வெள்ளி, 11 ஜனவரி, 2019

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு எத்தகையது?மொத்தமுள்ள 983 இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் 37 சதவிகித ஜாதி மக்களுக்கு இதர பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட் டில் 0 பிரதிநிதித்துவமே கிடைத்துள்ளது. அதாவது எந்தவித பயனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.  இந்த 37 சதவிகித ஜாதி யினர் ஒரு வேலையையோ அல்லது கல்வி நிறுவனங்களில் ஒரு சேர்க்கையையோ பெறவில்லை என்பதே இதன் பொருள்.

மத்திய அரசின் வேலை வாய்ப்புகளிலும், கல்வி நிறவன சேர்க்கைகளிலும் அளிக்கப்பட் டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுப் பயன்கள் அனைத்தும், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் என்று வகைப் படுத்தப் பட்டுள்ள உப ஜாதிகளில் கால் பங் குக்கும் குறைவான ஜாதியினரே பெற்றுள்ள னர். இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் 10 ஜாதிகளைச் சேர்ந்தவர்களே மொத்த வேலை வாய்ப்பு, கல்வி நிறுவன சேர்க்கையில் 24.95 விழுக்காடு அளவு பெற்றுள்ளனர்.

அதிக அளவில் பயன்பெற்ற முக்கியமான ஜாதிகளில் யாதவர், குர்மிக்கள், ஜாட்டுகள், சைனிக்கள், தேவர்கள், எழவர்கள் மற்றும் வொக்காலிகர்கள் அடங்குவர்.

இவ்வாறு ஒரு சில ஜாதியினர் மட்டுமே அதிக பயன்களைப் பெறுவதைப் பற்றி, இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை உபஜாதி வாரி யாக வகைப்படுத்துவதை ஆராய்வது பற்றி ஆணையம் தயாரித்த ஒரு கலந்தாலோச னைக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருப்பது ஒரு மிகமிக முக்கியமான கண்டுபிடிப்பாகும் என்பது இந்தியன் எக்ஸ்பிரசுக்கு தெரிய வந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் பதவிக் காலம் கடந்த வாரத்தில் 2019 மே மாதம் 31  ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் மத்திய அரசின் கீழ் இதர பிற்படுத் தப்பட்ட ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டுப் பயன் மூலம் அளிக்கப்பட்ட 1.3 லட்சம் வேலை வாய்ப்பு மற்றும் அய்.அய்.டி., என். அய்.டி., அய்.அய்.எம்.எஸ்., ஏ.அய்.அய். எம்.எஸ். நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழ கங்களில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட இதர பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் பற்றிய  புள்ளி விவரங்களை இந்த ஆணையம் பகுத்தாய்வு செய்தது.

மொத்த இந்திய மக்கள் தொகையில் தங்கள் மாநில மக்கள் தொகை விகிதாச் சாரத்துக்கும் மிகமிக அதிகமான அளவில் இந்த இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக் கான இட ஒதுக்கீட்டுப் பயன்களை பல மாநிலங்கள் பெற்றுள்ளன என்பதையும்,  அதே போல அந்தந்த மாநில மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட மிகமிகக் குறைவான பயன்களைப் பெற்றுள்ள மற்ற பல மாநிலங்களும் உள்ளன என்பதையும் இந்தப் புள்ளி விவரங்களும், ஆய்வு அறிக்கையும் வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில், இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டுப் பயன்களை, பல ஜாதிகள் பெற்றுள்ள சமமற்ற நிலையைப் போலவே, பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சமமற்ற இட ஒதுக்கீட்டுப் பயன்களைப் பெற்றுள்ளன. வேலை வாய்ப்பிலும், கல்வி நிறுவனச் சேர்க்கையிலுமான இட ஒதுக்கீட்டுப் பயன்களில், 994 இதர பிற்படுத்தப்பட்ட உப ஜாதிப் பிரிவினருக்கு  மொத்தத்தில் 2.68 சதவிகித பயன்கள் மட்டுமே அளிக் கப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டில்லி உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி ஜி. ரோஹினியின் தலைமையில் நியமிக்கப் பட்ட இந்த ஆணையம், இந்த ஆய்வின் முடிவுகளை அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்க ளுக்கும் அவர்களது கருத்தைத் தெரிவிப் பதற்காக அனுப்பி வைத்துள்ளது.

இந்த ஏற்றத் தாழ்வுகளை சரி செய்யவும், மேலும் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தரவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை உப-ஜாதி வாரியாக  வகைப்படுத்துவதற்கு ஆணையம் திட்டமிட்டுள்ளது. வேறு சொற்களில் கூறுவதானால்,  மத்திய அரசின் இந்த இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக் கான இட ஒதுக்கீட்டு அளவை, அனைத்து உப-ஜாதிப் பிரிவினருக்கும், மொத்த இந்திய மக்கள் தொகையில் அவரவர் உப-ஜாதி மக்கள் தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரித்தளிக்கப்படும்.

இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக் கான 27 சதவிகித  வேலை வாய்ப்பு மத்திய அரசில் 1993 ஆம் ஆண்டு அறிமுகப்படுத் தப்பட்டது. அதே போல மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக் கான 27 சதவிகித இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கான  இட ஒதுக்கீடு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 2006 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது.

ரயில்வே துறை, அஞ்சல் துறை, பல மத்திய காவல் துறைகள், பல மத்திய பொதுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய நிர்வாகப் பணியமைப்பு, இந்திய  காவல் துறை பணியமைப்பு, மத்திய தலைமைச் செயலகப் பணியமைப்பு உள்ளிட்ட பல மத்திய அரசு பணியமைப்புகள் ஆகியவற் றில் இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் பெற்றவர்களைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கியது இந்த ஆணையம் ஆய்வு செய்து தனது முடிவுகளை வெளியிட்டிருக் கும் இந்தப் புள்ளிவிவரங்கள். அது போலவே, மத்திய உயர் கல்வி நிறுவனங் களில் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பற்றிய  புள்ளி விவரங்களை உள்ளடக்கியது இந்த ஆணையம் பகுத்தாய்வு செய்த புள்ளி விவரங்கள்.

ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளர் இந்தியன் எக்ஸ்பிரசிடம்  ஆணையத் தின் அறிக்கை எங்களுக்குக் கிடைத் துள்ளது. அது பற்றிய எங்களது கருத்துகளை நாங்கள் தயார் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்துப் பணியமைப்புகளிலும் கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில்  இதர பிற்படுத்தப்பட்ட  ஜாதியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் செய்யப்பட்ட பணி நியமனங்களையும்,   மத்திய அரசின் கீழ் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும்,  இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்காக இட ஒதுக்கீட்டின் கீழ் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க் கையையும்  உள்ளடக்கியது இந்த புள்ளி விவரங்கள் என்று சம்பந்தப்பட்ட வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பு சட்டத்தின் மத்திய பட்டியலில் உள்ள தனிப்பட்ட ஜாதிகள் மற்றும் சமூகங்களின் மக்கள் தொகை பற்றிய நம்பத்தகுந்த மதிப்பீடுகள் எதுவும் தயாராக இல்லை என்பதைப் பற்றியும் ஆணையம் கவலை கொண்டுள்ளது என்றும் அந்த வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

10 மாநிலங்களும்,  யூனியன் பிரதேசங்களும் தங்களது இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிப் பிரிவினரின் பட்டியலை ஏதோ ஒரு மாதிரி உப-ஜாதி வாரியாக வகைப்படுத்தி யுள்ளன என்றாலும்,  ஒரு ஜாதியை இந்தப் பிரிவிலோ அல்லது அந்தப் பிரிவிலோ வைப்பது பற்றிய தெளிவான அளவு கோல்களை எந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தெரிவித்திருப்பதாகத் தோன்றவில்லை.

ஒவ்வொரு ஜாதிப் பிரிவு மக்களால் தெரிவிக்கப்படும் அல்லது பெற்றுள்ளதாகக் கருதப்படும்  சமூக அந்தஸ்து, பாரம்பரிய மான தொழில் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள மதம் ஆகியவற்றை இவ்வாறு உப-ஜாதி வகைப்படுத்துவதற்கான அளவு கோல்களாகப் பயன்படுத்துவது முறையற் றது என்றும், நியாயமற்றது என்றும் ஆணை யம் மாநிலங்களுக்குத் தெரிவித்துள்ளது.

இந்த ஆணையத்தின் அறிக்கையைப் பெற்ற ஒரு மாநில இதர பிற்படுத்தப்பட் டோர் ஆணையத்தின் அதிகாரி ஒருவர்,  இதன் கருத்து, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு ஜாதி மக்களிடைய ஒரு புதிய படிநிலை அமைப்பு வரிசையை உருவாக்குவது என் பது அல்ல. ஒவ்வொரு பிரிவின் மக்கள் தொகை, அவர்களது பிற்படுத்தப்பட்ட தன்மை, பிராந்தியத்தில் அவர்கள் எவ்வாறு பரவியிருக்கின்றனர் ஆகியவற்றை மனதில் கொண்டு, அனைத்து உப ஜாதி மக்களுக்கும் ஒரு சமமான வாய்ப்பு கொண்ட களம் ஒன்றை உருவாக்குவதே இதன் நோக்கம். தற்போது இந்தப் பயன்களைப் பெற்று அனுபவித்து வருபவர்களை அந்நியப்படுத் தாமல்  இதனை எவ்வாறு நாங்கள் செய்யப் போகிறோம் என்பதுதான்  நாங்கள் எதிர் கொண்டுள்ள சவாலாகும் என்று கூறினார்.

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 07-12-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

-  விடுதலை ஞாயிறு மலர், 15.12.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக