பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை
கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது.
உயர்ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்படுவது என்பது மத்திய அரசின் குழப்பமானசிந்தனையையே பிரதிபலிக் கிறது. அதனால் கடுமையான விளைவு களை சந்திக்க நேரிடும் என்று பொருளாதார வல்லுநரும், பாரத் ரத்னா விருது பெற்ற வருமாகிய அமர்த்தியாசென் எச்சரித்துள்ளார்.
அரசு வேலைவாய்ப்புகளில் மற்றும் கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு பொதுப்பிரிவில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கின்ற அரசின் செயல்பாடுகுறித்து அமர்த்தியா சென் கூறியதாவது:
குறைவான வருமானம் உள்ள உயர்ஜாதி யினருக்குஇடஒதுக்கீடுவழங்குவதுஎன்பது வேறுபிரச்சினை.அப்படிமக்கள்அனை வருக்குமே இடஒதுக்கீடு வழங்கப்படு மானால், ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீக்குவதாக ஆகிவிடும்.
பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என்பதே குழப்பமான சிந்தனையாகும். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக் கம் ஏற்படுமா என்பது கேள்விக்குரியதே.
சமூகத்தைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க.
மத்தியில் ஆளும் பாஜக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததுடன், சமூ கத்தை பிளவுபடுத்துகின்ற கொள்கையையே பின்பற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.
பாஜக அரசால் மேற்கொள்ளப்படுகின்ற உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கின்ற கொள்கை உண்மையிலேயே அவர்களுக்கு பயன் அளிக்கக்கூடியதா என்று நாம் கேள்வி எழுப்புகிறோம். உயர்ஜாதியினரின் வாக் குகளைப் பெறும் நோக்கிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. அறிவுக்குப் பொருத்தமில்லாதவையும், சகிப்பின்மை வளர்ந்து வருவதுகுறித்தும் பேசவேண்டியது மிகவும் இன்றியமையாதது. இனியும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய அளவில் குடிமக்கள் பதிவு ஆகியவை பார பட்சமானவையாக உள்ளன. புதியநடைமுறைகளின்படிஅச்சட்டங் களில் கூறப்பட்டுள்ள, பின்பற்றப்படுகின்ற வற்றில்ஏராளமாகபாகுபாடுகள்உள்ளன. குறிப்பாக மதத்தின் அடிப்படையில் பாகு பாடுகள் உள்ளன. அரசமைப்புச்சட்டத்தின் உள்ளார்ந்த அம்சங்களுக்கு எதிரானவை யாகவே இவை உள்ளன என்பதே என்னுடைய முடிவான கருத்தாகும்.
வங்கிக் கடன்கள் பிரச்சினையில் விவ சாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்வது என்பதில் பிரச்சினை உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தாலும், பல்வேறு கோணங்களில் மக்கள் அதைப் பார்க்கிறார்கள். பொருளாதார வல்லுநர்கள் பார்வையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்வது சரியானதாக இல்லாமல் போகலாம். ஆனால், மக்களுக்கான நீதியாக காணும்போது சரி யானதாகவே இருக்கும். விவசாயக்கடன் தள்ளுபடி என்பது நிரந்தரமானதல்ல, சில நேரங்களில் நல்லதாகத் தோன்றலாம். ஆனால், அதனாலேயே பிரச்சினைகளும் ஏற்படும் என்று நான் எண்ணுகிறேன்.
கருத்து சுதந்திரப் பறிப்புகள்
நீங்கள் ஓர் இந்துவாகவோ, கிறித்துவ ராகவோ இருந்தால் உங்கள் கருத்துகளைக் கூற இடம் உள்ளது. ஆனால், நீங்கள் ஒரு முசுலீமாக இருந்தால் நீங்கள் கருத்து கூறுவதற்கே இடம் கிடையாது. இது அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தையே மீறுவதாக உள்ளது என்று நான் எண்ணுகிறேன். அதுமட்டுமல்லாமல், பொதுவான இந்திய மக்களின் மனிதபண்புகளுக்கான அணுகு முறைகளுக்கும் எதிரானதாக உள்ளதாகும். நீதி கோருவோர் குறித்து பேசும்போதும் பாரபட்சமான அணுகுமுறைகள் உள்ளன. சிறுபான்மையோர் குறித்து பேசும்போது நசீருதீன் வழக்கில் நடந்ததைப்போல், அவர் களுக்கு எதிராகவே நடந்துவருகிறார்கள். கருத்து சுதந்திரத்தின்மீதான தாக்குதல் ஆட்சேபனைக்குரியது.
இந்தியாவில்பெருகிவரும் கும்பல் வன்முறைகள் குறித்து இந்தி திரையுலகின் நடிகர் நஸ்ருதின் ஷா கவலை தெரிவித்தி ருந்தார். இந்துத்துவா அமைப்புகள் கடும் கண்டனங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தன.
சகிப்புத்தன்மை குறைவது ஆபத்தானது. நஸ்ருதின் ஷாவுக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்புக்கு எதிராக நாம் போராட வேண் டும். இந்த நாட்டில் தற்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறதோ அது ஏற்றுக் கொள்ளமுடியாதது. இது கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். இந்த நாட்டிலுள்ள அமைப்புகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. செய்தியாளர்கள் உள்பட அனைவரும் துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். மற்றவர்களை சகித்துக்கொள்ள முடியாத பண்பு, தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. சகிப்புத்தன்மை இழப்பது குறித்து சிந்திக்க மற்றும் ஆராய வேண்டும்
விவசாயிகள் பிரச்சினை
அமர்த்தியா சென் தம்முடைய சொந்த ஊரான சாந்திநிகேதனில் தம்முடைய வீட்டிற்குப் பின்புறமிருந்த நிலங்கள் யாவும் வீடுகளாக மாறிவிட்டதைக் குறிப்பிட்டு, விவசாயக் கடன் சுமையால் நிலங்களை விற் கின்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இதுபோன்று, விவசாய நிலங்களை வீடுகளாக மாற்றப்படுவது தடுக்கப்பட்டாக வேண்டும். விவசாயிகள் தங்களின் நிலங்களைத் தக்க வைத்துக்கொண்டு விவசாயத்தைத் தொடர்ந்திட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான பொருளாதார வளர்ச்சி
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் பின்பற்றப்பட்ட பொருளாதார வளர்ச்சித் திட்டங்களையே தானும் தொடர் வதாக மோடி கூறிவருகிறார். ஆனால், வேலைவாய்ப்புகளை அளிப்பதிலோ, வறு மையை ஒழிப்பதிலோ, அனைவருக்கும் நல்ல சுகாதாரம் மற்றும் அனைவருக்கும் கல்வியை அளிப்பதிலோ எவ்வித செயல்பாடு களுமில்லாத நிலையே இருந்து வருகிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மோடி பதவிக்கு வருவதற்கு முன்னர் இருந்த நிலையிலிருந்து வேறு மாற்றங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதுதான் அவரு டைய சாதனை. முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளையே தொடருவதாக மோடி கூறுகிறார். ஆகவே, முந்தைய ஆட்சியில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியில் பெரிதான மாற்றங்கள் ஏற்படவில்லை.
பொருளாதார வளர்ச்சி என்பது வறு மையை ஒழிப்பது மட்டுமல்ல, நல்ல சுகாதாரம், இளைய தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமின்மையை குறைப்பதும் ஆகும்.
மோடியரசின் நடவடிக்கைகள் எதிர்விளைவானவையே
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் அரசி யல் ரீதியில் வெற்றியா, தோல்வியா என் பதைவிட, பொருளாதார ரீதியில் மிகப்பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ள தவறான பொருளாதார கொள்கையாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு மிகவும் குறைபாடுகளைக் கொண்டதாகவும் இருந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதுகுறித்து அமர்த்தியா சென் கூறுகையில், ஒரேயொரு எதிர்க்கட்சிதான் இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எதிர்க்கட்சிகளாக இருக்கக்கூடிய கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்து கொண்டிருக்கலாம். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டிருந்தால், அவர்களின் ஒற்றுமையின் மூலமாக தேர்தலில் வலிமையுடன் இருக் கலாம் என்று அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 13.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக