பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

ஆழ்வார் திருநகரியும் அய்யங்கார்களின் அக்கிரமமும்


(1929 - குடிஅரசிலிருந்து)
ஆழ்வார் திரு நகரியென்பது திருநெல்வேலிக்கு சுமார் இருபது மைலிலிருக்கும் ஊர். இவ்விடத்தில் ஆழ்வார் அவ தரித்ததினால் இதற்கு ஆழ்வார் திருநகரியெனும் பெயருண் டாயிற்று எனப்படுகிறது. ஆழ்வார் பிறப்பில் பார்ப்பனால் லாதார்.
அப்படிப்பிறந்த இவரை ஆராதிக்கவும் இவர் விக்கிரத்துக்கு அபிஷேகம் பண்ணிக்கழுவவும் ஆடை அணி முதலியவற்றைக் கொண்டு அலங்கரிக்கவும் அவ்விக்கிரகத் திற்கு அமுது செய்வித்த அன்னப்பட்சனம் முதலியவை களையும் அபிஷேகமுறையால் கழுவின நீரையும் புசிக்கவும் உள்ள பாத்யதைகளை இந்த அய்யங்கார்களாகிய பார்ப் பனர்களே உரிமை செய்து கொண்டதோடு நில்லாமல் ஆழ்வார் திரு வீதிகளில் உத்சவம் கொண்டாடுகிற சமயத்தில் ஆழ்வார் விக்ரகத்தை நான்கு வீதிகளிலும் ப்ரதசட்ணமாக தூக்கிக்கொண்டு வருகிறசமயத்தில் கூட பார்ப்பனல்லாதாரை ஆழ்வார் பக்கத்தில் சென்று தரிசிக்கவிடாமல் ஜீயர்களென் போரும் ஆச்சாரிகள் என்போரும் சுற்றிக்கொள்கிறார்கள்.
இத்தோடு தங்கள் சாதியாரைத் தவிர வேளாளர்களோ, நாயக்கர்களோ, கோனார்களோ, நாயக்கர்களோ தரிசிக்கவோ கும்பிடவோ ஆழ்வார் விக்ரகத்திற்கு பக்கத்தில் சென்றால் அவர்களை உற்றுப்பார்க்கிறதுமல்லாமல் உனக்குக்கண் ணில்லயா?  தூரவிருந்தால் தெரியாதா? பெரியவாள் சின்ன வாள் மேல் சாதி கூட தெரிகிறதில்லையா? என்று மரியாதிக்குப் பங்கமுண்டாகும். சொற்களால் நிந்திக்கிறார்கள்.
சுயமரியாதையுள்ளவர்கள் யாராவது இதற்கு ஏதாவது சமாதானமாக கோவிலுக்குள் தான் இம்மாதிரி அநீதி நடத்துகின்றீர்கள். வீதிகளில் கூட நாங்கள் ஆழ்வாரை அணுகக்கூடாது என்பது எவ்வளவு அகம்பாவமான காரியம்! என்று கேட்டால் ஓ ஓஹோ நீ பிராமணாள்,
புடை சூழ்ந்து வருகிறபோது அவாளை மதியாமல் ஆழ்வார் பக்கத்தில் வந்து பிராமணாள்வந்து இருக்கிறார்களே என்று கூட மதியாமல் பிரதட்சணம் செய்வதாகச் சொல்லுகிறாயே நீ என்ன ஜாதிமனிதன் என்று நிந்தித்து துரத்தியடித்துத் துன் புறுத்துகிறார்கள்.
இக்கொடுமையைச் சகியாதவர்களாகிய தன் மதிப்பு கொண்டவர்களில் ஒருவரான திருவைகுண்ட தாசர் என்பவர் ஆழ்வார் வீதிகளில் பிரதட்சணமாக வரும்போது நீங்கள் வீதிகளில் மேய்த்து திரியும் நாய், பன்றி, கழுதை முதலிய இழி ஜந்துக்களைப் பார்ப்பதும் பக்கத்தில் போவதும் அவைகளை பிரதட்சணம் செய்வதால் வந்த தீங்கென்ன என்று கேட்டார்.
இந்த கேள்வி கேட்டதும் பார்ப் பனர் மனம் புண்ணானதாக கேட்டவரை உருட்டிப் பார்த்து அடே சூத்திரப்பயலே இனி இங்கு நில்லாதே ஓடிப்போ என்று பாதகப் பார்ப்பனர் கடிந்து பேசத்துவக்கினார்கள். உடனே இந்த சுயமரியாதை வீரர் ஓய்! நீ யார் தெரியுமா, நீர் ஓர் வடநாட்டு ஆரியன், இந்த ஆழ்வார் யார் தெரியுமா, தென்னாட்டவர், நானும் தென்னாட்டவன், ஆக நானும் ஆழ்வாரும் ஓர் நாட்டவர்கள்.
ஒரே பார்ப்பனரல்லாத இனத்தவர்கள், இந்த ஆழ்வாருக்கு கோவில், குளம், கட்டுவித்தவர்களும் எங்களினத்தார்களாகிய பார்ப்பனரல் லாதாரேயாவார்கள். பூசை, திருவிழா முதலியசெலவுகளுக்கும் மானியம் விட்டவர்களும் நாங்களே, இவைகளை நடத்தி வைக்கக்கூலி பேசி கூலிக்கு உழைக்க வந்த ஆட்களாகிய உங்களை விசாரிப்பவர்களும் நாங்களே யாவோம். நீங்கள் செய்யும் அக்கிரமங்களை அறிந்து கண்டிக்கவும், விலக்கவும்,
புதிதாகச் சேர்க்கவும் உரிமையுள்ளவர்களும் நாங்களாகவே இருக்க இம்மாதிரியான அநீதிகள் இனி நிலைக்காது என்று சொன்னார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இச்சுயநலப் பார்ப்பனருக்குக் கோபாவேசம் பிறந்து  அப்பெரியாரான நியாயவாதியை அடித்து துன்புறுத்தினார்கள் என்றால் இவர்களின் அக்கிரமத்துக்கு யார் பொறுப்பாளிகள்? தேவஸ்தான பரிபாலன கர்த்தர்களா? ஊர் பொதுமக்களா? சர்க்கார்தானா? என்று பார்க்கும்போது ஒவ்வொரு சுயமரி யாதை வாய்ந்தவர்களுக்கு இதை சீர்படுத்தும் பொறுப்பு உண்டு என்பதும் சுயமரியாதை ரத்த ஓட்டமில்லாத எந்த அதிகார அமைப்போ ஆளுகையோ நாட்டில் இருந்தாலும் மக்களை அடிமைப்படுகுழியிலும் அறியாமையிலும் மூழ்கத் தான் செய்யுமென்பதும் திண்ணம்.
ஆகையால் சுயமரியாதை கொழுந்து விட்டு படர்ந்து வரும் இக்காலத்திலாவது, இத்தகைய அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஒழித்து நாட்டின் நலனை நிறுவ முன்வர பொதுமக்களை வற்புறுத்தி அழைக்கிறேன் என்று ஓர் அனுதாபி எழுதுகிறார்.
-விடுதலை,5.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக