வியாழன், 05 மே 2016
- வீ.குமரேசன் -
சமூகநீதி தத்துவப் பரவலுக்கு பாடுபட்டுவரும் அறிஞர் பெருமக்களுக்கு, சமூகநீதிப் போராளிகளுக்கு உலகளாவிய அளவில் வழங்கப்படும் விருது “சமூகநீதிக்கான கி.வீரமணி விருது” (K.Veeramani Award for Social Justice) ஆகும். அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் தலைமையிடத்தினைக் கொண்டு கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International) உலகின் பல்வேறு நாடுகளில் சமூகநீதிக்குப் பாடுபட்டு வரும் பெருமக்களுக்கு “சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை” ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. மொழி, இனம், பால், நாடு ஆகிய எல்லை களைக் கடந்து 2014ஆம் ஆண்டு வரை இந்தியா, சிங்கப்பூர், மியான்மர், குவைத் ஆகிய நாடுகளில் சமூகநீதிக்காக பாடு பட்டு வரும் 14 பெருமக்களுக்கு சமூகநீதி விருதினை வழங் கிச் சிறப்பித்து உள்ளது. 2015ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக் கான கி.வீரமணி விருதினை, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வழங்கிட விருது தெரிவுக்குழு வினர் முடிவெடுத்தனர்.
விருது வழங்கிட முடிவெடுத்த வேளையில் நிதிஷ்குமார் முதலமைச்சர் பதவியில் இல்லை! சென்ற ஆண்டின் பிற்பகுதி யில் பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பணி காரணமாக அந்த ஆண்டில் விருதினை வழங்கிட முடிய வில்லை. சமூகநீதித் தளத்தில் மாபெரும் சுயமரியாதை அரசி யல் கூட்டணி (Swabhiman Grand Alliance) அமைத்து வெற்றி வாகை சூடி, நிதிஷ்குமார் மாநில முதலமைச்சராக பொறுப் பேற்றுள்ள சூழலில், சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கும் நிகழ்ச்சி பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஏப்ரல் 9 ஆம் நாள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சமூகநீதி விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதின் பெயருக்குரிய தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களே சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பெருமைப்படுத்திட வேண்டும் என பெரியார் பன்னாட்டு அமைப்பு வேண்டிக் கொண்டதன் பேரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பீகாருக்குப் புறப்பட்டுச் சென்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன் அவரது வாழ்விணையர் மோகனா அம்மையார், பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் முனைவர் இலக்குவன்தமிழ், திரா விடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் மற்றும் அனைத்திந்தி¢ய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மானமிகு கோ.கருணாநிதி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் காலை 8.25 மணி அளவில் சென்னையிலிருந்து கிளம்பி, வான்வழிப் பயணமாக டெல்லி சென்று பின்னர் பாட்னா நகருக்கு சரியாக மாலை 4.30 மணிக்கு வந்து சேர்ந்தனர்.
சென்னை - டெல்லி மற்றும் டெல்லி - பாட்னா சென்ற விமானங்கள் ஒரே நிறுவனம் என்பதால் சென்னையிலேயே இரண்டு விமானங்களிலும் பயணிப்பதற்கான அமர்வுச் சீட்டுகள் (boarding passes) வாங்கியதால், டெல்லி நிலையத்தில் விமான மாறுதலுக்கான நேரத்தில் சற்று நேரம் குறைந்தது. அமெரிக்காவிலிருந்து நேரடியாக டில்லி வந்திருந்த முனைவர் இலக்குவன்தமிழ் டெல்லியிலிருந்து பாட்னா செல்லும் விமா னப் பயணத்தில் தமிழர் தலைவருடன் சேர்ந்து கொண்டார்.
தமிழர் தலைவர் பாட்னா நகர் வந்தடைதல்
பாட்னாவில் ‘ஜெயப்பிரகாஷ் நாராயண் பன்னாட்டு விமான நிலையம்’ வந்தடைந்த தமிழர் தலைவரை வரவேற் றிட, பீகார் மாநில ஆளும் அரசியல் கட்சியான அய்க்கிய ஜனதா தள கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச்சங்கங்களின் பொறுப்பாளர் திரு.ரவீந்திரராம் தலைமையில் திரளாகத் தோழர்கள் வருகை தந்திருந்தனர். ரோஜா மலர்க்கொத்து கொடுத்து தமிழர் தலைவரை வரவேற்றனர். விமான நிலையத்திலிருந்து நேராக 20 நிமிடப் பயணத்தில் பாட்னா நகர் மய்யப்பகுதியில் அமைந் திருந்த அரசு விருந்தினர் மாளிகைக்கு தமிழர் தலைவர் அழைத்துச் செல்லப்பட்டார். விருந்தினர் மாளிகை வந்த டைந்த தமிழர் தலைவரை அங்கு வந்து அய்க்கிய ஜனதா தளப் பொறுப்பாளர்கள் பலர், குறிப்பாக பீகார் மாநில மேலவை உறுப்பினரும், அய்க்கிய ஜனதா தள கட்சியின் அரசுக் கொறடாவுமான திரு.சஞ்சய்குமார் சிங் மற்றும் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் திரு.அனில் ஹெக்டே ஆகியோர் வரவேற்று உரையாடிவிட்டுச் சென்றனர். நீண்டநேரம் விமானப் பயணத்தில் வந்திருந்தாலும், தமிழர் தலைவர் மாலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரைச் சென்று சந்திக்க அணியமானார்.
நிதிஷ்குமாருடன் தமிழர் தலைவர் சந்திப்பு
சரியாக இரவு 7.30 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையி லிருந்து கிளம்பிய தமிழர் தலைவர், முதலமைச்சர் நிதிஷ் குமாரைச் சந்திக்கச் சென்றார். சென்னையிலிருக்கும் போதே, முதலமைச்சரை, மரியாதை நிமித்தம் சந்திக்க வேண்டி, கடிதம் அனுப்பட்டிருந்தது. சந்திக்க ஒப்புதல் பெற்றிருந்த நிலையில் முதலமைச்சர் நிதிஷ்குமாரைச் சந்திக்க தமிழர் தலைவர் கிளம்பிச் சென்றார். 10 நிமிட பயணத்தில் முதலமைச்சரின் இல்ல அலுவலகம் சென்றடைந்தோம். மரங்கள் அடர்ந்திருந்த பெரிய வளாகமாக அது இருந்தது! வளாகத்தில் நுழைந்த பின் ஒவ்வொரு நொடியும் வழியில் பல்வேறு முனைகளில் பாதுகாப்பு நிமித்தம் பணியில் இருந்த அதிகாரிகள் தமிழர் தலைவரின் வருகையினை இந்தியில் ‘வீரமணிஜி ஆகயா ஹே’ என அலைபேசி மூலம் தெரிவித்த வண்ணம் இருந் தனர். இல்லத்தின் வாசலில் இறங்கிய தமிழர் தலைவரை முதல மைச்சரின் அலுவலக அதிகாரிகள் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் அறைக்கு அழைத்துச் சென்றனர். தமிழர் தலைவரின் வருகையினை எதிர்நோக்கியிருந்த நிதிஷ்குமார், தம் அறையில் நுழைந்த தமிழர் தலைவரை முகமலர்ச்சியுடனும் அன்புடனும் வரவேற்றார்.
முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து - பழங்களை தமிழர் தலைவர் அளித்து அன்பு கலந்த மரியாதை செய்தார். உடன் சென்றி ருந்த பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் முனைவர் இலக்குவன்தமிழும் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பூங் கொத்து அளித்து, வாழ்த்து கலந்த மரியாதையினைத் தெரிவித்தார். உடன் வந்திருந்தோரை தமிழர் தலைவர் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு அறிமுகப்படுத்தினார். சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்ற பீகார் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் “சுயஅபிமான் பெருங்கூட்டணி” அமைத்து இந்திய நாடு முழுவதையும் வியப்புடன், பார்க்க வைத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ்குமாருக்கு தமது வாழ்த்துகளை தமிழர் தலைவர் தெரிவித்துக் கொண்டார். தந்தை பெரியாரின் தத்துவ அடிப்படையின் மூலவேர்கள் பகுத்தறிவும் சுயமரியா தையும் ஆகும். சுயமரியாதைத் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது பெரிதும் முக்கியத்துவம் மற்றும் சிறப்பினைப் பெற்றுள்ளதாக தமிழர் தலைவர் கூறினார்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று மாநில அரசின் நிர்வாகத்தைத் திறம் படவும், மக்களது நலவாழ்வு ஏற்றம் காணுகின்ற வகையிலும் நிதிஷ்குமார் அவர்கள் நடத்தி வருவது குறித்து தமது மகிழ்ச்சியினைத் தமிழர் தலைவர் தெரிவித்துக் கொண்டார். அடித்தள மக்களின் நலவாழ்வு, மேம்பாட்டினை, குறிப்பாக அடித்தளக் குடும்பத்தில் மகளிர் அனுபவித்து வரும் இன்னல் களை, அடக்குமுறைகளையும் களைந்திட 2016 எப்ரல் முதல் நாள் முதல் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்தியது வரலாற் றில் தடம் பதிக்கின்ற மிகப்பெரிய சாதனையாகும். அரசுக்கு வரும் பொருளாதார வருவாய் ஈட்டலை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. வருவாய் இழப்பை காரணம்காட்டி மதுவிலக்கினை நடைமுறைப்படுத்துவதற்கு மற்ற மாநில அரசுகள் சாக்குப் போக்கு சொல்லி வரும் நிலையில் மக்களின் நலவாழ்வு முன்னுரிமை வாய்ந்தது என மக்கள் நல அரசின் (Welfare State) இலக்கணமாக நிதிஷ்குமார் தலைமையிலான அரசு விளங்கி வருகிறது. ஏப்ரல் முதல் நாள் முதல் மதுவிலக்கினை ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்திய பின்னர், முழுமையான மதுவிலக்கினை ஆறுமாதம் கழித்து நடைமுறைப்படுத்தலாம் என திட்டமிட்டிருந்த வேளையில், ஏப்ரல் முதல் வாரத்தி லேயே பகுதி மதுவிலக்கு அமல்படுத்திய நிலைக்கு கிடைத்த வரவேற்பு, ஆதரவினை புரிந்து முழுமையான மதுவிலக்கினை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தி, இந்தியா முழு மைக்கும் எடுத்துக்காட்டாக நிதிஷ்குமார் விளங்கி வருகிறார். இவை அத்தனையையும் எடுத்துக்காட்டி ‘விடுதலை’ நாளித ழில் தாம் வெளியிட்ட அறிக்கை மற்றும் விரிவான செய்திக் குறிப்பினைத் தாம் கொண்டு வந்திருந்த ‘விடுதலை’ இதழ் களைக் காட்டித் தமிழர் தலைவர் பாராட்டிப் பேசினார். ‘விடுதலை’ எனும் தமிழ்ச் சொல்லின் பொருள் என்ன என்று நிதிஷ்குமார் கேட்டதற்கு “Liberation” என தமிழர் தலைவர் பதிலளித்தார். ‘விடுதலை’ இதழ் தந்தை பெரியாரால் 1935ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட செய்திகளையும், அதன் ஆசிரியர் களாக மிகப்பெரியோர்கள் இருந்துள்ளார்கள்; அறிஞர் அண்ணா, விடுதலை ஆசிரியராக இருந்துள்ளார்; 1962 ஆம் ஆண்டு தன்னை ஆசிரியர் பொறுப்பிற்கு தந்தை பெரியார் நியமித்த செய்தியினையும் தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். “தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த அண்ணாதுரை ‘விடுதலை’ இதழின் ஆசிரியராக இருந்துள்ளாரா!”(Oh! Was the Chief Minister of Tamil Nadu Annadurai, Editor of the daily ‘Viduthalai’) என வியப்புடன் நிதிஷ்குமார் கேட்டார். மேலும் உலகிலேயே வெளிவரும் ஒரே பகுத்தறிவு நாத்திக நாளேடு ‘விடுதலை’ மட்டுமே என தமிழர் தலைவர் சொன்னபோது ‘விடுதலை’ ஒவ்வொரு நாளும் வெளிவரும் இதழா? (Oh! ‘Viduthalai’, a daily news paper?-) என நாளிதழ் நடத்துவதில் உள்ள இன்னல்களைப் புரிந்து கொண்ட விதத்தில் வியப் படைந்தார்.
சமூகநீதி
பின்னர் ‘சமூகநீதி’ பற்றிய உரையாடல் தொடங்கியது. சமூகநீதி வரலாற்றில் தமிழ்நாட்டுக்கு தனியிடம், முன்னோடித் தன்மை, நீதிக்கட்சி ஆட்சி காலத்திலிருந்து தொடங்கிய நிலைமை, ஒட்டுமொத்த இடஒதுக்கீடு 69 விழுக்காடு நடைமுறையில் உள்ளதன் பின்னணிகள், திராவிடர் கழகம் சமூகநீதிக் கோட்டையினைக் கட்டிக்காத்து வரும் வரலாறு-, மண்டல் குழு பரிந்துரைக்கு மண்டல் பெரியார் திடலுக்கு வந்தது முதல் மண்டல் குழு பரிந்துரை நடைமுறையாக்கத்திற்கு திராவிடர் கழகம் எடுத்த முயற்சிகள், நடத்திய போராட்டங்கள், கூட்டிய மாநாடுகள், பிரதமர் வி.பி.சிங் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை பிற்படுத்தப்பட்டோருக்கு மய்ய அரசின் வேலைவாய்ப்பில் வழங்கியது என சில மணித்துளிகளில் சமூகநீதி வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லி தமிழர் தலைவர் விளக்கினார். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு திராவிடர் கழகத்துடனான சமூகநீதிக்கொள்கை உறவு பற்றிக் குறிப்பிட்டதும் நிதிஷ்குமார் பெரிதும் வியந்தார். வி.பி.சிங் அவர்கள் தமிழ்நாட்டை தமது இரண்டாவது சொந்த மாநில மாகக் கூறியதை எடுத்துச் சொன்ன செய்தியும் சமூகநீதி - தமிழ்நாடு - வி.பி.சிங் - திராவிடர் கழகம் என கொள்கை உறவு முறை ஆழமானது என விளங்கியது. சமூகநீதித் தளத்தில் சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களுக்குப் பின்னர் அனைத்திந்தியத் தளத்தில் சமூகநீதியினை எடுத்துச் செல்ல வலுவான தலைமை அமையவில்லை. அப்படிப்பட்ட நிலை சமூகநீதிக்காக நிதிஷ்குமார் தலைமையில் உருவாகிட வேண் டும்; திராவிடர் கழகம் அதற்கு உறுதுணையாக பக்கபலமாக, நிதிஷ்குமார் எடுக்கின்ற முயற்சிகளுக்கு ஆக்கம் சேர்க்கின்ற வகையில் செயல்படும் என தமிழர் தலைவர் தெரிவித்தார்.
மதுவிலக்கு
மதுவிலக்கு நடைமுறையினை வெறும் மக்கள் நலன் காத்திடும் பணியாகத் தாம் கருதவில்லை: மகளிர் விடுதலை, அதிகாரத்துவமயமாக்கும் திட்டமாகக் கருதுவதாக நிதிஷ் குமார் குறிப்பிட்டார். மதுவிலக்கு நடைமுறையால் அரசுக்கு வருவாய் இழப்பு எவ்வளவு வந்தாலும் அதனைப் பற்றிய கவலை தமக்கு இல்லை எனவும், மக்கள் நல்வாழ்வே தமக்கு முக்கியம் என மிகவும் உறுதிப்பாட்டுடன் நிதி’ஷ்குமார் தெரிவித்தார்.
உரையாடலின் பொழுது ‘மதுவிலக்கு நடைமுறை எப்படி உருவாக்கம் பெற்றது என்பதை நிதிஷ்குமார் தமிழர் தலைவ ரிடம் விரிவாக எடுத்துரைத்தார். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு முதல்வராக ஒரு கூட்டத்தில், மகளிர் பலர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். தாம் பேசிவிட்டு இருக்கைக்கு வந்து அமர்ந்ததும், தொலைவில் கிராமப்புறப் பகுதியிலிருந்து வந்த சில மகளிர் எழுந்து ஒட்டுமொத்தமாக இந்திமொழியில் தாருபந்தி லாகு கரோ! (மதுவினை ஒழியுங் கள்!) என வேண்டிக் கொண்டனர். ஒலி பெருக்கியில் அவர்கள் பேசாததால், மதுவிலக்கு பற்றிதான் பேசுகின்றனர் என்பதை ஊகித்து பின்னர் அதிகாரிகள் மூலமும் உறுதி செய்த பின்னர், மீண்டும், பேச்சு மேடைக்கு வந்து ‘மதுவிலக்கு உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும்’ என அந்த மேடையிலேயே உறுதியளித்தாராம். மதுப்பழக்கத்தால் தமது குடும்பத்து ஆட வர்கள் எவ்வளவு தூரம் உடல்நலம் கெட்டு, குடும்ப நலத்தை யும் கெடுத்து வருகின்றனர் என அல்லல்பட்டுக் கொண்டிருக் கும் மகளிரே சொன்னபொழுது, அரசுக்கு எந்த அளவிற்கு வருவாய் இழப்பு வந்தாலும், மதுவிலக்கினை நடைமுறைப் படுத்திட வேண்டும் என உறுதிபூண்டதாக நிதிஷ்குமார் தெரி வித்தார். மேலும் கள் இறக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் களுக்கு மறுவாழ்வு மாற்றுப்பணி அளிக்கும் திட்டம் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர் களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் நிதிஷ் குமார் குறிப்பிட்டார்.

நிதிஷ்குமார்தம் புத்தநெறி ஈடுபாடு
உரையாடிக் கொண்டிருக்கும்பொழுதே டாக்டர் இலக்கு வன் தமிழ், இந்து மதம் இந்நாட்டிற்குரிய பண்பாட்டில் உருவான மதமல்ல எனக் குறிப்பிடத் தொடங்கியபோது, முதலமைச்சர் நிதிஷ்குமார், இலக்குவன்தமிழ் அவர்களது பக்கம் சற்று திரும்பி “உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்றார் புத்தருடைய படம் மாட்டப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டிட விழைந்தார். மனிதரில் பிறப்பின் அடிப்படை யில் ஏற்றத்தாழ்வுகள், பேதங்கள் நிலவிய சூழலை எதிர்த்து உருவான புத்தமதம் சமத்துவத்தை போதித்ததை விளக்கி நிதிஷ்குமார் பேசினார். தமிழர் தலைவரும், புத்தமாநாடு நடத்திய தந்தை பெரியார்தம் சமுதாயப் பணியினையும், பெரியாரும் அம்பேத்கரும் சேர்ந்து 1954ஆம் ஆண்டு மியான்மர் தலைநகர் ரங்கூனில் உலக புத்த மாநாட்டில் கலந்து கொண்டதையும் விவரித்துப் பேசினார். “புத்தர் என் பது ஒரு தனிநபரை மட்டும் குறிக்கும் சொல் அல்ல: புத்தியைப் பயன்படுத்திடும் அனைவரும் புத்தரே” என தமிழர் தலைவர், தந்தை பெரியாரின் கூற்றினைக் குறிப்பிட்டு பேசியவுடன் அதனை மகிழ்ச்சியுடன் நிதிஷ்குமார் ஆமோதித்தார்.
புத்தநெறியில் தமக்குள்ள ஈடுபாட்டை நிதிஷ்குமார் எடுத்துச்சொல்லும் போது, தாம் எங்கெல்லாம் சென்று குடியேற வாய்ப்பு இருந்ததோ அந்தந்த இடங்களிளெல்லாம் புத்தரின் அறிவுச் சின்னமான போதிமரத்தினை நடும் பழக்கத் தினை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். தாம் தற்பொழுது வசித்துவரும் முதல்வர் இல்ல வளாகத்திலும் போதி மரம் உள்ளதைக் குறிப்பிட்டு அவசியம் வந்து பார்வையிட வேண்டும் என தமிழர் தலைவரைக் கேட்டுக் கொண்டார். பின்னர் நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகள் குறித்து தமிழர் தலைவருடன் கருத்துப் பரிமாறிக் கொண்டார்.
முதலமைச்சர் இல்ல வளாகத்தில் வளர்ந்துள்ள போதி மரத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்று காண்பித்தார். அச்சமயம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வருகைதரும் சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவதை வழக்கமாக, வாடிக்கையாக உள்ளதை தமிழர் தலைவர் எடுத்துரைத்தார். மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நிதிஷ்குமார் அவர்களை தமிழ்நாட்டிற்கு வருகை தரும்படி தமிழர் தலைவர் அழைப்பு விடுத்தார். அந்த சமயம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு அவசியம் வருகை புரிய வேண்டும் என்றும் தமிழர் தலைவர் வேண்டிக் கொண்டார்.
முதல்வர் இல்ல வளாகத்தில் இருந்த போதி மரத்தினைப் பார்த்துவிட்டு வருகையில், அங்கு நின்றிருந்த பீகார் அரசின் பல்வேறுதுறைகளைச் சார்ந்த செயலர்களை அய்.ஏ-.எஸ் அதிகாரிகளை தமிழர் தலைவருக்கு நிதிஷ்குமார் அறிமுகப் படுத்தி வைத்தார். அந்த அதிகாரிகள் அரசு நிர்வாகத்தின் புத்தாக்கத்திற்கு, எடுத்துவரும் முயற்சிகளுக்கு உறுதுணை யாக இருந்து வருவது பற்றியும் நிதிஷ்குமார் எடுத்துரைத்தார். சற்றுநேரம் திறந்த வெளியிலேயே உரையாடிய பின்னர், நாளை நீங்கள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தமிழர் தலைவரிடம் விசாரித்துத் தெரிந்துக் கொண்டு அங்கிருக்கும் அதிகாரிகள் உரிய பாதுகாப்புடன் கவனித்துக் கொள்வார்கள் எனக் கூறி நாளை மறுநாள் விழா நிகழ்ச்சியில் சந்திக்கலாம் எனக்கூறி நிதிஷ்குமார் விடை கொடுத்தார்.
புத்தரின் அறிவுச் சின்னமான போதிமரம் தமிழ்நாட்டு அரசமரமே!
முதலமைச்சரைச் சந்தித்துவிட்டு திரும்பி வரும் பயணத் தின் பொழுதே தமிழர் தலைவர் புத்தமதம் பற்றி விளக்கி வந்தார். “புத்தரின் அறிவுச்சின்னமான ‘போதி மரம்’ என்பது தமிழ்நாட்டில் பரவலாக உள்ள அரசமரமே. ஆங்கிலத்தில் றிuஜீவீறீ ஜிக்ஷீமீமீ என்பார்கள். பீகார் மற்றும் வடமாநிலங்களில் அரச மரமான போதிமரம் போற்றுதலுக்குரிய சின்னமாக, புத்தர் நெறி வழங்கியதன் அடையாளச் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில், குறிப்பாக ஆற்றங் கரையில், நீர்நிலைப் பகுதியில் அரசமரம் இருப்பது வெறும் இயற்கைச் சூழலால் வந்தவை அல்ல. அந்நாளில் புத்தமதம் தமிழ்நாட்டில் எந்த அளவிற்குப் பரவி, மக்களால் போற்றப் பட்டு வந்திருக்கிறது என்பதை நினைவூட்டக்கூடிய வரலாற் றுச் சின்னமாகவே, வழக்கத்தில் உள்ள அடையாளமாகக் கருதிட வேண்டும். பின்னாளில் வேதமதமான இந்துமதம் ஆதிசங்கரர் காலத்தில், வேதமதத்தினை ஓர்மைப்படுத்தும் செயல் எனக்கூறி அந்நாளில் ஆண்ட அரசர்களின் ஆதர வோடு வன்முறையில் இறங்கி புத்தநெறிச் சின்னங்களை அழித்து, அழிக்க முடியாதவற்றை திரிபுநிலைக்கு ஆளாக்கிய நிலைகள் வரலாற்றில் ஆதாரப்பூர்வமாக உள்ளன. அப்படி புத்தநெறிச் சின்னங்களுள் ஒன்றான போதிமரம் எனும் அரச மரம் இந்துமதமாக்கலுக்கு ஆட்படுத்தப்பட்டு, கி.பி.ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஊடுருவிய பிள்ளையார் சிலை களை திட்டமிட்டு அங்கே நிறுவி, அனைவரின் கவனத்தை யும், வழிபாட்டையும் ஊக்குவிக்கும் விதமாக ‘அரசமரத்துப் பிள்ளையார்’ எனும் சொல்லாடலும் வழக்கப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசமரங்கள் அனைத்தும் அன்று பரவ லாக நிலவி வந்த புத்தநெறியின் எச்சங்களே என சிறிய கருத்து விளக்கப் பிரச்சார உரையாகவே தமிழர் தலைவர் கூறி முடிப்பதற்குள் அரசு விருந்தினர் இல்லம் நெருங்கி விட்டது. இரவு உணவாக வடமாநிலங்களுக்கே உரிய கோதுமை ரொட்டி-பருப்புக்கூட்டு மற்றும் சிறிது அரிசிச் சோறு தயிர் என வடமாநிலச் சுவையுடன் விருந்தினர் இல்ல உணவகத்திலேயே தயாரித்து பரிமாறினர். இரவு உணவு உண்டபின்பு சற்றுநேர உரையாடலுக்குப் பின்னர் தமிழர் தலைவர் உறங்கச் சென்றார். முதல்நாள் பாட்னா வருகை பற்றி அடுத்தநாள் வரவிருக்கும் ‘விடுதலை’ இதழுக்கான செய்தியாக அனுப்பி விட்டு நாங்களும் தூங்கச் சென்றோம்.

பீகார் மாநிலத்தில் தமிழர் தலைவர்
புத்தநெறி போற்றுதலுக்குரிய புத்தகயாவிற்கு தமிழர் தலைவர் பயணம் - ஒரு தொகுப்பு (2)
புத்தநெறி போற்றுதலுக்குரிய புத்தகயாவிற்கு தமிழர் தலைவர் பயணம் - ஒரு தொகுப்பு (2)
அடுத்தநாள் காலை 7.30 மணிக்கெல்லாம், சரியாகச் சொன்ன நேரத்தில் இரண்டு கார்கள் தமிழர் தலைவரையும் உடன் உள்ளவர்களையும் புத்தகயாவிற்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டன. தமிழ்நாட்டு கோடைகால வெயிலை விட சற்றுக் கூடுதலாகவே தட்பவெப்பச் சூழல் நிலவியது. அனல்காற்றும் அழுத்தமாகவே வீசியது பகல்நேரத்தில், நடுப்பகலில் புத்தகயாவில் நிலவிடும் வெயிலை கருத்தில் கொண்டு குடை, தொப்பி என வெயிலின் தாக்கத்தை மட்டுப்படுத்துகின்ற பொருட்களுடன் புத்தகயா செல்ல அணியமானோம். சரியாக 8 மணிக்கு காலைச் சிற்றுண்டியினை முடித்துவிட்டு புறப்பட்டோம். 110கி.மீ தூரத்தில் புத்தகயா இருந்தது. சாலை அமைப்பும், வாகன நெரிசலும் பயண நேரத்தைச் சற்று நீடித்தது.
பீகார் நகரைவிட்டு 2 கி.மீ பயண தூரத்தில் நகர்சார்ந்த பகுதி தொடங்கி விடுகிறது. அளவுக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும் பேருந்துகளைக் காணமுடிந்தது. பேருந்துக்குள் மட்டுமின்றி பேருந்தின் மேலேயும் ஆட்டுமந்தைகள் போல பயணிகள் கொத்தாக அமர்ந்து பயணம் செய்யும் காட்சியைக் காணமுடிந்தது! அவ்வாறு பயணம் செய்வது ஆபத்தானது எனும் நினைப்பு கூட பயணிகளுக்கு ஏற்படாதவாறு, அதனால் ஏற்படும் விபத்து- நிலைகளைப் பற்றிய உணர்வு ஏதும் இன்றி மக்கள் பயணம் செய்து கொண்டு இருந்தனர். தமிழ்நாட்டில் நிலவிடும் போக்குவரத்து பொதுப்பேருந்து பயணவசதி பற்றிய நினைவு வந்தது. இந்தக் காட்சிகளை தமிழ்நாட்டில் காணத்தான் முடியுமா? ‘திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் என்ன செய்தது?’ என கேள்வி கேட்பவர்கள் பிற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள முன்னேற்றச் சூழல், உருவாக்கப்பட்ட போக்குவ ரத்து வசதி வாய்ப்புகள் பற்றி ஒப்பிட்டுப் பார்த்தபின் கேள்வி எழுப்புவார்களா?
கலைஞர் தலைமையிலான திராவிடமுன்னேற்றக் கழக ஆட்சியின் பொழுது தனியார் பேருந்து நிறுவனங்களை நாட்டுடமையாக்கி, அதுவரை பேருந்துவசதி இல்லாத ஊர்களுக்கும், மூலை முடுக்கில் உள்ள குக்கிராமங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் வசதியான பேருந்துப் பயண வசதி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது. சாலையில் ஓடும் பொதுப்பேருந்துகளின் கட்டமைப்பு, வசதி, அழகிய தோற்றம் தமிழ்நாட்டில் உள்ளதைப் போல வேறு எந்த மாநிலத்திலும் பார்த்திட இயலாது. தமிழ்நாட்டில் மக்கள் மேம்பாடு, நலவாழ்வுத் திட்டங்களில் போக்குவரத்து வசதியில் மாபெரும் வளர்ச்சி கண்டது திராவிட இயக்க ஆட்சியால்தான் என்பது மறுக்கமுடியாத உண்மை என்பது பிற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்த்த பின்னர்தான் விளங்கிடும். சொந்தவீட்டுப் பெருமை பெரிதாகத் தெரியாது. அடுத்த வீட்டிற்குச் சென்று பார்க்கும் பொழுதுதான் நம்வீட்டுப் பெருமையினை உணரமுடியும்; உண்மைநிலை அறிந்திடமுடியும்.
பாட்னா நகரிலிருந்து இரண்டு மூன்று மாவட்டப் பகுதிகளைத் தாண்டி புத்தகயாவினை நோக்கிய பயணம் தொடர்ந்தது. கயா என்பது ஒரு மாவட்டத்தின் தலைநகர். அங்கிருந்து 12 கி.மீ தொலைவில் புத்தகயா அமைந்துள்ளது. சிறிய மாவட்டம் என்றாலும் சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக வெளிநாட்டுப் புத்தநெறிப் பற்றாளர்கள் மற்றும் பயணிகளின் வருகை வசதிக் கான கயாவிற்கு பாட்னாவிலிருந்து ரயில், விமானப் போக்குவ ரத்தும் உள்ளது. சிறிய விமானங்கள் வந்து இறங்குகின்ற வகை யில் கயாவில் விமானநிலையமும் செயல்பட்டு வருகிறது.
கயா நகருக்கு முன்பாகவே 25கி.மீ தொலைவில் எங்களைப் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல காவல்துறை வாகனம்(Pilot Jeep)
காத்திருந்தது. எங்களது வாகனம் அந்த இடத்திற்கு வருவதை செல்பேசி வாயிலாக காவல்துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். எங்களது வாகனம் அந்த இடத்திற்குச் சென்றதும் காவல்துறையினர் தமிழர் தலைவருக்கு சல்யூட் செய்து மரியாதை செய்தனர். பின்னர் காவல்துறை வாகனம் போக்குவரத்தினைச் சரிசெய்து கொண்டு முன்னே செல்ல, நாங்கள் பயணம் செய்த வாகனம் அதைத்தொடர்ந்து சென்றது.
கயா நகரில் நுழைந்ததும், நேராக அரசு விருந்தினர் இல்லத்தை நோக்கி வாகனம் சென்றது. விருந்தினர் இல்லத்தில் கயா மாவட்ட சிறப்பு உதவி ஆட்சியர் (Special Sub Collector) தமிழர் தலைவரை வரவேற்று இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார். இரண்டரை மணிநேரத்திற்கும் மேலாக பயணம் செய்த நிலையில் சற்று நேரம் இல்லத்தில் தங்கி தேநீர், எலு மிச்சை சுவைநீர் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.
கிளம்பும் முன்னர் கயாவில் விஷ்ணு கோவில் ஒன்று உள்ளது; பிரசித்தி வாய்ந்ததாம். புத்தகயாவிற்கு செல்பவர்கள் விஷ்ணுகோயிலுக்குச் செல்வார்கள் எனக்கூறிய உதவி ஆட்சியரிடம், தமிழர் தலைவர் விஷ்ணுகோயிலின் சிறப்பு என்ன எனக் கேட்டார். மோட்சத்திற்குப் போகவேண்டும் என வேண்டுதல் உள்ளவர்கள் விஷ்ணுகோயிலுக்குச் செல்வார் கள் என ஆட்சியர் பதிலளித்தார். தமிழர் தலைவர், சிரித்துக் கொண்டே உயிரோடு இருக்கையில் தேவைப்படும் புத்தியை வழங்கிய புத்தரின் போதனைகளை நினைவுப்படுத்தும் புத்த கயாவிற்கே செல்ல விரும்புகிறோம் எனக்கூறினார்! கிளம்புவ தற்கு முன்பாக நண்பகல் உணவிற்கு என்ன சமைத்திட வேண்டும் காய்கறி உணவா அல்லது இறைச்சி உணவா என விருந்தினர் இல்லத்தினர் கேட்டறிந்து கொண்டனர். புத்தகயா வினை பார்த்திட ஒருவித ஆவலுடன் நெருங்கிக் கொண்டு இருந்தோம். சென்ற வழி எல்லாம் மரங்கள் அடர்ந்த காடுகள் நிரம்பிய சூழல்.
இன்றைய நேபாள நாட்டில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து, இன்றைய இந்தியநாட்டு மாநிலமான, பீகாரின் தென் பகுதியில் உள்ள பாடலிபுத்திரத்தை (பாட்னா)த் தாண்டி புத்த கயாவிற்கு எப்படி புத்தர் வந்திருப்பார்! 2500 ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்து வசதி, சாலை வசதி இல்லாத நிலையில் ஆரம்பக் கட்டத்தில் இருந்திருக்கும் இன்னல்கள் பலவற்றை யும் நேர்கொண்டுதான் புத்தர் கயாவிற்கு வந்து சேர்ந்திருப்பார் என்பதை நினைத்திட்டபொழுது பெரும் வியப்பு தென்பட்டது.
புத்தகயா காட்சிகள், மாட்சிகள்
15 நிமிடப் பயணத்தில் புத்தகயாவைச் சென்றடைந்தோம். தமிழர் தலைவர் வருவதை எதிர்பார்த்து புத்தகயா கோயிலின் தலைமைத் துறவி வணக்கத்திற்குரிய சிலேந்திரா மற்றும் புத்தகயா கோவில் (மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள) நிர்வாக அதிகாரியும் தமிழர் தலைவரையும் எங்களையும் வரவேற்று புத்த விகாருக்கு அழைத்துச் சென்றனர். சுட்டெரிக்கும் வெயிலில் தமிழர் தலைவர் தொப்பி அணிந்து கொண்டார். புத்த விகாருக்குப் போவதற்கு முன்னர் புத்தகயா நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று குளிர்பானம் கொடுத்தனர். பின்னர் எங்களது காலணிகளை கழற்றச் சொல்லிவிட்டு, அவர்கள் தந்த மென்மையான வெள்ளை நிறக் காலணியினை அளித்து அணிந்து கொள்ளச் சொன் னார்கள். விகார் முழுவதும் அந்த காலணியினை அணிந்த வாறே, விகாரில் உள்ள புத்தர் வழிபாட்டு இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டோம். காலணி மாற்றம் என்பது தூய்மை கருதித்தான். விகாருக்குள் செல்லும்பொழுது காலணி யுடன் செல்லக் கூடாது என்ற விதி ஏதும் இல்லை எனத் தெரிந்தது. இந்துமதக் கோயில்களுக்கும், புத்த விகாருக்கும் உள்ள வேறுபாட்டிற்கு எடுத்துக்காட்டாக காலணியுடன் செல்லும் நிலை என்பது புத்தர் வழிபாடு செய்யப்பட்டாலும், எந்த இடமும் தூய்மையுடன் விளங்கிட வேண்டும் எனும் வாழ்க்கை நெறியினை வலியுறுத்துவதாக இருந்தது!
விகாருக்குள் புத்தரின் பெரிய சிலை வழிபாட்டிக்குரியதாக இருந்தது. வழிபாட்டு முறையில் விளக்கு ஏற்றும் வழக்கமும் விகாரில் நிலவியது. எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றவில்லை; மாறாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தனர். ஊதுபத்தி பொருத்தி வழிபாடு செய்யும் பழக்கமும் அங்கு கடைபிடிக்கப்படுகிறது. அங்கு நடந்ததை தமிழர் தலைவரும், உடன் சென்றிருந்தோரும் பார்வையாளர்களாக இருந்து கவனித்தோம். புத்தத் தலைமைத் துறவி வழிபாடு செய்தபின்னர், புத்தர் சிலைக்கு நேர் எதிராக தரையில் ‘லிங்க வடிவம்’ ஒன்று இருந்தது. உடனே தமிழர் தலைவர், ‘புத்தவிகாரில் சிவலிங்கத்திற்கு அவசியம் என்ன?’ என்று புத்த துறவியிடம் கேட்டார். அதற்கு தலைமைத் துறவி அளித்த பதில் மிகவும் வியப்பாக இருந்தது. புத்தகயாவில் உள்ள புத்தவிகார் மிக நெடுங்காலமாக வேத மதக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது எனத் தெரிவித்தார். வேத மதத்தின் ஆதிக்க வன்முறைச் செயலுக்கு புத்தகயாவும் பலியாகி இருந்தது. புத்தகயாவில் இன்றும் நீடிக்கும் சங்கரமடமே ஆதிக்க ஊடுருவலின் அடையாளமாக இருக்கிறது. 1050 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையிலிருந்து வந்த தருமபாலர் என்னும் புத்தமார்க்க நெறியாளர் ஆதிக்கக் கட்டுப்பாட்டில் இருந்த புத்த விகாரை மீட்டெடுத்தாராம். பின்னர், பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும், வேத மதக் கட்டுப் பாட்டிலிருந்து புத்த விகாரை மீட்க பல வழக்குகள் நடைபெற்று இன்றைய நிலைக்கு புத்தவிகார் வந்துள்ளது. வேத மதக் கட்டுப்பாட்டிலிருந்து புத்தவிகார் விடுபட்டாலும், கட்டுப்பாடு நிலவியதின் எச்சங்களாக விகாருக்குள்ளே சிவலிங்கம் தங்கி விட்டது; தங்களால் அதை அகற்ற முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தலைமைத் துறவியே தெரிவித்தார். புத்த கயா வில் உள்ள புத்தவிகாருக்கே இந்த நிலை என்றால் நாட்டின் மற்ற பகுதிகள் வேத மதத்தின் கட்டுப்பாட்டில் புத்தநெறி தொடர்பான இடங்கள் மற்றும் சின்னங்கள் எந்த அளவில் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கும்; ஆதிக்க வன்முறையினர் புத்தநெறி அடையாளங்களை எப்படியெல்லாம் சிதைத்திருப் பார்கள் என ஊகித்தது புத்தவிகாரில் உள்ள நிலைமைகளால் மேலும் உறுதிப்பட்டது.
புத்தகயாவிலும், தமிழர்களைச்
சந்தித்த தமிழர் தலைவர்
புத்தவிகாருக்குள் சென்ற தமிழர் தலைவரை (தொப்பி அணிந்த நிலையில்) சற்றுத் தயக்கத்துடன் பார்த்து வேட்டி சட்டை அணிந்த அய்ந்து பேர், உடன் சென்ற எங்களிடம் ‘விகாருக்குள் செல்பவர் வீரமணி அய்யாதானே!’ என தமிழில் கேட்டனர். ‘ஆம்’ என பதிலளித்து அவர்களைப் பற்றி விசாரித்தபொழுது நெல்லை மாவட்டம் சிவகிரிக்கு அருகில் இராயகிரியைச் சார்ந்தவர்கள் எனவும் சுற்றுலாப் பயணமாக புத்தகயா வந்ததாகவும் தெரிவித்தனர். தமிழர் தலைவரிடம் தமிழ்நாட்டவர்கள் வந்திருக்கிறார்கள் என தெரிவித்தவுடன் தலைமைத் துறவியிடம் சற்று பொறுங்கள் என சொல்லிவிட்டு இராயகிரியைச் சார்ந்த தமிழ்மக்களைச் சந்திக்க வந்துவிட்டார். தமிழர் தலைவரை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் நலம் விசாரித்தனர். தமிழர் தலைவரும் அன்பொழுக அவர்களிடம் உரையாடினார். உரையாடலின் பொழுதே அவர்களுள் திரு.கா.குருசாமி என்பவர் தமிழர் தலைவரிடம், ‘அய்யா. சிவகிரியில் பெரியார் அறக்கட்டளையின் சார்பில் ஒரு உயர் கல்வி நிலையம் தொடங்கப்படவேண்டும். அதற்கு அய்யா விரைவில் ஆவன செய்ய வேண்டும். இது எங்களது நீண்ட நாளைய ஆசை” என வேண்டுகோளினையும் வைத்தார். “பார்த்துச் செய்வோம்” என தமிழர் தலைவர் பதிலளித்தார். ‘பீகாரில் வெயில் அதிகமாக உள்ளது. பாதுகாப்பாக இருந்து, பத்திரமாக ஊர் திரும்புங்கள்’ என சந்தித்த தமிழ் மக்களை தமிழர் தலைவர் அக்கறையுடன் அறிவுறுத்தினார். தமிழர் தலைவருடன் இராயகிரி தமிழர்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். உடனே, ஒளிப்படத்தினை அஞ்சலில் அனுப்பவும் வேண்டினர். அவர்களிடம் முகவரி, செல்பேசி எண் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டோம். (சென்னை திரும்பியதும் அவர்கள் விரும்பியபடி தமிழர் தலைவருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்பட நகல்கள் அஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டன. ஒளிப்படம் பெற்றுகொண்ட மகிழ்ச்சியினையும் செல்பேசி வாயிலாக அவர்கள் தெரிவித்தனர்.)
பின்னர் விகார் வழிபாட்டு இடத்திலிருந்து வெளியே வந்து அதைச் சுற்றி ‘போதி மரம்’ உள்ள இடத்துக்கு தலைமைத்துறவி எங்களை அழைத்துச் சென்றார். போதி மரச் சிறப்பினை எடுத்துக் கூறினார். நாம் விகாருக்குள் இருந்த போதி மரத்தின் வயது எவ்வளவு? என வினவிய பொழுது ஏறக்குறைய 500 வருடங்கள் என துறவி பதிலளித்தார். போதி மரத்தினைச் சுற்றி இரும்புச் சட்டங்கள் போட்டு தடுத்திருந்தனர். இந்து மதக் கோயில்களில் இருப்பதைப் போல, வேண்டுதல் விரும்பி வழிபாடு செய்த மக்கள் அதற்குரிய குறிப்புகளை போதி மரத்தைச் சுற்றியுள்ள இரும்புக் கம்பிகளில் கட்டியிருந்த காட்சியினையும் காண முடிந்தது. விகார் முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு மீண்டும் விகார் நிர்வாக அலுவலகத்திற்கு வந்தார் தமிழர் தலைவர். தமிழர் தலைவரையும், உடன் வந்தோரையும் புத்தநெறி வழக்கப்படி கழுத்திலிருந்து தவழும் நீண்ட துணியினை போர்த்தி மரியாதை செய்தனர். புத்தர் உருவம் அடங்கிய ஸ்படிகத்தை தமிழர் தலைவருக்கு பரிசாக அளித்தனர்.
புத்தநெறியில் கடவுளுக்கு இடமில்லை
தலைமைத்துறவியினைப் பற்றி கேட்டபொழுது, அஸ்ஸாம் மாநிலத்தைச் சார்ந்தவர் எனவும் சிறுவயதிலேயே துறவு மேற்கொண்டு விட்டதாகவும் தெரிவித்தார். தந்தை பெரியார் புத்தமாநாடு நடத்திய செய்திகளும், ரங்கூனில் அண்ணல் அம்பேத்கருடன் தந்தை பெரியார் உலக புத்தக மாநாட்டில் பங்கேற்ற செய்திகளும் தலைமைத் துறவிக்குத் தெரிவிக்கப்பட்டது. உரையாடிக் கொண்டு இருக்கும் பொழுதே ‘கடவுள் இருக்கிறார் என நம்புகிறீர்களா?’ என இலக்குவன்தமிழ், தலைமைத் துறவியைப் பார்த்துக் கேட்டார். சற்றும் தயங்காமல் ‘கடவுள் இல்லை’ என தலைமைத் துறவி பதிலளித்தார். அடுத்து ‘மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளதா?’ என்று கேட்டதற்கு ‘இல்லை’ என பதில் அளித்தார். ‘ஆத்மா’ என்பதிலாவது நம்பிக்கை உள்ளதா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’ என்பதே அழுத்தமான பதிலாக இருந்தது. நிறைவாக தமிழர் தலைவர் “எதில்தான் உங்களுக்கு நம்பிக்கை உள்ளது?” என வினவியபோது “அறிவில்தான் நம்பிக்கை வைத்துள்ளோம்” என மிகவும் அபாரமாக தலைமைத் துறவி பதிலளித்தார்.
புத்த விகார் நிர்வாக அலுவலகத்திலிருந்து கிளம்பினோம். விகாருக்குள் செல்லும்பொழுதே விகார் வளாகத்திலேயே புத்தக நிலையத்தைப் பார்த்த தமிழர் தலைவர் திரும்பி வரும் பொழுது சற்றுநேரம் புத்தக நிலையத்தில் செலவழித்திட வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி புத்தக நிலையத் திற்குள் நுழைந்தார். புத்தநெறி மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பற்றிய புத்தகங்கள் பலவற்றை விலை கொடுத்து வாங்கினார்.
புத்தர் இளவயதில் துறவு மேற்கொண்டதாகக் கூறப்படும் வரலாறு உண்மையானதல்ல; புத்தர் நாட்டை விட்டு வெளியேறியது சில அரசியல் முடிவுகளினால் என்பதே உண்மை வரலாறு. புத்தரின் உண்மையான வரலாற்றை அறிந்துகொள்ள எந்தப் புத்தகத்தை தெரிவு செய்யலாம் என தலைமைத் துறவியிடம் நாம் கேட்ட பொழுது, சற்றும் தயங்காமல், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எழுதிய, “புத்தமும் தம்மமும்” (Buddha and Dhamma) எனும் புத்தகத்தினை அடை யாளம் காட்டினார். புத்தக மூட்டைகளுடன் நிலையத்தினை விட்டு வெளியில் வந்தோம். எங்களை வரவேற்ற புத்தகயா தலைமை நிர்வாக அலுவலகம் வரை வந்து தலைமைத் துறவியும், தலைமை நிர்வாக அலுவலரும் விடை கொடுத் தனர். இருவருக்கும், தந்தை பெரியாரின் வாழ்க்கை குறிப்பு (Periyar E.V.Ramasamy - A Biographical Sketch), பெரியாரின் சிந்தனைகள் (Periyar Thoughts), ‘டாக்டர் கி.வீரமணியை கேளுங்கள்’ (Listen to K.Veeramani) ஆகிய ஆங்கிலப் புத்தகங்களை பரிசாகத் தமிழர் தலைவர் அளித்தார். நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.
தாய்லாந்து நாட்டு புத்தவிகார்
பின்னர் புத்த கயாவில் இருக்கும் தாய்லாந்து புத்த சங்கம் நிறுவியுள்ள புத்த விகாரைப் பார்வையிடச் சென்றோம். புத்தவிகாரின் வெளிப்புறத் தோற்றமும், கட்டட அமைப்பும் தாய்லாந்து நாட்டு கலை பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்தது. புத்தவிகாரின் உள்ளே சென்றதும் அங்கு நிலவிய சூழல் தாய்லாந்து நாட்டிற்கே சென்றுவிட்டதைப் போன்று இருந்தது. அங்கு இருந்த துறவியர், அவர்களது வழக்கப்படி வழிபாடு செய்து, மோகனா அம்மாவிற்கு தாய்லாந்து நாட்டு புத்தவிகாரின் மாதிரிப் பரிசினை வழங்கினர். துறவிகளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அருகிலேயே இருந்த ஜப்பான்நாட்டு புத்த சங்கத்தினர் நிறுவியுள்ள மிகப்பெரிய புத்தர் சிலை யினைப் பார்க்கச் சென்றோம்.
80 அடி உயரத்தில் புத்தர் சிலை
வெயில் கொடுமை உச்சத்தில் இருந்தும், தமிழர் தலைவர் ஜப்பான் நாட்டு புத்த சங்கத்தினர் நிறுவியுள்ள புத்தர் சிலையினைப் பார்க்க பெரிதும் ஆவலுடன் சென்றார்.
மிகப் பிரம்மாண்டமான அளவில் 80 அடி உயரத்தில் புத்தர் உட்கார்ந்திருக்கும் நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. புத்தர்சிலையின் அவரது சீடர்கள் 10 பேரின் உருவச் சிலைகள் இருபுறமும் ஒவ்வொரு பக்கமும் 5 சீடர்களின் சிலைகள் என நிறுவப்பட்டு இருந்தது. சிலை யின் தோற்றமும், சூழலும் மிகவும் பிரமிப்பை ஊட்டுவதாக இருந்தது. சற்று தொலைவில் இருந்து பார்க்கும்பொழுதுதான் புத்தர் சிலையின் பிரம்மாண்டம் முழுமையாகத் தெரிந்தது. சிலையின் 80 அடி உயரத்திற்கான பின்னணி, புத்தர் 80 ஆண்டு காலம் வாழ்ந்ததைக் குறிப்பதாக இருந்தது. உடனே தமிழர் தலைவரின் எண்ண அலைகள் திருச்சி -- சிறுகனூரில் அமைந்திட உள்ள பெரியார் உலகத்தினைப் பற்றி எழுந்தது! பெரியார் அய்யா 95 ஆண்டு காலம் வாழ்ந்ததைக் குறிக்கும் வகையில் எழுப்பப்படும் 95 அடி உயரச் சிலை இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திட வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார். அங்கு இருந்த ஒரு அறிவிப்புத் தூணில் 80 அடி உயர புத்தர் சிலையினை உருவாக்கிய சிற்பியின் பெயர், விபரம் இருந்தது. அதனைக் குறித்துக் கொள்ளச் சொல்லி தமிழர் தலைவர் பணித்தார். செல்பேசி ஒளிப்படக் கருவியின் மூலம் அறிவிப்பு பலகையினை படம் எடுத்துக் கொண்டோம்.
பிற்பகல் 2.30 மணியினையும் தாண்டிவிட்டவேளையில் மீண்டும் 12 கி.மீ பயணித்து கயாவிலிருந்த அரசினர் விருந் தினர் இல்லத்திற்குத் திரும்பினோம். நண்பகல் உணவு சமைத்து வைத்திருந்தனர். விருந்தினர் மாளிகை ஊழியர்கள் அன்பு கலந்த மரியாதையுடன் உணவு பரிமாறினர். உண விற்குப் பின் சற்றுநேரம் இளைப்பாறிய பின்னர், தமிழர் தலை வருடன் 4 மணி அளவில் கயாவிலிருந்து கிளம்பினோம். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்த சிறப்பு உதவி ஆட்சியருக்கு தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய ஆங்கில புத்தகத்தினை தமிழர் தலைவர் பரிசாக அளித்தார். விருந்தினர் மாளிகையில் இருந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கயாவிலிருந்து விடைபெற்றோம். கயா விற்கு வருவதற்கு முன்பே பாதுகாப்புக்காக வந்த காவல்துறை யினர் எங்களை முதலில் எங்கு நேர்கொண்டு அழைத்துச் சென்றனரோ அந்த இடம் வரை வாகனத்தில் வந்து பின்னர் விடைபெற்றனர்.
கயாவிலிருந்து பாட்னாவிற்கு திரும்பி வந்த பயண நேரம் முழுவதும் புத்தநெறி, புத்தர் வரலாறு பற்றிய செய்திகளைத் தமிழர் தலைவர் சொல்லிக்கொண்டே வந்தார். இரண்டு மணிநேரத்திற்கு முன்புதான் புத்தகயாவில் வாங்கிய ‘புத்தகயா வரலாறு’ பற்றிய நூலை அதற்குள் படித்துவிட்டு, வரலாற்றுச் செய்திகளைக் கூறினார். புத்தகயாவை வேதமத ஆதிக்க வன்முறையாளர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்க எப்பாடுபட்டனர் என்பதை கூறிக் கொண்டு வந்தார். அந்த வரலாற்றுச் செய்திகளையெல்லாம் சர்.எட்வின் ஆர்னால்ட் எனும் ஆங்கில அதிகாரி பட்ட இன்னல்களை எடுத்துச் சொல்லிக் கொண்டே வந்தார். சென்னை திரும்பியதும், புத்தநெறி பற்றியும், புத்தமார்க்கம் நேர்கொண்ட ஆதிக்க வன்முறை அட்டூழியங்கள் பற்றியும் விரைவிலேயே ஒரு தொடர் சொற்பொழிவினை நடத்திட வேண்டும் எனும் உறுதிப்பாட்டினையும் தமிழர் தலைவர் தெரிவித்தார்.
3.30 மணி நேரப் பயணத்தில் மீண்டும் பாட்னா அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்தோம். அடுத்தநாள் நடை பெறவுள்ள சமூகநீதி விருது வழங்கிடும் விழா ஏற்பாடுகளை கவனித்திடும் பொருட்டு தோழர் கருணாநிதி புத்தகயாவிற்கு வர இயலவில்லை. அடுத்த நாள் விழா ஏற்பாடுகள் மற்றும் விழாவில் பங்கேற்றிடவுள்ள விருந்தினர் வருகை பற்றிய விபரங்களை தோழர் கருணாநிதி தமிழர் தலைவரிடம் விவரித்தார். இரவு உணவிற்குப் பின் உறங்கச் சென்றோம்.

தமிழர் தலைவரின் பாட்னா பயணம் ஒரு தொகுப்பு 3
- வீ.குமரேசன் -
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது
வழங்கிடும் விழா
தமிழர் தலைவரின் பீகார் மாநிலப் பயணத்தின் முக்கிய நிகழ்வான பாட்னாவில் நடைபெறவிருந்த 2015 ஆண்டுக்குரிய சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கிடும் விழா நாள் ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் வந்தது. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கு வழங்கப்படவிருந்த விருது விழாவிற்கு வரவேண்டிய விருந்தினர்கள் அனைவரும் பாட்னா நகருக்கு வந்துவிட்டனர். டெல்லியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தோழர் து.ராஜா வருகை தந்தார். அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் செயலர் செம்மலும் (Secretary General) மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கே.சி.தியாகி ஒரு நாள் முன்னரே வந்துவிட்டார். விருது வழங்கிடும் விழா நடைபெறுவதற்கு தொடக்கம் முதல் உறுதுணையாக இருந்த வர் கே.சி.தியாகி அவர்களாவார்.
முதல்நாள் பாட்னாவிற்கு வந்த கே.சி.தியாகி அவர்கள், முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களை நேரில் சந்தித்து விழா ஏற்பாடுகள் பற்றிய பணிகளில் உரிய பணிகளை, விளக்கி ஆதரவினை அளித்து வந்தார். விழாவிற்கு வந்த விருந்தினர் அனைவரும் அரசு விருந்தினர் மாளிகையிலேயே தங்கியிருந்தனர். காலை 8 மணி அளவில் கே.சி.தியாகி அவர்கள் தமிழர் தலைவரை அறைக்கு நேரில் வந்து சந்தித்து வரவேற்று மகிழ்ந்தார். முதல்நாள் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களை தாம் சந்தித்து நடந்த உரையாடல் குறித்து தமிழர் தலைவரிடம் எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் பாட்னா நகருக்கு வருகை தந்த அன்று முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களைச் சந்தித்த செய்திகளை, முதல்வர் தம்மிடம் கூறியதாக தியாகி தெரிவித்தார். தமிழர் தலைவருடனான சந்திப்பு மிகவும் மனநிறை வும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்ததாக முதல்வர் தெரிவித்ததைக் கூறினார். தமிழர் தலைவரின் சமூகநீதிக் கொள்கை சார்ந்த விளக்கம், எதிர்காலத்தில் பணியாற்றிட வேண்டிய தளம் பற்றிப் பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினாராம். தந்தை பெரியார், திராவிட இயக்கம் பற்றிய செய்திகளை தமிழர் தலைவர் எடுத்துரைத்த விதத்தினை மிகவும் உன்னிப்பாக கவனித்த முதல்வர், கே.சி.தியாகியிடம், திராவிடர் கழகம் பற்றி மிகவும் பெருமையாக ஒரு கொள்கைப் பூர்வமான சிறப்பு அமைப்பு என்று குறிப்பிட்டாராம்.மேலும் நிதிஷ்குமார் அவர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்திட வேண்டும் என தமிழர் தலைவர் விடுத்த அழைப்பினையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து, தமிழகம் வருவதற்கு ஒப்புதல் அளித்துள்ள செய்தியினையும் தெரிவித்தார். விழா ஏற்பாடு களைக் கவனிக்க தாம் முன்னரே செல்ல விருப்பதால் விழா நிகழ்ச்சியில் சந்திக்கலாம் எனக் கூறி தமிழர் தலைவரிடம் சொல்லிவிட்டு தியாகி சென்றார்.
காலை உணவினை முடித்து விழாவிற்கு கிளம்பிச் செல்ல அறையிலிருந்து வெளியே வந்தபொழுது தோழர் டி.ராஜா அவர்களை தமிழர் தலைவர் சந்திக்க நேர்ந்தது. தமிழர் தலைவருக்கு ‘வணக்கம்’ தெரிவித்த தோழர் டி.ராஜா அவர்கள் தமிழர் தலைவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார். சமூகநீதி விருது வழங்கிடும் விழாவிற்கு தமக்கு திராவிடர் கழகத்திலிருந்து அழைப்பு வரவில்லை என ஆதங்கப்பட்டார். உடனே தமிழர் தலைவர், ‘இந்த விருது வழங்கிடும் விழாவினை திராவிடர் கழகம் நடத்தவில்லை. சமூகநீதி விருது தமது பெயரால் நிறுவப்பட்டுள்ளது. தாமே ஒரு விருந்தினர் என்ற நிலையில்தான் பங்கேற்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பெரியார் பன்னாட்டக இயக்குநர் முனைவர் இலக்குவன்தமிழ் அவர்களை ராஜா அவர்களுக்கு தமிழர் தலைவர் அறிமுகப்படுத்தினார். பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு என தோழர் டி.ராஜா அறிந்து கொண்டார். பீகாரில் நிலவிடும் அரசியல் கூட்டணி மாற்ற நிலையிலும், நிதிஷ்குமார் தமக்கு நெருங்கிய நண்பர் என்ற முறையிலும், தமிழர்களால் வழங்கப்படும் விருது என்ற நிலையிலும் தாம் மகிழ்ச்சியுடன் விழாவில் பங்கேற்க வந்துள்ளதையும் தோழர் டி.ராஜா தெரிவித்தார். இருவரும் உரையாடிக் கொண்டு இருக்கும்பொழுதே அம்மா மோகனா அவர்கள் வந்தபொழுது தோழர் டி.ராஜாவிடம் அறிமுகப் படுத்தினார். “தமக்குத் தெரியும் அம்மையார் மோகனா அவர்களை; வைக்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் பொழுது சந்தித்ததை தோழர் டி.ராஜா நினைவுப்படுத்திக் கூறினார். பின்னர் தமிழர் தலைவரும் தோழர் டி.ராஜா அவர்களும் சேர்ந்தே விழா நடைபெறும் அரங்கத்திற்குச் சென்றனர்.
எழுச்சி மிகு சமூகநீதி விழா
பீகார் மாநில சட்டமன்ற வளாகத்தில் சமூகநீதி விருது வழங்கிடும் விழா நடைபெற்றது. பீகார் சட்டமன்ற மேலவை யின் இணைப்பு அரங்கத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. விழா நடைபெறும் அரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். விழா தொடங்கிடுவதற்கு 10 நிமிட நேரத்திற்கு முன்பாக முதல்வர் நிதிஷ்குமார் எளிமையாக, எந்தவித அரசியல் பரபரப்பும் இன்றி அமைதியாக விழா மேடைக்கு வந்தார். தமிழர் தலைவருக்கு ‘வணக்கம்’ தெரிவித்துவிட்டு இருக்கை யில் அமர்ந்தார். பீகார் மாநில சட்டமன்றங்கள் (மேலவை யும், கீழவையும்) இடம்பெயர்ந்து விழா அரங்கத்தில் அமர்ந் தது போன்று அனைத்து எம்.எல்.ஏ மற்றும் எம்.எல்.சி உறுப் பினர்களும் வருகை தந்திருந்தனர். பீகார் மாநிலத்தில் பொது வாழ்க்கையில் பங்கேற்றிடும் பல்வேறு பெருமக்களும் வந் திருந்தனர். பீகார் மாநில அரசின் உயர் அதிகாரிகளும் வந் திருந்து சிறப்புச் சேர்த்தனர். சட்டமன்ற மேலவையின் தலை வரும் சட்டமன்ற கீழவையின் தலைவரும் விழா மேடையில் வீற்றிருந்தது பீகார் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டமன்றங் களைப் பிரதிநிதித்துவப்படுத்தவதாக இருந்தது.
பாட்னாவில் விருது வழங்கும் விழா ஒருங்கிணைப்பாளர், விருது வழங்கிடும் குழுவின் உறுப்பினர் திரு.ரவீந்திர ராம், வருகை தந்தோரை வரவேற்றுப் பேசினார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ், ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது’ பற்றிய அறிமுக உரையில் குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார்தம் மானிட உயர்வுக் கொள்கையை தூக்கிப்பிடித்து பரப்புரை செய்திடும் கலங்கரை விளக்கமாக தலைவர் கி.வீரமணி விளங்கி வருகிறார். 83 வயதினை எட்டிய நிலையில், தமது வாழ்வு முழுவதையும் சமூகநீதி நிலைநாட்டலுக்கு - பெரியார்தம் கொள்கைப் பரவலுக்காகப் பாடுபட்டுவருகிறார். அவர் ஒரு சீரிய சமூக உயர் தலைவரா வார். நமது போற்றுதலுக்கும் நன்றியறிதலுக்கும் உரியவர். எனவே அவர் பெயரால் சமூகநீதிக்கான விருது ஏற்படுத்தப் பட்டுள்ளது.
நிதீஷ்குமார் போன்ற திறன் ஆற்றலுள்ளவர்களால் தார்மீக பண்பாளர்களால் மட்டுமே மதச்சார்பற்ற, பன்முகத் தன்மை கொண்ட அனைத்துப்பிரிவு மக்களையும் உள்ள டக்கிய இந்தியாவை கட்டி எழுப்ப முடியும். அப்படிப்பட்ட நிலையில் பலதரப்பட்ட தன்மை என்பது இந்திய நாட்டிற்கு பலவீனமாக இருக்காது; பலமாகவே விளங்கிடும். ஏனெனில் அத்தகைய நிலையில்தான், நாட்டின் உள்ளடக்கம் உண் மையில் பலம் வாய்ந்ததாக, செல்வச் செழிப்பு மிக்க இந்தியா வாக விளங்கிடும். அத்தகைய நிலைமைக்கு நாட்டை கொண்டு செல்லும் தகுதிசார் நிதீஷ்குமார் அவர்களுக்கு எங்களது போற்றுதலையும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேற்கண்டவாறு, ‘விருதின் பெயரினைத் தாங்கியுள்ள தமிழர் தவைரின் சமூகநீதிப்பணி, விருது நாயகர் முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் ஆற்றிவரும் சமூகநீதிப் பணியின் பொருத்தம் ஆகியன பற்றி எடுத்துரைத்து பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை - விருதுப் பட்டயத்தினை- நிதிஷ்குமார் அவர்களுக்கு வழங் கினார். தமிழர் தலைவரின் முன்னிலையில் அளிக்கப்பட்ட பட்டயத்துடன், ரூபாய் ஒரு லட்சத்திற்கான வங்கி வரை வோலையும் நிதிஷ்குமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது. (இலக்குவன்தமிழ் ஆற்றிய உரையின் முழுவிவரம் விடுதலை (26.4.2016) வெளி வந்துள்ளது)
சமூகநீதி விருது பெற்ற நிதிஷ்குமார் அவர்களுக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். தந்தை பெரியார் சிந்தனைகள் அடங்கிய ஆங்கில நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார். விருதின் பெயர்க் காரணத் தலைவரான தமிழர் தலைவரே விருது நாயகர் நிதிஷ்குமார் அவர்களுக்கு சிறப்புச் செய்தது கண்கொள்ளாக் காட்சியாக, சமூகநீதித் தத்துவ உறுதிப்பாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்ந்தது.
பின்னர் விழாத் தலைவர் பீகார் மாநில சட்டமன்ற அவைத் தலைவர் திரு.விஜயகுமார் சவுத்ரி உரையாற்றினார். விழாவின் சிறப்புரையினை தமிழர் தலைவர் ஆங்கிலத்தில் 20 நிமிடங்களில் வழங்கினார். தமிழர் தலைவர் தனது சிறப்புரையில்,
அனைத்து மக்களுக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி, “அரசியல் நீதி, ஆகிய மூன்று தளங்களில் நீதி வழங்கப்பட வேண்டும். சிலர் சமுகநீதியையும் பொருளாதாரநீதியையும் போட்டு குழப்பிப்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பெரியார் தந்த கொள்கை வழியில் தெளிவாக இருக்கிறோம்.
எங்களது இயக்கம் தெளிவாக உள்ளது. எனவே தான் சமூகநீதி தளத்தில் போராடவேண்டியுள்ளது.
நம் அரசு ஒரு மதச் சார்பற்ற அரசு. அரசின் மதச்சார்பற்ற தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.''
என உரையாற்றினார். சமூகநீதிப் பயணம், பீகார் அரசியல் வானில் நிதிஷ்குமார் கடைபிடித்து வரும் சமூகநீதிக் கொள்கை உறுதிப்பாடு, சமூக ஒடுக்குமறையாளர்களை வென்றெடுத்த வரலாறு என அடுக்கடுக்காக தமது உரையில் கூறிக் கொண்டே வரும்பொழுது மகிழ்ச்சியில் அரங்கத்தினர் கரவொலி எழுப்பினர்.
கரவொலி அடங்கியதும் தமிழர் தலைவரின் அருகில் அமர்ந்திருந்த சட்டமன்ற அவைத் தலைவர் ‘நாங்களெல்லாம் பதவியின் காரணமாக பேச்சாளர். நீங்கள்தான் உண்மையான பேச்சாளர் (We are Speaker by our official responsibility; in fact You are the Real Speaker!)
என தமிழர் தலைவரிடம் கூறி அவரது உரையினைப் பாராட்டினர். (தமிழர் தலைவரின் முழுமையான பேச்சு விடுதலை (28.4.2016) இதழில் வந்துள்ளது.)
தமிழர் தலைவரது உரையினை அடுத்து பீகார் மாநில சட்டமன்ற மேலவைத் தலைவர் திரு.அவதேஷ் நாராயண் சிங் உரையாற்றினார். அவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர் என்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டில், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர். (அரசியல் கட்சி எல்லைகளைத் தாண்டி, சமூகநீதித் தத்துவம் பீகாரில் நிலைகொண்டுள்ள தன்மை தெரிந்தது)
விருது வழங்கிடும் விழாவில் பங்கேற்றிடபெரிதும் ஆர்வம் தெரிவித்து, அழைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் பேரவையின் ஒருங்கிணைப் பாளர் திரு.வி.ஹனுமந்தராவ் விழாவிற்கு வர இயலாத சூழலில் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். திரு.ஹனுமந் தராவ் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை மானமிகு கோ.கருணாநிதி நிகழ்ச்சியில் வாசித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் டி.ராஜா வாழ்த்துரை வழங்கினார். கூட்டத்தில் சால்வை அணிவித்து சிறப்பிப்பது தமிழ்நாட்டில் நிலவிடும் பொது வாழ்க்கைப் பண்பாடாகும். இந்தப் பண்பாட்டினை முதல்வர் நிதிஷ்குமார் மிகவும் ரசித்தார். மகிழ்ச்சியும் அடைந்தார். தோழர் து.ராஜா தமது உரைக்கு முன்பாக நிதிஷ்குமார் அவர்களுக்கு சால்வை அணிவித்துச் சிறப்புப் செய்தார். உடனே சிறப்பினைப் பெற்றுக் கொண்ட நிதிஷ்குமார் கம்யூனிஸ்ட்டுகளும் இப்படி சால்வை அணிவித்துச் சிறப்புச் செய்கின்றார்களா? (Oh! Communists are also practising, putting of shawls ) என வியந்து மகிழ்ந்தார்.
ஜனதா தளக் கட்சியின் செயலர் செம்மல் திரு.கே.சி.தியாகி சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார். அடுத்து இந்திய சமாத னக் கட்சியின் தலைவரும், பீகார் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் முகம்மது அயூப் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக முதலமைச்சர் நிதிஷ்குமார் விருது பெற்றமைக்கு தமது ஏற்புரையில் குறிப்பிட்டதாவது:
திராவிடர் கழகம் பெரியார் இராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் சமூக நீதிக்காகவும் சமத்து வத்திற்காகவும் போராடிய ஓர் இயக்கம்! இந்த இயக்கத்தின் தலைவர் கி.வீரமணி இன்று பாட்னா வந்துள்ளார்கள், பாட்னாவிற்கு இவர் 3-ஆம் முறையாக வந்துள்ளார்கள்.
நான் அவர்களை மனப்பூர்வமாக வரவேற்கிறேன், இந்த நிகழ்ச்சிக்கு மட்டுமல்ல, மீண்டும் மீண்டும் பெரியாரின் கருத்துக்களைச் சுமந்துகொண்டு நீங்கள் பீகார் வரவேண்டும் என்று உங்களை வேண்டிக்கொள்கிறேன், உங்கள் இயக்கத் தின் கருத்துக்கள் பீகார் மக்களையும் சென்றடையவேண்டும் என்பதே என் உளப்பூர்வமான ஆவலாகும்
(நிதிஷ்குமார் அவர்களின் முழுமையான உரை விடுதலை 23.4.2016 இதழில் வெளிவந்துள்ளது)
ஞாயிறு, 08 மே 2016
- குமரேசன்
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிய நிகழ்ச்சியின் நன்றியுரையினை பீகார் மாநில சட்டமன்ற மேனாள் அவைத் தலைவர் உதய் நாராயன் சவுத்ரி அவர்களும், திராவிடர் கழகத்தின் வெளியுறவு செயலாளர் மானமிகு வீ.குமரேசன் அவர்களும் கூறினர்.
விழா நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் தொடக்கம் முதல் ஒருங்கிணைத்து நேர்த்திப்படுத்திய மானமிகு கோ.கருணாநிதி அவர்கள் நிகழ்ச்சியின் இணைப்புரை பொறுப்பினையும் ஏற்றுச் சிறப்பாக விருது வழங்கும் விழாவினை நடத்தி முடித்தார்.
விழா முடிந்ததும், வருகை தந்தோரின் பாராட்டுதலைப் பெற சற்றுநேரம் விழா மேடையிலேயே நிதிஷ்குமார் அமர்ந்திருந்தார். பின்னர் தமிழர் தலைவரை அழைத்துக் கொண்டு அருகில் ஒரு சிற்றரங்கத்திற்குச் சென்றார். அங்கு பீகார் அரசியலின் முன்னணித் தலைவர்கள் பலரும் இருந்தனர். சிற்றுண்டி அருந்திக் கொண்டே நிதிஷ்குமார், தமிழர் தலைவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். முதல் நாள் புத்தகயாவில் அரசு அதிகாரிகள் நல்லபடியாக கவனித்துக் கொண்டார்களா? என தமிழர் தலைவரிடம் நிதிஷ்குமார் உறுதி செய்துகொண்டார். சமூகநீதித் தளத்தில் அடுத்து செய்ய வேண்டிய பணிகள் பற்றிய உறுதிப்பாட்டுடன் நிதிஷ்குமார் உரையாடிக் கொண்டிருந்தார். உடன் இருந்தவர் களிடமும், ஊடகங்களிடமும், தமிழர் தலைவர் விடுத்த அழைப்பின் பேரில் தாம் தமிழ்நாட்டிற்குச் செல்லவிருப்பதாக நிதிஷ்குமார் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
நிதிஷ்குமாருக்கு முன்கூட்டியே வாழ்த்து!

முன்னரே தெரிவித்தபடி, அடுத்தநாள் (10.4.2016) அன்று அய்க்கிய தள கட்சியின் தலைவரைத் தெரிந்தெடுக்கும் முக்கிய கூட்டம் புதுடில்லியில் நடைபெற விருந்ததால், அதில் பங்கேற்றிட தாம் பிற்பகலிலேயே டெல்லிக்கு பயணம் செல்ல விருந்ததைத் தெரிவித்து நிதிஷ்குமார் தமிழர் தலைவரிடம் நன்றி கூறி விடைபெற்றார்.
தமிழர் தலைவரும் நிதிஷ்குமார் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பினார். அய்க்கிய ஜனதா தளக்கட்சியின் தேசிய தலைவர் திரு.சரத்யாதவ் இரண்டுமுறை (மொத்தம் ஆறு ஆண்டுகள்) பொறுப்பு வகித்து வந்த நிலையில் அடுத்த தலைவரை தெரிந்தெடுக்கும் அவசியச் சூழல் நிலவியது. அடுத்த நாள் டில்லியில் நடைபெற உள்ள கட்சிக் கூட்டத்தில் நிதிஷ்குமார் அவர்கள் அய்க்கிய ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவராக தெரிந்தெடுக்கப்படுவார் என்பது உறுதியாகத் தெரிந்தது. அதனை வெளிப்படுத்தும் முறையிலும் தமிழர் தலைவர் வாழ்த்தி நிதிஷ்குமார் அவர்களுக்கு விடைகொடுத்தது ஒரு அடையாளமாகவும் விளங்கியது.
பீகார் மாநில சமூகநீதி வரலாற்றில் ஒரு திருப்புமுனை யாகவும், சமூகநீதி விருது வழங்கலில் சிறப்புத்தன்மையுடனும் நடைபெற்ற விழாவாகவும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமூகநீதி பற்றிய ஒரு அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி, காரியம் ஆற்றிட வேண்டிய கடமையினை நினைவூட்டி, உரியவர் களை உரிய பணியினை ஆற்றிடுவதற்கு முடுக்கிவிட்ட நிகழ்வாக சமூகநீதி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கல்வியாளர்கள் சந்திப்பு
அரசு விருந்தினர் இல்லத்திற்கு திரும்பிய தமிழர் தலைவர் சற்றுநேரம் இளைப்பாறினார். மாலையில் விழா நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக வந்திருந்த, நாளந்தாவிலிருந்து வருகை தந்த இரண்டு கல்வியாளர்கள் தமிழர் தலைவருடன் உரையாடிச் சென்றனர்.
பின்னர், பீகார் பல்கலைக் கழக தத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் ராமேந்திரா - வாழ்விணையர் முனைவர் கவல்ஜித் ஆகிய இருவரும் தமிழர் தலைவரைச் சந்தித்து தாம் எழுதிய, பதிப்பித்த புத்தகங்களை அளித்தனர். நாத்திக அறிஞர்கள் என 22 தலைவர்கள் பற்றி தாம் இந்தியில் பதிப்பித்த புத்தகத்தில் தமிழர் தலைவரைப் பற்றியும் எழுதியுள்ள செய்தியினையும் பேராசிரியர் ராமேந்திரா தெரிவித்தார். தாம் எழுதிய புத்தகத்தினை படித்தவாறே தமிழர் தலைவர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு ‘நான் எப்படி படிக்கிறேன்?’ என்ற தலைப்பில் செவ்வி அளித்து அது செய்தியாக வந்ததையும் பேராசிரியர் ராமேந்திரா நினைவூட்டி, அந்த செய்தியில் தமிழர் தலைவர் படித்துக் கொண்டிருக்கும்படி வெளிவந்த ஒளிப்படத்தில் தமது புத்தகமான(Rationalism, Humanism and Atheism in Twentieth Century Indian Thoughts by Dr.Ramendra in collaboration with Dr.Kawaljeet) வந்துள்ளமை தமக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்து தமிழர் தலைவருக்கு நன்றி கூறினார். அடுத்தமுறை பாட்னாவிற்கு வருகை தரும்பொழுது அவசியம் தமிழர் தலைவர் பீகார் பல்கலைக்கழகத்திற்கு வந்து மாணவர்களின் மத்தியில் உரையாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோளினையும் வைத்து விடைபெற்றார்.
பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்
நலச்சங்க கூட்டத்தில் பங்கேற்பு
பின்னர், மாலையில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச்சங்கத்தின் பீகார் கிளையின் கூட்டத்தில், தனியே ஒரு ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழர் தலை வர் கலந்து கொண்டார். வந்திருந்த ஊழியர் தோழர்களுக்கு சமூகநீதி பற்றி வரலாற்றினை சுருக்கமாகக் கூறி, ஒடுக்கப்பட்டோர் தமக்குள்ள உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்து அந்த உரிமைகள் முழுமையாக நடைமுறையாவதில் அக்கறை கொண்டு செயலாற்றிட வேண்டும் என தமிழர் தலைவர் உரையாற்றினார். மானமிகு கோ.கருணாநிதி, தோழர் இரவீந்திரராம் மற்றும் மூத்த தோழர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இரவு உணவினை கூட்டத்திலேயே முடித்துவிட்டு அரசு விருந்தினர் இல்லத்திற்கு திரும்பினோம். பீகார் மாநிலத்தில் ஒரு மாபெரும் சமூகநீதித் தாக்கம், திருப்புமுனை ஏற்படுத்திய விழாவில் பங்கேற்ற மனநிறைவுடன் தமிழர் தலைவர் தூங்கச் சென்றார்.
சென்னைக்கு திரும்பிட பயணம்
அடுத்தநாள் காலையில் அனைத்து இந்தி, ஆங்கில நாளிதழ்களிலும், சமூகநீதிக்கான கி.வீரமணி விருது முதல மைச்சர் நிதிஷ்குமாருக்கு வழங்கப்பட்ட விழா பற்றிய செய்திகள் விரிவாக ஒளிப்படத்துடன் வெளிவந்திருந்தன. நாளிதழ்களை தமிழர் தலைவரைச் சந்திக்க வந்த அய்க்கிய ஜனதா தனக் கட்சியின் பொறுப்பாளர்கள் அளித்தனர். பாட்னாவிலிருந்து காலை 8.30 மணிக்கு டெல்லிக்கு கிளம்பும் விமானத்திற்குச் செல்ல வேண்டும். காலை உணவை பொட்டலமாகக் கட்டி கொடுத்தார்கள். சரியாக ஏழுமணி அளவில் அரசு விருந்தினர் இல்ல அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து, தமிழர் தலைவருடன் அனைவரும் விடை பெற்றோம். அய்க்கிய ஜனதா தளக் கட்சிப் பொறுப்பாளர்கள் பீகார் மாநில பொதுச் செயலாளர் இராஜ்குப்தா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மன்ஜித் சிங், சைலேந்திர குமார் சிங் மற்றும் தோழர் ரவீந்திரராம் விமான நிலையம் வரை வந்து தமிழர் தலைவரை வழியனுப்பி வைத்தனர். எல்லோருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற் றோம்.
10 மணிக்கு டெல்லி வந்தடைந்தோம் உடைமைகளைப் பெற்றுக் கொண்டு வேறு விமானம் (நிறுவனமும் வேறு) மாற வேண்டியதால் விமான நிலையத்தை விட்டு வெளியில்வந்து, உரிய வழியில் மீண்டும் உள்ளே நுழைந்து பயணச் சுமைகள் ஒப்படைப்பிற்குப் பயண அட்டைகளை பெற்றுக் கொண்டு பாதுகாப்புச் சோதனையினையும் முடித்துக் கொண்டோம். டெல்லி - சென்னை விமானம் புறப்பட இரண்டு மணி நேர இடைவெளி இருந்தது. வழக்கம்போல் விமான நிலையத்தில் இருந்த புத்தகக்கடையில் தமிழர் தலைவர் அதிகநேரம் செலவழித்தார். நண்பகல் உணவினை விமான நிலையத்தி லேயே முடித்துவிட்டு 1 மணி அளவில் விமானத்தில் ஏறி, சரியாக மாலை 4 மணி அளவில் சென்னைக்கு வந்து சேர்ந்தோம்.
விமான நிலையத்தில் பயணச் சுமைகளை பெற்றுக் கொண்டு,வாகனத்தில் அமர்ந்த தமிழர் தலைவரிடம் கடந்த நான்கு நாட்கள் வெளிவந்த ‘விடுதலை’ இதழ் அளிக்கப்பட்டது. வாகனம் புறப்பட்டு, பயணத்தின் பொழுது பாட்னா நிகழ்ச்சி பற்றி ஒளிப்படங்களுடன் வெளிவந்த செய்திகளைப் படித்த வாறே அடையாறு - கஸ்தூரிபாய் நகரில் உள்ள வீட்டிற்கு தமிழர் தலைவர் திரும்பினார்.

வடபுலத்தில் சமூகநீதிக்கான செயல்பாட்டில் ஒரு புதிய தளத்தினை, உத்வேகமிக்க தளத்தினை உருவாக்கியது தமிழர் தலைவரின் பீகார் மாநிலம்- - பாட்னா பயணம். வெற்றிப் பாதையில் ஒரு சாதனைக்கல்லாக அமைந்தது, தமிழர் தலைவரது பீகார் பயணம்!
-பயணம் நிறைவு
-விடுதலை,5-8.5.16
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும்’, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார் இயக்குநர் இலக்குவன் தமிழ். தனக்கு வழங்கப்பட்ட காசோலையை பீகார் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். உடன் சிறப்பு விருந்தினர் தமிழர் தலைவர் கி. வீரமணி. (பாட்னா, 9.4.2016)
பாட்னா, ஏப்.9 பீகார் முதல் அமைச்சர்
கி. வீரமணி, டி. ராஜா, இலக்குவன்தமிழ் பங்கேற்பு
பீகார் தலைநகர் பாட்னாவில்,முதல்அமைச்சர்
நிதிஷ்குமாருக்கு “சமூகநீதிக்கான வீரமணி விருது”
அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு

நிதிஷ்குமார் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ‘சமூக நீதிக்கான வீரமணி விருது’ பலத்த ஆரவாரத்திற்கும், வாழ்த்துதலுக்குமிடையே வழங்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் சிறப்பான விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு அவ்விருது இன்று வழங்கப்பட்டது.
அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பெரியார் பன்னாட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்கான விருதினை சமூகத் தளத்தில் அரும்பணி ஆற்றும் சான்றோர்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் சமூக நீதிக் காவலர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மத்திய அமைச்சர்கள் சீதாராம் கேசரி, சந்திரஜித் யாதவ், டாக்டர் கலைஞர், ஆந்திர உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி, நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் அமைப்பாளர் வி.அனுமந்தராவ் மற்றும் குவைத், மியான்மர், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள சிறப்புப் பிரமுகர்கள் இவ்விருதினைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த வகையில் 2015-ஆம் ஆண்டுக்கான விருது, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு இன்று பாட்னாவில் வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழா, பாட்னாவில், பீகார் மாநில மேலவைக்கான வளாகத்தில் உள்ள சிறப்புமிகு அரங்கத்தில் இன்று 9.4.2016 (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு துவங்கியது.
விழாவிற்கு வருகைதந்த அனைவரையும், விழாக் குழுவின் சார்பில் பாட்னாவில் விழா ஏற்பாடுகளைக் கவனித்துவரும் பீகார் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திர ராம் வரவேற்றுப் பேசினார்.
முனைவர் இலக்குவன் தமிழ்
அடுத்து, பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநரும், விழாக்குழுவின் தலைவருமான டாக்டர் இலக்குவன் தமிழ், அமைப்பின் நோக்கத்தையும், சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினைப் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு வழங்குவதை அறிவித்தவுடன், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று பலத்த கரவொலி எழுப்பினர். பின்னர் முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து, 2015-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினையும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார் இயக்குநர் இலக்குவன் தமிழ். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மிக்க மகிழ்ச்சியுடன் விருதினையும், சிறப்பினையும் ஏற்றுக் கொண்டார். பீகார் சட்டப் பேரவைத் தலைவர் விஜய்குமார் சவுத்திரி விழாவிற்கு தலைமை வகித்து உரையாற்றினார்.
பிரமுகர்கள் வாழ்த்து
அடுத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர், பீகார் சட்ட மேலவைத் தலைவர் அவதேஷ் நாராயண் சிங், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ராஜா, ஜனதா தளத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கே.சி.தியாகி, சமாதானக் கட்சியின் தலைவரும் சட்டப் பேரவை உறுப்பினருமான டாக்டர் அய்யூப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முதல் அமைச்சர் நிதிஷ்குமார் ஏற்புரை
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் விருதினைப் பெற்றுக் கொண்டு சிறப்பான ஏற்புரை நிகழ்த்தினார். நன்றியுரையினை, பீகார் சட்டமன்ற மேனாள் தலைவர் உதய் நாராயண் சவுத்திரி மற்றும் திராவிடர் கழக வெளியுறவுச் செயலர் வீ.குமரேசன் நிகழ்த்தினார்கள்.
விழா நிகழ்ச்சியினை, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தொகுத்து வழங்கினார். மதியம் ஒன்றரை மணி அளவில் விழா சிறப்பாக நிறைவு பெற்றது. வருகை தந்த அனை வருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
-விடுதலை,9.4.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக