பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்க மகாநாடு

இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்க மகாநாடு(17.2.1929 குடிஅரசிலிருந்து)
விஜயம் செய்த பிரமுகர்கள் சென்னை மாகாண இரண்டாவது தீண்டாமை விலக்கு மாநாடு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் கல்கத்தாவைச் சேர்ந்த சீமதி ஜோதிர் மாயி கங்குலி அவர்கள் தலைமையில் கூடியது. மகாநாட்டுத் திரளான பொது ஜனங்களும் அநேக மாதர்களும் வந்திருந் தனர். மகாநாட்டுக்கு வந்திருந்தவர்களுள் முக்கியமாக முதல் மந்திரி டாக்டர் சுப்பராயன் அவரது மனைவியார் , சா.எ.பி. பாத்ரோ, திவான் பகதூர்கள், ...ராங்குசம் நாயுடு, டி.வரதராஜூலு நாயுடு, ராசபகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே, .. சாகிப்கள் பி.ரங்க நாதம் செட்டி, எம்.மதுரைபிள்ளை, சிறீமான்கள் டி.நல்லசிவம் பிள்ளை, ஏ.ராமசாமி முதலியார்,  ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வி.சக்கரை செட்டியார், கெத்தா ரங்கய்யா நாயுடு, ஆர்.சீனிவாசன், ஜே.எஸ்.கண்ணப்பர், எஸ்.ராமனாதன், ஸி.ஜெயராம் நாயுடு, பசுதேவ், சுந்தரராவ் நாயுடு, பி.எஸ்.குருசாமி நாயுடு, ஜனார்த்தனம் நாயுடு, சிறீதாதன் நாயுடு, தண்டபாணி பிள்ளை, எர்னஸ்ட் கர்கக், ரௌண்ட்பிட்மென், ராமச்சந்திரம் பிள்ளை, டி.வி.நாதன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மதிஜீனராஜ் தாஸா, சிறீமதி நாயகம் முதலியவர்களும் மற்றும் பலரும் வந்திருந்த கூட்டம் மண்டபம் நிறையவும் வெளியிலும் நிறைந்திருந்தது.
மகாநாட்டு நடவடிக்கை
எ.ராமசாமி முதலியார் பெருத்த கோஷத்தினிடையே மகாநாட்டுக் கொடியேற்று விழாவை ஆற்றினார்.
பின்னர் வரவேற்புக் கழகத் தலைவர் ராவ்பகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே கேட்டுக்கொண்டதற்கிணங்கி மாநாட்டை தொடங்கி வைத்து சர்.எ.பி.பாத்ரோ அவர்கள் மிக ஊக்கமான சொற்பொழிவு நிகழ்த்தினார். ராவ்பகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே அவர்கள் பிறகு பெருத்த கரகோஷத்தினிடையே மாநாட்டுப் பிரதிநிதிகளையும் மற்றை யோரையும் வரவேற்று அரியதோருரை செய்தார்.
தலைவர் தேர்தல்
பின்னர் வரவேற்புக் கழகத் தலைவர் சொல்லுக்கிணங்கி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் அம்மாநாட்டுக்கு கல்கத் தாவைச் சேர்ந்த சிறீமதி ஜோதிர்மாயி கங்குலி  அம்மையாரைத் தலைமை வகிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகப் பிரேபித்தார். பின்னர் சிறீமதி நாயகம் அம்மையார்,  அப்பிரே ரணையை ஆமோதித்துப் பேசியபின், சிறீ மான்கள் பி.ராமனாதன், ரெவரெண்ட்பிட்மன், கிருஷ்ணமாச் சாரியார், ராமாஞ்சலு நாயுடு, கெத்தா ரெங்கய்யா நாயுடு, இரட்டைமலை சீனிவாசன், ஜே.எஸ்.கண்ணப்பர், எஸ்.ராமநாதன் முதலி யவர்கள் ஆதரித்தார்கள். பின்னும் சிறீமான்கள் எஸ்.எம்.ஏ. சமத்சாயபுவும், எஸ்.ராமநாதனும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியபின் தீர்மானம் பெருத்த கரகோஷத்தினிடையே ஏகமனதாக நிறைவேறியது. மாநாட்டுத் தலைவி சிறீமதி ஜோதிர்மாயி கங்குலி மகாநாட்டுத் தலைமைப்பதவி வகித்தார். இந்நிலையில் மாநாட் டுத் தலைவிக்கும் வரவேற்புக்கழகத் தலைவர் பான்ஸ் லேயுக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரவர் களுக்கும் நீண்ட கரகோஷத்தினி டையே அழகிய சரிகை மாலைகள் போடப்பட்டன.  
-விடுதலை,13.2.16

(17.2.1929 குடிஅரசிலிருந்து)
தீண்டாமை விலக்கு தீர்மானம்
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் “மனித வாழ்கையின் நன்மை களை உத்தேசித்தும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் தேச முன்னேற்றத்தைப் பொருத்தும் நம்நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க பொது ஜனங்களிடை இடைவிடாத பிரச்சாரம் செய்து அவர்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டும்“ என்னும் தீர்மானத்தைப் பிரேரேபித்துப் பேச சிறீமான் கெத்தா ரெங்கய்யா நாயுடு தெலுங்கில் தீர்மானத்தை ஆமோதித்துப் பேசினார். பிறகு ஏகமனதாய் நிறைவேறியது.
சமத்துவமான நகரவாசி உரிமை
அடுத்தப்படியாக சரேந்திரநாத் ஆரியா அவர்கள் தீண்டாமை என்னும் காரணத்தால் யாருக்கும் நகரவாசிகளின் பொதுவான உரிமைகள் மறுக்கப்படக் கூடாதென்று இம் மாநாடு அபிப்பிராயப்படுவதுடன் இந்நாட்டு மக்களுள் சகல வகுப்பாரும்  ரஸ்தாக்கள், ஆபிஸ்கள், குளங்கள், கிணறுகள், ஆஸ்பத்திரிகள், சத்திரங்கள் முதலான பொது ஸ்தாபனங்களில் தாராளமாய் விடப்பட்டு உபயோகித்துக் கொள்ளும் உரிமையளிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க சிறீமான் எர்னஸ்ட்ராக் அவர்கள் அத்தீர்மானத்தின் கடைசியில் “செல்வச் சிக்கன விஷயங்களில் வயது, ஆண், பெண், என்ற வித்தியாசமின்றி சமமான வேலைக்குச் சமமான கூலி கொடுக்கப்பட வேண்டும்“ என்பதையும் சேர்க்க வேண்டுமென்ற திருத்தப் பிரேரணையன்று கொண்டுவந்து திருத்தம் சிறீமான் ஆரியா அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு முடிவில் திருத்தப்பட்டபடியே ஏகமனதாக நிறைவேறியது.
வந்தனத் தீர்மானம்
பிறகு “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கலா சாலை முதலியவற்றிலும் பரீட்சைகளிலும் சேர்த்துக் கொள் ளப்படுவதன் சம்பந்தமாக பல சாதககங்கள் செய்ப்பட்டிருப் பதன் சம்பந்தமாகச் சர்க்காருக்கு மாநாடு தன் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானம் சிறீமான் டி.ராமச்சந்திரன் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் ராமாஞ்சலு நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமன தாக நிறைவேற்றப்பட்டது.
ஆலயப்பிரவேச உரிமை
பின்னர் சிறீமான் என்.தண்டபாணிப்பிள்ளை “தீண்டப் படாதார் என்பவர்களும் இந்துக்களாதலால் எந்த இந்து ஆலயத்திற்குள்ளும் சென்று கடவுளை வழிபடுவதில் தடுக்கப் படக் கூடாதென்றும் இம்மாநாடு வற்புறுத்துவதுடன், இந்து ஆலயங்களனைத்திலும் தீண்டாதாருக்கு ஆலயப் பிரவேச உரிமையளிக்கும் விஷயத்தில் உடனே தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று மதஸ்தாபனங்களின் நிர்வாகி களை இம்மாநாடு வற்புறுத்துகின்றது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க ராஜகோபால், வி.ஜி.வாசுதேவ பிள்ளை ஆகிய வர்கள் தீர்மானத்தை ஆதரிக்க ஏகமனதாக நிறைவேறியது.
ஆஷோபிக்கத் தக்க விளம்பரங்கள்
பின்னர் சிறீமான் கோலப்பன் அவர்களால் “காப்பி ஹோட்டல்கள், க்ஷவரக் கடைகள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய வற்றில் தீண்டாதாருக்கு இடமில்லையென்று கேவலப் படுத்தும் விளம்பரங்கள் போடப்படுவதைக் குறித்து இம்மாநாடு வருந்துவதுடன், அத்தகைய விடங்களிலெல்லாம் அவர்களை தாராளமாக விடப்படவேண்டுமென்று
வற்புறுத்துவதுடன், தீண்டாத வகுப்பினரின் நண்பர்களென்று சொல்லிக் கொள்பவர்கள் அத்தகைய ஆ«க்ஷபிக்கத்தக்க விளம்பரங்களுள்ள விடங்களுக்கு செல்லாமல் நின்று விடவேண்டு மென்றும் கேட்டுக்கொள்ளுகின்றது” என்ற தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு குப்புசாமி பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
கிறிஸ்தவ ஆலயத்திலும் தீண்டாமை
அடுத்தபடியாக ரெவ்ரெண்ட் பிட்மன் அவர்கள் “சில கிறிஸ்தவ (சர்ச்சுகள்) ஆலயங்களிலும் தீண்டாமை என்னும் வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருவதற்காகவும், தீண்டப்படா தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களை ஆலயங்களில் மற்றவர் களுடன் சமமாக அனுமதிக்காது தனிப்படுத்தி  வைப்பதுடன் ஆலயச் சடங்குகள்  சிலவற்றில் பேதாபேதங்காட்டி வருவதற் காகவும் இம்மாநாடு வருந்துவதுடன், இத்தகைய வித்தியாசங் களையும் தடைகளையும் ஒழித்துவிடும்படி ஆலய நிர்வாகி களைக் கேட்டுக் கொள்ளுகின்றது” என்னும் தீர்மானத்தை பிரேரேபிக்க சிறீமான் எஸ்.எம்.ஏ.சமத் தீர்மானத்தை ஆமோ தித்துப் பேச தீர்மானம் ஆகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மோட்டார் பஸ் தடைகள்
பின்னர் “சில பஸ் சொந்தகாரர்கள் தீண்டாதாரை மோட்டார்காரில் ஏற்றிக்கொள்ள மறுத்து வண்டிச்சட்ட விதிக்கு விரோதமாய் நடந்து கொள்வதைக் குறித்து இம்மாநாடு அதிகாரிகளுக்கு கவனமூட்டுவதுடன், அவ்வாறு மீறி நடப்பவர்களைக் கடுமையாகத் தண்டித்து அத் தொல்லையை ஒழிக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்னும் தீர்மானம் முடிவில் சிறீமான் நடேசமுதலியாரால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் பாலகுரு சிவத்தால் ஆமோதித்துப் பேசப்பட்டபின் ஏகமனதாக நிறைவேறியது.
-விடுதலை,13.2.16


தந்தை பெரியார் பொன்மொழி
சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமுகங்களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக்கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான் மையை உண்டாக்கி யிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக