பக்கங்கள்

சனி, 21 மே, 2016

பிகார் மாநிலத்தில் அரசுப்பணிகளில் பெண்களுக்கு 35 விழுக்காடு இடஒதுக்கீடு

சபாஷ் நிதீஷ்குமார்
பிகார் மாநிலத்தில் அரசுப்பணிகளில்
பெண்களுக்கு 35 விழுக்காடு இடஒதுக்கீடு
பாட்னா, ஜன. 21- பிகார் மாநிலத்தில் அரசுப்பணி களில் பெண்களுக்கு 35 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க அம்மாநில அமைச் சரவைக் கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டு உள்ளது.
பிகாரில் தேர்தலின் போது ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அய்க்கிய ஜனதாதளம் கூட்டணி யின் சார்பில்  போட்டியிட்ட மகா கூட்டணி மாபெரும் வெற்றி பெற் றது. அப்போது அளிக்கப் பட்ட தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்றும்வண் ணம் தற்போது முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பிகார் மாநில அமைச் சரவைக் கூட்டத்தில்  அர சுப்பணிகளில் பெண்க ளுக்கு 35 விழுக்காடு அளிக் கப்படுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தின் அமைச்சகங்களின் ஒரு ங்கிணைப்புத் துறைக்கான முதன்மை செயலாளர் பிரஜேஷ் மெஹ்ரோத்ரா பிகார் மாநிலத்தின் பொது நிர்வாகத்துறைகளின் கீழ் உள்ள அரசுப்பணிகளில் பெண்களுக்கு 35 விழுக் காடு இடஒதுக்கீடு அளிப் பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித் துள்ளார்.
ஏற்கெனவே, பிகார் மாநிலத்தில் காவல் துறை யில் பெண்களுக்கு 35 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது அரசுப் பணிக ளில் அனைத்து துறைக ளுக்கும் விரிவாக்கப்படு கிறது.
அமைச்சரவைக் கூட்டத்தில் மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன. மின்சாதனக் கருவிகளுக்கு நுழைவு வரி விதிப்பது, பீடி, புகையிலை பொருள்கள், ஆயத்த ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட இதர பிற வகைகளுக்கு 5 விழுக்காடு முதல் 12 விழுக்காடு வரை வரிவிதிப்பு அதிகரிக்கப் படுகிறது.
அனைத்து துறைகளி லும் குறைகேட்பு மனுக்க ளைப் பெறுவதற்கு தனியே அலுவலர்களை நியமிப் பது என்றும் தீர்மானிக்கப் பட்டுள்ள தாக மெஹ் ரோத்ரா தெரிவித்தார்.
-விடுதலை,21.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக