இந்துக்களின் கோவில் பிரவேசம்
ஈரோடு தேவஸ்தான கமிட்டியாரின் 30.3.1929 தேதி தீர்மானப்படி ஈரோடு டவுனிலுள்ள சிவன் கோவிலுக்குள் சில இந்துக்கள் (அதாவது வள்ளுவப் பண்டாரம் என்பவர்கள்) 4.4.1929 தேதியில் சுத்தமாகவும் மதச்சின்னங்களுடனும் கற்பூரம், தேங்காய் பழத்துடனும்,
கடவுளை வணங்கசென்றபோது குருக்கள் மூலவிக்கிரக அறைக்கதவைப் பூட்டிவிட்டுப் போய் விட்டாராம், வணங்கப் போனவர்கள் வெகுநேரம் காத்திருந்தும் வராததால் வெளியில் உள்ள சாமிகளை பூஜைசெய்து கும்பிட்டு விட்டுப் போய்விட்டார்கள். பிறகு குருக்கள்கள் சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கோவில்களுடைய வெளிக்கதவுகளையும் பூட்டிவிட்டார்கள்.
உள்ளூர்ப் பொதுஜனங்கள் கமிட்டியார் தீர் மானத்திற்கு ஆதரவாய் இருக்கின்றார்கள் கோவில் நிருவாகிகள் நியாயமாய் நடந்து கொள்ளாவிட்டால் வணங்கப்பிரியமுள்ள வர்கள் பலாத்காரமில்லாதாக சத்தியாக்கிரகம் செய்வதைத்தவிர வேறுவழியில்லை என்று கருதி இருக்கின்றார்கள என்பதாகத் தெரிய வருகின்றது.
ஆதலால் கோவில் நிருவாகிக சத்தியாக்கிரகம் செய்து தீரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குக் கொண்டுவந்து விடாமல் தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
(குடிஅரசு, 7.4.1929)
-விடுதலை,23.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக