பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு விழுக்காடு


டில்லி, பிப்.4_ அய்த ராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித்வெமுலா தற் கொலையை அடுத்து பல்கலைக் கழகங்களில் தலித்துக்களின் நிலைமை குறித்து திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு உள்ளன.
இந்தியா முழுவது முள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வெறும் இரண்டுவிழுக்காடு மட் டுமே  தலித் ஆசிரியர்கள் பணிபுரிவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் ஆசிரியர் பணி நியமனத் தில் இட ஒதுக்கீடு பின் பற்றப்படுவதில்லை என்ற பச்சையான உண்மை ரோஹித்வெமுலாவின் மரணத்திற்குப் பின்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தலித் மாணவர்கள் உயர்வகுப்பு ஆசிரியர்களால் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டு வருகின் றனர்.
உயர்கல்வி நிலையங் களிலும் ஜாதிய தீண் டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு நிகழ்வுகள் அன்றாட நாளிதழ்களில் வந்துகொண்டு இருக் கின்றன. இந்நிலையில் அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் தீண்டாமை மற்றும் உயர்ஜாதி வெறியர்களின் அழுத் தம் காரணமாக பல் கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித்வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் மூலம் இந்த நூற்றாண்டிலும் ஜாதிதீண்டாமை உயர்கல்வி நிலையங்களில் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது, தலித் மாணவர்களுக்கு அவர் களுக்கான பிரதிநிதிகள் உயர்கல்வி நிலையங்களில் இல்லாதது மிகப்பெரும் பாதிப்பாக உள்ளது.

தேசிய உயர்கல்வி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் 2 விழுக்காடு தலித் ஆசிரியர்களும் பழங்குடியின ஆசிரியர்கள், வெறும் 0.93 விழுக்காடும் உள்ளனர் என்று அந்த அந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் தலித் ஆசிரியர்கள் உள்ளதால் அவர்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்கி தங்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல இய லாமல் தவிக்கின்றனர்.
உயர் கல்வி துறை அறிக்கை
2016 ஜனவரி 22-ஆம் தேதி வெளியான உயர்கல்வித்துறை அறிக்கையில் இந்தியா முழுவதிலுமுள்ள 716- பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் வரும் 38,056 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் 14-லட்சம் ஆசிரியர்களில் வெறும் 1.02 1லட்சம் தலித் ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதில் பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை 30,000 மட்டுமே  மேற்குவங்க மாநிலத்தில் மட்டுமே தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை 16.6 விழுக் காடாக உள்ளது. இங்கு பழங்குடியின ஆசிரியர்கள் 8.6 விழுக்காடாக உள் ளது. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுரேந்திர பாபு என்கிற தலித் பேராசிரியர் இதுபற்றிப் பேசும் போது, தலித் ஆசிரியர்களோ அல்லது பழங்குடியின ஆசிரியர்களோ அவர்களின் மீது உயர்ஜாதி நிர்வாகத்தினர் நடத்தும் மறைமுகத் தீண்டாமை குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது, அங்கு பயிலும் தலித் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், தலித் மற்றும் பழங்குடியினர் பெரும்பாலும் முதல் தலைமுறை ஆசிரியர்கள், மேலும் அவர்களுக்கு ஆதரவாக எந்த ஓர் அமைப்பும் இல்லாத நிலையில் தங்களின் உள் ளக்குமுறலை வெளியில் சொல்லாமல் தங்களின் மீதான தீண்டாமைக் கொடுமையை மவுனமாக ஏற்றுக் கொள்கின்றனர். ரோஹித் வெமுலாவிற்கு நீதிகேட்டு நாங்கள் போராடிவந்தாலும் நிர்வாகம் எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதற்கு எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவாக இருப்பதும் எங்களுக்கு கல்லூரியில் உள்ள எந்த ஓர் ஆசிரியர் அமைப்பின் ஆதரவும் இல்லாத நிலையும்தான் காரணம்.  
தலித் உரிமைக்களுக் காகப் போராடும் குரீந்தர் ஆசாத் என்பவர் கூறும்போது தலித் பிரிவில் இருந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப் பதால் அவர்கள், உயர் ஜாதியினரின் தீண் டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.  உயர் கல்வி நிறுவனங்களில் நவீன தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின் றன. ரோஹித் வெமுலா வின் மரணம் இதற்கு சான்றாக உள்ளது.
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களை வகுப்பறைகளில் சரியாக நடத்தாதது, அவர்களை தேர்வுகளில் தேர்ச்சி அடைய விடாமல் செய்வது, கல்லூரியில் சேரும்போதே அவர்களுக் கென தனியான சில விதிகளை மறைமுகமாக உருவாக்கி அவர்களை அதன் படி நடக்கச் செய்வது போன்ற பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் நடைபெறு கின்றன. இதனால் அந்த மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தாழ்வு மனப்பான்மையிலேயே கல்லூரியை விட்டுவெளியே வருகின் றனர். இது அவர்களின் எதிர்காலத்தையே பாதித்து விடுகிறது, என்று கூறினார்.
டில்லி பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர்  பேராசிரியர் அபு ஹபீப் கூறியதாவது, டில்லி  பல்கலைக்கழக செயற் குழுவில் மொத்தம் 813 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் 60 பேர், பழங்குடியினர் 19 பேர் மட்டுமே உள்ளனர்.

இது குறித்து நாங்கள் மனிதவளத்துறை அமைச் சகத்திடம் கடிதம் மூல மும், நேரிலும் தெரிவித்து பல்கலைக் கழக செயற்குழுவில் தலித் உறுப்பினர்களின் எண் ணிக்கையை உயர்த்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம் ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவேயில்லை.
நாடு முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் இவ்வளவு குறைவான அளவு, தலித் மற்றும் பழங்குடியின ஆசிரியர்கள் இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டது, இதற்கு மனிதவளத்துறை அமைச்சர், தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்று திரும்பத் திரும்ப ஒரே பதிலையே கூறி வருகிறார்.
ஆனால் பெரும்பா லான கல்லூரி நிர்வகங்கள், தகுதியானவர்களாக இருந் தாலும் நேர்காணலிலேயே அவர்களை தகுதியற்ற வர்கள் என்று முத்திரை குத்தி அறிக்கை அனுப்பி விடுகின்றார். கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளில் இட ஒதுக்கீடு என்பது கேள் விக்குறியாகவே உள்ளது.
மத்திய அரசின் கீழ்வரும்  42 பல்கலைக் கழகங்களில் ஒரு தலித் துணைவேந்தர்கூட இல்லை, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுவதில்லை, இதனால் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது, தலித் மாணவர்களுக்கான பிரதிநிதிகள் இல்லாத பட்சத்தில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமாகிவிடும்.
-விடுதலை,4.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக