பக்கங்கள்

புதன், 11 நவம்பர், 2015

முதலாவது சட்டத் திருத்தம்: பிரதமர் நேருவின் உரை


வகுப்புரிமை சொத்துரிமை ஆகியவற்றின் தொடர்பாக, 1950ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தின் 15,  19, 29(2), 31- விதிகளில் திருத்தங்கள் செய்யப் பெற்றன. பண்டித ஜவகர்லால் நேருவின் உரையின் வகுப்புரிமை பற்றிய  கருத்துக்களின் தேவையான பகுதிகளை மட்டும் காண்போம்:
ஜவகர்லால் நேருவின் பேச்சுகள் 1949--_53 என்ற வெளியீட்டின், இரண் டாம் பதிப்பின் (1957) பக்கங்கள் 486 முதல் 533 முடிய அரசியல் சட்டத் திருத்தத்தைப் பற்றிய உரை அடங்கியிருக்கிறது.
மே 16, 1951இல் நேரு  ஆற்றிய உரையிலிருந்து
15ஆம் விதியில் சில சொற்களைச் சேர்க்க விரும்புகிறோம். விளக்கமாக இருக்கும் பொருட்டு சிறிது சேர்க்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிக்கோளை நோக்கிய இயக்கத்தை அரசுக் கொள்கையின் நெறிப்பாட்டுக் கோட்பாடுகள் (Directive Principles of State Policy) குறிக்கின்றன.  அடிப்படை உரிமைகள், நிலைப்பட்ட (இயங்காது) ஒன்றைக் குறிக்கின்றன. ஏற்கெனவே உள்ள உரிமைகளைக் காக்க வேண்டு மென்பது அவற்றின் குறிக்கோள்.  ஒரு குறிக்கோளை நோக்கிய இயக் கத்திற்குச் சில மாற்றங்கள் தேவைப் படுகின்றன; இயக்கத்தின் சாரமே அதுதான். இயங்கும் போக்கில், இருக் கின்ற சில உறவுகள் மாறுகின்றன; அல்லது பாதிக்கப்படுகின்றன. இந்தப் பிரச்சினையில் வகுப்புவாதக் கூறு (Communal element) மறைமுகமாக நுழைக்கப்படுவதாகச் சில உறுப் பினர்கள் கருதலாம்... வகுப்புவாதத் தோடு எவ்வகையிலும் உறவு கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் சட்டத்தில் பின்தங்கிய வகுப்பின ரைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளோம்; அவர்கள் முன்னேற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. பின்  தங்கியவர்களை ஒரு  சமூக மாகக்  (Community) கருதினால், நாம் வகுப்பு வாதத்தை நுழைப்பவர்கள் ஆகிறோம். ஆனால் பின் தங்கிய வகுப்புகளை (Backward Classes) எந்த மதம் அல்லது கூட்டம் என்று பாராமல், அவர்களை நேரடியாக எடுத்துக் கொண்டால், கல்வி, சமுதாயம், பொருளாதாரத் துறைகளில் முன்னேறும் வண்ணம் அவர்களுக்கு உதவுவது நமது கடமையாகிறது. இயல்பாகவே அந்த முன்னேற்றம் மற்றவர்களுக்குத் தடையா இருக் காது...
தனிமனித உரிமையைக் காப்பது என்ற வகையில், தனி மனிதரின் அல்லது கூட்டத்தினரின் இடையில் உள்ள ஏற்றத் தாழ்வையும் காப்பதாக ஆகுமெனில், நெறிப்பாட்டுக் கோட்பாடுகளுக்கு (Directive Principles) முரணாகச் செல்பவர் களாகி விடுவோம். தனி மனித உரிமைக் காப்பு என்ற வேண்டு கோள், இருக்கின்ற ஏற்றத் தாழ்வு களைத் தொடர்வது எனப் பொருள் பட்டால் அது இடர்ப்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் இயங்காதவராக வும், முற்போக்கு அற்றவர்களாகவும், மாற்ற முடியாதவர்களாகவும் நாம் ஆகிவிடுவோம். நம்மில் மிகப் பலர் விரும்பும் சமனியச் சமுதாயத்தை நம்மால் அடைய முடியாது...
மே 18, 1951இல் நேரு ஆற்றிய உரையிலிருந்து....
சமத்துவத்தை படிப்படியாகக் கொண்டு வருவதற்குக்கூட  அரசாங் கத்தால் சட்டமியற்ற இயலாதென் றால், அரசியல் சட்டத்தின் ஆணை யைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் தவறுகிறது எனப் பொருள். அதனால், நாடாளுமன்றத்தில்  நான் இப்பொழுது கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடியவை. அரசியல் சட்டத்தை நான் கடுகளவுகூட மாற்றவில்லை. அதற்கு நான் வலுவூட்டத்தான் செய்கிறேன்...
சென்னை மாநிலத்தில் எழுந்துள்ள சிறிய அளவிலான பிரச்சினையைப் பொறுத்தவரை, இந்தத் திருத்தம் வகுப்புவாதமான திருத்தமாக இருக்க வேண்டுமெனக் கொண்டு வரப் படவில்லை. வகுப்புவாத  அணுகு முறையை, மெலிந்த, பின் தங்கிய மக் களுக்கு உதவும் அணுகுமுறையிலி ருந்து நாம் கட்டாயம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
மே 19, 1951இல் நேரு ஆற்றிய உரையிலிருந்து
15,29(2) விதிகளுக்கான திருத் தத்தின் தேவை சென்னையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் காரணமாக இந் தக் குறிப்பிட்ட வடிவில் எழுந் துள்ளது என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். ஆகையால் அதை மூடி மறைக்க முயலத் தேவையில்லை. சென்னை அரசு, ஓர் அரசாணையைப் பிறப்பித்தது; அதன் நுணுக்கங்களை (Details) நான்  அறியேன்; சென்னை அரசின்  ஆணைப்படி சில வகுப் பினருக்கும் சமூகங்களுக்கும் (Classes and Communities) சில ஒதுக் கீடுகள் (Reservations) செய்யப்பட் டன. அரசியல் சட்டத்தின் உட்பொருளுக்கும் விதிகளுக்கும் (Spirit and letter) முரண் எனக் கூறி அந்த ஆணை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப் பளித்தது. ....ஆகையால் ஏதேனும் ஒரு வகையான தனிவிதி (ஏற்பாடு) கட்டாயம் செய்யப்பட வேண்டும். பின் தங்கிய சமூகங்களுக்கு (Communities) நாம் ஏதேனும் செய்ய வேண்டியிருக்கிறது.
அப்படி நாம் செய்ய முற்படும் பொழுது, சமத்துவத்தைப் பற்றியும், வேற்றுமை பாராட்டாமை பற்றியும் அமைந்த சில அரசியல் சட்ட விதிகள் நமக்கு இடர்ப்பாடாக இருக்கின்றன. ஒரு வகைக் குழப்பத்தில் (சிக்கலில் tangle) இருக்கிறோம். நாம்  சமத்துவத்தைப் பெற இயலாத, ஏனென்றால், அரசியல் சட்டத்தில் கூறப்பட் டுள்ள சில சமத்துவக் கோட் பாடுகள்  இடர் தருகின்றன.
சமனியச் சமுதாயத்தை அடையும் நமது குறிக்கோளுக்காக, நமது சமுதாய வாழ்வில் எழுந்துள்ள எண்ணற்ற (infinite) பிரிவுகளுக்கு (பிளவுகளுக்கு) முடிவு கட்ட விரும்புகிறோம். நான் சாதி முறையைக் குறிப்பிடுகிறேன். நம்மைப் பிரிக்கின்ற வளைந்து கொடுக்காத (சமூகச்) சட்டங்களை  நாம் படிப்படியாகத் தகர்த்து அழித்து வருகிறோம். இருப்பினும் செயற்பாடு மெதுவானதாக இருக்கிறது. நிகழ்காலத்தை நாம் முற்றிலும் புறக்கணிக்க முடியாது. இருக்கின்ற  மெய்ம்மைகளைத் தள்ளிவிட  இயலாது. நாம் காணு கின்ற  மெய்ம்மைகளுக்கும் நமது குறிக்கோளுக்கும் இடையில் ஒரு வழியைக் காண வேண்டும். இருக் கின்ற மெய்மைகளை (நடப்புகளை)  மட்டுமே நாம் பற்றி நின்றால், நாம் தேக்கமானவர்களாகவும், மாறாதவர்களாகவும் ஆகிவிடுவோம். நமது குறிக்கோள்களையும், அரசுக் கொள்கையின்  நெறிப்பாட்டுக் கோட்பாடுகளையும் கைவிட்ட வர்கள் ஆவோம்; அதை நாம் செய்ய முடியாது, கட்டாயம் செய்யக் கூடாது. அதற்கு மாறாக, கோட் பாடுகளைப் பற்றி மட்டும் பேசி, இருக்கின்ற மெய்ம்மைகளைப் புறக்கணித்தால், நம்முடைய பேச்சு அளவை முறையானதாக (தர்க்க ரீதியானதாக), ஒருவகையில் பொரு ளுடையதாக இருக்கலாம்; ஆனால் நாம் சொல்லுவதற்கும் நடைமுறை உலகிற்கும் தொடர்பு இருக்கிறது. நடைமுறை நிலையோடு போரா டுவதாக இருப்பினும் நாம் நடப்பில் உள்ளவற்றைக் கணக்கில் கொண்டு தான் செயல்பட வேண்டும்.
வாழ்க்கை ஒரு வளைவு - அஃது ஒரு நேர்கோடு அல்ல; மாறி வரும் இக்காலத்தில், ஒரு நாட்டின் வாழ்வு மேலும் வளைவாக இருக்கிறது. அளவையும் (தர்க்கமும்) நேர்கோடு களும் வளைவிலிருந்து செல்லும்  தொடுகொடுகள், வாழ்வின் வளை விலிருந்தும், நாட்டின் வளைவி லிருந்தும் தொடுகோடு மிகவும் விலகியிருந்தால் மோதல்களும் புரட்சிகளும் உண்டாகும்... செயலும் அரசியல் சட்டமும் நெகிழ்ச்சியோடு இருப்பின், நாட்டு வளர்ச்சியின் உயிர்ப்புள்ள வளைவிற்கு நெருக்க மாக அவை இருக்கும்...
நாட்டின் வளர்ச்சியைக் கட்டிப் போட இயலாது; சொற்களாலும் சொற்றொடர்களாலும் அப்படிச் செய்ய  இயலும் எனக் கருதினால் அது முற்றிலும் தவறு....
-விடுதலை ஞா.ம.9.2.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக