ஆரியப் பார்ப்பனர்கள் ஆட்சி செய்த மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கும், அனுபவித்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. வீதிகளில் நடக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும். கழுத்தில் ஒரு சட்டியைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். அச்சட்டியில்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக் கொள்ள வேண்டும், தரையில் துப்பக்கூடாது.
அவ்வாறு வீதியில் செல்லக்கூட காலையிலும் மாலையிலும் அனுமதியில்லை. காரணம் அவ்வாறு சென்றால் அவர்கள் நிழல் உயர்ஜாதிக்காரர்கள்மீது பட்டுவிடும் என்பதால். தாழ்த்தப்பட்டவன் நிழல் தன்மீது பட்டாலே, தாம் தீட்டாகி விடுவோம் என்று எண்ணும் அளவிற்கு ஆரியப் பார்ப்பனர்களின் ஜாதி வெறி, ஜாதி ஆதிக்கம் தலைதூக்கி நின்றது.
அன்றிரவு ஜோதிராவ் உறங்காமல் வேதனைப்பட்டார். மனிதர்களுக்குள் இத்தனை இழிவா? இதைப் போக்க என்ன வழி? என்பன போன்ற சிந்தனைகளுடனே அன்றைய இரவு கழிந்தது. தமக்கு அவமானம் நேர்ந்தது என்று அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஒட்டுமொத்த சமூக இழிவு நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? என்பதைப் பற்றியே அவர் அதிகம் கவலை கொண்டார்.
இந்தச் சமூக அவலங்களுக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்றும், ஜாதி முறையும், அடிமைத்தனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சாத்திர அநீதிகளை முற்றாக ஒழித்து, மூட நம்பிக்கைகளை முழுவதும் அகற்றி, பகுத் தறிவும், தன் மதிப்பும் கொண்ட, சமத்துவ, சம உரிமைச் சமுதாயத்தைச் சமைக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்.
ஆரிய சாஸ்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்துதல்
அனைத்து ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களையும் கடுமையாகச் சாடினார். தன் நாட்டில் பிறந்தவனாயினும், தன்னை இழிவுபடுத்துகின்றவனை ஏற்க முடியாது என்றும், தன்னைச் சமமாக மதிக்கும் அந்நியரைக்கூட நான் சகோதரனாக ஏற்பேன் என்றும் ஜோதிராவ் அறிவித்தார். இவை அவரிடம் இருந்த கொள்கைத் தெளிவைச் சரியாகத் தெரிவித்தன.
ஜோதிராவின் புரட்சிச் சிந்தனைகளை வெளியிட எந்தப் பத்திரிகையும் முன்வராதபோது, கோலாப்பூரிலிருந்து வெளிவந்த சுபவர்த்தமானா என்ற கிறித்துவ பத்திரிகை இவரது கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டது.
இந்தியப் பேரரசில் ஆரியப் பார்ப்பனப் போர்வையின் கீழ் அடிமைத்தனம் என்ற தமது நூலில் அவர் பல அறிக்கைகளை எழுதியிருந்தார். இந்நூல் 1873 ஜூனில் வெளியிடப்பட்டது.
விடுதலை பெறாத ஒவ்வொரு மனித னுக்கும் விடுதலை அளிப்பதே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை அவ்வாறு மீட்டளிப்பதே மிகப் பெரிய வெற்றியாகும்! தன்மானத்தை விரும்பும் எவரும் இதைச் செய்யவே விரும்புவர். ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும் அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளே முதன்மையானவை. தங்கள் உயிரைக் கொடுத்தாவது மற்றவர்களுக்கு உரிமையை மீட்டுத் தர உழைப்பவர்களே உண்மையான மக்கள் தொண்டர்கள்... என்றார் ஜோதிராவ் பூலே.
ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களில் ஆரியர் அல்லாதாருக்கு இழைக்கப்பட்டுள்ள இழிவுகளையும், கொடுமைகளையும், அதே நேரத்தில் ஆரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளையும், மேன்மைகளையும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு விளக்கினார்.
சூத்திரன், ஒழுக்கங்கெட்ட பார்ப்பனப் பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவனுக்கு மரண தண்டனை. ஆனால், பார்ப்பான் சூத்திரன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அவனுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
ஆரியர் அல்லாதார் கொலை செய்தால் மரண தண்டனை. ஆனால் ஆரியர் கொலை செய்தால் அவன் தலைமயிரில் ஒன்றைச் சிரைத்தால் போதும்.
என்பன போன்ற ஆரிய சாஸ்திரங்களின் அநீதிகளை, அயோக்கியத்தனங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துப் பிரச்சாரம் செய்தார்.
பெண் கல்வியும், பெண் உரிமையும்
இந்திய அளவில் பெண் கல்விக்கும், பெண் உரிமைக்கும் முறையான இயக்கம் கண்டு கல்விக்கூடங்கள் அமைத்து பெண் கல்வியை ஊக்குவித்தவர் பூலே ஆவார். விதவை மணம், விடுதலை பெற்ற வாழ்வு, ஆணுக்கு நிகரான உரிமைகள் என்று பெண்ணியம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் 150 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இதற்கான முன் முயற்சிகளிலும் இறங்கி வெற்றியும் பெற்றவர் பூலே ஆவார். பெண் கல்வி என்னும்போதும், பெண் உரிமை என்னும்போதும் பூலேவே முன்னோடியாகத் திகழ்கிறார்.
இடஒதுக்கீட்டு ஏற்பாடு
அரசு நிர்வாகங்களில் ஆரியப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தை அகற்றுவதற்கு மற்ற ஜாதிகளிலிருந்து, அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைச் சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை ஜோதிராவ் வற்புறுத்தினார். இன்றைய இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அன்றைக்கே அவர் குரல் கொடுத்தார் என்பதுதான் வியப்பளிக்கும் செய்தியாகும்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில் சேர்வதை இவர் எதிர்க்கவில்லை. அந்தந்த ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பங்கு வேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.
1881-1882ஆம் ஆண்டு வரை மகாராட்டிரத்தில் எந்தவொரு பள்ளியிலும் அல்லது கல்லூரியிலும் ஒரு ஆதிசூத்திர (ஆதிதிராவிட) மாணவன் கூட சேரவில்லையென்ற சமுதாயக் கொடு நிலையே ஜோதிராவின் கடுமையான போராட்டத்திற்குக் காரணமாயிற்று.
ஆரியப் பார்ப்பன ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று இவர் வற்புறுத்தினார். அப்போதுதான் மற்ற சமூகத்தினர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் படிக்க இயலும். காரணம் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சேர அனுமதிக்க மாட் டார்கள் என்று உளவியல் ரீதியில் உரைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் இருக்கும் காலத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயின்று விட வேண்டும் என்றார். காரணம் விடுதலைக்குப்பின் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் நிலவி கல்வி மறுக்கப்படலாம் என்று அஞ்சினார்.
இந்த நாட்டின் உயிரும் உடலும் சூத்திரர் களே. அனைத்துமே அவர்களுடையதே. ஆரியப் பார்ப்பனர்களுக்கு உரியதல்ல. எனவே, சூத்திரர்களுக்குள்ள அனைத்து வகை இடர்ப்பாடுகளையும் களைந்து அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்றார்.
உண்மை நாடுவோர் சங்கம்
தன்னுடைய இத்தனை போராட்டங் களையும், எதிர்ப்புகளையும், முயற்சிகளையும் ஓர் அமைப்பு ரீதியாகச் செயற்படுத்தினால் தான் ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும் என்ற முடிவு செய்த ஜோதிராவ், அத்தகு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த முனைந்தார்.
1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் தன் ஆதரவாளர்கள் அனைவரையும் பூனாவிற்கு அழைத்தார். மகாராட்டிரத்தின் முதன்மைப் பகுதிகளிலிருந்து அறுபது பேர் கூடினர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜோதிராவ் சத்திய சோதக் சமாஜ் (உண்மை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பின் மூலம் தங்களது செயல் திட்டங்களை இனி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்றும் உண்டு. இச்சங்கத்தை உருவாக்குவதில் மூன்று பார்ப்பன நண்பர்கள் (1.வினாயக் பாபுஜி பண்டார்கர், 2 வினாயக் பாபுஜி டெங்கில், 3. சீத்தாராம் சக்காராம் டாடர்) உதவியாக நின்றனர்.
தாய்மொழி வழிபாடு
கடவுளை அவரவர் மொழியில் வேண்டலாம் என்று ஜோதிராவ் கூறினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆரியப் பார்ப்பனர்கள் வேறு மொழியில் வேண்டினால் அது கடவுளைச் சென்றடையாது என்றனர். ஆனால் ஜோதிராவோ, அவரவர் மொழியில் வேண்டுதல் நடத்தினால் அது கடவுளைக் கட்டாயம் சென்று சேரும். கடவுள் மனித அறிவை அறிவார். எந்த மனிதனின் வேண்டுகோளையும் புரிந்து கொள்பவர்தானே கடவுளாக இருக்க முடியும்? இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வேண்டுகின்றவர்களின் வேண்டுகோள் கடவுளை அடைகிற தல்லவா? அப்படியிருக்க தாய்மொழியில் வேண்டல் கடவுளை எப்படி அடையாமல் போகும்? என்றார்.
உண்மை நாடுவோர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டாம் என்று ஆரிய பார்ப்பனர்கள் மக்களை தடுத்தனர். அவ்வாறு சேருவோரைத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தனர். பலரை இடம் மாற்றினர்.
சுயமரியாதைத் திருமணம்
ஜோதிராவின் கடையில் பணியாற்றிய அவரது உறவினருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டது. உண்மை நாடுவோர் சங்கவிதிமுறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தார். வைதீக மந்திரம், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் இல்லா திருமணமாக அதை நடத்த ஏற்பாடு செய்தார். இத்திருமணம் பற்றிய செய்தி பல கிராமங்களுக்கும் பரவியது. ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரத்துடன் எதிர்த்தனர். இது சமூக அவமதிப்பாகும். இதனால் கேடு உண்டாகும். கடவுளுக்கு அடுக்காது என்று பொதுமக்களைத் தூண்டிவிட்டதோடு, பெண்ணின் தந்தையையும் அச்சுறுத்தி ஓடத்தூண்டினர். ஆனால் மணப்பெண்ணின் தாயார், சாவித்திரி பூலேயின் தோழி என்பதால் உறுதியுடன் இருந்தார். 1873 டிசம்பர் 5ஆம் நாள் அத்திருமணம் நடந்தேறியது. மணமக்கள் ஜோதிராவின் உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். வந்திருந்தோர் மணமக்களை வாழ்த்தினர். ஆரியப் பார்ப்பனப் புரோகிதர் ஒருவர்கூட இல்லாமல் இத்திருமணம் நடந்தேறியது வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெற்றது.
ஆரியப் பார்ப்பனப் புரோகிதர் இன்றி ஒரு இந்துத் திருமணம் என்ற தலைப்பில் பத்திரிகைகள் இத்திருமணச் செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தி எல்லா மாவட்டங்களுக்கும் பரவ, ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரமும், அச்சமும் அடைந்தனர். தங்கள் ஆதிக்கம் வெகு சீக்கிரத்தில் வீழ்ந்து விடுமோ என்று கலங்கினர். ஆனால் ஆரியர் அல்லாதாருக்கு இத்திருமணம் ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.
உண்மை நாடுவோர் சங்கத்தின் கிளைகள் பல இடங்களிலும் அமைக்கப் பட்டன. பம்பாயில் தொடங்கப்பட்ட சங்கத்தின் தொடக்க விழாவிற்கு ஜோதிராவே சென்றார். செல்வாக்கும், உயர்படிப்பும் உள்ள உயர்ந்த மனிதர்கள் பலர் இச்சங்கத்தில் உறுப்பினர் ஆயினர்.
தொழிற்சங்கவாதியாகத் துவளாப் பணி
ஜோதிராவ் சமூகப் பணிக்காக அடிக்கடி பம்பாய் சென்று வந்ததால், ஆலைத் தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தார்.
உணவு நேரம் போக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், குறைந்த கூலி கொடுத்து அதிகம் வேலை வாங்கப்படுவதையும் அறிந்தார். தொழிலாளிக்குப் போதிய உணவு வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி இல்லாத நிலை பற்றியும் கேள்விப்பட்டார்.
ஆனால் இந்த வேதனைகளை வெளிப்படுத்த உரிய அமைப்பு இல்லாமைதான் இதற்கெல்லாம் காரணம் என்று கருதினர். சமூகப் பிரச்சினையில் பல்வேறு இடர்ப்பாடுகளைத் தாங்கி, வெற்றி கொண்ட ஜோதிராவிற்கு, இது மிகப்பெரிய பணியாகத் தோன்றவில்லை.
1857-இல் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு முழுக்க முழுக்க ஆலை அதிபர்களை உறுப்பினராகக் கொண்டது. எனவே, இக்குழு தொழிலாளர்களின் இன்னல் தீர்க்கப் பயன்படவில்லை.
இந்நிலையில் ஜோதிராவால் உருவாக்கப்பட்ட போராளியான லோகந்தி என்பவர் தினபந்து ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஆலைத் தொழிலாளர்களின் அவலங்களை வெளியிட்டார். அதே போல, விவசாயிகளின் நலன் காக்க ஜோதிராவின் தோழர் கிருஷ்ணராவ் பேல்கர் பாடுபட்டார்.
குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியம், குழந்தைத் தொழிலாளர்களை வதைக்கக்கூடாது என்ற கோரிக்கை, பெண் தொழிலாளர்களுக்குரிய பாதுகாப்பு போன்ற பல்வேறு வேண்டுகோள்கள் தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.
நாதியற்றுக் கிடந்தத் தொழிலாளர்களுக்கு ஜோதிராவ் மற்றும் அவர்களது தோழர்கள் மூலம், தங்கள் குறைகளைக் கூறி நிவாரணம் பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
மது எதிர்ப்பு
மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்தபோது, மது மக்களின் எதிரி. அது அவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று சொல்லி அம்முடிவை எதிர்த்தார். மதுக்கடைகள் திறக்கப்பட்டதனாலேதான் மக்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்கள். அதற்கு முன் மக்களை இப்பழக்கம் அதிகம் பாதிக்கவில்லை என்பதை நடைமுறை உண்மையோடு விளக்கினார்.
நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிச் சொல்லவும் ஜோதிராவ் தயங்கவில்லை.
கல்விச் சீர்திருத்த கருத்துக்கள்
தொடக்கப் பள்ளியையும், உயர்நிலைப் பள்ளியையும் அடித்தட்டு மக்கள் பயனடையும் வகையில் அமைக்க வேண்டும். அடித்தட்டு மக்களைப் பற்றி கவலைப்படாது, அறிவார்ந்த மக்களின் கல்விக்கு வழிவகுக்கும் கல்வித் திட்டம் மாற்றப்படவேண்டும். மேல்தட்டு மக்களின் கல்விக்கே அதிகம் முனைப்பு காட்டும் அரசின் கொள்கை மாற்றப்பட வேண்டும். உயர்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ந்து கல்வி பெறும் போக்குதான், கல்வியாலும், வேலை வாய்ப்பாலும் முழுக்க முழுக்க அவர்களே ஆதிக்கம் செலுத்துவதற்கும், அடித்தட்டு மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் காரணம் என்றார்.
விவசாயிகளும், ஏழைகளும் தங்கள் தொடக்கக் கல்வியைத் தாங்களே ஏற்பாடு செய்து பெறும் தகுதியற்றவர்கள். தங்களின் சூழலால் தங்களின் குழந்தைகளைத் தங்களுடனே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். எனவே, அக்குழந்தைகள் பயில போதிய கல்வி உதவி வழங்கப்பட வேண்டும். 12ஆம் வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூனா நகரில் ஒரேயொரு பள்ளி மட்டும்தான் உள்ளது. அதில் 30 சிறுவர்கள்தான் படிக்க முடிகிறது. எனவே பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக அளவில் தனியாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
வேலைக்குச் சென்று ஊதிய பெறும் நோக்குடையதாக இப்போதைய கல்வி முறையிருப்பதால், அது ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின் விழிப்பிற்கும், விடிவிற்கும் பயன்படவில்லை. எனவே அதற்கேற்ப கல்வி முறை மாற்றப்பட வேண்டும்.
கணக்கு, வரலாறு, அடிப்படையறிவு, நல்லொழுக்கக் கல்வி, சுகாதாரம் போன்றவை கல்வித்திட்டத்தில் இடம் பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்குப் பாடச்சுமை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறைக் கல்வியை குறைக்கக்கூடாது.
ஆய்வாளர்கள் அடிக்கடிச் சென்று கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, அவ்வப்போது குறைகளைச் சரி செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்டோர் உள்ளத்தில் உள்ளதைத் துணிவாகச் சொல்ல அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
உள்ளூர் வரித்தொகையில் பாதியைக் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கல்வி மானியம் அளிப்பதன் மூலம் நகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தை நகராட்சிகளிடம் ஒப்படைக்கக்கூடாது. அரசாங்கம் கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசு வேலைகளையே எதிர்நோக்காமல் சுயதொழில் தொடங்கும் அளவிற்கு கல்வி திட்டம் அமைய வேண்டும். பெண் கல்வி பெரிதும் தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.
கல்வி வளர்ச்சியில்லாத ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கென்று சில சிறப்பான கல்வி உதவித் தொகையை அரசு தர வேண்டும். போட்டியின் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு உதவுவது மேலோட்டமாக பார்க்கும் போது நியாயமாகப்படலாம். ஆனால், அது அடித்தட்டு மக்களுக்கு பயன்படாமல் போகும்.
விவசாயிகளின் விடியலுக்கு வித்திடல்
விவசாயிகளின் சாட்டை என்ற நூலை 1883ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதி, கையெழுத்துப் படியாக இருக்கும்போதே பலரிடமும் படித்துக் காட்டினார். இந்நூலை முழுமையாக எழுதி முடித்த பின்பு 1883 ஏப்ரல் மாதம் பம்பாயில் ஒரு கட்டத்தில் இந்நூலைப் படித்துக் காட்டினார். இதன் படிகளை மன்னருக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைத்தார்.
ஆரியச் சடங்குகளால் சூத்திர விவசாயிகள் சுரண்டப்படுவது பற்றியும், பள்ளிப் படிப்பிற்குக் கூடப் பிள்ளைகளுக்குச் செலவழிக்க முடியாமல் விவசாயி படும்பாடு, நிலச்சிதைவு, வேளாண் கடன் கிடைக்காமல், அதிக வட்டிக்குக் கடன் பெற்று கவலையுறும் அவலம், வரிச்சுமை மற்றும் இடைத்தரகர் சுரண்டல் ஆகிய இன்னல்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
விவசாயிகளின் மீதான நெறுக்குதலைத் தவிர்க்க கண்காணிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் பணத்தை யாரும் மோசடி செய்யாமல் தடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
அளவுகளில் மோசடி, எடையில் மோசடி, விலையில் மோசடி என்று விவசாயிகள் சுரண்டப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், வேளாண் சம்பந்தப்பட்ட விவரக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், பருவமழையை நம்பியே வாழும் விவசாயிகளுக்கு, நீர்ப்பாசன வசதி செய்துதர வேண்டும். அணைகள், கால்வாய்கள் மூலம் மழைநீரைச் சேர்த்துப் பகிர்ந்தளிக்க வேண்டும்... என்று அரிய பல கருத்துக்களை விவசாயிகள் மேம்பாட்டிற்குள், விவசாய மேம்பாட்டிற்கும் வழங்கினார்.
இன்றையச் சூழலுக்குக்கூட இவரது சிந்தனைகள், பரிந்துரைகள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவையாக இருக்கின்றன என்பதே இவரது அறிவுநுட்பத்தையும், ஆய்வு நுட்பத்தையும் காட்டுகின்றன. மேலும் வேளாண்மையை நம்பி வாழும் நலிந்த மக்களின் மேம்பாட்டில் அவர் கொண்டிருந்த அக்கறையும், அனுதாபமும், ஆர்வமும் இவை மூலம் வெளிப்படுகின்றன.
இன்று மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த நாள் (1827)
தரவு : Mahatma Jyotirao Phooley Dhananjay Keer)
- மஞ்சை வசந்தன்

-விடுதலை,11,12.4.16