பக்கங்கள்

ஞாயிறு, 15 மே, 2016

நீதிக்கட்சி நூற்றாண்டு 1916 - 2015(சாதனைகள்)1916 நவம்பர் 20ஆம் தேதியன்றுதான் சென்னை வேப்பேரியில் பார்ப்பனர் அல்லாத முக்கிய தலைவர்கள் ஒன்று கூடி பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து - அதற்கான தொடக்கத்தைக் கொடுத்தனர். அதுவே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சியின் தொடக்க நாளாகும். அதன் சாதனைகள் ஒன்றா இரண்டா? இதோ ஒரு சில எடுத்துக்காட்டுகள்.
முதல் அமைச்சரவையின் சாதனையை (1920_-1923) ஆணை எண் 116 வாயிலாக நீதிக்கட்சியே வெளி யிட்டுள்ளது.
¨    பொதுத் துறையில் தாழ்த்தப்பட் டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
¨    துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படகர்கள் ஆகியவர் களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
¨    தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப்பட்டன.
¨    தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட் டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
¨    தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி தனி அலுவலர்கள் நியமிக்கப் பட்டனர். பின்னர் தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
¨    தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என் பதைத் தொகுக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது.
¨    குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன.
¨    கோவை மாவட்டத்திலுள்ள வலை யர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம்பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தைகளுக்கு 25_-நிதி உதவிகள் (ஸ்காலர்ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
¨    ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு _- அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.
¨    தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
¨    ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத்திற் காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங்களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
¨    அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை  உயர்த் தித் தர உத்தரவு இடப்பட்டுள்ளது.
¨    மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
¨    கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற் காகப் புதிதாக லேபர் கமிஷனர் நிய மிக்கப்பட்டு அவர் சில வழிமுறை களை உருவாக்கித் தர ஏற்பாடு செய் தனர்.
¨    நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்து வோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச் சட்டப்படி நில உரிமையாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
¨    பி. அண்டு சி மில்லின் வேலை நிறுத் தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப் பட்டன.
¨    தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப்பட்டது.
¨    ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவி யையும் உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள்களை அரசு ஆணை யாகப் பிறப்பித்தது.
¨    குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக்கத்தை மாற்ற மக்களை நெறிப் படுத்த ஆணை வெளியிடுதல்.
¨    ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலை யில் நிலங்களை அளித்தல்.
¨    தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடை முறை செலவுகளை ஏற்றல்; சீர மைப்புப் பணிகளை மேற்கொள்ளு தல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
¨    மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள் ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப் பட்டன.
¨    சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
¨    கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
¨    உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் கிடைக்கும்போது அவர் களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
¨    மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி (ஷிtவீஜீமீஸீபீ) பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
¨    அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக்கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப் பட்டது.
¨    தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தரவிடப்பட்டு இருந்தது.
¨    சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
¨    கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் படிக்கும் பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
¨    தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர்களின் எண்ணிக்கையை உயர்த் தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1.    பெண்களுக்கு வாக்குரிமை அர சாணை எண். 108 நாள்: 10_05_-1921.
2.    பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் _- ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25_-3_-1922
3.    கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20_-5_-1922.
4.    கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-_6_-1923.
5.    தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர் களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11_-2_-1924; (ஆ) 1825 நாள்: 24_9_1924.
6.    இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள்: 27_-01_-1925.
7.    சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி யில் பார்ப்பனர் அல்லாத மாணவர் களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-_5_-1922. (ஆ) 1880 நாள் 15-_9_-1928.
8.    வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள்: 13.9.1928.
9.    சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள்: 18_10_-1929.
10.    கோயிலில் பெண்களைப் பொட்டுக் கட்டி விடும் தேவதாசி ஒழிப்புச் சட்டம். (1930).
-விடுதலை ஞா.ம.28.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக