பக்கங்கள்

செவ்வாய், 15 ஜனவரி, 2019

பிற இதழிலிருந்து.... பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தோல்வி

'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்தி
When MGR came up with economically weaker sections quota...
By T Muruganandham
The Centre has ensured passage of a Constitutional Amendment Bill to provide 10 per cent reservation for economically weaker sections among the general category in both Houses of Parliament.
CHENNAI: The Centre has ensured passage of a Constitutional Amendment Bill to provide 10 per cent reservation for economically weaker sections among the general category in both Houses of Parliament. In Tamil Nadu, hailed as the birthplace of social justice, four decades ago, late Chief Minister MG Ramachandran (MGR) attempted to bring in an economic criterion for reservation for Backward Classes (BCs).
MGR further declared that certain percentage of reservation would be provided to poor among the forward communities. However, he backed down after the AIADMK’s virtual rout in the Lok Sabha polls of 1980.
The MGR government issued an order (G.O.Ms.1156), dated July 2, 1979, fixing Rs 9,000 as the annual income ceiling for BCs to get the benefits of reservation. To justify the G.O, the government cited the recommendations of the Backward Classes Commission, under the Chairmanship of AN Sattanathan, submitted in 1970. Then general secretary of Dravidar Kazhagam K Veeramani (now president) and late DMK president M Karunanidhi immediately opposed the move and, with many other leaders, spearheaded protests against it.
They argued that the order was unconstitutional and unreasonable, and said, “The Constitution clearly defines the beneficiaries as socially and educationally BCs. Introducing an economic element will be a wrong remedy to a malady which is essentially social.”
An unyielding MGR categorically stated that the government would not go back on its order fixing parental income as the criterion for concessions for BCs. He argued that the order would not, in any way, affect the 31 per cent of seats reserved for BC students. Quoting official figures, he said that in the preceding years, BC students, in addition to the reserved quota, obtained 29 per cent more seats in the open quota, thus getting a total of 60 per cent of seats in professional colleges.
MGR also said the order would benefit the poorer among the BCs, such as the children of dhobies, barbers, stone-masons, small farmers, cart-pullers and cycle-rickshaw pullers, whereas only the affluent had enjoyed the concessions till then. A month after the controversial G.O was issued, MGR, speaking at the valedictory function of the birth centenary celebrations of social reformer Periyar EV Ramasamy at Pudukottai on August 5, 1979, dropped another bombshell: His government would provide reservation for the poor among the forward communities.
This further fuelled the opposition to the 9,000 G.O, as MGR had made this announcement at a function celebrating Periyar, who strove for social justice throughout his life. Veeramani and Karunanidhi as well as leaders of other parties vehemently opposed the move.
Taking serious note of this second announcement, Karunanidhi termed it a ‘dangerous proposal’. “Reserving a certain percentage for poor among the forward communities... would reduce the opportunities for BCs/MBCs/SCs/STs in the open quota. So, the chief minister should give up his proposal immediately,” he said. When reporters pointed out that the Constitution specified backwardness in society only as “socially and educationally backward and not as economically backward”, MGR shot back: “The time has come for taking into account the economic backwardness also for providing reservation.”
Recalling this period, Veeramani told Express that people were shocked. “DK and DMK conducted protest meetings and took out processions throughout Tamil Nadu. The copies of the GO were publicly burnt and the ashes were sent to the authorities on November 26, 1979,” he recalled. Responding to the bundles of ashes being sent to the government, then Minister VR Nedunchezhiyan, No 2 in MGR’s cabinet, said, “Well, we will use this ash for our croton plants in the Secretariat.” In response, Veeramani told Nedunchezhiyan: “I thought MGR made you a minister. Now, it is clear for what job he had engaged you (maintaining garden).”
More reservation
Veeramani pointed out that after the debacle in 1980 Lok Sabha elections, MGR went a step ahead and raised the reservation quota for BCs from 31 per cent to 50 per cent to assuage their feelings. The forward communities moved the SC against this. The court directed the State to appoint an independent body to study the grounds for raising the proportion of the reservation. A commission, headed by IAS officer JA Ambasankar, gave a report justifying the order.
Meanwhile, Parliament was dissolved and Lok Sabha elections were held in 1980, the AIADMK winning only two seats. This came as rude shock to MGR. Many of his cabinet colleagues told him that the primary reason for this debacle was the G.O. Subsequently, MGR convened an all-party meeting on January 19, 1980 — which was boycotted by the DMK.
“I had prepared a question-and-answer type of memorandum, wherein I had answered all questions raised by MGR on introducing economic criterion for providing reservation. My representation alone lasted over an hour in the all-party meeting. MGR listened to my views attentively,” Veeramani recalled.
Two days later, MGR agreed to withdraw the controversial G.O. Another G.O was issued on January 21, 1980 announcing this, seven months after the original GO had been issued.
அன்றே எம்.ஜி.ஆர். கொண்டு வந்த பொருளாதார அளவு கோல் அவரே பின்வாங்கிய வரலாறு...
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்குப் பத்து விழுக்காடு ஒதுக்கீடு செய்யும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவை நாடாளு மன்றத்தில் இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியிருக்கிறது.
சமூகநீதியின் பிறப்பிடமான தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இட ஒதுக்கீடு  பெறுவதற்குப் பொருளாதார அளவுகோலை நிர்ணயிப்பதற்கும் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முனைப்புக் காட்டினார். அத்துடன் முற்பட்ட வகுப்பினரிலும் பொருளாதார அடிப்படையில் குறிப்பிட்ட விழுக்காடு ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார் இருப்பினும் அடுத்து வந்த 1980 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி படு தோல்வி அடைந்ததை அடுத்துப் பின்வாங்கி விட்டார்.
பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டின் பயனை அடைய வேண்டுமெனில் அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9000 க்கு மேல் இருக்கக் கூடாது என்று எம்.ஜி.ஆர் அரசு 2.6.1979 அன்று அரசாணையினை (G.O.MS1156) வெளியிட்டது. அப்போது திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்களும் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அவர்களும் மற்ற முன்னணித் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு அதனை எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்தார்கள்.
கூடுதல் இடஒதுக்கீடு
1980 தோல்விக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீட்டை 31லிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். முற்பட்ட வகுப்பினர் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் இதனை ஆராய்வதற்கு ஒரு குழுவை நியமிக்குமாறு மாநிலத்திற்கு ஆணையிட்டது. அதன்படி அமைக்கப்பட்ட அம்பாசங்கர் IAS தலைமையிலான குழு இந்த ஒதுக்கீடு நியாயமானதே என்று முடிவுக்கு வந்தது என்பதை வீரமணி சுட்டிக் காட்டினார்.
அரசின் ஆணை அரசியல் சட்டத்திற்கு முரணா னது என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் பயன்பெற வேண்டும் என்று அரசியல் சட்டம் தெளிவாக வரையறுக்கிறது. அதில் பொருளாதார அளவுகோலைத் திணிப்பது சரியான தீர்வாகாது, என்றார்கள்.
அரசாங்கம் தன் முடிவை மாற்றிக் கொள்ளாது என்று பிடிவாதமாகத் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 31 விழுக்காடு குறைந்து விடாது என்று வாதிட்டார். ஆம். கடந்த ஆண்டுகளில் ஒதுக்கீடு மூலம் 31 விழுக்காடு பொதுப் போட்டியில் 29 விழுக்காடு ஆக மொத்தம் 60 விழுக்காடு இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று கூறினார்.
அவரது அரசாணையால் சலவையாளர், முடி திருத்துவோர், கல் தச்சர், குறு விவசாயிகள், வண்டி இழுப்போர், ரிக்ஷா இழுப்போர் போன்ற வசதியற்ற வர்கள் பயன் பெறுவார்கள். இதுவரை இட ஒதுக்கீட்டின் பயனை வசதி படைத்தவர்களே அனுபவித்து வந்திருக் கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
5.8.1979 அன்று புதுக்கோட்டையில் பெரியார் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர். முற்பட்ட வகுப்பினருக்கும் அவரது அரசு இட ஒதுக்கீடு கொண்டு வரும் என்று ஒரு வெடிகுண்டு வீசினார்.
பெரியார் நூற்றாண்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டது அனைத்துத் தரப்பினரையும் கொதிப் படையச் செய்தது.
முற்பட்ட வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக் குச் செய்யப்படும் இட ஒதுக்கீடு, BC/SC/ST ஆகிய பிரிவினர் பொதுப் போட்டியில் பெறும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்துவிடும் இதனைக் கைவிட வேண்டும், என்று கருணாநிதி கூறினார். சமூக நிலையிலும் கல்வியிலும் பின்தங்கியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் என்று அரசியல் சட்டம் தெளிவாக்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதற்கு எம்.ஜி.ஆர். ஒதுக்கீடு செய்வதற்குப் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் சேர்த்துக் கொள்வதற்கான காலம் வந்துவிட்டது என்று எம்.ஜி.ஆர் பதில் கூறினார்.
அந்தக் காலத்தை நினைவு கூர்ந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மக்கள் அதிர்ச்சியடைந்தனர். எதிர்ப் புக் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற் றன. அரசாணை எரிக்கப்பட்டு 26.11.1979 அன்று அதிகாரிகளுக்குச் சாம்பல் அனுப்பப்பட்டது என்று தெரிவித்தார்.
சாம்பலை தலைமைச் செயலகத்திலுள்ள குரோட் டன் செடிகளுக்கு உரமாகப் போடுவோம் என்று அன்றைய அமைச்சர் நெடுஞ்செழியன் கூறினார். "எம்.ஜி.ஆர் உங்களை அமைச்சராகப் போட்டார் என்று நினைத்தோம். அதனால் அது இந்த (தோட்ட) வேலைக்குத் தானா? என்று வீரமணி பதிலளித்தார்.
"நாடாளுமன்றத்தைக் கலைத்து 1980 ஆண்டு நடந்த தேர்தலில் அஇஅதிமுக இரண்டு இடங்களை மட்டும் பெற்றது. அதை அடுத்து 19.1.1980 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டினார் எம்.ஜி.ஆர். தி.மு.க. அதைப் புறக்கணித்தது.
எனது அறிக்கையைக் கேள்வி பதில் வடிவத்தில் கொண்டு சென்றேன். எம்.ஜி.ஆரின் வினாக்கள் அனைத்துக்கும் அதில் தெளிவான விடை இருந்தது. நானே ஒரு மணி நேரத்துக்குமேல் எடுத்துக் கொண் டேன். நான் சொன்னவற்றை எல்லாம் எம்.ஜி.ஆர் காது கொடுத்துக் கேட்டார், என்கிறார் வீரமணி.
11.1.1980 அன்று எம்.ஜி.ஆர். அரசு கொண்டு வந்த இடஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு அரசாணை திரும்ப பெறப்பட்டது.
- T. முருகானந்தன்
'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' - 12.1.2019
மொழி மாற்றம் : பேரா. அ. அய்யாசாமி
-விடுதலை நாளேடு, 14.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக