பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

தீண்டாமைக்கு காரணமே கடவுளும், மதமும்தான்!


(17.2.1929 குடிஅரசிலிருந்து)


நம் நாட்டில் தீண்டாமைக்கு இடங்கொடுத்துக் கொண்டி ருப்பது ஒரு வகையில் சாமியும் மதமுந்தான் என்று சொல்ல வேண்டும்/ சொல்லுவதெல்லாம் நியாயந்தான், கடவுள் அல்லவா அப்படி படைத்து விட்டார். அதற்கு என்ன செய்வது என்று சிலர் கடவுள் மீது பழியைச் சுமத்துகின்றனர். மற்றும் சிலர் என்ன செய்வது மதம் இதற்கு இடங்கொடுக்கவில்லையே என்று மதத்தின் மீது பழி போடுகின்றார்கள். ஆதலால் இத்தீண்டாமை தைரியமான போராட்டத்தினால் தான் ஒழிக்கக்கூடியதாயிருக்கின்றது. கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தியுள்ளவர், பட்சபாதகமற்றவர்” என்று சொல்லிக் கொண்டு “கடவுள் தான் தீண்டாதவர்கள் என்ற கொடுமைக்குட்படும் மக்களுக்கு ஆதார”மென்பது எவ்வளவு கேவலமானது. அநேகமாக அவர் தான் இந்த தீண்டாமையைப் படைத்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அது உண்மையாயின் அத்த கைய கடவுளை எப்படியாவது ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்கவேண்டும்.  இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் அதற்காக அவரை இன்னும் சீக்கிரமாய ஒழிக்க வேண்டும்.  அவரால் இத்தகைய அநீதியை விலக்கவோ அல்லது அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியாதென்றால் அவருக்கு
எந்த உலகத்திலும் இருக்க வேண்டிய வேலையே இல்லை. ஒழிக்க வேண்டியதுதான் நியாயம்.
கடவுளும் மதமும் இத்தீண்டாமை விலக்கப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை என்று சொல்லப்படுவதற்கு எதாவது ஆதாரமிருந்தால் அவை யார் சொன்னதாக எப்படிப்பட்ட தானாலும் அவற்றை நெருப்பைப் போட்டு பொசுக்க வேண்டும்.  காரியத்தில் உறுதியாக நிற்காமல் பேசுவதான அயோக்கியத்தனத்தினால் ஒரு போதும் நாடு முன்னேற்ற மடைய முடியாது. புண் கண்ணில் பட்டால் அதை உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டு சிகிச்சை செய்ய வில்லையா? ஆனால் அது வலிக்கக்கூடாது எரியக் கூடாது என்று மூடிவைத்துக் கொண்டு வாய்ச்சமாதான்ம சொல்வது புழுக்குச் சாவதற்கு வழிதான்.
-விடுதலை,13.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக