பக்கங்கள்

வெள்ளி, 18 ஜனவரி, 2019

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்



புதுடில்லி, ஜன.13 பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என்பது ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி என்று குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.  அவருடைய கருத்தை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். நான் பலரிடமும் இதுகுறித்து பேசினேன். எல்லோருமே பாஜகவின் தந்திரம் என்றே கூறுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதி யினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டதும் முதலில் வரவேற்ற கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டவரப்பட வேண்டும் என்று முதலில் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிப்பது என்றும், பாஜகவின் தந்திரமான அச்செயல் மிகவும் ஆபத்தானது என்றும்  தற்பொழுது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம்


ஆம் ஆத்மி கட்சியின் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாக உள்ளவரும், டில்லி அமைச்சருமாகிய ராஜேந்திர பால் கவுதம் கூறியதாவது:

பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரானவை.பொருளாதாரத்தில்பின்தங்கி யோர் என்று கூறிக்கொண்டு இடஒதுக்கீட் டுக் கொள்கையை மாற்ற விரும்புகின்றன. ஏற்கெனவே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போதுஆர்.எஸ்.எஸ். தலைவர் இக்கருத்தை வலியுறுத்திக் கூறியிருந் தார். ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டை ஒழிக்க முடியாததால், புதிய இட ஒதுக்கீட்டை பாஜக கொண்டு வருகிறது என்று பாஜகவின் தலைவர்கள் சிலர் என்னிடம் கூறினார்கள்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை  இடஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவர முடியாது.  சமூக ரீதியில் பின்தங்கியோருக்கானதாகவே இடஒதுக்கீடு இருக்கவேண்டும். சமுதா யத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமை, சொத்துரிமை இல்லாமல் உள்ளனர். அவர்களையும் முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே  சமூகத்தில் பின்தங்கியவர்களை அடையா ளம் கண்டு, அந்த அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

10 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாஜக  அவசரம் காட்டுவதிலிருந்து அதன் பின்னால் உள்ள சதித்திட்டம் வெளிப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்கு முன்னதாக அதுகுறித்து ஆலோசிப்பதற்காக எந்த ஒரு குழுவும் அமைக்கப்படவில்லை. வல்லுநர்கள், பொதுமக்கள் என்று எவரிடமும் கருத்து களைப் பெறவில்லை. மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. பாஜக அரசு எந்த ஒரு வேலை வாய்ப்பையும் உருவாக்குவதில் தோல்வி அடைந்துள்ளது. இந்த புதிய இடஒதுக்கீடு இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்வ துடன், ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டை ஒழிப்பதாகும் என்றார்.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவ்ரப் பரத்வாஜ் புதிய இடஒதுக்கீடு ஒரு ஏமாற் றுத் திட்டம் என்று கூறினார். ஆம்ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் அதிஷி கூறிய தாவது:

நீண்ட காலமாக இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினை பாஜக ஆதரித்து வந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக அரசின் செயலை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றார்.

-  விடுதலை நாளேடு, 13.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக