***ராஜீவ் தவான்***
பாஜக தேர்தல் நேர ஸ்டண்ட் அடிப்பதற்காக பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இதன் படி உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்விநிறுவனங்களில் இடம் கிடைக்கும். இதே போல் மகராட்டிரா மாநிலத்தில் மராட்டா இன மக்கள் தங்களையும் ஓபிசி பிரிவில் சேர்த்து இட இதுக்கீடுவழங்கப்படவேண்டும் என்று கூறி நீண்ட போராட்டங்களை நடத்தினர். இந்த போ ராட்டங்களை அடுத்து மகராட்டிரா அரசு 10 விழுக்காடு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு என இட ஒதுக்கீடு அறிவித்தது., இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.8 லட்சம் வருவாய் உள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சமூகத்தில் பிறப்பின் அடிப்படையில் ஆண்டாண்டு பாதிக்கப்பட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சமூக நீதிபெற்ற வர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு ஏன் ஏற்பட்டது, ஆண்டாண்டு கால மாக பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட மற்றும் சமூக அழுத்தங்களால் பாதிக்கப் பட்ட இனத்திற்கு அவர்களும் சமூகத்தில் உரிமை களுடன் வாழவேண்டும் என்ற நியதியின் அடிப் படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் சமூகத்தில் ஒதுக்கி வைக் கப்பட்ட மற்றும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 1951-ஆம் ஆண்டு மற்றும் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு பிரிவு 16, 1950 முதல் சேர்க்கப்பட்டன. மேலும் பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினத்தவர்களுடன் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒடுக்கீடு வழங்கும் முறை உருவானது.
1995முதல் 2000 வரை நான்கு அரசியலமைப்புச் சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்பட்டது, இட ஒதுக்கீடு தொடர்பான 2007-ஆம் ஆண்டு வெளியான என் னுடைய நூல் இந்த இட ஒதுக்கீடு தொடர்பான சட்ட திருத்தங்கள் குறித்து பல கருத்துக்களை கூறியுள்ளது. இதில் சில சட்ட திருத்தங்களின் போது அதிகமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை. 1995ஆம் ஆண்டு நடந்த சட்டதிருத்தத்தின் போது பொதுவான எந்த ஒரு விவாதமும் இல்லாமல் நீங்களே சட்டத்தை நிறைவேற்றிவிடுங்கள் என்று ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் கூறிவிட்டது. இது விவாதத்திற்கான முக்கியமான பொருளாகும்; ஆனால் இதுபோன்ற சட்டங்கள் எதுவுமே விவாதங்கள் இல்லாமல் நிறை வேற்றப்பட்டு விடுகின்றன.
இந்திரா - சகானி வழக்கில்..
இந்திரா - சகானி வழக்கில் 1992-ஆம் ஆண்டு 9 நீதிபதிகள் அடங்கிய குழு தீர்ப்பு வழங்கியது. இதில் 6 நீதிபதிகள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று தெளிவாக தீர்ப்பு கூறிவிட்டனர். மூன்று பேர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு அளித்திருந்தனர். நீதிபதிகள் கூறும் போது இந்த நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 74 விழுக்காடு மக்கள் இட ஒதுகீட்டின் பயனை பெறுபவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசுப்பணி மற்றும் கல்விகளில் மேம்பட்டு சமூகத்தில் உரிமை பெற்றவர்களாக வாழவேண்டும், இதையே மண்டல் அறிக்கையும் கூறுகிறது, ஒவ்வொரு முறையும் இட ஒதுக்கீட்டிற்கான சட்டதிட்டங்கள் நிறைவேறும் போது அது வாக்குகளை பெறவேண்டிய ஒன்றாகவும் மாறிவிடுகிறது.
முக்கியமாக உச்சநீதிமன்றம் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை மறுத்த பிறகும், பல மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் குட்டு வாங்கிய பிறகு அரியானா அரசு 2016ஆம் ஆண்டு பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது. அதே போல் ராஜஸ்தான் அரசு 2015ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கியது. இதைத் தொடர்ந்து நடத்திய பட்டேல் ஒட ஒதுக்கீடு போராட்டத் தின் அழுத்தம் காரணமாக குஜராத் அரசு ஆண்டிற்கு 6 லட்சம் வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது. இவை அனைத்தும் நீதிமன்றங் களால் ரத்து செய்யப்பட்டன. இதே போல் 1975ஆம் ஆண்டு கேரள தேவசம்போர்டு இடஒதுக்கீடு வழங்கியது. அதேபோல் உத்திரப்பிரதேச அரசு 1980-ஆம் ஆண்டு கிராமப்புறங்களில் வாழும் உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற ஆணையை நீதிமன்றம் உடனடியாக ரத்துசெய்தது. அதே போல் ஜம்மு-காஷ்மீர் அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்தது.
பொருளாதார அளவு கோல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை
இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் இனரீதியிலான பாகுபாடுகளைக் களையும் விதமாக இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளது, இங்கு பொருளாதார அடிப் படையில் இட ஒதுக்கீடு என்பது என்றுமே ஏற்று கொள்ளப்படாத ஒன்று ஆகும். இட ஒதுக்கீடு 50 விழுக்காட்டிற்கு மேல் செல்லக்கூடாது என்று கூறி நீதிமன்றமும் ஒரு எல்லைக்கோடு விதித்துள்ளது. இது சில பகுதிகளில் தளர்த்தப்படலாம் என்றும் கூறியுள்ளது. தற்போதைய அரசு 10 விழுக்காடு பொருளாதார ரீதியில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் ஆண்டிற்கு ரூ.8 லட்சத்திற்கு குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கும் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள வர்களுக்கும் மேலும் 1000 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் வீடு உள்ளவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அருண் ஜெட்லி தன் னுடைய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது வரி கட்டுபவர் களில் ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுபவர் களைக் கொண்டுவந்தார்.
மேலும் இந்திய விவ சாயி களில் 70 விழுக்காடு பேர் ஒரு ஏக்கர் நிலமில் லாதவர்கள் மற்றும் நாட்டின் 60 விழுக்காடு மக்கள் ஆண்டிற்கு 5 லட்சத் திற்கும் குறைவாக வரு வாய் ஈட்டுபவர்கள் ஆவர்
யாருக்கு இலாபம்?
ஆனால் அரசு இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக நன்மைகள் யாருக்குக் கிடைக்கும் என்பதை தெளிவு படுத்தவில்லை. வேலைவாய்ப்பிலா? கல்வியிலா? மத்திய மாநில அரசு பொதுத்துறை களிலா? அல்லது வேறு எந்த துறைகளில் என் பதை தெளிவாகக் குறிப் பிடவில்லை. இட ஒதுக்கீடு குறித்து நாம் பேசும் போது மண்டல் குழு பரிந் துரைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இதன் அடிப்படையில் புதிய இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டுமென்றால் சமூகத்தில் உரிமைமறுக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டு சட்டம் இயற்ற வேண்டும். இதில் கிரிமிலேயர் மற்றும் அடிப்படை உரிமைகள் மற்றும் சமூகச் சமன்பாடு போன்றவைகளை கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
தற்போது 8 லட்சம் ரூபாய் என்பது கிரிமிலேயராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, உண்மை என்னவென்றால் பாஜக தனது வாக்கு வங்கியான பார்ப்பனர்களின் வாக்குகளை இழந்து விட்டது. அதற்கு ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது, நமக்கு 2019ஆம் ஆண்டு தேர்தல் கைநழுவிடுமோ என்ற அச்சத்தின் அடிப்படையில் தான் அவசரகதியில் இச்சட்டத்தைக் கொண்டுவந்தது. குழப்பங்கள் ஏற்படும் முக்கியமாக 2 முதல் 4 கோடி மக்களுக்கு 10 விழுக்காடு பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு வரும் இந்த இட ஒதுக்கீட்டால் ஜாதி மற்றும் மத அடிப்படையில் ஒடுக்கப்பட்ட வர்களுக்கு எந்த ஒரு நன்மையும் ஏற்படப்போவதில்லை.
முக்கியமாக பொருளாதார ரீதியில் நலிந்தவர்கள் என்று கூறிக்கொண்டு இடஒதுக்கீடு வழங்குவது எதனடிப் படையில் - ஏற்கெனவே அவர்கள் சமூகத்தில் உரிமை களைப் பெற்றவர்கள் அவர்களுக்கு மேலும் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் இட ஒதுக்கீடு முறையில் குழப்பம் ஏற்படும். இதன் தாக்கம் இந்தச்சட்டம் நிறைவேறிவிட்டால் தெரியவரும். உண்மையில் இந்த சட்டம் அவையில் நிறைவேற வாய்ப்பில்லை, மாநிலங்களவையில் பாஜகவிற்கு போதிய உறுப்பினர்கள் கிடையாது, அப்படி என்றால் இது தோல்வியில் முடியும், இதைத் தெரிந்தே மோடி இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். முக்கியமாக இந்த சட்டத்தை தோல்வியடையச்செய்து தேர்தல் பிரச் சாரத்தின் போது "நாங்கள் உங்களுக்கு நன்மை செய்ய நினைத் தோம், ஆனால் எதிர்க் கட்சிகள் அதை தடுத்து நிறுத்தி விட்டனர்" என்று கூறி தேர்தல் ஆதாயம் பார்ப் பதற்காகத்தானே தவிர வேறு ஒன்றுமில்லை.
(ராஜீவ் தவான் 'தி எகனாமிக் டைம்ஸ்' 09.10.2019)
கட்டுரையின் தமிழாக்கம்:
சரவணா ராஜேந்திரன்
- விடுதலை நாளேடு, 10.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக