னை நிச்சயம் கடவுளின் சார்பாளர் என்றே அறிவித்திருப்பார்.
அம்பேத்கர் வரலாற்றிலும்:
அசோகர் வரலாற்றில் புரளியைப் புகுத்திய பார்ப்பனக் கும்பலே அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலும் புரட்டலைப் புகுத்தியது. திருவள்ளுவர், தொல்காப் பியர் இன்னும் பலருக்கும் பூணூல் மாட்டிப் பார்த்துப் பின் வாங்கியதும் இதே கும்பல் தானே.
அம்பேத்கர் என்னும் சொல் ஒரு பார்ப்பனருக்கு ஆனது எனவும் அந்தப் பார்ப்பனர் அம்பேத்கரின் ஆசிரியர் எனவும் அம்பேத்கர் வரலாற்றைப் பிழைபடப் பதிவு செய்த தனஞ்சய் கீர், பத்தாவது மட்டுமே படித்துவிட்டு உலகத்தின் மாபெரும் படிப்பாளிகளில் ஒருவரான அம்பேத்கரின் வரலாற்றை எழுதியுள்ளார்.
யார் இந்த தனஞ்சய் கீர்?
தனஞ்சய் கீர் 1942 இல் அகிம்சையின் தூதுவர் மகாத்மா என்னும் நூலை வெளியிட்டார். இந்நூல் மக்களின் புறக்கணிப்புக்கு உள்ளானது. பின்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை நிர்ணயக்குழு உறுப்பினர் வீர் சவார்க் கரின் வரலாற்றை மிகுந்த பொருள் செலவில் வெளியிட்டார். இந்நூலுக்கு வல்லபாய் பட்டேல் உதவி செய்தார். இந்த நூலும் தனஞ்சய் கீரை மீளாக் கடன் தொல்லையில் மாட்டி விட்டது.
1962 ஆம் ஆண்டு கீர், அம்பேத்கர்-வீர் சவார்க்கர் ஓர் ஒப்பீடு என்னும் நூலை வெளியிட்டார். இந்நூலில் அம் பேத்கர் ஒரு பார்ப்பனராகப் பிறந்திருந் தால், என்னவெல்லாம் செய்திருப்பார்? என்னும் கற்பனைகளை அரங்கேற்றி இருந்தார். வீர் சவார்க்கர் ஒரு தாழ்த் தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தால்,
அம்பேத்கரையும் விஞ்சி ஒடுக்கப்பட்ட மக்களிடையே தன் அருமையைப் பதித்திருப்பார் என கீர் உளறியிருந்தார். இந்த நூலின் தலைப்பில் அம்பேத்கர் பெயர் இடம் பெற்று இருந்ததாலேயே அம்பேத்கர் என்னும் பெயருக்காகவே ஆயிரக்கணக்கான படிகள் விற்றுத் தீர்ந்தன.
தனது கடன் தொல்லையில் இருந்து ஓரளவு விடுபட்ட கீர், பின்னர் பகவான்தாஸ் என்னும் வழக்குரைஞரின் நூல் தொகுப்புகளான அம்பேத்கர் இவ்வாறு பேசினார் என்னும் பன்னி ரண்டு (12) தொகுதிகளை தன்னுடைய வீர் சவார்க்கர் நூலுடன் இணைத்து 1976 ஆம் ஆண்டு அம்பேத்கரின் வாழ்வும் அதன் இலக்கும் என்னும் தலைப்பிட்டு வெளியிட்டார்.
இந்த நூலின் மூலமாகக் கீர், பல இலட்சங் களை அள்ளிக் குவித்தார். அக்காலத்தில் சாக்கியர்களான மகர்களின் இராச்சிய மாகிய மகாராட்டிர எல்லைக்குள் ளேயே சரிவர அறிமுகம் அடையாத தனஞ்சய் கீர், இந்த நூலின் வாயிலாக இந்தியா முழுமையும் புகழ் அடைந்தார்.
ஆனந்த் விட்டல் என்னும் மாற்றுப் பெயர் கொண்ட தனஞ்சய் கீர், மகாராட்டிர மாநிலம் இரத்தினகிரியில் பிறந்தவர். பத்மபூஷன் உள்ளிட்ட விருது வரை பெற்று, 71ஆவது வயதில் 1984 ஆம் ஆண்டு இறந்து போனார்.
வரலாற்றுப் புரட்டு: தனஞ்சய் கீரின் தகுதி மட்டும் குற்றத்திற்கு உட்பட்டது அல்ல. அவர் எழுதிய நூலின் செய்தி களும் கருத்துகளும் புள்ளி விவரங் களும் ஒரு மாபெரும் வரலாற்றுப் புரட்டாகும்.
அம்பேத்கர் என்னும் சொல் பார்ப்பனச் சொல். அம்பேத் என்னும் பார்ப்பனர் பீமாராவ் ராம்ஜியின் பள்ளி ஆசிரியர்.
பீமாராவ் ராம்ஜியின் சிறுவயதில் அம்பேத்கர் என்னும் பார்ப்பனர் அன்புடனும் கருணையுடனும் பழகி, தன்னுடைய பெயரை பீமாராவ் ராம்ஜிக்கு பி.ஆர்.அம்பேத்கர் என்னும் பெயர் சூட்டினார்.
இத்தகைய செய்திகளை நோக்கும் எவருக்கும் இப்படித் தோன்றுவது இயல்பு ஆகும். அம்பேத்கர் என்பது ஒரு பார்ப்பனப் பெயராக இருந்திருந் தால், அப்பெயரில் வேறு ஆள் யாருமே இல்லையே. அதன் காரணம் என்ன? ஒரே பெயர் பல பார்ப்பனர்களுக்கு இருக்கும்போது, அம்பேத்கர் என்னும் பெயர் மட்டும் எந்தவொரு பார்ப்பன ருக்கும் இல்லையே. அது ஏன்? அம் பேத்கர் தனக்கு உதவியதாக பலவேறு நபர்களைக் குறிப்பிடுகின்றார்.
பேரா சிரியர் சீலே, பரோடா மன்னர் கெய்க் வாட், கோலாப்பூர் மன்னர் சாகு மகா ராஜா போன்றவர்களைக் குறிப்பிட்டுத் தன் நூல்களில் பதிவு செய்துள்ளார். ஆனால், தன் ஆசிரியர் அம்பேத்கர் என்று எந்தவொரு குறிப்பிலும் சுட்டிக் காட்டாதது ஏன்? பல்வேறு அரசியல் தலைவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் மக்கள் இடையே அடை யாளப்படுத்தும்போது,
இந்தப் பார்ப் பன ஆசிரியர் அம்பேத்கரின் வாரிசுகள், சொந்தங்கள் என்று இதுவரை யாரும் அடையாளம் காணப்படாதது ஏன்? அம்பேத்கரின் அரசியல் போட்டியா ளர்களான காந்தி, நேரு, இராசாசி, சரோஜினி போன்றவர்கள் அம்பேத் கரின் சிறுவயது ஆசிரியர் பார்ப்பனர் என்றோ, அம்பேத்கருக்குப் பார்ப்பனர் கள் உதவி செய்திருக்கிறார்கள் என்றோ ஏன் எவருமே குறிப்பிடவில்லை?
இடைச்செருகலில் அண்ணல் பெயர்: உண்மையில் அம்பேத்கர் என்னும் பார்ப்பனர் பீமாராவ் ராம்ஜியின் சிறுவயதில் ஆசிரியராக இருந்ததில்லை. பீமாராவ் ராம்ஜி அம்பாவடே என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அம்பாவடேர் எனவும் பின்னர் மராத்திய இலக்கணச் சொல் அமைப்பின்படி அம்பேத்கர் என அவருடைய சிறுவயது ஆசிரியர் தாதா கேலுஸ்கர் என்பவரால் மாற்றப்பட்டது.
தாதா கேலுஸ்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மூன்றாம் வகுப்புக்கு ஆசிரியரான கேலுஸ்கர் சிறந்த குத்துச்சண்டை வீரர். அம்பேத் கரின் அப்பா இராம்ஜி சக்பாலுக்கு மிக நெருக்கமான குடும்ப நண்பர். அம்பேத்கரின் திருமணத்தின் போது, கேலுஸ்கர் போதி மாதவஎன்னும் புத்தரின் வாழ்க்கை வரலாற்று நூலைப் பரிசாகத் தந்தவர்.
அம்பேத் இந்த ஆசிரியரின் மீது நிறைந்த அன்பும் ஆழ்ந்த மதிப்பும் கொண்டிருந்தார். அம்பேத்கர், தான் லண்டனில் பயின்றபோது, தாதா கேலுஸ்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில், உங்கள் ஒரு சொல் மூன்று குளிர்காலங்களைக் கூட வெப் படுத்திவிடும் என்று குறிப்பிட்டுள்ளார். இவற்றை எல்லாம் தனஞ்சய் கீர் திட்டமிட்டு மறைத்துள்ளார்.
அம்பேத்கரின் சின்னஞ்சிறு வயதிற் குரிய வாழ்வைக்குறித்து வெகுமக்களி டையே இட்டுக்கட்டி, தான் ஒரு பார்ப்பனர் தன் குலம் புகழுக்கும் பரந்த அறிவுக்கும் உரியது என்னும் மாயத் தோற்றத்தை இடைச்செருகலாகச் சேர்க்கவே தன்னுடைய நூலைக் கீர் பயன்படுத்தி உள்ளார்.
பொய்யைச் சொல். பொய்யைத் தொடர்ந்து சொல். பொய்யை கலை யழகோடு சொல்.காலப்போக்கில் நாட்டுமக்கள் அந்தப் பொய்யை உண்மையாக அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்னும் நிலைப்பாட் டிலேயே ஆரியம் தொடர்ந்து உறைந்து கிடக்கிறது.
பிழையற்ற வரலாறு புத்தர் வழித்தோன்றல்கள், சாக்கியகுலச் செம்மல்கள் சாம்ராட் அசோகர் வழியாக அண்ணல் அம்பேத்கர் வரை பார்ப்பனர்களின் போலிமைத்தனமான வரலாறும் ஆரியப் பொய்யின் புரட் டலின் ஊடுருவலும் இனிவரும் காலத் திலும் தொடரும் என்பதற்குச் சான் றாகும். இதிலிருந்து மிக விழிப்பாய் இருத்தலுக்கான தேவையும் சமுகத்தின் பிழையற்ற வரலாற்றை உண்மை வடி வில் உலகிற்கு வெளிக் கொணர்வது என்பதும் விளங்குகிறது அல்லவா.
-விடுதலை ஞா.ம.,24.10.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக