FIRST INFORMATION REPORT
first Information of cognizable crime reported under section. 154. C.P.C. at Police Station, Erode.
Circle G. District Coimbatore.
No. 36/29 Date and hour of occurance 4.4.29 தேதி ராத்திரி 7 மணிக்கு
Date and hour when reported 6.4.29 at 9.45 P.M.
Place of occurance & distance & direction from Police Station:
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் மேற்கு 4 பர்லாங்கு
Place of occurance & distance & direction from Police Station:
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் மேற்கு 4 பர்லாங்கு
Datea of despatch from Police station: 6.4.29
1. Name and residence of informent and complaint: ஈரோடு வெங்கிட்ட நாயக்கன் மகன் முத்து நாயக்கர்
1. Name and residence of informent and complaint: ஈரோடு வெங்கிட்ட நாயக்கன் மகன் முத்து நாயக்கர்
2. Name & residence of accused: ஈஸ்வரன், கிருஷ்ணம பாளையம் கருப்பன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, இன்னும் அடையாளம் தெரிந்த (பேர் தெரியாத) சுமார் 10 பேர்கள்
3. Brief description of offence with section and details of property carried of if any: Section 297 I.P.C. 2வது கலத்தில் கண்ட நபர்கள்,
ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில் மண்டபத்திற்கு முன் துவாரபாலகர் மண்டபத்திற்குள் அக்கிரமமாக பிரவேசித்தும் மேற்படி அர்ச்சர்களை உள் கதவை திறந்து விடுங்கள் நாங்களே ஸ்வாமிக்கு பூஜை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும் இச்செய்கையானது மாமூலுக்கு விரோதமாகவும் பஞ்சமர்கள் அல்லாதவர்களுடைய மதக்கொள்கைக்கு விரோதமாகவும், பங்கப்படுத்த ப்ரயத்தினப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் வாதியால் ஸ்டேஷனில் தாவா
(sd) Not legible
S.I.
S.I.
Muthu Naicken Son of Venkitarama Naicken of Erode appeared at the station at 9.45 P.M. on 6.4.29 & presented a complaint which runs as under:...
ஈரோடு டவுன் கச்சேரி வீதியிலிருக்கும் வெங்கட்ராம நாயக்கன் குமாரன் முத்து நாயக்கன் என்பவர் ஈரோடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முன்பாக எழுதிவைத்த பிராது.
நான் ஈரோடு டவுன் கோட்டையிலிருக்கும் ஈஸ்வரன் கோவில் தர்மக்கர்த்தாவாகச் சென்ற இருபது வருஷகாலமாக இருந்து வருகிறேன். நான் ஊத்துக்குளிக்கு என் சொந்தகாரியமாக 7,8 நாட்களுக்கு முன் போய்விட்டு இன்றைய தினம் திரும்பி ஈரோட்டுக்கு வந்தேன்.
மேற்படி ஈஸ்வரன் கோயில் பூஜை செய்யும் சேனாதிபதி குருக்கள் மகன் முத்துசாமிக் குருக்கள் 1 மாணிக்கக் குருக்கள் மகன் தாத்தாத்திரி குருக்கள் (2) இவர்கள் என்னிடம் வந்து சென்ற வியாழக்கிழமை ராத்திரி சுமார் 7 மணிக்கு வழக்கப் பிரகாரம்.
பூஜை செய்துவிட்டு துவார பாலகர்கள் இருக்கும் மண்டபக் கதவைப் பூட்டியதும் மேற்படி மண்டபகத்திற்குள் ஈஸ்வரன் (1) பஞ்சமர்கள் கிருஷ்ணன் பாலையம் கருப்பன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி,
இன்னும் அடையாளம் தெரிந்து பேர் தெரியாத சுமார் 10 பேர் வரையில் அத்துமீறி அக்கிரமமாக துவாரபாலகர்கள் மண்டபத்தில் பிரவேசித்து மேற்படி அர்ச்சகர்களை உள் கதவைத் திறந்து விடுங்கள் நாங்களே ஸ்வாமிக்கு பூஜை செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும் இச்செய்கை மாமூலுக்கு விரோதமாகவும் பஞ்சமர்கள் அல்லாதவர்களுடைய மதக்கொள்கைக்கு விரோதமாகவும் இருந்தபடியால் மேற்படி அர்ச்சகர்கள் பயந்து கொண்டு வந்துவிட்டதாகவும்,
அதுமுதற்கொண்டு தினந்தோறும் மேற்படி எதிரிகளும் அவர்களுடைய கூட்டத்தாரும் மேற்படி கோயிலுக்குள் அக்கிரமமாகப் பிரவேசித்து எங்களுடையவும் மேற்படி குருக்களுடையவும் மதக்கொள்கைகளைப் பங்கப் படுத்த பிரயத்தனப் பட்டு கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.
பஞ்சமர்கள் மேற்படி கோவிலுக்குள் பிரவேசிக்கக் கூடாது அவர்கள் கருட கம்பத்தண்டையிலிருந்து தான் ஸ்வாமியை வணங்கிப் போவது வழக்கம். இச்செய்கைகயை பெருமாள் கோவில் வீதி அங்கப்ப முதலி, பழனியப்ப முதலி, கோவில் திருவிளக்குகக்காரன் குட்டமேனன்,
புரோகிதம் பொன்னுசாமி அய்யங்கார், நாராயணன் சென்டி என்கின்ற அங்கன் செட்டி, வேலப்ப முதலியார் மகன் சதாசிவமுதலியார், வேலப்ப முதலியார், இன்னும் சிலரும் அறிவார்கள், இது விஷயமாய் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தை தேவஸ்தானம் கமிட்டி பிரசிடென்டு அவர்களுக்கும் இந்றைய தினம் தெரியப்படுத்தியிருக்கிறேன். படிக்கக் கேட்டேன் சரி
ஒப்பம் வெ.முத்துநாயக்கர் (6.4.29)
(குடிஅரசு 21.4.1929)
சார்ஜ் ஷீட்டு
ஜில்லா-கோயமுத்தூர்
நம்பர்:- 17ஏ 29
தாக்கல் தேதி: 18.4.1929
போலீஸ் ஸ்டேசன்: ஈரோடு
முதல் தகவல் நம்பர்: 36 of 29
தேதி: 6.4.1929
ஜில்லா-கோயமுத்தூர்
நம்பர்:- 17ஏ 29
தாக்கல் தேதி: 18.4.1929
போலீஸ் ஸ்டேசன்: ஈரோடு
முதல் தகவல் நம்பர்: 36 of 29
தேதி: 6.4.1929
1) பிராது கொடுப்போர் அல்லது முதலில் அறிவிப்போரின் பெயரும் விலாசமும் தொழிலும்: சக்கிரவர்த்தி
2) குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரும் விலாசமும், கைது செய்யப்பட்டார்களா இல்லையா? தலைமறைவாக எவரேனும் உண்டா: இல்லை, பாதுகாவல் உண்டா: இல்லை, ஜாமினில் அல்லது அடையாளம் கணடு கொள்ளத்தக்கவை:
1. ஈரோடு கச்சேரி வீதி முத்துக்கருப்பணப் பிள்ளை குமாரன் ஈஸ்வரன்
2. ஈரோடு மஞ்சை மேட்டான் என்கிற முத்தசாமி குமாரன் பசுபதி, தலையாரி
3. ஈரோடு கிருஷ்ணம்பாளையம் நயினான் குமாரன் கருப்பன் - ஆதிதிராவிடன்
4. யாராலாவது எப்பொழுதாவது இது சம்பந்தமாக ஏதேனும் தடையங்கள் ஆயுதங்கள் உட்பட கண்டுபிடிக்கப்பட்டு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றனவா? - இல்லை.
5. சாட்சிகளின் விலாசமும் விபரமும்: 1) ஈரோடு வெங்கிட்டராம நாயக்கர் குமார முத்து நாயக்கர், 2) ஈரோடு மாணிக்க குருக்கள் குமாரர் தாத்தாதரி குருக்கள், 3) ஈரோடு சேனாதிபதி குருக்கல் குமாரர் முத்துசாமி குருக்கள், 4) ஈரோடு கொழந்தை முதலி குமாரர் அங்கப்ப முதலி, 5) ஈரோடு ஆறுமுக முதலியார் பழனியப்ப முதலி,
6. அப்புமீனன் மகன் குட்டமீனன், ஈரோடு போலீஸ் ஹெட்கான்ஸ்டேபிள் (981) பாலகிருஷ்ணன்
7. குற்றம் அல்லது அறிவிப்பு: குற்றத்தின் பெயரும் காலமும் சுருக்கமாகத் தெரிவிப்பதுடன் இந்தியன் பீனல் கோட் எந்த செக்ஷன்களின் கீழ் என்பது. 295, 297, 109 சென்ற 4.4.1929 அன்று சுமார் 7 மணிக்கு முதல் குற்றவாளி, இரண்டாவது, மூன்றாவது குற்றவாளிகளையும்,
இதர ஆதித்திராவிடர்களையும் வழக்கத் திற்கு விரோதமாய் ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் அக்கிரமமாய் பிரவேசிக்கத் தூண்டியும் அதன்படியே முதல் குற்றவாளி முதல் மூன்றாம் குற்றவாளி வரையில் மேற்சொன்ன கோயிலில் அக்கிரமமாய் பிரவேசித்து ஜாதி ஹிந்துக்களின் மதத்தை அவமானப்படுத்த அங்குள்ள விக்கிரகங்களை (நவக்கிரகங் களை) தீட்டாக்கியதாகவும் அப்படிச் செய்வது ஜாதி ஹிந்துக் களின் மத உணர்ச்சியை அவமதிப்பதாகுமென்பது தெரிந்தும் செய்ததாகவும் உள்ள குற்றங்களை செய்ததாக.
Not legible S.I. (18.4.29)
(True copy)
Bo
(Sd) .................................
H. Clerk
21.4.1929
(True copy)
Bo
(Sd) .................................
H. Clerk
21.4.1929
ஈரோட்டில் 1929 ஆம் ஆண்டு நடந்த இந்த ஆலயப் பிரவேச நிகழ்வு தான் தலித் மக்கள் கோவிலுக்குச் சென்ற முதல் நிகழ்வு. இது தந்தை பெரியாரின் ஆதரவுடன் சுயமரியாதை இயக்கத்தினரால் நடத்தப்பட்டது.
இந்த வரலாற்றுச் செய்தியையே மறைத்து 1939இல் வைத்தியநாதய்யர் தலித் மக்களை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் அழைத்துச் சென்றது தான் முதல் நிகழ்வு என்பது போல பதிவு செய்கிறார்கள். அது உண்மையல்ல என்பது இந்த செய்தியை படித்தாலே உணர்ந்து கொள்ளலாம்.
-விடுதலை,9.1.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக