பக்கங்கள்

சனி, 7 நவம்பர், 2015

என்னங்கய்யா உங்க தீண்டாமை!

Image result for சாதிகள்


சாதியென்பது பிரம்மாவினால் உண்டுபண்ணப்பட்டது என்று கூறுவது எத்துணை நேர்மையுடையது? அச்சாதி வேற்றுமையை அக்கடவுள் வேறு நாடுகள் ஒன்றிலும் உண்டாக்காமல் பாழும் இந்திய நாட்டில் மட்டுந்தானா உற்பத்தி செய்யவேண்டும்? அவன் முகத்கில் தோன்றிய பார்ப்பார்கள் உயர்ந்த ஜாதியாரென்றும் அதன் கீழ்ப்பாகிய புஜத்தில் தோன்றிய ஜாதியார்களாகிய சத்திரியர் அவர்களைவிட சிறிது தாழ்ந்த குலத்தாரென்றும், தொடையில் தோன்றிய வைசியர் சத்திரியரை விட சிறிது தாழ்ந்த ஜாதியார் என்று கூறல் சரியா? ஒரே மரத்தில்  உச்சியிலும் இடையிலுள்ள கிளைகளிலும்  அடியிலும் காய்கள் காய்கின்றன. உச்சியில் காய்க்கின்ற காய்கள் உயர்ந்த ருசியையும் அடியில் காய்ந்த பழங்கள் எல்லாவற்றையும் விடத் தாழ்ந்த ருசியை யுமுடைய தாயிருக்கின்றதா அவ்வாறில்லாமல் எல்லாம் ஒரேவிதமான ருசியாயிருக்கிறதே அஃதே போல் எல்லாச் சாதியாரும் சமமானவர்களாகத்தானேயிருக்க வேண்டும்.
கடவுளே ஜாதி, ஜாதியாக மனிதர்களை உற்பத்திசெய்திருந்தால் ஆடு, மாடு, குதிரை, யானை, முதலியவைகள் வெவ்வேறு உருவ முடையதாய் உற்பத்திசெய்திருப்பது போல் பார்ப்பானை ஒருவித வடிவமாகவும், சத்திரியனை வேறு உருவமாகவும், வைசியனை வேறு வடிவமாகவும், சூத்திரனை ஒரு வடிவமாகவும் உண்டு பண்ணியிருப்பானன்றோ? ஆடும் மாடும் புணர்ந்தால் கர்ப்பம் உண்டாவதில்லை. அஃதே போல் வெவ்வேறு ஜாதியான பார்ப்பனப் பெண்ணும், சூத்திர ஆணும் கூடினால் கர்ப்பமுண்டாகாம லிருக்க வேண்டுமே? அவ்வாறின்மையால் மனிதர்களனை வரும் ஒரே ஜாதியென்பது விளங்கவில்லையா? முகத்தில் பிராமணன் தோன்றினான் என்று தானே சாத்திரங்கள் கூறுகின்றன. பிராமணத்தி எவ்வாறு வந்தாள் என்று கேள்வி கேட்க நேரிடும் என்பதை அவர்கள் அறியாமலே இச்சாத்திரங்களை எழுத ஆரம்பித்து விட்டனர். மேலும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பிரயாணமாய் போகும் ஆண்கள் பெரும்பாலும் பெண்களை கூட்டிக் கொண்டு போவது வழக்கமில்லை. அஃதே போல் அக்காலத்திலே நம் நாட்டிற்கு வந்த ஆரியர்கள் தனியாக பெண்களின்றி வந்ததால் பிராமணத்தியும் முகத்தில் தோன்றினாள் என்று எழுத வழியில்லாமல் போய்விட்டது. நாம் பழைய சாத்திரங்களை ஆராய்ந்தால் ஆரியர்கள் பெண்களன்றி இந்நாட்டிற்கு வந்து இந்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டார்களென்பது நன்கு புலனாகும். எடுத்துக்காட்டாக வியாசமுனி மீன் வாணிச்சசியினின்றும், கவுசிகமுனி சூத்திரச்சியினின்றும், விஸ்வாமித்திரர் சண்டாளச்சியினின்றும், வசிஷ்டர் வேசியினின்றும், சக்கிலிச்சி வயிற்றில் சத்தியமுனியும், புலைச்சி வயிற்றில் பராசர முனியும் பிறந்தததாக காணக் கிடக்கின்றது. இவர்களில் எவரும் பிராமணத்தியிடம் பிறக்கவில்லை யென்றாலும் பார்ப்பார்களாக ஏன் - அவர்களினும் மேன்மை வாய்ந்த குருவாகவும் விளங்கியிருக்கின்றனர். இந்நால்வகைச் சாதியாரும் ஒரே காலத்திலுற்பவித்திருக்க ஒரு ஜாதியார் குறையவும், யார் கூடியிருக்கவும் காரணமில்லை.  ஜாதிப் பிரிவினையிலிருந்தே தீண்டாமையும் தோன்றி நம் நாட்டை பாழடையப்பண்ணிற்று; பண்ணுகின்றது. இதையறிதே திரு.காந்தியவர்களும் ஹிந்துக்கள் வேண்டு மென்றே தீண்டாமையைக் தமது மதத்துள் ஒரு பாகமாகக் கொள்ளும் வரை ஹிந்துக்கள் தங்களுடன் பிறந்த சகோதரர்களைத் தீண்டுவது பாவம் என்று நினைக்கு மட்டும்-சுய ராஜ்யப் பேறுபெறல் அரிதே' என்று கூறியுள்ளார். எனவே ஜாதியி னடியாகப் பிறந்த தீண்டாமை நீங்கினால் ஒழிய நம் நாட்டிற்கு விடுதலையுண்டாக்கப் போவதில்லை. அத்தீண்டாமையை வற்புறுத்திக் கூறப்பட்ட சாத்திரங்களின் தன்மையையும், அத்தீண்டாமையை மக்கள் எவ்வித முறையிலனுஷ்டிக் கின்றனர் என்பதை நாட்டின் விடுதலைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் ஆராய்ந்து பார்த்தல் அவசியம். தீன்டாமையின் பொது விதியானது எப்படியிருக்கிறதெனில் நம்மால் எது முடியுமோ அதற்கெல்லாம் நீண்டாமையை அனுஷ்டிக்கம் படியும், முடியாததற்கெல்லாம் அனுஷ்டிக்க வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக ஒரு குளத்தில் பறையர், வேளாளர், நாடார், பிராமணர், வாணியர், குறவர், மறவர் முதலிய எல்லாச் சாதியாரும் குளிக்கின்றனர். தண்ணீர் எடுக்கின்றனர். அதில் தீண்டாமை போய் ஒன்றுஞ் செய்யவில்லை. அதே தண்ணீர் குடத்திற்குள் வந்தவுடன் எவர் தொட்டாலும் தீண்டாமை வந்து பற்றிக்கொள்கிறது. ஒரு கோனார் வீட்டில் தண்ணிர் அருந்துதல் கூடாது. அத்தண்ணீரில் தீண்டாமை எளிதில் வந்து பற்றிக்கொள்ளுமாம். அதே தண்ணீரை அக்கோனார் மோரில் ஊற்றிக்கொடுத்தால் அம்மோரில் தீண்டாமை போயணு காதாம்.
ஸ்பென்சர் சோடா பாட்டலில் ஆதித்திராவிட சோதரன் தண்ணூர் அடைத்துக் கொடுத்தாலும் சும்மா சாப்பிடலாம்.  தீண்டாமை அப் பாட்டிலுக்குள் நுழைய முடியாதாம். விலை மாதர் வீட்டிற்கு ஆதிதிராவிடர், பார்ப்பார், ஈழுவர், நாடார், வேளாளர் முதலிய பல ஜாதியார்களும் போய் அவளுடன் சையோகம் செய் கிறார்கள். அவள் தீண்டாமையென்பதைக் கவனிப்ப தேயில்லை. அவளை யாரும் கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதில்லை. அவள் வீட்டிற்குச் செல்லும் எந்தப் பார்ப்பானும்  அவள் கொடுக்கும் தண்ணீரையோ, காப்பியையோ, உணவையோ சாப்பிட மறுப்பதில்லை. அப்படிச் சாப்பிடுகிறவனை தீண்டாமை பற்றிக்கொள்வதுமில்லை, ஜவுளிக்கடை யிலிருக்கும் எந்த துணியையும் எந்தச் சாதியாரும் தொடலாம் தீண்டாமை அதைப் பற்றுவதில்லை. பழைய துணிகளிலே மாத்திரம் தீண்டாமை யணுகுமாம் ஆனால் வண்ணானைத் தொட்டால் தீட்டாம். அவன் வெளுத்துக் கொடுக்கும் பழைய வேட்டியில் தீண்டாமையில்லையாம். அதில் கூட தீண்டாமை வந்து பிடித்திருக்குமென்று சிலகாலத்திற்கு முன்னால் பிராமணர்கள் அவ்வேஷ்டியை தண்ணிரில் நனைத்துக்காயப் போட்டு உடுத்தி வந்தார்கள். பின்னர் கோட்டு சர்ட்டுகளை கஞ்சி முறுக்கி தேய்த்து வண்ணார் கொடுப்பதை அணிந்து கொள்ளும் நாகரிகம் வந்தவுடனே அந்தத்தீண்டாமையும் போய் விடுகின்றது. பட்டிலோ பழமையானுலும் தீண்டாமை வந்து சேர்வதில்லை. மட்பாத்திரங்களில் தீண்டாமை பலமாகப் பிடித்து கொள்ளுமாம். எத்துணை சுத்தம் பண்ணினாலும் அதிலுள்ள தீண்டாமை போகாதாம். வெள்ளி பித்தளை பாத்திரங்களிலே தீண்டாமை வந்து பிடித்துக்கொண்டால் தண்ணீர்விட்டு சுத்தப்படுத்தினால் தீட்டுப் போய் விடுமாம் தங்கப் பாத்திரங்களிலே எப்பொழுதும் தீட்டுப்போயணுகாதாம் (இதற்கு தண்ணீர் விட்டால் பாலிஷ் போய்விடுமன்றோ? கிராமங்களிலே ஆண்டுதோறும் தை மாதப்பிறப்பிற்கு முன்னால் பழைய பானை சட்டிகளையெல்லாம் வெளியிற் கவிழ்த்து வைத்து விட்டு புதுப்பானைகளில் சோறு சமைப்பார்கள். அப்பழைய பானைகளை நாடார் சோதரிகள் கிரயத்திற்கு வாங்கிக்கொண்டு போய் அதிலே பதனி காய்ச்சுகின்றார்கள்.
அப்பதனீர் கொதித்து பொங்கும் பொழுது ஆமணக்குக் கொட்டையைத் தட்டிப் போட்டு விடுவார்கள். சில சமயங்களில் அந்த ஆமணக்கு முத்தை வாயிற்பொட்டு சுவைத்தே துப்பி விடுகிறார்கள். பதனியின் கொதிப்பு அடங்கி விடுகிறது. அப்படிக்காய்ச்சும் அந்தக்கருப்புக் கட்டிகளில் தீண்டாமை போய் பற்றுவது கிடையாது. ஆனால் அந்த நாடார் வீட்டுக்காப்பியில் தீண்டாமை பற்றிக் கொள்கிறதாம். அரசாங்க வைத்திய சாலையில் மருத்துவர், ஆதிதிராவிடர் முதலியோர்களால் தண்ணீர் கலந்து கொடுக்கப்படும். மருந்துகளில் தீண்டாமையில்லையென்று எல்லா ஜாதியார் களும் மருந்து தின்றார்கள். அவர்கள் வீட்டிலிருந்து கொடுக்கும் சுத்தமான தண்ணீரிலும் தீண்டாமையுண்டாம். ஆதித் திராவிடராயினும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டால் அவர்களை தீண்டாமையணுகாது. அவர்களை எல்லோரும் முதலாளியென்று மரியாதையாகப் பேசுவார்கள். தீண்டத்தகாதவன் கிறிஸ்து மதத்தில் புகுந்து விட்டால் அவனிடம் தீண்டாமை நெருங்காது மலையாளத்தில் சில தீண்டாத்தகாத ஜாதியார்களென்போர் மேல் ஜாதியார்களின் வீட்டிற்குள் வரக்கூடாதாம் வந்தால் தீண்டாமை வீட்டையணுகிக் கொள்ளுமாம் அவசியமாய் அத்தீண்டாதார்கள் வீட்டினுள் வரவேண்டியதிருந்தால் தங்கள் வீட்டில் வாங்கி பத்திரமாய் ஒரு கயிற்றில் கட்டிவைத்திருக்கும் சிலுவை எடுத்துக்கொடுத்து அதையணிந்து கொண்டு தான் வீட்டினுள் வர அனுமதிப் பார்களாம். எனவே சிலுவை மனிதர்களின் தீட்டைப் போக்கும் சக்தியுடையது என நம்பப்படுகிறது. ஆகவே தீண்டாமை யென்பது மனிதர்கள் அறிவிற்கும் தர்க்கத்திற்கும் பொருந்தாத ஒரு கொள்கையென்றும் அது மனிதர்களை விலங்குகளினும் கடையராக்கி விடுகின்றதோடு பார்ப்பார்களின் சுயநலத்திற்காக இத்தீண்டாமையையும் இந்து மதத்தையும் உண்டு பண்ணின என்பதும் அறியக்கிடக்கின்றது.
(குடிஅரசு -1930)

அவாளின் ஆதிக்கம் பற்றி...!
சீக்கியர்களின் புனித நூல் கிரந்தம். இது ஜாதிமுறையைச் சாடுகிறது. பார்ப்பனர்களின்  ஆதிக்கத்தை எதிர்க்கிறது. இந்துக்களின் பலவகைப்பட்ட வாழ்க்கை முறைகளையும் எதிர்க்கிறது. இதில் 3384 தோத்திரப் பாடல்கள் உள்ளன. இது ரிக் வேதத்தை விட  மூன்று மடங்கு பெரியது. சீக்கிய மதம் குருநானக்கால் (1494 - 1538) துவக்கப்பட்டது.
- சி.சி.ஜோசப் எழுதிய இந்திய மதங்கள் என்ற கட்டுரையிலிருந்து.
நூல்: ஜான்கென்னத் கால்பிரெய்த் இனட்ரடியூகஸ் இண்டியா
-விடுதலை,6.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக