சாமியாரின் உடைமையைத் தொட்டதால் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கொலை; மற்றொருவரின் கை உடைப்பு
அலகாபாத்,டிச.29 மகாகும்ப மேளா என்ற பெயரில் ஜனவரி 15 முதல் மார்ச் இரண்டாம் வாரம் வரை அலகாபாத் நகரில் கங்கை, யமுனை இணையும் இடத்தில் குளிப்பதற்கு அம்மணச் சாமியார்கள் பெருவாரியாக வருவார்கள். 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா என்று கூறிக்கொண்டு சாமியார் முதல்வர் ஆதித்யநாத் பெரும் பொருட்செலவு செய்து முன் னேற்பாடுகள் செய்துவருகிறார். அல காபாத் நகரில் கும்பமேளா நடக்கும் இடத்தில்தூய்மைப்பணியில்ஈடு பட்டிருப்வர்கள்தவறுதலாகசாமியார் களின் உடைமைகளைத் தொட்டுவிடு கின்றனர். இப்படி தொட்டவர்களை அடித்துக்கொலை செய்தும், கை கால் களை உடைப்பதும் சாதாரண நிகழ்வாக போய் விட்டது.
இளைஞர் கொலை
அலகபாத் சங்கமம் என்ற இடத்தில் கூடாரங்கள் அமைக்க அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஆயிரக்கணக்கான துப்புரவுப் பணியாளர் கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு எந்த ஒரு வசதியும் செய்து தரப்படவில்லை என்று ஏற்கெனவே துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியிருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் அன்று நான்காயி(21) என்ற துப்புரவுத் தொழிலாளி ஆற்றின் கரையோரம் உள்ள புற்களை வெட்டி அகற்றிக் கொண்டு இருக்கும்போது ஆற்றில் குளித்து கொண்டு இருந்த சாமியார் ஒருவரின் உடைமையில் தவறுதலாக கை பட்டுவிட்டது.
இதனை அடுத்து கோபம் கொண்ட அந்த சாமியார் மற்றும் அவருடன் இருந்த மற்ற சாமியார்கள் அந்த துப்புரவுத் தொழிலாளி நான் காயியை அடித்து உதைத்தனர். இதில் நிலைகுலைந்து போன அவர் ஆற்றின் கரையிலேயே மயங்கி விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றுபவர்களும் தாக்கப் படுவார்கள் என்று மிரட்டிவிட்டு அங் கிருந்து சென்றுவிட்டனர்.
இதனை அடுத்து இரவு முழுவதும் கடுமையான குளிர் மற்றும் ஈரத்தரையில் மயங்கி இருந்த காரணத்தால் உடல் வெப்ப இழப்பு ஏற்பட்டு அவர் மரண மடைந்தார். மறுநாள் காலைவந்த காவல் துறையினர் நான்காயி மது அருந்திவிட்டு ஆற்றின் கரை ஓரத்தில் தூங்கியதால் மரணமடைந்துவிட்டார் என்று கூறி அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டனர். இறந்த நான்காயி பதேபூர் மாவட்டம், காஷிபூர் அருகில் உள்ள பருவா என்ற கிராமத்தைச்சேர்ந்த லாலாக்ராம் என்பவரின் மகனாவார்.
இது நடந்து முடிந்த 2 நாள்களுக்குப் பிறகு மீண்டும் அதேபோல் ஒரு நிகழ்வு நடபெற்றுள்ளது. சாமியார்களின் கூடா ரங்களை தூய்மைப்படுத்திக் கொண்டு இருந்த மாதாதின் என்ற 55 வயது துப்புரவுத் தொழிலாளி கூடாரத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சாமி யாரின் உடைமைகளை தொட்டு விட்டார். இதனை அடுத்து மீண்டும் சாமியார்கள் ஒன்றுகூடி மதாதினை அடித்து அவரது கைகளை உடைத்து விட்டனர். இவர் மத்தியப் பிரதேசம் சத்தர்பூர் மாவட்டத்தில் இருந்து ஒப் பந்தத்தில் பணிபுரிய வந்தவர் ஆவார்.
அவரின் கைகளை உடைத்தது மட்டுமல்லாமல் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தால் சிக்கிசை அளிப்ப வரையும் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனை அடுத்து அவர் உடைந்த கைகளுடனேயே தனது ஊருக்குப் புறப்பட்டுச்சென்றார்.
மிரட்டி வருகின்றனர்
இந்தஇரண்டுநிகழ்விலும்எந்த சாமியார்மீதும்வழக்குப்பதிவுசெய்யப் படவில்லை. மேலும் துப்புரவுத் தொழிலாளர் கொலை மற்றும் கை உடைப்பு நிகழ்வுகள் தொடர்பாக வெளியாட்களிடம் யாரும் பேச வேண்டாம் என்று கும்பமேளா பாதுகாப்புப் படைப்பிரிவு காவலர்கள் மிரட்டி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட துப்புரவுத் தொழிலாளி நான்காயின் குடும்பத்திற்கு துப்புரவுத் தொழிலாளர் அமைப்பின் தலைவர் ரமசியா ரூ.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கினார்.
பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச துப்புரவுத் தொழி லாளர் அமைப்பின் தலைவர் கூறிய தாவது:
"கும்பமேளா தொடர்பாக 4,000 துப்புரவுத் தொழிலாளர்களை பல மாநிலங்களில் இருந்து ஒப்பந்த அடிப் படையில் அழைத்துவந்துள்ளனர். அவர்களை அழைத்துவந்து எந்த ஒரு வசிப்பட வசதியும் செய்துதரவில்லை, அவர்களை எங்கேயும் தங்கவைக்க சாமியார்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் ஆற்றின் கரையோரம் பன்றிகளுடன் வசிக்கும் அவலத்திற்கு ஆளாகின்றனர். தரைஈரமாகஉள்ளது.மேலும்கடுமை யான குளிரும் நிலவுகிறது. இந்தக் குளிரால் பலர் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு வசதிகளைக்கூட ஒப்பந்ததாரர்கள் செய்து தரவில்லை. மாநில அரசோ ஒப்பந்த தாரர்களிடம் அனைத்து பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டோம் என்று கூறி, கைகழுவிவிட்டது"
மேலும் இவர்கள் பணி புரியும் போது தவறுதலாக சாமியார்களின் உடை மைகளில் கைகள் பட்டு விடுகின்றன. இதனால் சாமியார்கள் கோபமுற்று தாக்குகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஒருவர் இறந்துவிட்டார். மற்றொருவரின் கையை உடைத்துவிட்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளையுமே காவல்துறை மறைத்துவிட்டது, ஊடகங்களுக்கும் தவறான தகவல்களைத் தந்துவிட்டனர்.
"சாமியார்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காது. போராடும் துப்புரவுத்தொழிலாளர்களை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துகின் றனர்'' என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், தாக்குதல் நடத்திய சாமியார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நாங்கள் எங்கள் அமைப்பின் சார்பில் அதிகாரிகளைச் சந்தித்து புகார் தெரிவிக்கப்போகிறோம்'' என்று கூறினர்.
- விடுதலை நாளேடு, 29.12.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக