நல்வாழ்வுத்துறையில் பாராமெடிக்கல் பிரிவு சி தொகுதி: மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு
தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஜன.13_ மாற்றுத் திறனாளிகளுக்கு சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சுகா தாரத் துறை உத்தரவிட் டுள்ளது. சி பிரிவு காலிப் பணியிடங்களில் 42 காலியிடங்கள், மாற்றுத் திறனா ளிகளுக்கு உகந்ததாக இருப்பதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஜன.13_ மாற்றுத் திறனாளிகளுக்கு சி பிரிவு காலிப் பணியிடங்களிலும் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க சுகா தாரத் துறை உத்தரவிட் டுள்ளது. சி பிரிவு காலிப் பணியிடங்களில் 42 காலியிடங்கள், மாற்றுத் திறனா ளிகளுக்கு உகந்ததாக இருப்பதாகவும் கண்டறி யப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் 3 சதவீத காலிப் பணியிடங் களை, மாற்றுத் திறனாளி களுக்கு வழங்க அரசு உத்தரவு வழிவகை செய் கிறது. இந்த 3 சதவீதத்தில், ஒரு சதவீதம், பார்வை யற்றவர்களுக்கும், 1 சதவீதம் செவித்திறன் இழந்தோ ருக்கும், 1 சதவீதம் ஊன முற்றோருக்கும் பிரித்து அளிக்கப்படுகிறது. சுகா தாரத்துறையில் பாரா-மெடிக்கல் காலிப் பணியிடங்களில் சி, டி பிரிவு இடங்களைக் கண்டறிந்து அதில் மாற்றுத் திறனாளி களை பணியமர்த்துவது அவசியம் என சுகாதார பணியாளர் தேர்வாணை யத்தின் தலைவர் அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சி பிரிவு காலியிடங்களில் 42 இடங் கள் மாற்றுத் திறனாளி களுக்கு உகந்ததாகக் கண் டறியப்பட்டுள்ளது.
இந்த இணை மருத்துவ காலிப் பணியிடங்களில் சி பிரிவுக் கான இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று மருத்துவ பணி யாளர் தேர்வாணையத் தலைவர் கேட்டுக் கொண் டுள்ளார்.
அவரது கோ ரிக்கை அரசால் கவன முடன் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படு கிறது என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தர விட்டுள்ளார்.
இந்த உத்தரவின் மூலம், சுகாதாரத் துறையில் பாரா-மெடிக்கல் பிரிவில் சி தொகுதியில் உள்ள காலிப் பணியிடங்களில் 3 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது.
-விடுதலை,13.1.16
‘உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம் ஆர்.டி.அய்., வரம்பிற்குள் வராது’
புதுடில்லி, ஜன. 13_ ‘உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன நடைமுறையை, ஆர்.டி.அய்., எனப்படும், தகவல் உரிமைச் சட்ட வரம்பிற்குள், மத்திய அரசு கொண்டு வராது’ என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி, அரசு வட் டாரங்கள் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் மற்றும், 24 உயர்நீதிமன்றங்களின், நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு போன்றவற்றை, ஆர்.டி.அய்., அதிகார வரம்பிற்குள், மத்திய அரசு உட்படுத்தாது. ஆர்.டி.அய்., வரம்பிற்குள் இவற்றை உட்படுத்தினால், பதவி கிடைக்காதவர்கள், எண் ணற்ற புகார்களை அளித்து, குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.
அதே சமயம், ‘கொலீஜியம்‘ எனப் படும் நீதிபதி கள் குழு, நீதிபதிகள் நியமனத்துக் காக அளிக்கும் பரிந்துரை களில், வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த மத்திய அரசு விரும் புகிறது. கொலீஜியம் அளிக்கும் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு வந்தால், அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண் டும் என்ற ஷரத்தை, நீதி பதிகள் நியமன நடை முறையில் சேர்ப்பது பற்றி, அரசு பரிசீலித்து வருகிறது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, சில நாள் களில், மத்திய அரசு அளிக் கவுள்ள வரைவுத் திட்டம் பற்றி, உச்சநீதிமன்ற தலை மை நீதிபதியும், கொலீ ஜியத்தில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களும் இறுதி முடிவு எடுப்பர். அதன்படி, வருங்காலத்தில், நீதிபதிகள் நியமனங்கள் அமையும்.
இவ்வாறு அரசு வட் டாரங்கள் கூறின.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்காக, என்.ஜே. ஏ.சி., எனப்படும், தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யம் நியமிக்க, மத்திய அரசு திட்டமிட் டது.
ஆனால், என்.ஜே.ஏ.சி., யை ரத்து செய்து, உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப் பித்தது. இவ்விஷயத்தில், கொலீ ஜியம் முறையே தொடர வேண்டும் என் றும் கூறியது.
இதையடுத்து, உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்ற நீதிபதிகளை, கொலீ ஜியம் முறைப்படி நியமிப் பதற்கான விதிமுறைகளை வகுக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பரிந்துரைகளை, 24 உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், சம்பந் தப்பட்ட மாநிலங்களின் முதல்வர்களுடன் கலந்தா லோசித்து அளிக்கும் பொறுப்பை, மத்திய சட்ட அமைச்சகத்திடம், உச்சநீதி மன்றம் ஒப்படைத்தது.
அதனால், நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இரண்டு திட்ட வரைவு களை, சட்ட அமைச்சகம் தயாரித்து வருகிறது. இவற்றில் ஒன்று, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள் நியமனம் தொடர்பானது; மற்றொன்று, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் பிற நீதிபதிகள் சம்பந்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக